125
சகரியா
யோவான் ஸ்நானகனின் தகப்பன்
கரு வசனம்:
6 அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட
சகல கற்பனைகளின் படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து,
தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.
7 எலிசபெத்து
மலடியாயிருந்தபடியினால், அவர்களுக்குப்
பிள்ளையில்லாதிருந்தது, இருவரும்
வயது சென்றவர்களாயும் இருந்தார்கள். (லூக்கா1:6-7)
சுருக்கத் திரட்டு
· இவன்
யோவான் ஸ்நானகனின் தகப்பன்.
· இவன்
கடமையுணர்ச்சி கொண்ட ஒரு மனிதன்.
· இவனது
குடும்ப பாரம்பரியத்துக்கு மாறாக தன் மகனுக்கு யோவான் என்று பெயரிட்டான்.
· இவன்
மனைவி எலிசபெத்து மலடியாயிருந்த போதும் தேவன் ஒரு அற்புதத்தைச் செய்து அவர்களுக்கு
ஓர் ஆண் மகனைக் கொடுத்தார். அவன் தீர்க்கதரிசியானான்.
· தேவன்
தம்மைப் பின்பற்றி ஆசாரிய ஊழியம் செய்கிறவர்களுக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார்.
அறிமுகம் - இவனது கதை
சகரியா என்றால் யெகோவா நினைவுகூறுகிறார் என
பொருள்படும். இவன் ஆசாரிய குடும்பமான அபியாவின்
பரம்பரையிலிருந்து வந்தவன். இவன்
யோவான் ஸ்நானகனின் தகப்பன் ஆவான். இவன் தனது ஆசாரிய ஊழியத்தை நிறைவேற்றிக்
கொண்டிருந்த நாட்களிலே (லூக்கா1:5-25,57-79) இவனுக்கு
மகன் பிறப்பான் என வாக்குத்தத்தம் பண்ணப்பட்டது. ஓர் அடையாளம் வேண்டும் என
விரும்பின போது ஊமையனாக மாறினான். குழந்தைக்கு யோவான் என பெயரிடும் போது இவனது
ஊமையான நிலை மாறியது. சகரியா பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு தேவனை
ஸ்தோத்தரித்து பேசினான் (லூக்கா1:64-80).
சகரியாவைக் குறித்த சில விவரங்களை நாம் தெரிந்து
கொள்வோம். வேறு யாரும் அறிவதற்கு முன்னமே தேவன் பூமிக்கு வருவதையும் அவருடைய அந்த
வருகையின் நோக்கத்தையும் முதலில் அறிவிக்கப்; பெற்றவன்.
சகரியாவும் அவனது மனைவி எலிசபெத்தும், அவர்களது
தனிப்பட்ட வாழ்க்கையிலே பரிசுத்தமுள்ளவர்களாய் காணப்பட்டார்கள். இவர்களிருவரும்
தேவனுடைய விசேஷமான வேலையைச் செய்ய பொருத்தமானவர்களாய் காணப்பட்டனர். அவர்களுக்கு
குழந்தை இல்லாததன் காரணமாக ஏற்பட்ட வலியை பகிர்ந்துகொள்கின்றனர். யூத
கலாச்சாரத்தின்படி குழந்தை இல்லாதவர்கள் தேவனுடைய ஆசீர்வாதம் இல்லாதவர்கள் என
கருதப்பட்டனர். சகரியாவும் எலிசபெத்தும் வயது சென்றவர்களாகக் காணப்பட்டனர் இவர்கள்
குழந்தை வேண்டும் என்று தேவனிடத்தில் கேட்பதைக்கூட நிறுத்திவிட்டிருந்தனர்.
இந்த முறை எருசலேமிலுள்ள தேவாலயத்திலே இவனுடைய ஊழிய
முறைமை வந்த போது சகரியாவிற்கு ஒரு எதிர்பாராத ஆசீர்வாதம் காத்திருந்தது. சகரியா
ஆசாரிய ஊழியம் செய்யும்படி தேவ சந்னதியில் நுழைந்து ஐனங்களுக்காகத்
தூபங்காட்டுகிறதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டான். தூபங்காட்டுகிற வேளையிலே கர்த்தருடைய
தூதன் ஒருவன் தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்கு தரிசனமானான். சகரியா
அவனைக் கண்டு கலங்கி பயமடைந்தான். அந்த தூதனுடைய செய்தி நல்லதாகவும் உண்மையாகவும்
இருந்தது! ஆனால் சகரியா இந்த மேசியாவின் வருகையைக் குறித்து பதிலளியாதவனாகவும்
தான் ஒரு குழந்தைக்குத் தகப்பனாகப் போவைதையும் தன் வயதின் காரணமாக
நம்ப முடியாதவனாக சந்தேகப்பட்டு தன்னுடைய நம்பிக்கையின்மையை
வெளிப்படுத்தினான். தேவனுடைய வாக்குத் தத்தத்தைவிட இவனது வயது அதிக சத்தமாக
பேசினது. இதன் விளைவாக தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேறும் வரை இவனுடைய வாய்
கட்டப்பட்டு பேசாமல் ஊமையனாக்கப் பட்டான்.
