Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Sunday, May 20, 2012

57. மனாசே


யூதாவின் இராஜா



முக்கிய வசனங்கள்: 
இப்படி அவன் நெருக்கப்படுகையில், தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்கு முன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான்.  அவரை நோக்கி, அவன் விண்ணப்பம்பண்ணிக்கொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய ராஜ்யத்திற்கு வரப்பண்ணினார்.  கர்த்தரே தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான்.”  (2 நாளா: 33 : 12 – 13)


சுருக்கமான குறிப்புகள்
v    அவன் எசேக்கியாவின் குமாரன், மிகவும் பொல்லாத யூதாவின் இராஜா என்று அறியப்பட்டான். 
v    அவன் மற்ற தெய்வங்களைப் பணிந்து கொண்டான்.
v    அவன் அநேகக் குற்றங்களைச் செய்தான்.
v    அவன் கைதியாக பாபிலோனுக்குக் கொண்டு போகப்பட்டான்.
v    அவன் மகன் ஆமோன் தகப்பனாரின் பாவமான காரியங்களைப் பின்பற்றினான்.


1              அறிமுகவுரைஅவன் கதை
மனாசே என்றால் `மறதியின் காரணர்  என்று பொருள்படும். அவன் வட இராஜ்யத்திலுள்ள எல்லா இராஜாக்களின் யூதாவின் குலத்தவர்களில் உறுப்பினனாயிருந்தான்.  அவன் எல்லா தாவீதின் வம்சத்தின்படி யூதாவின் குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தான்.  அவன் யூதாவின் 15வது இராஜா. அவன் எசேக்கியாவின் குமாரன். அவன் இராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து 55 வருடங்கள் அரசாண்டான்.  அவன் கானானிலுள்ள விக்கிரகங்களை வணங்கினான்.  அவன் தகப்பன் இடித்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகாலுக்கு பலிபீடங்களை எடுப்பித்து, விக்கிரகத்தோப்பை உண்டாக்கி, கர்த்தருடைய ஆலயத்திலே வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டி, மோளேகுக்கு மரியாதை செய்வதற்காகத் தன் குமாரனைத் தீமிதிக்கப்பண்ணி, நாளும், நிமித்தமும் பார்த்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறி சொல்லுகிறவர்களையும் பார்த்து, கர்த்தரின் ஆலயத்தில் விக்கிரகத்தை உண்டாக்கி, கடைசியாக அவன் தன் ஜனங்களை அவர்களுக்கு முன்பாக கர்த்தர் விரட்டியடித்த கானானியர்களைப் பார்க்கிலும் மேலாக விக்கிரக ஆராதனை தேசத்தில் உள்ள ஜனங்களைப் பார்க்கிலும் இஸ்ரவேல் ஜனங்களைப் பொல்லாப்பு செய்யத்தக்கதாய் வழிதப்பிப் போகப்பண்ணினான். இந்த எல்லாக் குற்றங்களுக்கும் மேலாக, மனாசே இன்னும் அதிகமாகக் கொடுமை செய்து எருசலேமில் குற்றமற்ற இரத்த ஆறுகளை உண்டாக்கினான். இந்தப் பாவங்களினால் அவனைக் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டு போகும் தண்டனையைக் கர்த்தர் கொடுத்தார்.  அதனால் அவன் தேவனுக்கு முன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான் என்று நாளாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.  திரும்ப எருசலேமுக்கு வரப்பண்ணினதால் மேடைகளில் பலியிடுவதைத் தவிர, விக்கிரக ஆராதனை சம்பந்தமான எல்லா அடையாளங்களையும் அழித்துப்போட்டு, திரும்பவும் கர்த்தருடைய பலிபீடத்தை ஏற்படுத்தினான். அவன் எருசலேமைப் பலப்படுத்தக் காரணமாயிருந்து, யூதாவின் பலமான இடங்களில் எல்லாம் பாதுகாப்புப்படை அமைத்தான்.  மனாசே எருசலேமில் மரணமடைந்து, அவன் வீட்டுத்தோட்டத்தில் அடக்கம்பண்ணப்பட்டான். ( 2 இராஜா: 21; 2 நாளா: 33; எரே: 15: 4). 

