Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Sunday, May 6, 2012

94. எப்பாப்பிரா –


பவுலின் நண்பனும் உடன் வேலையாளும்

கரு வசனம்
அதை எங்களுக்குப் பிரியமான உடன்வேலையாளும், உங்களுக்காகக் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனுமாயிருக்கிற எப்பாப்பிராவினிடத்தில் நீங்கள் கற்றறிந்திருக்கிறீர்கள்;  ( கொலோ 1.7)

சுருக்கக் குறிப்புகள்
·         கொலோசெயிலுள்ள திருச்சபையை ஸ்தாபித்தவன்.
·         பவுலின் நெருங்கிய நண்பனும் உடன் வேலையாளும் ஆனவன்.
·         பவுல் எபேசுவில் ஊழியம் செய்த போது பவுலின் ஆலோசனையின்படி, பிரிகியா நாட்டிலே சுவிசேஷத்தை அறிவித்து கொலோசெ, லவோதிக்கேயா, எராப்போலி ஆகிய இடங்களில் சபைகளை ஏற்படுத்தினான்.
·         பவுல் ரோமாபுரி சிறையிலிருந்த போது, அங்கு சென்று பவுலைச் சந்தித்தான்.
·         கொலோசெயர், பிலேமோன் ஆகிய நிருபங்கள் எழுதப்பட்ட போது இவனும் பவுலுடன் சிறையிலிருந்தான். ( பிலேமோன் 23ம் அதி.)
·         எப்பாப்பிராவும் ------------- தன் ஜெபங்களில் உங்களுக்காகப் போராடுகிறான். ( கொலோ.4.12)

முகவுரை – அவனுடைய சரித்திரம்
எப்பாப்பிரா என்பதற்கு ‘வசீகரமான’ என்று அர்த்தம். இவனுடைய முழுப் பெயர் எப்பாப்பிராத்து என்பதாகும். இது கிரேக்க தேவதையின் பெயரைத் தழுவி வைக்கப்பட்டதாக இருக்கலாம். ஒருவர் புகழப்படும போது, அவர் யாரால் புகழப்படுகிறார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். எப்பாப்பிராவைப் புகழ்ந்து பேசியது யார் என்பதாகும். - மிகச் சிறந்த அப்போஸ்தலனாகிய பவுல். இவன் தன்னுடைய உடன் வேலையாள் என்று  கூறுகிறார் ( அடிமை) . இதனல் எப்பாப்பிரா கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு கிறிஸ்தவனாக மதம் மாறி பின்பு பவுல் ஊழியத்தில் உதவி செய்து வந்தான் என்று தெரிய வருகிறது. இவன் தன்னுடைய சொந்த ஊராகிய காலோசெயில் தங்கி அங்கே சுவிசேஷத்தைப் பிரசங்கித்து வந்தான். அங்குள்ள சபையில் ஒரு தலைவனாகவும் ஊழியம் செய்திருக்கலாம். இவன் கொலோசெயின் சபை வளர்ச்சியைப் பற்றிய செய்தியைப் பவுலிடம் கூறி, அங்குள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதில் பவுலிடம் ஆலோசனை கேட்கும் படியாகவும் இவன் பவுலைச் சந்திக்கும் படி வந்திருந்தான். கொலோசெயிலுள்ள மக்கள் இன்னமும் பவுலின் மேல் அன்பு வைத்திருக்கிறார்கள் என்று எப்பாப்பிரா பவுலுக்குத் தெரிவித்தான் ( 1.8) . எப்பாப்பிரா ஒரு நல்ல உடன் வேலையாளும் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனும்யிருந்தான்.

இவனுடைய சொந்த ஊர் கொலோசெ பட்டணம் ( 4.12) . இங்கு அவன் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தான். கொலோசெயர், பிலேமன் ஆகிய நிருபங்கள் எழுதப்பட்ட போது இவனும் பவுலுடன் சிறையிலிருந்தான். கொலோசெயின் அருகிலுள்ள லவோதிக்கேயா, எரோப்போலி பட்டணங்களிலும் இவன் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தான் கொலோ. 4.12) . பவுல் இவன் மூலமாகக் கொலோசெயின் நிலைமை பற்றி அறிந்து கொண்டான். ( கொலோ.1.7,8)  எப்பாப்பிரா செய்து வந்த ஊழியத்துக்காகப் பவுல் அவனைப் புகழ்ந்து கிறிஸ்துவின் ஊழியக்காரன் என்று சொல்லுகிறான் ( கொலோ.4.12) . பவுல் இவ்வாறு கூறுவது, எப்பாப்பிரா நம்பப்படத்தக்கவன் என்பதைத் தெரிவிக்கிறது. நமது மரணத்திற்குப் பின் நம்மைப் பற்றிக் கூறப்படும் வார்த்தைகளில், ‘இவன் உத்தியோகத்தில் எனக்கு நல்ல தோழன், கிறிஸ்துவுக்காக ஊழியம் செய்வதில் உண்மையுள்ளவன், மற்றவர்களிடமுள்ள நல்ல விஷயங்களைக் கவனித்து அதைக் குறித்துப் பேசும் குணம் உள்ளவர்”. என்று கூறப்பட்டால், அதுவே மிகச் சிறந்த புகழுரையாக இருக்கும்.


இவனுடைய வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ளக் கூடிய பாடங்கள்.
a.       ஒரு கிறிஸ்தவனாகப் பவுலின் உடன் வேலையாளாக ஊழியம் செய்தான். பவுல் இவனுடைய தலைவன்.
b.       கொலோசெயில் சபையை ஸ்தாபித்தான்.
c.       நற்செய்தியைப் பரப்புவதில் பவுலுடன் சேர்ந்து ஊழியம் செய்யக் கூடியவனாக இருந்தான்.
d.       சிறையிலும் இவன் பவுலோடிருந்தான். சிறைவாசத்தையும் ஏற்றுக் கொள்ள ஓர் ஊழியன் ஆயத்தமாக இருக்க வேண்டும்.
e.       கொலோசெ, லவோதிக்கேயா, எராப்போலியிலுள்ள மக்களின் நல்வாழ்வுக்காக மிகுந்த பிரயாசம் எடுத்துக் கொண்டான்.
f.       தன் சொந்த ஊரான கொலோசெ திரும்பிச் சென்றான். நம் சொந்த மக்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டிருக்கிறோம். தேவனுடைய ஊழியத்தில் பவுலுடன் ஒத்துழைத்தான். ஊழியர்களின் மத்தியில் பகை, பொறாமை இருக்குமானால் தேவனுடைய ஊழியத்திற்குத் தடையாக இருக்கும்.

வேத வசன ஆதாரங்கள்
கொலோசெயர், பிலிப்பியர் நிருபங்கள்.

கேள்விகள்
1.         எப்பாப்பிரா யார்?
2.       ஆதித் திருச்சபையில் அவன் என்ன ஊழியம் செய்தான்?
3.       பவுல் எதற்காக அவனைப் புகழ்ந்தார்?
4.       அவனிடமிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளுகிறோம்?
5.       அவன் என்ன தியாகம் செய்தான்?


மொழிபெயர்ப்பு
திருமதி டஃப்னி ஜோசப்.

No comments:

Post a Comment