Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Sunday, May 6, 2012

30. ஆகாப்

இஸ்ரவேலின் ராஜா, யேசபேலின் கணவன்


முக்கிய வசனம்
30 உம்ரியின் குமாரனாகிய ஆகாப், தனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். 31 நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களில் நடப்பது அவனுக்குக் கொஞ்சக்காரியமென்று நினைத்தாற்போல் அவன் சீதோனியரின் ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தி யேசபேலை விவாகம்பண்ணினதுமல்லாமல், அவன் போய் பாகாலையும் சேவித்து அதைப் பணிந்துகொண்டு, 32 தான் சமாரியாவிலே கட்டின பாகாலின் கோவிலில் பாகாலுக்குப் பலிபீடத்தை எடுப்பித்தான். 33 ஆகாப் ஒரு விக்கிரகத்தோப்பையும் வைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபம் உண்டாக்கும்படிக்கு தனக்கு முன்னிருந்த இஸ்ரவேலின் ராஜாக்களெல்லாம் செய்ததைப்பார்க்கிலும் அதிகமாய்ச் செய்துவந்தான்.  ( 1இராஜாக்கள் 16.30-33 )


சுருக்கமான குறிப்புகள்
·         பாகாலை வணங்கும் யேசபேலை மணந்து கொண்ட இஸ்ரவேலின் 9வது அரசன்.
·         இவன் பல யுத்தங்களில் வெற்றி பெற்றான்.
·         இவனுடைய மனைவி யேசபோல் பாகாலுக்கு ஒரு கோபில் கட்டினாள்.
·         ஆகாப், சட்டம், நீதியை நிலை நாட்டத் தவறி விட்டான் ( 1இராஜா.21.1-16 ).
·         நாபோத்தின் திராட்சத் தோட்டத்தைத் தவறான வழியில் எடுத்துக் கொண்டான். 



1.              இவனுடைய சரித்திரம்
ஆகாப் என்றால் ( தெய்வீக ) சகோதரன் தகப்பனாக இருக்கிறார் என்று பொருள் படும். இவன் உம்ரி என்ற எட்டாவது அரசனின் மகன். இவனுடைய சரித்திரம் 1இராஜா.16-22ம் அதிகாரங்களில் எழுதப்பட்டிருக்கிறது. பாகாலை வணங்கும் சீதோனியரின் ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தியாகிய யேசபேலை விவாகம் பண்ணினான். தன் சகோதரனிடமிருந்து சிங்காசனத்தைப் பறித்துக் கொண்டான். ஆகாபின் ஆட்சி காலத்தில் எலியா தீர்க்கதரிசியின் ஊழியம் சிறப்பாக இருந்தது. இஸ்ரவேலுக்குள் பாகால், அஸ்தரோத் வணக்கத்தை அறிமுகம் செய்து வைத்த தன் கணவனை தெய்வ வழிநடத்தி அவனை மிகக் கொடியவனாக்கினாள். நாபோத்தின் திராட்சத் தோட்டத்தை எழுத்துக கொள்ள ஆகாப் விரும்பியபோது, அந்த்த் திராட்சத் தோட்டம் தன் பிதாக்களின் சுதந்தரம் என்ற காரணத்தினால் மோசேயின் கட்டளையின்படி தான் அதை விற்க முடியாது என்று நாபோத் சொல்லி விட்டதினால் நாபோத்துக்கு விரோதமாகப் பொல்லாப்பு செய்யும்படி யேசபேல் ஆகாபைத் தூண்டினாள். நாபோத் தேவனையும் ராஜாவையும் தூஷித்தான் என்று அவன் மேல் பொய் குற்றம் சாட்டி அவனைக் கல்லெறிந்து கொலை செய்யும்படி கடிதம் அனுப்பினாள். 1இராஜா.21ம் அதிகாரம் இந்தக் கொடிய செயலுக்குத் தண்டனையாக ஆகாபின் குடும்பம் முழுவதும் அழிந்து போகும் என்று எலியா அறிவித்தான். ( 2இராஜா.9.26 ) 

ஆகாபின் ஆட்சியின் பெரும் பகுதி தமஸ்குவின் ராஜாவாகிய பெனாதாத்துக்கு விரோதமாக 3 முறை போர் செய்வதில் கடந்து விட்டது. முதல் இரண்டு யுத்தங்களிலும் அவன் முழுமையான வெற்றி பெற்றான். இரண்டாவது போரின் முடிவில் பெனாதாத் ஆகாபிடம் அகப்பட்டுக் கொண்டான். ஆனால் பெனாதாத் தன் தகப்பன் பிடித்த பட்டணங்களைத் திரும்பிக் கொடுத்து விடுவதாகவும், ஆகாபும் தமஸ்குவிலே வீதிகளை உண்டாக்கிக் கொள்ளலாம் என்றும் ஆகாபுடன் உடன்படிக்கை செய்த்தினால் விடுதலை செய்யப்பட்டான். ஆனால் மூன்றாவது யுத்த்த்தில் தேவனுடைய ஆசீர்வாதம் அவனுக்குக் கிடைக்கவில்லை. மிகாயா தீர்க்கதரிசி ஆகாப் தோற்றுப் போவான் என்று எச்சரித்தான். ஆனாலும் மற்ற தீர்க்கதரிசிகள் அனைவரும் ஆகாப் யுத்த்த்திற்குப் போகும்படி வற்புறுத்தினார்கள். அவன் மாறு வேடத்தில் யுத்த்த்திற்குச் சென்றான். ஒருவன் தற்செயலாக வில்லை நானேற்றி எய்த போது அது இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபைத் காயப்படுத்திற்று. சாயங்காலத்தில் அவன் இறந்து போனான். சமாரியாவில் அடக்கம் செய்வதற்காக அவன் சரீரம் கொண்டு வரப்பட்டபோது, கர்த்தர் சொல்லியிருந்தபடியே அவன் இரத்த்த்தை நாய்கள் நக்கினது. ( 1இராஜா.22.37-38 )


