46. யோபு
விசுவாசம், பொறுமை, தாங்கும் சக்தியுள்ள ஒரு மனிதன்
முக்கிய
வசனம்:
"என் சகோதரரே, கர்த்தருடைய நாமத்தினாலே பேசின தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுத்துதலுக்கும்
நீடிய பொறுமைக்கும் திருஷ்டாந்தமாக வைத்துக்கொள்ளுங்கள். இதோ,
பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே!
யோபுவின் பொறுமையைக் குறித்துக்
கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்;
கர்த்தர் மிகுந்த உருக்கமும்
இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே."
(யாக்கோபு 5:10-11)
சுருக்கமான
கதை:
- · யோபு ஒரு பெரிய செல்வந்தன்.
- · சாத்தான் அவனைச் சோதிக்க ஆண்டவருடைய அனுமதியைக் கேட்டான்.
- · யோபுவின் நண்பர்கள் அவனுடைய துன்பங்களின் காரணத்தைத் தீர்மானிக்க முயன்றார்கள்.
- · கடைசியில் யோபு முன்பு இருந்ததைவிட அதிக செல்வந்தனானான் - அவனுடைய செழிப்பு மீட்கப்பட்டது.
1. முன்னுரை: யோபுவின்
கதை.
யோபு என்னும் பெயரின் பொருள்
"வெறுப்பு அல்லது வணக்கத்திற்குரிய". யோபுவின் புத்தகம் மக்கள் இவ்வுலகத்தில் எதிர் காணும் ஒரு
முக்கியமான கேள்வியைக் குறித்து விவாதிக்க முற்படுகிறது. எதனால் துன்பங்களும்,
கஷ்டங்களும்? என்பதே அந்த கேள்வி. சிலர் காரணங்களும் அதனால் ஏற்படும் காரியங்களும் என்பதை
நம்புகின்றனர். யோபு தனக்குத் துன்பங்கள் நேர்ந்திருக்க வேண்டியதில்லை
என்று சொன்னான். அவனுக்குக் கிடைத்த பதில், பதிலைத் தெரிந்துகொள்வதைவிட ஆண்டவரை அறிந்து கொள்வதே சிறந்தது என்பதே. சில
நேரங்களில் துன்பம் மற்றவருக்குச் சேவை செய்வதற்கு நம்மைத் தயார் படுத்துகிறது.
சில நேரங்களில் துன்பம் சாத்தான் நம் வாழ்வில் நிகழ்த்தும் தாக்குதல் ஆகிறது.
மற்றும் சில நேரங்களில் நாம் ஏன் துன்பப்படுகிறோம் என்றே நமக்குத் தெரியாது.
யோபு என்பவன் யார்?
யோபுவின் பெயர் கொண்ட புத்தகத்தில் மிக முக்கியமான
பாத்திரம் யோபு. அவன் ஊத்ஸ் தேசத்திலே வாழ்ந்த ஒரு கனவான் (யோபு 1:1),
மிகுந்த சந்தோஷத்தோடும் செல்வங்களோடும் வாழ்ந்தவன்,
ஆனால் ஆண்டவருடைய அனுமதியுடன் சாத்தானால் மிகவும் கடுமையாக சோதிக்கப்பட்டான்
(யோபு 1:12). யோபுவினுடைய அனுபவங்கள் துன்பப்பட்ட
அவனுக்கும் அவனுடைய சில நண்பர்களுக்குமிடையே வரிசையான பல விவாதங்களுக்கு
இட்டுச்சென்றது. இறுதியில், யோபு ஆண்டவருக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தான், ஆண்டவர் அவனுடைய சிறையிருப்பை மாற்றி அவனுக்கு "முன்பிருந்ததைவிட
இரண்டு மடங்கு "கொடுத்தார் (யோபு 42:10). அவனுடைய செல்வம் முழுவதுமாக மீட்கப்பட்டது; அவன் "இதற்குப்பின் நூற்று
நாற்பது வருடங்கள்" உயிர் வாழ்ந்தான் யோபு 42:16).
யோபுவை எசேக்கியேல் நோவாவோடும் தானியேலோடும்
ஒப்பிட்டார் (எசேக்கியேல் 14:14,20).
மேலும் நன்றாகப் புரிந்துகொள்வதற்கு நாம் யோபுவின் புத்தகத்தை ஆராய வேண்டும். யோபுவின் புத்தகம் மூன்று பகுதிகளாகப்
பிரிக்கப்பட்டுள்ளது:
1. முதல் பகுதி:
யோபு திடீரென்று மிகவும் கொடுமையான துன்பத்தைச் சந்தித்தான்;
(ஆண்டவருடைய நியாயசபையிலே யோபுவின் மேல் குற்றம் சாட்டிய சாத்தானால் அனுப்பபட்டது
இந்தத் துன்பம்) அதை யோபு மிகுந்த பொறுமையோடும், ஆண்டவர் மேல் இருந்த அதிக விசுவாசதோடும் தாங்கினான்.
