88 ஆக்கில்லா, பிரிஸ்கில்லா
கணவன் மனைவி
பவுலின் மிஷனரி ஊழியத்தில்
பங்காளர்கள்.
கரு வசனம்
3. கிறிஸ்து இயேசுவுக்குள்
என் உடன் வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள்.
4. அவர்கள் என் பிராணனுக்காகத் தங்கள்
கழுத்தைக் கொடுத்தவர்கள்;: அவர்களைப்பற்றி நான் மாத்திரமல்ல, புறஜாதியாரில்
உண்டான சபையாரெல்லாரும் நன்றியறிதலுள்ளவர்களா யிருக்கிறார்கள். ரோமர் 16:3-4
சுருக்கத்திரட்டு
· ஆக்கில்லா, பிரிஸ்கில்லா ஆகிய
இருவரும் பவுலின் மிஷனரி ஊழியத்தில் பங்காளர்கள்.
· இவர்கள் மற்றவர்களுக்கு பாரமாய் இராதபடிக்கு
கூடாரம் பண்ணுகிற தெரிழில் செய்து அவர்களது பணத் தேவைகளைச் சந்தித்துக் கொண்டனர்.
· இவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்தனர் என
பவுல் கூறுகிறார்.
1. அறிமுக உரை - அவர்களது கதை
சில தம்பதியினர்களுக்கு
வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று தெரியும். அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து, விட்டுக்கொடுக்காது, ஒருவரின் பெலத்தை
மற்றவர் மூலதனமாய் வைத்து ஒரு திறமையான அணியை வடிவமைத்துக் கொள்கின்றனர்.
இப்படிப்பட்ட இருவரின் இணைப்பு சுற்றி இருந்தவர்களைப் பிரம்மிக்கச் செய்யும்.
ஆக்கில்லா மற்றும் பிரிஸ்கில்லா ஆகிய
இவர்களும் இப்படிப்பட்ட ஒரு தம்பதியினராக காணப்பட்டனர். இவர்களை வேதம் ஒருபோதும்
தனித்தனியாக பிரித்து கூறவே இல்லை. இவர்கள் குடும்ப வாழ்விலும் சரி ஊழியத்திலும் சரி
இணைந்தே செயல்பட்டனர்.
பவுல் கொரிந்துவிற்கு
மேற்கொண்ட இரண்டாவது மிஷனரி பயணத்தின்போது ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவரை
அங்கே சந்தித்தனர். யூதருக்கு எதிராக கிளாடியஸ் என்ற மன்னனின் தீர்ப்பின்படி
இவர்கள் ரோமாபுரியை விட்டு வெளியேற்றப்பட்டனர். இவர்களது வீடானது கூடாரத்தைப்போல அவர்களாலேயே
அவ்வப்போது இடமாற்றக்கூடிய விதத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. இவர்கள் தங்களது
இல்லத்தைப் பவுலுக்குத் திறந்து கொடுத்தனர். பவுலும் இவர்களோடு
கூடாரம் செய்யும் தெரிழிலில் இணைந்து கொண்டார். பவுல் ஆக்கில்லா, பிரிஸ்கில்லா ஆகிய
இவர்களோடு அவருக்கிருந்த ஆவிக்குரிய ஞானத்தின் ஐஸ்வர்யத்தை பகிர்ந்து கொண்டார்.
ஆக்கில்லா, பிரிஸ்கில்லா ஆகிய
இருவரும் இந்த சந்தர்பத்தை நன்கு பயன்படுத்தி தங்களது ஆன்மீக கல்வியில் கவனம் செலுத்தினர். இவர்கள் பவுலது
போதனைகளைக் கவனமாக கேட்டு, தாங்கள்
கேட்டவற்றைத் தியானித்தனர். இவர்கள்
அப்பொல்லோவினுடைய பேச்சினை கேட்டபோது அவனுடைய திறமைகளால்; ஈர்க்கப்பட்டனர். ஆனால்
இவனது தகவல்கள் முழுமை பெறவில்லை என்று இவர்கள் புரிந்து கொண்டனர். இவர்கள்
இவனிடத்தில் அங்கேயே நேருக்கு நேர் எதிர்த்து நிற்காமல் அமைதியாக அவனைத் தங்களது
இல்லத்திற்கு அழைத்துச் சென்று அவன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை அவனுடன் பகிர்ந்து
கொண்டனர்.
அதுவரை
கிறிஸ்துவைப் பற்றின செய்தியை அப்பொல்லோ யோவான்ஸ் நானகனின் மூலமே கேட்டிருந்தான்.
ஆக்கில்லா,
பிரிஸ்கில்லா
ஆகிய இருவரும் இயேசுவினுடைய வாழ்க்கை, அவரது மரணம், அவரது உயிர்தெழுதல்
மற்றும் தேவன் பரிசுத்த ஆவியாக நம்மோடு உண்மையாக ஜீவிக்கிறார் என்பதையும் இவனுக்கு
தெரிவித்தனர்.
