48. யோனா தீர்க்கதரிசி
முக்கிய வசனம்:
"வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம் பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருக ஜீவஙன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்". (யோனா 4:11)
சுருக்கமான கதை:
·
இஸ்ரவேலின்
தீர்க்கதரிசி யோனா நாட்டின் விரிவாக்கத்தைக் குறித்து இஸ்ரவேல் ராஜாவிடம் கூறினார்.
·
இந்த
செய்தி யூதரல்லாத ஒரு தேசத்திற்கு கூறப்பட்டது.
·
இஸ்ரவேலின்
தேவன் ஒரு கருணையுள்ள மன்னிக்கிற கடவுள் என்று அறியப்பட்டார்.
·
மனம் திரும்பிய
மக்களை ஆண்டவர் மன்னிக்கிறார்.
1. முன்னுரை: யோனாவின் கதை
வேதாகமத்தில் உள்ள, எல்லாருக்கும் தெரிந்த ஒரு கதை இது. யோனாவின் புத்தகத்தை எழுதியவர் யாரென்று நமக்குத் தெரியாது. யாரோ ஒரு மூன்றாம் நபர் சொல்லுவதைப்போல சொல்லப்பட்டிருக்கிறது. உத்தேசமாக கி.மு. 785–760க்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது. எஸ்றா மற்றும் நெகேமியாவின் காலத்துக்குப் பின், யூதர் அல்லாத மக்கள் வெறுக்கப்பட்டபோது, அவர்கள் மேலும் ஆண்டவர் இரக்கம் உடையவர் என்பதை நினைவுறுத்தும் பொருட்டு இந்த புத்தகம் எழுதப்பட்டது என்று சிலர் நினைத்தனர். ஆண்டவருடைய கருணையின் அளவையும், இரட்சிப்பின் செய்தி எல்லா மக்களுக்கும் என்பதைக் காட்டுவதே இதன் நோக்கம். யோனா நினிவேயில் பிரசிங்கிக்க அழைக்கப்பட்டார். கதையின் களம் என்ன?
யோனா ஆமோஸுக்குப் பின் வந்து இஸ்ரவேலின் மிக பலமுள்ள இரண்டாம் யெரொபெயாம் காலத்தில் (கி.மு.793–753) ஊழியம் செய்தார் (2 இராஜாக்கள் 14:23–25). அசிரீயா இஸ்ரவேலின் மிகப்பெரிய விரோதி. கி.மு.722-இல் இஸ்ரவேல் பிடிபட்டது. நினிவேயின் மனம் திருந்துதல் மிகக் குறுகிய காலமே இருந்தது. ஏனென்றால் கி.மு.612 இல் நினிவே அழிக்கப்பட்டது.
இந்த புத்தகம் விஷேஷித்த சிறப்புகளை உடையது: இந்த புத்தகம் மற்ற தீர்க்கதரிசினப் புத்தகங்களிலிருந்து வேறுபட்டது எப்படியெனில் இது தீர்க்கதரிசியின் கதையைச் சொல்லுகிறது. அவரது தீர்க்கதரிசினங்களை மையமாகக் கொள்ளவில்லை. ஒரே ஒரு வசனம் மட்டும்தான் நினிவே மக்களுக்கு அவரது செய்தியைக் குறித்து சொல்லுகிறது (யோனா 3:4). யோனா ஒரு சரித்திர உரை. இது இயேசு கிறிஸ்துவாலும் சொல்லப்பட்டிருக்கிறது. அவருடைய மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் குறித்து கூறும்பொழுது (மத்தேயு 12:38–42).
அவருடைய பெயருக்கு பொருள் "புறா" என்பதாகும். அவர் இப்பொழுது எல்–மெஷ்ஷாத் என்று அழைக்கப்ப்படும் கலிலேயாவில் உள்ள செபுலோனில் ஒரு சிறிய கிராமமான காத்ஹேபரைச் சேர்ந்தவர். இவர்
2 இராஜாக்கள்
13:25 இல், இஸ்ரவேல் தேசத்தை அதன் பழைய எல்லை வரைக்கும் விரிவாக்கப்படும் என்று முன்குறித்ததாக கூறப்பட்டுள்ளார். இந்த விரிவாக்கம் இரண்டாம் யெரொபெயாமின் தைரியத்தாலும் அவரது ஊழியத்தின் பலனாலும் நிறைவேறிற்று. அவர் அந்த காலத்திலோ அல்லது அவருக்கு முன்னான யெஹோஆகாஸ் காலத்திலோ வாழ்ந்திருக்கலாம். அவர் யோனாவின் புத்தகத்தின் முக்கிய கதாபாத்திரமாக குறிக்கப்பட்டுள்ளார்.
