Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Sunday, May 6, 2012

27. எஸ்றா

ஆசாரியனும் சதுசேயரும்  

முக்கிய வசனம்
கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்.  ( எஸ்றா 7.10 )
 

சுருக்கத் திரட்டு
1.         எஸ்ரா ஓர் ஆசாரியனும், சதுசேயனும் சீர்திருத்தவாதியும் ஆவான்.
2.       எஸ்ரா பாரசீக ஆரசாங்கத்தில் யூதர்களின் சமூக நல காரியதரிசியாக இருந்தவன்.
3.       எஸ்ரா மன விலக்கு என்ற சமூக சீர்திருத்த்த்தைக் கொண்டு வந்தவன்.
4.       எஸ்றா கர்த்தருடைய வார்த்தையைக் கற்றதன் மூலம் அநேக ஆத்துமாக்களைத் தொட முடிந்த்து.


முன்னுரை – அவன் வரலாறு
‘உதவி’ என்பது எஸ்ரா என்ற மகனும் அல்லது பேரனுமானவன். லேவியனாகிய ஆரோனின் வம்சத்தான். பாபிலோனில் 5ம் நூற்றாண்டில் பிறந்தான். எஸ்ரா மோசேயின் ஆகமத்தில் சதுசேயனும் ஆசாரியனுமாக விளங்கினவன் ( எஸ்றா 7.6 ). எஸ்றா இஸ்ரவேல் சிறைபிடிக்கப்பட்ட பின் பிறந்தான். அக்காலக் கட்டத்தில் வேதாகமத்தைக் கருத்தாய் கேட்டு கற்றுத் தேறினான். மற்றும் நில பங்கீடும் முறைமையையும் ஆலயம் கட்டும் முறைமையையும் கற்று அறிந்தான். அதின் விளைவாக, தனக்குள் ஒரு பெரிய வைராக்கியமும் ஏவுதலும் எழும்ப, இஸ்ரவேல் ஜனங்களிடைய விளிப்புணர்ச்சியை ஏற்படுத்த எத்தனித்தான். 

அர்தசஷ்டா ராஜா ( 2வாது அர்தசஷ்டா லாங்கி மாறுஸ் ) அரசாண்ட ஏழாம் ஆண்டு, எஸ்றாவுக்கும் மற்ற யூதா ஜனங்களுக்கும் நாட்டுக்குத் திரும்பிச் செல்ல உத்தரவு கிடைத்தது. அவர்களோடு கூட ஆலயத்திற்குத் தேவையான பொருட்களையும் பணத்தையும் எடுத்துச் சென்றார்கள். அதிகாரம் 7ல், எஸ்றாவும் அவன் ஜனங்களும் உபவாசம் இருந்து, ஜெபித்துக் கடவுளின் பாதுகாப்பை நாடித் தேடினார்கள். இது அகாவா ஆற்றங்கரையண்டையில் நடைபெற்றது. மட்டுமல்லாமல், ராஜாவின் முழு ஒத்துழைப்பும் சம்மதமும் கிடைத்தது. 

எஸ்றாவுக்குப் பல சவால்கள் ஏற்பட்டன. எஸ்றா ஆவிக்குரிய எழுப்புதல் கூட்டம் ஒன்றை ஒழுங்குபடுத்த முற்பட்ட பொழுது பல முட்டுக்கட்டைகளும் எதிர்ப்புகளும் எழுந்தன. யூத குல ராஜ குமாரர்கள் வேற்று குல குமாரத்திகளை விவாகம் பண்ணியருந்தார்கள். இதை எஸ்றா கேள்விப்பட்ட போது, தன் வஸ்திரத்தை இரண்டாகக் கிழித்துக் கொண்டான். மற்றும் தன் தலை மயிரையும் தாடியையும் பிடிங்கியெடுத்தான். எஸ்றாவின் இந்தச் செயல் பாடுகள் தன் குல மக்களுக்கு ஏற்ப்பட்ட நிந்தையினிமித்தம் தாம் அவமானப்படுவதாக தெரிவித்துக் கொண்டான். இதினிமித்தம், எஸ்றா அழுது, பாவ அறிக்கையிட்டு, யேகோவாவின் சமூகத்தில் விழுந்து கிடந்து மன்றாடினான். இந்த மன்றாட்டினிமித்தம் அந்த அந்நிய ஸ்திரிகளை விவாகம் செய்த ராஜா குல குமாரர்கள், தங்கள் தங்கள் அந்திய ஸ்திரிகளை விவாக ரத்து செய்ய தாங்களாகவே இணங்கினார்கள். 

