Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Saturday, November 19, 2011

47. யோவேல் தீர்க்கதரிசி

 பெத்துவேலின் குமாரன்.

முக்கிய வசனம்:
          " ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாய் இருக்கிறார்".  (யோவேல் 2:12–13).




சுருக்கமான கதை:
.  யோவேல் நியாயத்தீர்ப்பைப்பற்றியும் பரிசுத்தாவியின் அபிஷேகத்தைப்பற்றியும் தீர்க்கதரிசனம் உரைத்தார்.
.  அவர் மக்களுக்கு சொன்ன கருணையான அறிவுரைஆண்டவரிடத்தில் திரும்புங்கள்.
.  அவருடைய செய்திஆண்டவரின் நாமத்தை அழைத்த ஒவ்வொருவரும் காப்பாற்றப்படுவார்கள்.
.  அவர் மக்களை மனம் திருந்தச்சொன்னார்.

  

1.  முன்னுரை:
       யோவேலைப்பற்றி நமக்கு மிகச் சிறிய அளவே தெரியும். அவர், "யோவேல், பெத்துவேலின் குமாரன்" என்று மட்டுமே நமக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார்.(யோவேல் 1:1). யோவேல் என்ற பெயருக்கு "யெஹோவாவே ஆண்டவர்" என்று பொருள். யோவேலின் கவலை தெற்கு தேசத்தைப்பற்றியே இருந்தது. யூதேயாவில் ராஜாவே இல்லாதபோதுதான் யோவேலின் புத்தகம் எழுதப்பட்டது என்று சொல்லப்படுகிறது. ஆண்டவருடைய ஆலயம் யோவேலின் காலத்தில் மீண்டும் கட்டப்பட்டது {யோவேல் 1:14; 2:17). 520 ஆம் வருடத்துக்குப்பின் ஆகாயும் சகரியாவும் ஆலயத்தைக் கட்டி முடித்ததாகவும் சொல்லப்படுகிறது. கிரேக்கரோடு தொடர்புகொண்டிருந்ததற்காக யோவேல் தீருவையும், சிதோனியரையும், பிலிஸ்தியரையும் கண்டித்தார். யோவேல் தன் தீர்க்கதரிசனத்தை யூதேயா யாராலோ ஆக்கிரமிக்கப்பட்டபோது எழுதினார் என்று சொல்லப்படுகிறது. யோவேல் இந்த நிகழ்ச்சிகளைச் சரித்திரத்தில் எழுதி வைக்கவும், இதின் செய்திகளை தம் பிள்ளைகளுக்கு தெரிவிக்கவும் தம் மக்களுக்கு சொன்னார்(யோவேல் 1:3).

    யோவேலுடைய கவலைகளில் சிலவற்றைப் பார்ப்போம்.



2.  இந்தப் புத்தகத்தின் நோக்கம் என்ன?
   இந்தப் புத்தகம் யூதாவின் பாவத்தையும் அதனால் கிடைக்கப்போகும் நியாயத்தீர்ப்பையும் குறித்து யூதாவை எச்சரிக்கவே எழுதப்பட்டது. எழுதியவர் யோவேல், பெத்துவேலின் குமாரன்.


3.  இந்தப் புத்தகத்தின் கருப்பொருள் என்ன?
    யூதாவின் மக்கள் மிகவும் செழிப்புள்ளவர்களாகி, ஆண்டவரை மறந்தார்கள். சுயனலமுள்ளவர்களாகவும், விக்கிரக ஆராத்னைக்காரர்களாகவும், பாவிகளாகவும் மாறினார்கள். இந்த மாதிரியான பாவ வாழ்க்கை ஆண்டவருடைய நியாயத்தீர்ப்பை நிச்சயமாக அவர்கள் மேல் கொண்டு வரும் என்று யோவேல் அவர்களை எச்சரித்தார்.


4. கருப்பொருள்: ஆண்டவரிடம் திரும்புதல்.
    வெட்டுக்கிளிகளால் ஏற்பட்ட நாசத்தின்மூலம் நாட்டிற்கு கிடைத்த தண்டனை காட்டப்பட்டுள்ளது. எல்லோரும் மனம் திருந்தி ஆண்டவரிடம் திரும்பவேண்டும். ஆண்டவருடைய செய்தியை நாம் கவனிக்க வேண்டும் அல்லது பின்னால் அவருடைய கோபத்தை சந்திக்க வேண்டியிருக்கும். அவர் மன்னிக்கிற ஆண்டவர். பாவத்திலிருந்து திருந்தி ஆண்டவரை நோக்கி திரும்பும்போது மன்னிப்பு கிடைக்கிறது. ஆண்டவரிடம் நாம் வருவதெ அவருடைய மிகப்பெரிய ஆவலாயிருக்கிறது.  மீண்டும் ஒரு பெரிய நியாயத்தீர்ப்பு ஏற்படும் முன் ஆண்டவரிடம் திரும்ப மக்களுக்கு விடும் அழைப்பே யோவேல் புத்தகத்தின் முக்கியமான செய்தியாகும்.


