இயேசுவுக்கு நெருக்கமான சீஷன்
முக்கிய வசனங்கள்
35 அப்பொழுது செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அவரிடத்தில் வந்து: போதகரே, நாங்கள் கேட்டுக்கொள்ளப்போகிறதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டுமென்று விரும்புகிறோம் என்றார்கள்.
36 அவர் அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டுமென்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.
37 அதற்கு அவர்கள்: உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலதுபாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள்செய்யவேண்டும் என்றார்கள்.( மாற்கு 10:35- 37)
36 அவர் அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டுமென்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.
37 அதற்கு அவர்கள்: உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலதுபாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள்செய்யவேண்டும் என்றார்கள்.( மாற்கு 10:35- 37)
சுருக்கமான குறிப்புகள்
·
யாக்கோபு பெத்சாயிதா பட்டணத்திலிருந்து
வந்தவன்.
·
சமாரியர்கள் இயேசுவை ஏற்றுக்
கொள்ள விரும்பாதபோது அவர்கள் மேல் அக்கினியை அனுப்புமாறு இயேசுவிடம் வேண்டிக் கொண்டான்.
·
கஷ்டங்களைப் பாராமல் எப்போதும்
இயேசுவுக்குப் பின் சென்றான்.
·
தன்னுடைய அழைப்பினிமித்தம் தனது
ஜீவனைக் கொடுக்கவும் ஆயத்தமாக இருந்தான்.
·
இயேசுக்கு நெருக்கமாக இருந்த
பேதுரு, யாக்கோபு, யோவன் ஆகிய இவர்கள் இயேசுவுக்கு அருகாமையில் எப்போதும் இருந்த உள்
வட்டத்தினர் என்று கருதப்பட்டனர்.
1. முகவுரை – இவனுடைய சரித்திரம்
சின்ன யாக்கோபுவை வேறுபடுத்திக் காட்டுவதற்காக, பெரிய யாக்கோபு என்று அழைக்கப்பட்ட
இவர், சுவிசேஷகனாகிய யோவான் சகோதரன், செபதேயு, சலோமி என்பவர்களின் குமாரன். (மத்.4.21)
இவன் கலிலேயாவிலுள்ள பெத்சாயிதா என்ற பட்டணத்தில் தனது தம்பி யோவானுடன் மீன் பிடிக்கும்
தொழிலைச் செய்து கொண்டிருந்தான். இவர்கள் இருவரும் இயேசுவைப் பின்பற்றும் படியாக எல்லாவற்றையும்
விட்டுவிட்டுச் சென்றார்கள். (மாற்கு 1:18-19). நமது இரட்சகராகிய இயேசு மறுரூபமடைந்ததை
இந்த இரு சகோதரர்களும் நேரில் கண்டார்கள். (மத்.17.1). இயேசு ஊழியம் செய்த காலத்தில்
இவர்கள் இருவரும் எப்போதும் ஒன்றாக இணைந்தே பேசினார்கள்; செயல்பட்டார்கள். சில சமாரியர்கள்
இயேசுவை ஏற்றுக் கொள்ள மறுத்தபோது, வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களை அழிக்கும்படி
தாங்கள் கட்டளையிட இயேசுவுக்கு சித்தமா என்று கேட்டார்கள். (லூக்கா 9:54) பின்பு அவர்கள்,
தேவனுடைய ராஜ்யத்தில் தங்களுக்கு இயேசுவின் வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் உட்கார
இடம் கொடுக்க வேண்டுமென்று தங்கள் தாயாரின் மூலமாக இயேசுவிடம் வேண்டிக் கொண்டனர்.
(மாற்கு 10:35-37) நமது இரட்சகராகிய இயேசு உயிர்த்தெழுந்து சில தினங்களுக்குப் பின்
யாக்கோபு, யோவான், திபேரியாக் கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது இயேசுவைப் பார்த்தார்கள்.