சகரியாவை குறித்து நாம் லூக்கா 1ம்
அதிகாரத்தில் இந்த ஜெப பகுதியில் காண
முடிகிறது. தேவனுக்காக மிகவும் விசுவாசமாக ஊழியம் செய்த பல ஊழியக்காரர்களை போல இந்த சகரியாவும்
அவனது காட்சி முடிவடைந்த உடன் அமைதியாக
அங்கிருந்து வெளியேறுகிறான். நம்மில் அநேகருக்கு தேவனைக் குறித்து சந்தேகம்
எழும்பினாலும், நாம் அவருக்கு
கீழ்ப்படிய ஆயத்தமாயிருக்கும் நேரங்களில் இந்த சகிரியா நமக்கு ஒரு கதாநாயகன் போல தோன்றலாம். தேவன் உபயோகப்படுத்தக்கூடிய
நிலையில் இருக்கும் யாரையும் பயன்படுத்தி பெரிய காரியங்களைச் செய்ய முடியும் என
இந்த சகரியாவின் கதையின் மூலம் நம்பிக்கை பெற முடிகிறது.
2. வல்லமையும் சாதனையும்
1.
சகரியா ஒரு நீதிமானாக
அறியப்பட்டிருந்தான்.
2.
தேவனுக்கு முன்பாக
ஆசாரியனாக (தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே
பாலமாக) காணப்பட்டான்.
3.
நேரடியாக தேவ தூதர்களின்
தரிசனம் பெற்ற சிலரில் இவனும் ஒருவன்.
4.
கிழவனாயிருந்தபோதும் தேவ
தயவால் யோவான் ஸ்நானகனின் தகப்பனானான்.
3. குறைபாடுகள் மற்றும் தவறுகள்
1.
இவனுடைய முதிர்ந்த வயது
காரணமாக, தேவ தூதன் வாக்குபண்ணின
2.
குழந்தையைக் குறித்து
சற்று சந்தேகம் கொண்டான்.
3.
கோலியாத்திற்கு எதிராய்
நின்ற தாவீதைப் போல தேவனின் வல்லமையை நாம்
நம்பி சார்ந்திருக்கவேண்டும்.
4. இவனது வாழ்க்கையிலிருந்து
பாடங்கள்
1.
சரீர குறைபாடுகள் ஒரு
போதும் தேவனது வல்லமையை கட்டுப்படுத்த முடியாது, அவர்
எல்லாம் வல்லவர் மட்டுமல்லாது உருவாக்குபவரும் கூட.
2.
சில வேளைகளில் தேவன் தமது
சித்தத்தை நாம் எதிர்பார்க்காத வழிகளில் நிறைவேற்றுவார்.
3.
சகரியாவின்
விண்ணப்பத்திற்கு பதில் கிடைத்த போது அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! தேவன் ஜெபங்களுக்கு
அவரது நேரத்திலும் அவரது வழியிலும் பதிலளிக்கிறார். தேவன் “முடியாது”
என்ற கட்டத்தில், சகரியாவின்
மனைவி மலடியாக இருந்த பொழுதிலும் மேசியாவைக் குறித்து சொல்லப்பட்ட அனைத்து தீர்க்க
தரிசனங்களும் நிறைவேறும்படியாக அங்கே கிரியை செய்தார். நமது விண்ணப்பங்களுக்கு
பதில் கிடைக்க வேண்டும் என்றால் நாம் திறந்த மனதுடன் அவரது நேரத்திலும் அவரது
வழியிலும் முடியாத நேரங்களிலும் தேவனால் செய்யக்கூடிய காரியங்களுக்கு நாம் காத்திருக்க
வேண்டும்.
4.
சில வேளைகளில் தேவ மனிதர்கள்
கூட கடவுளைவிட தனது அனுபவத்தையும் அறிவையும் நம்பி தவறு செய்கின்றனர்!
சில வேளைகளில் தேவனது வாக்குத்தத்தங்களைக் குறித்து
சந்தேகப்பட்டு, முடியாது என எண்ணி, சோதிக்கப்படும்
போது, வரலாற்றை
திரும்பிப்பார்த்து அவரது கிரியைகளை எண்ணிப்பாருங்கள். கடவுளின் வல்லமையானது
குறுகிய வரையறுக்கப்பட்ட தோற்றம் அல்லது
மனிதர்களால் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு சக்தி அல்ல என்பதை நாம் உணர்ந்து அவரை
முழுவதுமாக நம்ப வேண்டும்.
5.
சகரியா,
எலிசபெத்து ஆகிய இவர்கள் இருவருமே அவர்களது மகனான யோவான்
ஸ்நானகனை கர்த்தருக்கு வழியை ஆயத்தம் செய்வதற்காக ஒப்புக்கொடுத்தனர்.
தேவனுடைய ஊழியத்திற்காக நாம் என்னத்தை கொடுக்க முடியும்,
ஐனங்கள் இயேசுவை அவர்களது தேவனாகவும் இரட்சகராகவும் ஏற்றுக்
கொள்ளும்படியாக வழியை ஏற்படுத்துவோம்.
5. வேதாகமக் குறிப்புக்கள்
சகரியாவின் கதையானது லூக்கா 1ம்
அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது
6. கலந்தாலோசனைக்கான
கேள்விகள்
1.
இவனுடைய பின்னணி குறித்து
உங்களுக்கு;j தெரிந்தது என்ன?
2.
தேவ தூதன் இவனுக்கு வாக்கு
பண்ணினது என்ன?
3.
ஆரம்பத்தில் இவன்
தேவ தூதன் சொன்னவற்றை நம்பாதது
ஏன்?
4.
“தேவனால்
எல்லாம் கூடும்” என்பதைக் குறித்து
கலந்தாய்வு செய்.
5.
இவனது வாழ்க்கையிலிருந்து
நாம் கற்கும் பாடங்கள் என்ன?
மொழிபெயர்ப்பு:
ஜான் ஆரோக்கியசாமி,
பரி.பர்னபாவின் ஆலயம், கிள்ளான்
No comments:
Post a Comment