2.            அவனுடைய பலமும் சாதனைகளும் என்ன?
1.         நாத்தான் தாவீது ராஜாவுக்கு உண்மையுள்ள நண்பனாக இருந்தது போல், ஆகாப் எலியாவைத் தனக்கு உண்மையுள்ள நண்பனாகக் கொண்டிருந்திருக்கலாம். நாத்தான் கூறியதற்கு செவி கொடுத்துத் தாவீது தன் பாவங்களைக் குறித்து மனஸ்தாப்ப்பட ஆயத்தமாக இருந்தான். ஆனால் ஆகாப் எலியாவைத் தனக்கு எதிரியாகப் பார்த்தான். அவன் எலியாவுக்குக் கீழ்ப்படிந்திருக்கலாம். ஆனால் அவன் தேவனுக்கு விரோதமாகச் சென்றான்.
2.       ஆகாப் தன் இஷ்டத்திற்கு இணங்கி ஆபத்தில் மாட்டிக் கொண்டான். சரியான செயலைத் தெரிந்து கொள்ள அவனுக்கு விருப்பமில்லை. ராஜாவாக அவன் தேவனுக்கும் தீர்க்கதரிசியான எலியாவுக்கும் உத்தரவாதமுள்ளவனாக இருந்தான். ஆனால் அவன் தன்னை விக்கிரகாராதனைக்கு வழி நடத்தின ஒரு பொல்லாத மனுஷியை மணந்து கொண்டான். தன் மனைவியின் ஆலோசனைகளுக்குச் செவி சாய்த்தான். தன்னை சூழ்ந்திருந்தவர்களின் ஆலோசனைகளின்படி செய்து தன்னுடைய மரணத்தை எதிர்கொண்டான்.
3.       தேவனுடைய வார்த்தைகள் கூறும் ஆலோசனையை அவன் பின் பற்றத் தவறினான். தேவனுடைய வார்த்தையே நம்பத் தகுந்தது.
4.       அவன் ஒரு சிறந்த தலைவனும் யுத்த வீரனுமாக இருந்தான். 


3.            அவனுடைய பெலவீனங்களும் தவறுகளும்
1.         இஸ்ரவேலின் மிகப் பொல்லாத அரசனாக இருந்தான்.
2.       இவன் யேசபேல் என்ற நாத்திகப் பெண்ணை மணந்து கொண்டு இஸ்ரவேலில் அவள் பாகால் வணக்கத்தைப் பிரசாரம் செய்ய அனுமதித்தான். ( வாழ்க்கைத் துணைவன் அல்லது துணைவியைத் தெரிந்தெடுக்கும் விதமானது நமது வாழ்க்கையில் ஆத்துமப் பிரகாரமாகவும் சரீரப் பிரகாரமாகவும் நம்மைப் பாதிக்கும் ).
3.       ஒரு நிலம் கிடைக்காத்தினால் மணம் சலிப்படைந்தவனாக இருந்த சமயத்தில், அவன் மனைவி அந்த நிலத்தின் சொந்தக்காரனான நாபோத்தைக் கொலை செய்யும்படி ஆட்களை ஏவி விட்டாள்.
4.       அவன் தான் விரும்பியபடியே செய்யும் பழக்கமுள்ளவனான படியால்தான் விரும்பியது தனக்குக் கிடைக்காததால் மன உழைச்சலுக்குள்ளானான். சுயநலத்தைக் கட்டுப்படுத்தாமல் விடும் பட்சத்தில் அது மிகுந்த தீமையை விளைவிக்கும்.
5.       அவனுடைய இந்தப் புதிய உறவு, ஆஸ்தியுடன் அந்நிய தேவர்களின் வணக்கத்தையும் இஸ்ரவேலுக்குள் கொண்டு வந்தது.


4.            முடிவுரை
1இராஜா.22-39ம் அதிகாரங்கள் ஆகாபுடைய ஆட்சியின் காலத்தில் அவன் கட்டின பட்டணங்களைக் குறிப்பிடுகின்றன. எரிகோ மறுபடியும் சீராக்கிக் கட்டப்பட்டது. ராஜாவின் மனைவி முக்கிய ஸ்தானம் வகித்தாள். ஆகாப் பெலவீனமும் சஞ்சல புத்தியும் உடையவனாக இருந்தான்.


5.            விவாதத்திற்கான கேள்விகள்.
1.         ஆகாப் ராஜா யார்?
2.       அவனுடைய ஆட்சிக் காலத்தில் ஊழியம் செய்த தீர்க்கதரிசி யார்?
3.       பாகாலை வணங்கும் மதத்தை ஆதரித்த்து யார்?
4.       யேசபேலைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?
5.       பாகாலை வணங்கும் மதத்திற்கும் இஸ்ரவேலரின் மதத்திற்குமிடைய ஏற்பட்ட யுத்தத்தில் வெற்றி பெற்றது யார்?



மொழிபெயர்ப்பு
திருமதி டஃப்னி ஜோசப்

No comments:

Post a Comment