யோனாவுக்கு ஒரு வேலை கொடுக்கப்பட்டது. ஒரு மிகப்பெரிய, தீவினைமிக்க தேசமாகிய அசீரியா இஸ்ரவேலின் மிகப் பயங்கரமான எதிரி. பல இரக்கமற்ற கொடூரமான செயல்களின் மூலம் அசீரியர்கள் தங்கள் பலத்தை ஆண்டவருக்கும் உலகத்துக்கும் முன் காட்டினார்கள். அசீரியாவுக்குச் சென்று மக்களை மனம் திரும்ப வைக்க ஆண்டவர் யோனாவை அசீரியாவுக்கு போகச்சொன்னபோது, அவர் அதற்கு எதிரான திசையில் ஓடினார்.
–––––––––
யோனாவின் புத்தகம் தீர்க்கதரிசியின் ஓட்டத்தையும், எப்படி ஆண்டவர் அவரை தடுத்து நிறுத்தி திருப்பினார் என்ற கதையைச் சொல்லுகிறது. ஆனால் இது ஒரு மனிதனையும் மீனையும் பற்றிய கதையைவிட மேலானது – யோனாவின் கதை ஆண்டவரின் கருணையையும் கிருபையையும் பற்றிய ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஆண்டவருடைய உதவியைப் பெற மிகக் குறைவாக தகுதி பெற்றவர்கள் அசீரியாவின் தலைநகர் நினிவேயின் மக்களைவிட வேறு யாருமில்லை. யோனாவுக்கு இது தெரியும். ஆனாலும் இந்த மக்கள் தம் பாவத்திலிருந்து திரும்பி ஆண்டவரை வழிபட்டால் அவர் மக்களை மன்னித்து ஆசீர்வதிப்பார் என்பதையும் யோனா அறிந்திருந்தார். அதுமட்டுமல்லாமல் யோனா ஆண்டவருடைய செய்தியின் பலத்தையும், தன்னுடைய வலிமையற்ற போதனையாலும் மக்கள் ஆண்டவருடைய நியாயத்தீர்ப்பிலிருந்து காக்கப்படுவார்கள் என்றும் அறிந்திருந்தார். ஆனால், அசீரியர்களை வெறுத்த யோனா அவர்கள் அழிக்கப்பட வேண்டுமேயல்லாமல், அவர்கள்மேல் கருணை காட்டக்கூடாது என்பதாலேயே அவர் ஓடினார். இறுதியில், யோனா ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து, நினிவேயின் தெருக்களிலே போதகம் பண்ணினார், மக்களும் மனம் திரும்பி நியாயத்தீர்ப்பிலிருந்து காக்கப்பட்டார்கள். அதன்பின் யோனா கோபம் கொண்டு ஆண்டவரிடம் விண்ணப்பம் பண்ணி," நீர் இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையும் உள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன்" என்றார் (யோனா4:2). கடைசியில், ஆண்டவர் யோனாவின் சுயநலமான கொள்கைகளையும், கருணையில்லாத தன்மையையும் அவருக்குச் சுட்டிக்காட்டி," ஆனால், வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருக ஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ?" என்றார். (யோனா 4:11).
2. யோனாவின் புத்தகதைப் பற்றிய சில
முக்கிய செய்திகள்:
1) அந்த
நாட்களின் கால நிலை:
அசீரியா தேசத்தின் மிகவும் முக்கியமான நகரமாகிய நினிவே வெகு சீக்கிரத்தில் அம்மிகப்பெரிய தேசத்தின் தலை நகரமாக ஆகும் சாத்தியமிருந்தது. ஆனால் நினிவே ஒரு மிகவும் பொல்லாத நகரமாகவும் விளங்கியது.
2) முக்கியமான
செய்தி:
யோனாவுக்கு நினிவேக்கு செல்வதில் விருப்பமில்லை, அதனால்தான் அவர் ஆண்டவரிடமிருந்து ஓட முயன்றார். ஆனால் நம்மைக் கீழ்ப்படியக் கற்றுக்கொடுத்து அவரைப் பின்பற்றச் செய்யும் பல வழிகள் ஆண்டவரிடம் உண்டு. யோனா போதித்தபோது, அந்த நகரமே மனம் திரும்பியது, அதனால் ஆண்டவர் தம் நியாயத் தீர்ப்பை நிறுத்தி வைத்தார். பாவத்திலிருந்து மனம் திரும்பி, ஆண்டவரிடம் திரும்பினால், மிகக் கொடூரமான பாவிகள் கூட மன்னிக்கப்படுவார்கள்.
