72. ராகாப் என்ற விலைமாது
தன் விசுவாசத்தினால் யோசுவாவின் இரு ஒற்றர்களையும் காப்பாற்றினாள்.
சுருக்கம்
· விலைமகள் ராகாப்
எரிகோவில்
வாழ்ந்து வந்தாள்.
· யோசுவாவின் இரு ஒற்றர்கள்
அவள் வீட்டில் தங்கி இருந்தனர். அவளோ, அவர்களை ஒளித்து வைத்து அரசாங்க ஊழியர்களிடம்
இருந்து காப்பாற்றினாள். வீட்டு மாடியில் ஏற்றி அங்கிருந்த சன்னல் தட்டைகளுள் அவர்களை
மறைத்து வைத்தாள்.
· தன் எதிர்காலத்திற்காக
அவர்களோடு ஓர் உடன்படிக்கை செய்து கொண்டாள்.
· அவள் ஒரு கயிற்றின் மூலமாக
அவர்களைச் சன்னல் வழியே இறக்கி விட்டாள்.
· எரிக்கோ நகர் வீழ்ச்சி
அடைந்தது. அவளும் அவள் குடும்பத்தினரும் காப்பாற்றப்பட்டனர். பிறகு அவர்களை இஸ்ரவேல்
குடிமக்களாக மாற்றினர்.
· புதிய ஏற்பாட்டில் அவள்
ஒரு முன்மாதிரியானவள்.
· விலைமாதான ராகாப் ஒற்றர்களை
உபசரித்து ஏற்று அவிசுவாசிகளுடன் அழியாமல் தப்பித்துக் கொண்டது விசுவாசத்தினாலேயே.
அவளின் கதை
இராக்கா என்றால், மிகவும் கொடுமையாக நடந்து கொள்பவள்.
அவள் எரிக்கோ நகரில் வசிக்கும் ஒரு விலைமாது. அவள் மக்களிடம் இருந்து ஒதுங்கி வாழ்ந்து
வந்தாள்,, வெறுக்கப்பட்டவள். அவளுடைய வீடோ நகரமதிலோடு ஒட்டி இருந்தது. வழி போக்கர்களுக்குத்
தங்கும் வசதியும் உதவியும் செய்து வந்தாள். இஸ்ரவேல் ஒற்றவர்களுக்கு நல்ல ஒதுங்கும்
இடமாக அமைந்திருந்தது.
இஸ்ரவேலரின் கதைகள் ஊரெங்கும் பரவி வந்தது. இப்பொழுது
அவர்கள் நாட்டைத் தாக்க முற்பட்டனர். இராக்க மதிப்பிற்குரியவளாக இருந்தாள். அவள் தன்
பயத்தை எரிக்கோ மக்களுடன் பகிர்ந்து கொண்டாள். அவள் தனியாக இறைவனின் மீட்பை அடைய விரும்பினாள்.
அவள் இறைவன் மீது வைத்த விசுவாசத்தினால் அந்த இரு ஒற்றர்களையும் பொய் சொல்லி அதிகாரியிடம்
இருந்து காப்பாற்றினாள். அவளுக்கு வரவிருக்கும் ஆபத்தை நன்கு புரிந்திருந்தாள். ஒற்றறர்களை
மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தால் அவள் கண்டிப்பாக கொள்ளப்படுவாள் என்பதையும் அறிந்திருந்தாள்.
அதே சமயத்தில் கடவுள் அறுளையும் இஸ்ரவேலர்களையும் கண்டிப்பாகக் காப்பாற்றுவார் என்பதையும்
புரிந்திருந்தாள். அவளின் அசைக்க முடியாத விசுவாசத்தினால் அவளும் அவள் சார்ந்த உறவினர்களையும்
இறைவன் பாதுகாப்பாக மீட்டார்.இறைவன் மானிடர் மூலம் செயல்படுவார். உதாரணம் ராகாப். கடவுள் அவளை நினைவு கூர்ந்தார். காரணம், அவளுடைய விசுவாசம் அவள் செய்யும் தொழில் அல்ல. நீயும் அப்படி ஒரு சில நேரத்தில் சோதிக்கப்படலாம். ராகாப் உயர்த்தப்பட்டாள். காரணம், அவள் கடவுளின் மீது வைத்த நம்பிக்கையே. நீயும் முடிந்தால் அவ்வாறு செயல்படு.
1.1. போசாவின் மூதாதையாள்
தாவீதும் இயேசுவும்.
1.2. இரு பெண்கள் மட்டும்
விசுவாசத்தில் கூறப்பட்டுள்ளது.
1.3. ஆய்வில், மற்றவர்களுக்குத்
தானே உதவ முன்வந்தவர்கள்.
3. பெலவீனமும் தவறும்
3.1. அவள்
ஒரு விலைமாது.
4.1. அவளுடைய
பயம் இறை மீட்பில் தன் விசுவாசத்தைப் பாதிக்கவில்லை.
வேதாகம மேற்கோள்கள்
ராகாபைப் பற்றி யோசுவா 2, 6..22-23,, மத்தேயு 1..5, எபிரேயர்
11..31, யாக்கோபு, யோசுவா பழைமை???? ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளது.
1) ஏன் ராகாப்
இஸ்ரவேலர்
வரலாற்றில் முக்கியமானவள்?
2) அவள் எந்த வகையான சிரமத்தைத்
துணிந்து ஏற்றுக் கொண்டாள்?
3) அவள் யோசுவாவுக்கு என்ன
உறவு?
4) இஸ்ரவேலர் கடவுளைப் பற்றி
என்ன அறிந்திருந்தாள்?
5) ராகாபைப் போல் நாம் எவ்வாறு
திருச்சபையில் உதவு முடியும்?
6) கடவுளுடைய பணியை எவ்வாறு
நிறைவேற்றினாள்?
எஸ்.அல்பி, தைப்பிங்
No comments:
Post a Comment