தொடர்ந்து பதின்மூன்று வருடங்கள் எஸ்றாவின் நடபடிகைகள் எழுதப்படவில்லை. பின்பு நெகேமியாவோடு கூட எஸ்றாவை எருசலேமில், மோசேயின் கற்பனைகளைக் கூடியிருக்கும் ஜனங்கள் மத்தியில் வாசிக்கக் காண்கிறோம். மற்றும் மோசேயின் கற்பனைகளைத் தொடர்ந்து ஆசரிப்பின் காலங்களில் வாசித்தான் ( நெகே.8 ). 

வேதாகமத்தில் எஸ்றா என்ற புத்கம் இருக்கிறது. இதில் சிறையிருப்பிலிருந்து நாடு திரும்பிய மக்களின் சரித்திரமும், கோரேஸ் ராஜா கிமு.536ல் கட்டளையிட்டபடியே எருசலேம் தேவாலயம் மறுபடியும் கட்டப்பட்டு தரியு ராஜாவின் ஆட்சிக் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. இந்தப் புத்தகத்தில் ராஜாவாகிய அர்தசஷ்டாவின் கட்டளையின்படி எஸ்றா கிமு.457ல் செய்த பயணத்தைப் பற்றியும் மக்களைச் சீர்திருத்தும்படி அவன் எடுத்த முயற்சி, கடின உழைப்பு பற்றியும் எழுதப்பட்டிருக்கிறது.
 

எஸ்றாவின் புஸ்தகத்தில் கீழ்கண்ட விவரங்கள் அடங்கியுள்ளன.
a.       அசீரியாவிலிருந்து யூதேயாவுக்குத் திரும்புதல்.
b.       செசோவா தேவனை ஆலயத்தைக் கட்டியெழுப்பி, ஆராதித்து, தொழுது கொண்டு வாழும் முறைமையை மறுசீரமைப்பு செய்தல்.
c.       சமாரியருக்கு விரோதமாக எதிர்ப்பு கிழம்புதல்.
d.       ஆலயம் கட்டி முடிக்கும் விவரங்கள் உள்ளடக்கியுள்ளன.



சுருங்க்க் கூறின், நேகேமியாவுக்கு ஈடு இணையாக, எஸ்றா தோள் கொடுக்கிறவனாய் இருந்தான். நெகேமியா ஆலயத்தின் மதில் சுவரைக் கட்டுகிற பணியைக் கண்ணும் கருத்துமாய் காத்துக்கொண்டான். ஆனால், எஸ்றாவோ சமூக சீரமைப்புப் பணியைச் செவ்வையாய் செய்தான்.

 ஆலயத்தை மறுபடியும் கட்டியெழுப்பிய 80 வருடங்களுக்குப் பிறகு செருபாபேலின் காலத்தில் எஸ்றாவும் மற்றும் 2000 பேர்கள் தங்கள் தங்கள் குடும்பத்தாரோடு யூதேயாவுக்குத் திரும்பினார்கள். எஸ்றா அர்தசஷ்டா ராஜாவின் சம்மதத்தோடும் ஆசீர்வாத்த்தோடும் ஜனங்களை மறுசீரமைக்கவும் அவர்களுடைய வாழ்வை புதுப்பிக்கவும் திரும்பினான். எஸ்றா, முதலில் தன்னை ஒரு சதுசேயனாக, முழுமையாய் வேதத்தைக் கற்று தேறினவனாக்கிக் கொண்டான். இரண்டாவது, வேத வசனத்தைத் தன் வாழ்க்கையில் கடைபிடிக்க எத்தனித்தான். எஸ்றா தேவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்தான். மூன்றாவது, மற்றவர்களுக்கு வேத வசனத்தைக் கற்றுக் கொடுத்தான். மட்டுமல்லாமல் அவ்வசனத்தை எவ்வாறு தங்கள் தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்துவது என்ற வழி முறைகளையும் கற்றுக் கொடுத்தான். 