3) அதே
காலத்தில் வாழ்ந்த தீர்க்கதரிசிகள்:
ஆமோஸ் (கி.மு.760–750).
3. யோனாவின் புத்தகத்தின் அற்புதங்கள்:
1.
ஆண்டவர்
ஒரு பெருங்காற்றை அனுப்பினார். (யோனா1:4)
2.
ஆண்டவர்
யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனை ஆயத்தப்படுத்தினார். (யோனா1:17)
3.
ஆண்டவர்
யோனாவைக் கரையிலே கக்கும்படி அந்த மீனுக்குக் கட்டளையிட்டார். (யோனா2:10)
4.
ஆண்டவர்
யோனாவின் தலையின் மேல் நிழல் உண்டாக ஓர் ஆமணக்குச் செடியை முளைக்கச் செய்தார். (யோனா4:6)
5.
ஆண்டவர்
அந்த ஆமணக்குச் செடியை அழிக்க ஒரு பூச்சியைக் கட்டளையிட்டார். (யோனா4:7)
6.
ஆண்டவர்
ஓர் உஷ்ணமான கீழ்க்காற்றை யோனாவின் மேல் வீசக் கட்டளையிட்டார். (யோனா 4:8)
4. யோனாவின் பெரிய மையக்கருத்துகளைப் புரிந்த்துகொள்ளுதல்:
மையக்கருத்து ம் முக்கியத்துவமும்
அ) ஆண்டவர் ஏகாதிபதி
யோனா தீர்க்கதரிசி ஆண்டவரிடமிருந்து ஓட முயன்றாலும் அவருடைய கட்டுப்பாட்டுக்குள்தான் இருந்தார். ஆண்டவர் தம் நோக்கத்தையும் நிறைவேற்றினார்.
ஆ) உலகத்துக்கு ஆண்டவரின் செய்தி
யோனா ஆண்டவருடைய நோக்கத்தை நிறைவேற்றினார். அவர் நினிவே பட்டணத்து மக்களுக்கு போதித்தார். ஆண்டவர் நாமும் நமக்கு விருப்பமில்லாத இடங்களிலும் பிரசிங்கிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
இ) மனம் திரும்புதல்
யோனா ஒரு தயக்கமுள்ள போதகராக இருந்தாலும், மக்கள் மனம் திரும்பினர்.
ஈ) ஆண்டவருடைய கருணை
ஆண்டவருடைய செய்தியான அன்பும், மன்னிப்பும் யூத மக்களுக்கு மட்டுமல்ல. அவர் எல்லா மக்கள் மேலும் அன்பாக இருக்கிறார்.
5. வேத ஆதாரங்கள்:
1.
புதிய
சர்வதேச வேதாகமம், பக்கம்
1560–1563.
2.
ஆ.ரா.பக்லான்ட், சர்வதேச வேதாகம அகராதி, பக்கம்
263.
3.
The
IDB, Vol. E-J, p. 965 – 969.
4.
Baker
Encyclopedia of the Bible (Vol.2), pp.1205-1207.
6.1 "ஆண்டவர் இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்" (யோவான் 3:16) – " அவர் எல்லா தேசங்களையும் தமக்கு உரிமையாக்கினார்"– கருத்தைக் கூறவும்.
6.2 நினிவே எங்கே உள்ளது?
6.3 நினிவேக்குச் சென்று ஊழியம் செய்ய யோனா ஏன் தயங்கினார்?
6.4 கிறிஸ்தவர்கள் தங்கள் இனப்பிரிவு சார்ந்த உள்னோக்கு சிந்தனை உடையவர்களாகவும், ஊழியம் செய்யும் மனதில்லாதவர்களாகவும் இருக்கிறார்களா?
6.5 சில மலேசியர்கள் மலேசியாவிலும், பிற நாடுகளிலும் ஊழியம் செய்ய ஏன் விருப்பமில்லாதவர்களாக இருக்கிறார்கள்?
மொழி பெயர்ப்பு:
திருமதி. கிரேஸ் ஜட்சன்,
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா.
No comments:
Post a Comment