கரு வசனம்
அவன் தேவனுக்கு மகிமையைச்
செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான். ( அப்.12.23)
சுருக்கமான குறிப்புகள்
·
ஏரோது அகிரிப்பா ராஜா 1 தமது யூத குமக்களுடன் நல்ல உறவு கொண்டிருந்தான்.
·
வாலிபனாக இருந்தபோது தற்காலிகமாக திபேரியு ராயனால் சிறையில்
அடைக்கப்பட்டான்.
·
ரோம சாம்ராஜ்யத்தின் அரசர்களுடடன் அவன் நன்றாக ஒத்துழைத்தான்.
·
சீஷர்களைத் துன்புறுத்துதல் அதிகமாயிற்று.
·
செசரியாவில் அவன் தேவன் என்று சொல்லப்பட்டான். அவர்களுடைய
புகழ்ச்சியை அவன் ஏற்றுக் கொண்டான். அவன் தேவனுக்கு மகிமைமையையைச் செலுத்தாததினால்
ஒரு பயங்கரமான வியாதியினால் தாக்கப்பட்டு மரித்தான்.
·
சத்தியத்துக்கு அருகாமையில் நெருங்கி வந்தான். ஆனாலும் அதனை
அடையாமல் தவறி விட்டான்.
முகவுரை – இவனுடைய சரித்திரம்
நல்ல வழிகளிலோ அல்லது தீய வழிகளிலோ, குடும்பத்தினர் தங்கள்
குழந்தைகளிடம் நெடுநாள் நிலைத்திருக்கக் கூடிய பாதிப்பை உண்டு பண்ணுகின்றனர். சிறப்பான
தன்மைகளும் மற்ற குணங்களும் அடுத்த தலைமுறையிலும் காணப்படுவதுடன், அடிக்கடி பெற்றோர்களும்
அடுத்த தலைமுறையிலும் காணப்படுவதுடன், அடிக்கடி பெற்றோர் செய்த பாவங்களும், தவறுகளும்
பிள்ளைகளாலும் செய்யப்படுகின்றன. 4 தலைமுறையான ஓரோதின் குடும்பங்கள் வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு தலைவனும் தனது தீய குணத்தைக் காண்பித்தான். முதலாவது ஏரோது ராஜா, இயேசு பிறந்த
பொழுது பெத்லெகேமிலுள்ள குழந்தைகளைக் கொலை செய்தான். ஏரோது அந்திப்பா இயேசுவின் நியாய
விசாரணையிலும் யோவான் ஸ்நானகள் சிரச்சேதம் பண்ணப்படுவதிலும் சம்பந்தப் பட்டிருந்தான்.
ஏரோது அகிரிப்பா 1 யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தால் கொலை செய்தான் ( 12.2)
. ஏரோது அகிரிப்பா 2 பவுலை விசாரித்த நியாயாதிபதிகளுள் ஒருவன், அல்லது ஆலோசகராக, பவுலை
விடுதலை செய்யலாம் என்று நினைத்தான் ( அப்.26.32) .
ஏரோது அகிரிப்பா 2 யூத மக்களுக்குப் பிரியமாக நடந்து கொண்டான்.
இவனுடைய பாட்டி யூத ராஜகுலத்தைச் சேர்ந்தவராக இருந்ததினால், தங்களுக்கு விருப்பமில்லாவிட்டாலும்
மக்கள் இவனை ஏற்றுக் கொண்டார்கள். வாலிபப் பிராயத்தில் இவன் தற்காலிகமாக சிலகாலம் சிறையில்
வைக்கப்பட்டிருந்தான்.
யூதர்களின் தயவு கிடைக்கத் தக்கதாக ஓர் எதிர்பாராத வாய்ப்பு
இவனுக்குக் கிடைத்தது. புற ஜாதியார் அதிகமான எண்ணிக்கையில் கிறிஸ்தவர்களின் சபைகளில்
சேர்க்கப்பட்டனர். இவர்களுடைய துரிதமான வளர்ச்சியினால் யூதர்கள் அச்சுறுத்தப்பட்டனர்.