இப்பொழுதோ
முழு விவரமும் தெரிந்தவனாக இவன் மிகுந்த சக்தியோடு தெரிடர்ந்து பிரசங்கித்தான்.
ஆக்கில்லா, பிரிஸ்கில்லா ஆகிய
இருவரும் தங்களது இல்லத்தை ஓர் அன்புள்ள பயிற்சி மையமாகவும், ஆராதனை
ஸ்தலமாகவும் பயன்படுத்தி வந்தனர். பல வருடங்களுக்குப் பின் ரோமாபுரிக்குத்
திரும்பி அவர்களால் முன்னேற்ற மடைந்த ஓர் ஆலயமாக்கப்பட்ட
வீட்டில் தங்கியிருந்தனர். அப்பொல்லோவைப் போல, இந்த
பிரிஸ்கில்லாளும் எபிரேயர் நிருபத்தை எழுதியிருக்க வாய்ப்புள்ளது.
ஒரு காலக் கட்டத்தில்
அநேகரது கவனம் கணவன் மனைவி ஆகிய இவர்கள் இருவருக்கிடையே என்ன நடக்கிறது என்பதில்
தான் இருந்தது. ஆனால் இந்த ஆக்கில்லா, பிரிஸ்கில்லா ஆகிய இவர்கள், கணவன் மனைவி
ஆகியவர்கள் மூலமாக என்ன நடக்க முடியும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக
திகழ்ந்தனர்.
இவர்களது
திறமையானது இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த உறவின் நெருக்கத்தையும்
காண்பிக்கிறது. அவர்களின் விருந்தோம்பல் பண்பானது அநேகரை இரட்சிப்புக்குள்ளாக வழி
நடத்த ஒரு பெரிய வழி வாசலைத் திறந்தது. கிறிஸ்தவர்களது இல்லமானது சுவிசேஷத்தைப்
பரப்பும் ஒரு சிறந்த கருவியாக இன்றும் காணப்படுகிறது. நமது கேள்வி என்னவென்றால்
நமது இல்லமானது நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு கிறிஸ்துவைக்
கண்டுகொள்ளக் கூடிய இடமாக அமைந்துள்ளதா என்பதுதான்?
2. வல்லமையும் சாதனையும்
2:1 தலைசிறந்த தம்பதியினராக
ஆரம்ப கால சபைகளில் தேவனுக்கு ஊழியம் செய்தனர்.
2:2 கூடாரம் செய்து அவர்களது
அன்றாட தேவைகளை அவர்களாகவே சந்தித்துக் கொண்டனர்.
2:3 இவர்கள் பவுலின்
நெருங்கிய நண்பர்களாக காணப்பட்டனர்.
2:4 கிறிஸ்துவின் முழு
செய்தியையும் அப்பொல்லோவிற்கு விவரமாக தெரிpவித்தனர்.
3. அவர்களது
வாழ்க்கையிலிருந்து பாடங்கள்
3:1 தம்பதியினர் இணைந்து ஒரு
பயனுள்ள ஊழியத்தைச் செய்ய முடியும்.
3:2 நமது இல்லமானது
சுவிசேஷத்திற்கு விலையுயர்ந்த கருவியாகும்.
3:3 தேவ சபையில் என்ன
பொறுப்பு வகித்தாலும் சரி, ஒவ்வொரு விசுவாசியும் கடவுளைப் பற்றின
நம்பிக்கையில் நன்கு கற்பிக்கப்படவேண்டும்.
4. வேதாகமக் குறிப்புகள்
அவர்களது கதையானது
அப்போஸ்தலா;
18லும், ரோமர் 16:3-5, 1 கொரிந்தியர் 16:19, 2 தீமோத்தேயு 4:19 ஆகிய
பகுதிகளிலும் குறிப்பிடப் பட்டுள்ளது.
5. கலந்தாலோசனைக்கான
கேள்விகள்
5:1 ஆக்கில்லாவும்
பிரிஸ்கில்லாவும் தங்களது பணத்தேவைகளை எப்படி சந்தித்துக் கொண்டனர்?
5:2 அவர்களது இல்லத்தை
தேவனுடைய ஊழிய வேலைகளுக்கு எப்படி பயன்படுத்தினார்கள்?
5:3 அப்பொல்லோ மேலும் கிறிஸ்தவனாக வளருவதற்கு இவர்களிருவரும் எப்படி
உதவினார்கள்?
மொழிபெயர்ப்பு:
ஜான் ஆரோக்கியசாமி,
பரி.பர்னபாவின் ஆலயம், கிள்ளான்.
No comments:
Post a Comment