அவன் விக்கிரகங்களினால் சாலமோனின் ஆலயத்தின் புனிதத்தன்மையை நீக்கி, கர்த்தரை அவமதிக்கும் நோக்கத்தில் செய்தான்.  இன்னும் அவன் அந்நிய தேவர்களை ஆராதனை செய்து, அவைகளுக்குத் தன் பிள்ளைகளைப் பலி செலுத்தினான்.  குழந்தை பலி விக்கிரக ஆராதனையின் இழிவான செயல்.  தேவனுக்கும் ஜனங்களுக்கும் எதிரான செயல். இப்படிப்பட்ட மோசமான பாவங்களுக்கு கண்டிப்பான திருத்தம் தேவை 

கர்த்தர் மனாசேக்குக் கண்டிப்பினாலும், தண்டனையினாலும் நீதியைக் காட்டினார்.  அவர் மனாசேயின் மனப்பூர்வமான விண்ணப்பத்தை மன்னித்து, அவனைக் காப்பாற்றி, இரக்கம் காட்டினார்.  மனாசேயின் இயற்கையான கலகத்தினால் அசீரியர்களின் கையில், கர்த்தரின் தண்டனை, தோல்வி, அடிமைத்தனம் இவற்றால் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை.  ஆனால் மனாசேயின் குற்றத்திற்கு வருந்துதலும், கர்த்தரின் மன்னிப்பும் எதிர்பார்க்கப்பட்டது.  மனாசேயின் வாழ்க்கை மாற்றப்பட்டது.  அவனுக்குப் புதிய வாழ்க்கை ஆரம்பமானது.   

2.        அவனின் பலங்களும் நிறைவேற்றுதலும்
a)      அவன் பாவங்களின் வெறுப்பான, கசப்பான பலன்களை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டான்.
b)      அவன் கர்த்தருக்கு முன்பாக அவனுடைய பாவங்களுக்காக அடக்கமாக வருத்தப்பட்டான். 

3.        அவனது பலவீனங்களும் தவறுகளும்
a)      கர்த்தரின் அதிகாரத்திற்குச் சவால் விட்டு, அதில் தோற்றுப்போனான்.
b)      அவன் தகப்பன் எசேக்கியாவின் ஆட்சி காலத்தில் உள்ள அநேக தெளிவான பயன்களை மாற்றிப் போட்டான்.
c)      அவன் பிள்ளைகளை விக்கிரகங்களுக்கு பலியிட்டான்.

4.        அவன் வாழ்க்கையிலிருந்து பாடங்கள்
a)      ஒருவரின் கவனத்தை ஈர்க்க கர்த்தர் நீண்ட தூரம் செல்ல வேண்டியதாயிருந்தது.
b)      மன்னிப்பு வரம்புக்குட்பட்டது பாவத்தின் அளவைப்  பொறுத்ததல்ல. ஆனால் நாம் செய்த பாவத்திற்கு வருத்தப்படுவதற்குச் சம்மதிப்பது. 

5.        வேதாகமக் குறிப்புகள் 
                மனாசேயின் கதை 2 இராஜா.21:1–18; 2 நாளா.32:33; 33:20லும் சொல்லபட்டிருக்கிறது. அவன் எரேமியா 15:4லும் குறிப்பிடப்பட்டிருக்கிறான். மன வருத்தப்படும் ஜெபம் அவனுக்கு சுமத்தப்படுவது அபோகிரிப்பாவில் காணப்படுகிறது.  இது உண்மையாக மனாசேயால் அல்ல. ஆனால் அது அவனுடைய பொல்லாத குணத்தையும், மனவருந்துதலையும் ஞாபகப்படுத்துவதாகக் காட்டுகிறது.
 

6.        விவாதத்திற்கான கேள்விகள்
a)      அவனுடைய பெயரின் பொருள் என்ன?
b)      அவனுடைய பலங்கள் யாவை?
c)      அவனுடைய பலவீனங்கள் யாவை?
d)      நாம் அவன் வாழ்க்கையிலிருந்து என்ன படிக்க முடியும்?
e)      ஏன் அவன் யூதாவின் மிகவும் பொல்லாத இராஜா என்று அறியப்பட்டான்? 


மொழிபெயர்ப்பு
திருமதி நாயகம் பட்டு
பரி. யாக்கோபின் ஆலயம்












No comments:

Post a Comment