கிறிஸ்தவர்கள் கொடூரமாக துன்புறுத்தப்பட்டனர். சீஷர்களும் கூடத் தப்பவில்லை. யாக்கோபு
பட்டயத்தால் கொலை செய்யப்பட்டான். பேதுரு சிறையிலடைக்கப் பட்டான். ஆனால், சீக்கிரமே
ஏரோது உயிருக்கு ஆபத்தான ஒரு தவறைச் செய்தான். தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதினால்
அவன் இறந்தான் ( 12.19-23) .
தன்னுடைய தாத்தா, சிற்றப்பா, தனக்குப்பின் வந்த தனது மகனைப்
போல் ஏரோது அகிரிப்பா 1, சத்தியத்திற்கு மிக அருகில் வந்தான். பிரசங்கமும் செய்தான்.
ஆனாலும் தன் ஜீவனை இழந்து விட்டான். ஏனென்றால் மத காரியங்களுக்கு அரசியலின் ஒரு பகுதியாகவே
முக்கியத்துவம் கொடுத்தான். தேவன் ஒருவருக்கே உரித்தான துதி, புகழ்ச்சியைத் தனக்கு
எடுத்துக் கொள்வது தவறு என்று மனச்சாட்சி அவனக்கு இல்லை. இது சாதாரணமாக அடிக்கடி ஏற்படக்
கூடிய தவறு. எப்பொழுது நாம் நம்முடைய தகுதிகள் சாதனைகள் போன்றவை தேவனிடமிருந்து கிடைக்கும்
ஈவுகள் என்று உணராமல், இவை நம்முடையவை என்று பெருமை கொள்ளும் போது, ஏரோது செய்த பாவத்தை
நாமும் திரும்பச் செய்கிறோம்.
2. பலமும்
சாதனைகளும்
a. நிர்வாகத்திலும்,
பேச்சு வார்த்தை நடத்துவதிலும் திறமைசாலி.
b. தன்னுடைய
தொகுதியிலும் ரோமாபுரியிலுமுள்ள யூதருடன் நல்ல உறவை வளர்த்துக் கொள்ளக் கூடியவனாக இருந்தான்.
3. பலவீனமும்
தவறுகளும்
a. யாக்கோபைக்
கொலை செய்வதற்கான ஒழுங்குகள் செய்தான்.
b. பேதுருவைக்
கொலை செய்யும் திட்டத்துடன் சிறையில் வைத்தான்.
c. மக்கள்
தன்னை தேவனென்று புகழ அனுமதித்தான்.
4. அவன்
வாழ்க்கையிலிருந்து படிக்கும் பாடங்கள்
a. தேவனுக்கு
விரோதமாக நடந்து கொள்பவர்களுக்கு முடிவில் தோல்வி நிச்சயம்.
b. தேவன்
ஒருவருக்கே உரித்தான துதி புகழை நாம் ஏற்றுக் கொள்வதில் மிகுந்த அபாயம் உண்டு.
c. குடும்பத்தினரின்
சிறப்பான தன்மைகள் பிள்ளைகளை நன்மைக்கேதுவாக அல்லது தீமைக்கேதுவாக வழி நடத்தும்.
5. வேத
வசன ஆதாரங்கள்
a. அப்போஸ்தலர்
12.1-23
6. கேள்விகள்
1.
தன்னுடைய யூத குடிமக்களுடன் நல்லுறவு கொள்ளும்படி அவனுக்கு
உதவியாக இருந்த தன்மைகள் அல்லது குடும்பப் பின்னணி யாவை?
2. அவனைச்
சிறையிலடைத்தது யார்?
3. செசரியாவில்
அவன் செய்த மரணத்துக் கேதுவான தவறு என்ன?
4. அவன்
எப்படி இறந்தான்?
5. தேவனுடைய
சத்தியத்தை அறிந்து கொள்ள அவனுக்கு வாய்ப்பு கிடைத்ததா?
மொழிபெயர்ப்பு
திருமதி டஃப்னி ஜோசப்.
No comments:
Post a Comment