இயேசு பரத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சமயத்திலும் இவர்கள் இயேசுவோடு கூட இருந்தார்கள்
கி.பி.42-44 ஆண்டுகளில் ஏரோது அகிரிப்பா ராஜா யாக்கோபைப் பிடித்து எருசலேமில் கொலை
செய்தான். (அப்.12:-2). நீதிபதிகளின் முன்னிலையில் யாக்கோபைத் துன்புறுத்திய ஒரு மனிதன்
இயேசுவை அறிக்கை செய்வதில் யாக்கோபு காண்பித்த மாறாத உறுதியைக் கண்டு அதிசயித்து, தானும்
கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு தான் ஒரு கிறிஸ்தவன் என்று அறிக்கை செய்ததினால் அப்போஸ்தலனைப்
போலவே அவனுடைய தலையும் வெட்டப்பட்டது என்று பாரம்பரியக் கதை கூறுகிறது.
யாக்கோபைப் பற்றிய மற்ற தகவல்கள்
இவனுடைய பெயர் எப்பொழுது யோவானுக்கு முன்பாக, யாக்கோபு, யோவான் என்று எழுதப்படுவதினால்,
இருவரில் இவன் மூத்த சகோதரன் என்பது தெரிய வருகிறது. இவனுடைய தகப்பனார் மீன் பிடிக்கும்
தொழில் செய்து வந்ததினால் பேதுருவும் அந்திரேயாவும் இவர்களுடன் சேர்ந்து வேலை செய்து
வந்தார்கள். இயேசு, பேதுரு, அந்திரேயா, யோவானை அழைத்தபோது, யாக்கோபும் அவர்களுடன் செல்வதற்கு
ஆர்வமுடையவனாக இருந்தான். இயேசுவுக்கு மிக நெருங்கிய மூன்று சீஷர்களில் தானும் ஒருவனாக
இருந்தது அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. ஆனால் இயேசுவின் நோக்கத்தை இவன் தவறாகப் புரிந்து
கொண்டிருந்தான். இயேசு தமது ராஜ்யத்தில் வரும்போது தங்களுக்கு முதன்மையான பங்கைப் பெற
முயற்சி செய்து, தங்களுக்கு விசேஷமான இடத்தைக் கொடுக்க இயேசு வாக்குறுதி செய்ய வேண்டுமென்று
கேட்டுக் கொண்டனர்.
12 சீஷர்களில் இவரே சுவிசேஷத்திற்காக முதலாவதாக மரித்தார். நித்திய ஜீவனுக்குப்
போகும் வாசலான மரணத்தின் மேல் இயேசு வெற்றி சிறந்தார் என்பதை அறிந்திருந்ததினால் இவன்
சுவிசேஷத்திற்காக மரிக்கவும் ஆயத்தமாக இருந்தான்.
2. பலமும் சாதனைகளும்
a. 12 சீஷர்களில் ஒருவர்.
b. பேதுரு, யோவனுடன் இயேசுவுக்கு நெருக்கமாக அவருடன் இருந்த சீஷன்.
c. 12 சீஷர்களில் அவனுடைய விசுவாசத்திற்காகக் கொலை செய்யப்பட்ட முதலாவது சீஷன்.
3. பெலவீனமும் தவறுகளும்
a. இரண்டு சம்பவங்களில் இவனுடைய கோப குணமும் (லூக்கா 9:54) சுயநலமான தன்மையும்
(மாற்கு 10:37) வெளிப்படுகின்றன. இரண்டு சந்தர்ப்பங்களிலும் இரண்டு சகோதரர்களும் சேர்ந்தே
பேசினார்கள்.
4. இவனுடைய வாழ்க்கையிலிருந்து பாடங்கள்.
a. இயேசுவைப் பின் செல்வதில் ஜீவனை இழப்பதும் விலையுயர்ந்த காரியமல்ல!
5. வேத வசன ஆதாரங்கள்
a. சுவிசேஷங்களிலும், அப்.1:13; 12:2-உம் யாக்கோபைப் பற்றி வாசிக்கிறோம்.
6. கேள்விகள்
a. யாக்கோபு எங்கிருந்து வந்தான்?
b. இவனுடைய பெற்றோர் யார்?
c. இவனுடைய பலமும் சாதனைகளும் பற்றி விவரித்துக் கூறு.
d. இவனுடைய பெலவீனங்கள் யாவை?
e. இவனுடைய வாழ்க்கையிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளுகிறோம்?
மொழிபெயர்ப்பு
திருமதி டஃப்னி ஜோசப்
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங்
ஜெயா
No comments:
Post a Comment