5.  பரிசுத்தாவியின் வாக்குத்தத்தம்:
    இது ஒரு முக்கியமான தீர்க்கதரிசனம்.
    ஆண்டவர் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறார். நீதியும், புதுப்பித்தலும் அவர் கையில் இருக்கிறது. முதல் கிறிஸ்தவர்கள்மேல் ஆண்டவருடைய அன்பு எவ்வளவு அதிகமாக இருந்ததோ அதேபோல் நம்மேலும் இருக்கிறது என்பதை பரிசுத்த ஆவி உறுதி செய்கிறது (அப்போஸ்தலருடைய நடபடிகள் 2). நாம் ஆண்டவர்மேல் விசுவாசமாக இருந்து நம் வாழ்க்கையை பரிசுத்த ஆவியின் பலத்துக்கும் நடத்துதலுக்கும் அடியில் வைக்கவேண்டும்.



6.  யோவேலின் காலத்தில் வாழ்ந்த மற்ற தீர்க்கதரிசிகள் யார்?
   ஆகாய், சகரியா, மல்கியா போன்றோர் அவர் காலத்துக்கு சிறிது முன்னால் வாழ்ந்த தீர்க்கதரிசிகள்.

  

7.  முடிவுரை:
   புதிதாக்குதல்:
   தேசத்தின் அழிவைக் குறித்த ஒரு தீர்க்கதரிசனத்துடன் ஆரம்பித்த யோவேலின் புத்தகம் அதன் புதுப்பித்தலைக் குறித்த ஒரு தீர்க்கதரிசனத்துடன் முடிந்தது. ஆச்சரியங்களின் ஆண்டவரை அவர் நமக்கு அறிமுகப்படுத்துகிறார் (யோவேல் 2:12–17). மனம் திரும்புதலின் வற்புறுத்தலோடு தொடங்கிய அவர், அந்த மனம் திரும்புதல் கொண்டுவரும் மன்னிப்பின் வாக்குத்தத்தத்தோடு முடித்தார். யோவேல் மக்களை விழித்து எழுந்து, சோம்பேறித்தனத்தை விரட்டியடித்து, ஆண்டவரிடமிருந்து விலகி வாழ்வதின் ஆபத்தை உணர்ந்து கொள்ளச்சொல்ல முயன்றார்(யோவேல் 1:5). ஆண்டவரின் நாமத்தை கூப்பிடும் யாவரும் காப்பாற்றப்படுவர் (அப்போஸ்தலருடைய நடபடிகள் 2 12–14; 32). ஆண்டவரிடம் திரும்புவோர் ஆசீர்வதிக்கப்படுவர். அவரை மறுதலிக்கும் யாவரும் அழிக்கப்படுவர்.

     ஆண்டவர் நம் மத்தியில் இருக்கிறார் (யோவேல் 2:18–27). அவர் தன் பரிசுத்த ஆவியை எல்லோர் மேலும் ஊற்றுவார் (யோவேல் 2:28–32). இவ்வுலகம் புதிதாக்கப்படும். எல்லா தேசங்களும் அவரிடம் சேர்க்கப்படும் (யோவேல் 3:1–8).



8.  வேத ஆதாரங்கள்:
  யோவேலின் புத்தகம், 1 சாமுவேல், 1 நாளாகமம், 2 நாளாகமம் 29:12,  
புதிய சர்வதேச வேதாகமம் பக்கம் 1526–1535, ..பக்லாண்ட்.



9.  விவாதத்துக்குரிய கேள்விகள்:
9.1  யோவேல் யார்?
9.2  அவருடைய தந்தை யார்?
9.3  அவர் எங்கே தீர்க்கதரிசியாக இருந்தார்? ( நாட்டின் தெற்கு பகுதியிலா வடக்கு பகுதியிலா?)
9.4  பரிசுத்த ஆவியின் வருகையைக் குறித்து யோவேல் முன்கூட்டியே உரைத்தார். சரியா? தவறா? (அப்போஸ்தலருடைய நடபடிகளைப் பார்க்கவும்.)
9.5  யோவேலின் புத்தகத்தின் நோக்கம் என்ன?


மொழி பெயர்ப்பு:
திருமதி. கிரேஸ் ஜட்சன்,
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா.


















No comments:

Post a Comment