45. யோவாஸ்
யூதாவின் ராஜா
முக்கிய வசனம்:
"யோய்தா மரணமடைந்த பின்பு யூதாவின் பிரபுக்கள் வந்து, ராஜாவைப் பணிந்துகொண்டார்கள்; அப்பொழுது ராஜா அவர்களுக்குச் செவிகொடுத்தான். அப்படியே அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தை விட்டுவிட்டு தோப்பு விக்கிரகங்களையும் சிலைகளையும் சேவித்தார்கள்; அப்பொழுது அவர்கள் செய்த இந்தக் குற்றத்தினிமித்தம் யூதாவின் மேலும் எருசலேமின் மேலும் கடுங்கோபம் மூண்டது". ( 2 நாளாகமம் 24:17–18)
சுருக்கமான குறிப்புகள்:
·
யோவாஸ்
அகசியாவின் குமாரர்களில் ஒருவன்.
·
அவன்
மீண்டுமாக பாகால் வழிபாட்டை ஆரம்பித்தான்.
·
அவன்
தன் வேலைக் காரர்களில் ஒருவனால் கொல்லப்பட்டான்.
·
அவனுக்கு
ஆண்டவரைப் பற்றிய நேரடியான ஞானம் இல்லை.
1. முன்னுரை: யோவாசின் கதை:
யோவாஸ் என்றால் "ஆண்டவர் உதவி செய்தார்" என்று பொருள். அகசியாவின் குமாரர்களில் அவன் ஒருவன் மட்டுமே அத்தாலியாள் கட்டளையிட்ட சங்காரத்திலிருந்து தப்பினான் (2 ராஜாக்கள் 11:2). அவன் யோசபாளால் காப்பாற்றப்பட்டு 6 வருடங்கள் ஆலயத்தில் ஒளித்து வைக்கப்பட்டான். அதன் முடிவில் ஏற்பட்ட புரட்சியால் உயிரோடிருக்கும் ஒரே ராஜகுமாரன் என்பதனால் சாலெமோனின் அரியணையில் அமர்த்தப்பட்டான். மிகவும் செழிப்பான காலம் தொடங்கியது. மெய்யான தேவ வழிபாடு மீண்டும் அமைந்தது. ஆனால் யோய்தா இறந்த பிறகு யோவாஸ் ஆண்டவருக்கெதிரான தீய அறிவுரைகளுக்கு செவி கொடுத்து மீண்டும் பாகால் வழிபாட்டைத் தொடங்கி தோப்பு விக்கிரகங்களை நிறுவினான். இதை எதிர்த்த சகரியாவை ஆலயப்பிரகாரத்தில் கல்லெறிந்து கொன்றான். ஆண்டவருடைய கோபத்திற்கு ஆளானான். சீரியா ராஜாவாகிய ஆசகேல் நாட்டைக் கொள்ளையிட்டான்; யோவாஸ் நோய்வாய்பட்டான்; அவனுடைய ஊழியக்காரரே அவன் படுக்கையிலே அவனைக் கொன்று போட்டார்கள். (2 நாளாகமம் 24:20–25). அவனுடைய ஆட்சி காலம் 40 ஆண்டுகள் நீடித்தது. அவனை
எருசலேமில் அடக்கம் பண்ணினார்கள். ஆனாலும் யூத ராஜாக்களின் கல்லறையில் அவனை அடக்கம் பண்ண முடியவில்லை.
எது அவனை அழிவுக்கு இட்டுச் சென்றது? யோய்தாவின் மரணத்துக்குப்பின் யோவாசுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அழிவுக்கேதுவான தீய அறிவுரைகளுக்குச் செவிகொடுத்தான். சில நாட்களுக்குள்ளே யோய்தாவின் குமாரன் சகரியாவைக் கொல்ல கட்டளையிட்டான். சில மாதங்களுக்குப்பின் யோவாஸின் படை அர்மீனியர்களால் அழிக்கப்பட்டது. ஆலயத்திலிருந்த பொக்கிஷங்களை யோவாஸ் லஞ்சமாக கொடுத்ததால்தான் எருசலேம் தப்பியது. கடைசியில் ராஜாவின் ஊழியக்காரரே அவனைக் கொன்று போட்டார்கள். யோய்தாவுக்கு நடந்த்ததைப்போல் இல்லாமல் யோவாஸ் ராஜாக்களின் கல்லறையில் அடக்கம் பண்ணப்படவில்லை. புதிய ஏற்பாட்டில் இயேசுவின் வழியில் வந்தததாகக்கூட அவன் பெயர் எழுதப்படவில்லை.
யோவாஸ் யோய்தாவைச் சார்ந்தே இருந்த போதிலும் அவன் யோய்தா கீழ்படிந்த ஆண்டவரைச் சார்ந்து இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. யோவாஸுக்கு ஆண்டவரைப் பற்றிய நேரடியான அறிவு இல்லை. ராஜாவுக்கும் ஆண்டவருக்கும் நேரடியான தொடர்பு இருந்திருந்தால்தான் அவன் நீண்ட காலம் நீடித்து இருந்திருக்க முடியும்; தீய அறிவுரைகளையும் நிராகரித்திருக்க முடியும்.
1.
மிக
அதிகமாக ஆலயத்தை செப்பனிட கட்டளையிட்டான்.
2.
யோய்தா
வாழ்ந்த வரைக்கும் ஆண்டவருக்கு விசுவாசமாக இருந்தான்.
3. பலவீனங்களும் தவறுகளும்:
1.
மக்களிடையே
விக்கிரக ஆராதனை தொடர அனுமதித்தான்.
2.
ஆலயத்திலிருந்த பொக்கிஷங்களை
லஞ்சமாக பயன்படுத்தினான்.
3.
யோய்தாவின்
குமாரன் சகரியாவைக் கொன்றான்.
4.
தன்னுடைய
ஆலோசகர்கள் மக்களை ஆண்டவரை விட்டு விலக்க அனுமதித்தான்.
4. அவன் வாழ்க்கையிலிருந்து பாடங்கள்:
1.
ஒரு
நல்ல நம்பிக்கையான ஆரம்பம் ஒரு தீமையான முடிவை அடையலாம்.
2.
மிக
நல்ல அறிவுரை கூட, அது நம்மை ஞானமான முடிவை எடுக்க உதவாதென்றால் பயனற்று போகும்.
3.
மற்றவர்கள்
நமக்கு உதவி அல்லது தீமை செய்தாலும், நாம்
செய்யும் எல்லா காரியங்களுக்கும் நாம்தான் பொறுப்பு.
5. வேத ஆதாரங்கள்:
யோவஸினுடைய கதை 2 ராஜாக்கள் 1:1–4; 23; மற்றும் 2 நாளாகமம் 22:11– 24:27 ஆகிய வசனங்களில் கூறப்பட்டுள்ளது.
6. விவாதத்துக்குரிய கேள்விகள்:
1.
யோவாசினுடைய
பலங்கள் என்ன?
2.
யோவாஸ்
எப்பொழுது தீய அறிவுரைக்குச் செவிகொடுத்து பாகால் வழிபாட்டைத் தொடங்கினான்?
3.
அவனுடைய
பலவீனங்கள் யாவை?
4.
அவனுடைய
வாழ்க்கையிலிருந்து
நாம் கற்கும் பாடங்கள் என்ன?
5.
"யோவாஸ்" என்ற வார்த்தைக்குப் பொருள் என்ன?
மொழி பெயர்ப்பு:
திருமதி. கிரேஸ் ஜட்சன்,
பரி. பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா.
No comments:
Post a Comment