2. எதிர்மறையான
விவாதங்களும் உண்டு:
இந்த பகுதியில், எலிப்பாஸின் உரையும் (யோபு 15),
பில்தாதுக்கு யோபுவின் பதிலும் (யோபு 16,17,18), சோப்பாருக்கு யோபுவின் பதிலும்
(யோபு 20,21) அடங்கும். மிகுந்த துன்பம் மிகுந்த குற்றத்தின் வெளிப்பாடு இல்லையா?
என்பதே அந்த விவாதங்களின் கேள்விகளில் ஒன்று. யோபுவின்
நண்பர்கள் அதை ஆமோதித்து,
அவனுடைய குற்றங்களுக்கு மனம் வருந்தி அவனைத்
திருந்தச் சொன்னார்கள். மிகுந்த மன வருத்தத்தோடு இதை மறுத்த யோபு,
தன் நண்பர்கள் இம்மாதிரியான பொய்
குற்றச்சாட்டுகளால் தன் துன்பத்தை இன்னும் அதிகரிக்கிறார்கள் என்றான். முதல் பகுதி
3 ஆம் அதிகாரத்திலிருந்து 14 ஆம் அதிகாரம் வரைக்கும் அடங்கும். இரண்டாம் பகுதி 15-21 ஆம் அதிகாரம் வரைக்கும், மூன்றாம் பகுதி 22-26 ஆம் அதிகாரம் வரைக்கும் அடங்கும். இதன் பின் வருவது யோபுவின் உரைகள். எலிகூவின் உரைக்குப்பின் "ஏன் நான்
துன்பப்பட்டேன் என்று எனக்குத் தெரியவில்லை" என்ற யோபுவின் கேள்விக்கு ஆண்டவரே பதில் சொல்கிறார். ஆண்டவரின்
மகிமையைப் பற்றிய சொப்பனத்தை யோபுவுக்கு கொடுத்தார். ஆண்டவரின் அற்புதங்கள் அவனைப்
பேச்சிழக்கச்செய்தது.
எலிகூ (32-37) தன் உரையில், பாவத்தின் சம்பளமாக இல்லாதபோது, ஒருவருக்கு வரும் துன்பங்கள், அவரது நன்மைக்கே என்று கூறினான். ஆனாலும், யோபு தேவனைப் பார்க்கிலும்
தன்னைத்தான் நீதிமானாக்கினதினிமித்தம் அவன் மேல் எலிகூவுக்கு கோபம் மூண்டது.
3. இறுதியில் யோபு ஆண்டவருடைய
சோதனையை ஏற்றுக்கொண்டான்
(யோபு 42:7-17)
அதனால் மீண்டும் செழித்தான். யோபுவின் புத்தகம் சாத்தானின் இரக்கமற்ற தன்மையையும்
எடுத்துக் காட்டுகிறது (யோபு 1:9,10).
2. பலங்களும்
சாதனைகளும்:
1. யோபு விசுவாசமும், பொறுமையும், தாங்கும் சக்தியும் உடைய ஒரு மனிதன்.
2. மிகவும் இரக்கமும் கருணையும் உள்ள மனிதன் என்று அறியப்பட்டான்.
3. மிகப் பெரிய செல்வந்தனாக இருந்தான்.
3. பலவீனங்களும்
தவறுகளும்:
தான் ஏன் இவ்வாறு துன்பப்படவேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும் என்ற
ஆசைக்கு இடம் கொடுத்து ஆண்டவரையே கேள்வி கேட்கத் துணிந்தான்.
4. யோபுவின் வாழ்கையிலிருந்து பாடங்கள்:
1.
கேள்விக்கு பதில்களைத் தெரிந்து கொள்வதைவிட ஆண்டவரை அறிந்து கொள்வதே
சிறந்தது.
2.
ஆண்டவர் கருணையில்லாதவரோ,
தீர விசாரிக்காதவரோ அல்லர்.
3.
துன்பங்களும் வலிகளும் எப்போதும்
தண்டனையாக வருவதில்லை.
5. வேத ஆதாரங்கள்:
யோபுவின் சரித்திரம் யோபுவின் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
எசேக்கியேல் 14:14-20 லும், யாக்கோபு 5:11லும் சொல்லப்பட்டிருக்கிறது.
6. விவாதத்துக்குரிய
கேள்விகள்:
1. யோபுவின் கேள்விகளில் ஒன்று,
"ஏன் மக்கள் துன்பப்படுகிறார்கள்?"
என்பதே.
2. யோபு மிகவும் செல்வந்தர்களான மனிதர்களில் ஒருவன்.
3. யோபுவின் நண்பர்கள் அவனுடைய
துன்பத்துக்கான காரணத்தை அறிய முயன்றார்கள்.
4. ஆண்டவர் தன் ஞானத்தினால் யோபுவுக்கு துன்பத்தை அனுப்பினார். ஆனால் முடிவில்
அவனுடைய செல்வங்களும் செழிப்பும் மீட்கப்பட்டது.
5. அவன் ஏன் "விசுவாசமும், பொறுமையும், தாங்கும் சக்தியுமுள்ள மனிதன்" என்று அழைக்கப்பட்டான் என்பதை
விளக்கவும்.
மொழி பெயர்ப்பு:
திருமதி. கிரேஸ் ஜட்சன்
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா.
No comments:
Post a Comment