எஸ்றா வல்லமையுள்ள பிரசங்கத்தைப் பிரசங்கித்தான். அவன் பிரசங்கத்தைக் கேட்டவர்கள் மனங்கசந்து, தன் தன் பாவங்களை அறிக்கை செய்தார்கள். மற்றும் திருந்தி வாழ திட்டங்களைத் தீட்டிப் புது வாழ்வு வாழ முற்பட்டார்கள். பின்பு, எஸ்றா நெகேமியாவுடன் சேர்ந்து தங்கள் ஊழியங்களைத் தொடர்ந்தார்கள். யெகோவா தேவன் அவ்விருவரையும் வல்லமையாய் பயன்படுத்தி, தேசம் முழுவதும் எழுப்புதலைக் கொண்டு வந்தார். 

எஸ்றா பல பெரிய காரிங்களைச் சாதித்தான். அவனின் சாதனைக்கு முக்கிய காரணம் அவன் தன் வாழ்க்கையை வேத வசனத்திலிருந்து தொடங்கியதுதான். வேத வசனத்தைக் கண்ணும் கருத்துமாய் கற்று, உத்தமும் உண்மையுமாய் வேத வசனத்துக்குக் கீழ்ப்படிந்தான். தான் கற்றதை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டான். எஸ்றாவோ எல்லா தேவ பிள்ளைகளுக்கும் உன்னதமான எடுத்துக் காட்டாக திகழ்கிறான். நாமும் அவனைப் பற்றி யேகோவா தேவனுக்காக வாழ்வோமா?



2.            எஸ்றாவின் வல்லமையும் அவன் சாதனைகளும்.
1.         தேவதத்தை ஆழமாகக் கற்று, அதின்படி கீழ்ப்படிந்து, மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்தான்.
2.       இரண்டாவது கட்ட ஜனங்களைப் பாபிலோனிலிருந்து, எருசலேமுக்கு வழி நடத்திச் சென்றவன்.
3.       எஸ்றா முதலாம் மற்றும் இரண்டாம் நாளாகமத்தை எழுதியவன் ஆவான்.
4.       தரியு ராஜா, எஸ்றாவை எருசலேமின் நிலவரங்களை அறித்து வர அனுப்பப்பட்டவன். அவன் எருசலேமுக்குச் சென்று, வேதாகமக் கல்வி முறைமைகளை நிறுவி, தரியு ராஜாவுக்கு விவரத்தை அறிவித்தான்.
5.       யெகோவா தேவனின் கட்டளைகளில் காணப்பட்ட நுணுக்கமான பத்திகளைக் கண்ணும் கருத்துமாய் கைக்கொள்ளுவதில் கவனமாயிருந்தான்.
6.       பழைய ஏற்பாட்டில், ஜனங்களில் ஆவிக்குரிய எழுப்புதல் காலங்களில் நெகேமியாவுடன கூட சேர்ந்து உழைத்தவன்.


3.            இவன் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொண்டவை
1.         ஒரு மனிதன் யெகோவா தேவனின் வார்த்தைகளை அறிந்த கொள்ளவும் அதின்படி கீழ்ப்படிந்து நடக்கவும் அவன் மனதில் வாஞ்சையுள்ளவனாயிருந்த்தால் அவனை வல்லமையாய் யெகோவா தேவன் பயன்படுத்துவார்.
2.       யெகோவா தேவனை சேவிக்க முதலில் யெகோவா தேவனின் சேவை என்ன என்பதை அறிந்து கொள்ளுவதற்கு முன்பே, தனிப்பட்ட முறையில் யெகோவா தேவனின் ஊழியம் செய்ய ஒப்புக் கொடுக்க வேண்டும். 


4.            வேதாகமக் குறிப்புகள்
1.         எஸ்றா 7.1-10, நெகேமியா 8.1-12, 36உம் எஸ்றாவைப் பற்றி வாசிக்கலாம். 

5.            விவாதத்திற்கான கேள்விகள்.
1.         ஒரு வேதபாரகனாக, சீர்திருத்தவாதியாக எஸ்றாவின் பங்கு என்ன?
2.       யாருடைய அனுகிரகத்துடன் எஸ்றா எருசலேம் ஆலயத்தைப் புதுப்பிக்க பிரயாசம் எடுத்துக் கொண்டான்?
3.       எஸ்றாவின் பலம் என்ன?
4.       என்ன என்ன பாடங்கள் எஸ்றாவின் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ளலாம்?


மொழிபெயர்ப்பு
ஜே.ஜி.ராபின்சன் விக்டர்
சிலிம் ரிவர்

No comments:

Post a Comment