Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Sunday, May 6, 2012

96. யூதேயாவின் ஏரோது ராஜாவும் அவனது குடும்பமும்

96. யூதேயாவின் ஏரோத ராஜாவும் அவனது குடும்பமும் ( கி.மு.37.4 )


சுருக்கமான குறிப்புகள்
·         ஏரோது ஏதோமியர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
·         யூதேயாவை 30 ஆண்டுகாலம் அரசாண்டான்.
·         எருசலேம் தேவாலயத்தைக் கட்டினான்.
·         அவனுடைய சந்தேகம் அநேக சிறுவர்களைக் கொன்றது.

முகவுரைஇவனுடைய சரித்திரம்

சகரியா, எலிசபெத்து, மரியாள்,யோசேப்பு, மாற்கு, அந்தேனி, அகஸ்டஸ் ஆகியோர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவன். யூதருக்கு ராஜாவான ஏரோது 1 ( கிமு.40-4 ) . இவனது தகப்பன் யூத மார்க்கத்தைச் சேர்ந்தவனும், இதுமேயாவில் பிறந்தவனுமாயிருந்தான். கிமு.47ல் இவன் ஜூலியஸ் சீஸர் என்பரால் யூதேயா தேசத்தின் காரியஸ்தராக நியமிக்கப் பட்டான். சீஸருடைய மரணத்திற்குப் பின் ஏரோது அந்தோனியின் ஆதரவைப் பெற்று, யூதருடைய ராஜாவாக 33 ஆண்டுகள் ரோமருக்கு உண்மையாக அரசாண்டு வந்தான். அவன் தேவாலயத்துக்காக தாராளமாகச் செலவு செய்தும்கூட அவனை யூதமக்களுக்குப் பிரியமானவான ஆக முடியவில்லை. அவன் ஒரு யூதனாக இஸ்ரவேலின் தேவனுடைய தேவாலயத்தை எருசலேமில் மறுபடி கட்டிய போதிலும், மற்ற இடங்களில் அந்நிய தேவர்களுக்கும் ட்டிய போதிலும் மற்ற இடங்களில் அந்நிய தேவர்களுக்கும் விக்கிரகாராதனைக் காரருக்கும் ஆலயங்களைக் கட்டினான். ஏரோது கிமு.4ம் ஆண்டில் மரித்தான். 

சாஸ்திரிகள் மூவரின் விஜயமும் அதைத் தொடர்ந்து பெத்லெகேமிலள்ள 2 வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் ஏரோது கொலை செய்ததும், அவன் சந்தேக குணம் படைத்தவன்  என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது ( மத்.2ம் அதி. ) . இந்தச் சந்தேகம் பன்மடங்கு வளர்ந்து இதினால் ஏற்பட்ட விளைவுகளினால், ஏரோது அவனது கொலைபாதகமான செயல்களுக்காகவே நினைவு கூரப்பட்டு வருகிறான். அவனுடைய மரணத்திற்குப் பின் ராஜ்யம் அவனுடைய குமாரர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டது. ராஜா என்ற பட்டம் இல்லாமலே இவனுடைய மூத்த குமாரன் அர்கெலாயு கிமு4-கிபி.6ல் அரசாண்டான். இவனுடைய தாய் சமாரியப் பெண்ணாக இருந்ததினால் மற்ற குமாரர்களைக் காட்டிலும் குறைவாக மதிக்கப்பட்டாள். இவனுடைய அடக்கு முறையான ஆட்சியை மக்கள் ஏற்றுக் கொளள முடியவில்லை. ஜனங்களால் வெறுக்கப்பட்ட இவனை ரோம அரசாங்கம் பதவியிலிருந்து விலக்கி நாடு கடத்திவிட்டது. யூதேயா ரோமரின் ஆட்சியின் கீழ் வந்து விட்டது.

காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது, அந்திப்பா என்றும் அறியப்பட்டிருந்தான். இவன் ஏரோதின் இளைய குமாரன் கலிலேயா, பெரோயாவைத் தன்னுடைய தகப்பனாரின் ராஜ்யத்திலிருந்து சுதந்திரித்துக் கொண்டான். இவனே யோவான் ஸ்நானகனைச் சிறையில் அடைத்துக் கொலை செய்வித்தான் ( மாற்கு 6.14-28 ) . நியாய விசாரணைக்காக பிலாத்து இயேசுவை ஏரோதிடம் அனுப்பினபோது இவனுக்கு இயேசுவுடன் சந்திப்பு எற்பட்டது ( லூக்கா 23.7 ) .  இயேசு ஒரு தடவை அந்த நரிஎன்று குறிபபிட்டது லூக்கா 13.31ல் கூறப்பட்டுள்ளது. தன்னுடைய சகோதரனின் மனைவியான ஏரோதியாளை விவாகம் செய்யும்படி இவன் தன் மனைவியை விவாக ரத்து செய்தான். இது சட்ட விரோதமானது என்று கண்டித்ததினால் யோவான் ஸ்நானகன் இவனுடைய கோபத்திற்கு ஆளானான். பின்னர் ஒரு யுத்தத்தில் அந்திப்பா தோல்வியுற்றான். அதனால் நாடும் கடத்தப்பட்டான்.

ஏரோது ராஜா ( அப்.12.1 )  அரிஸ்தொபூலுவின் மகன் . கிமு. 7ல் இவனது தகப்பனார் கொலை செய்யப்பட்ட பின்பு இவன் ரோமாபுரியில் வளர்க்கப்பட்டான். இவனது உறவினனான ஏரோது அந்திப்பா ஏரோதியாளை மணந்து கொண்டான். இவன் அப்போஸ்தலரைத் துன்பப்படுத்தினான். ( அப்.12.1 )  தனது 54வது வயதில் கிபி 44ல் இவன் மரித்தான் என்பதை லூக்கா எழுதியிருக்கிறார் ( அப்.12.20-23 ) . இவனுடைய மகன் அகிரிப்பா, ராஜா என்ற பட்டம் பெற்று தன் தகப்பனாரின் சிங்காசனத்தில் அமர்ந்தான். கிபி 48-66 வரை யூதருக்குப் பிரதான ஆசாரியனை நியமிக்கும் உரிமை பெற்றிருந்தான். கிபி 100ல் இவன் மரித்தான். இவனுக்குப் பிள்ளைகள் இல்லை. அப்.25.13-26ம் அதிகாரம் வரை அகிரிப்பா ராஜா பவுலைச் சந்தித்த விவரம், மற்றும் பவுல் அவனுக்குக் கூறிய விஷயங்கள் பற்றி நாம் வாசித்தறியலாம். 

யூதருடைய ராஜா என்ற பட்டம் ஏரோதுக்கும் ரோம அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்டது. ஆனால், யூத மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால் இவன் தாவீதின் வம்சத்தில் வந்தவன் அல்ல. முழுமையான யூதனும் அல்லன். எருசலேமின் தேவாலயத்தைத் திரும்பக் கட்டி, இஸ்ரவேலுக்கு நன்மை செய்த போதிலும் மக்கள் அவனைப் பெரிதும் பாராட்டவில்லை. ஏனென்றால் அவன் பல அந்நிய தேவர்களுக்கும் ஆலயங்களைக் கட்டினான். மக்களின் ராஜா விசுவாசத்தைப் பெறுவதற்காக அவன் எடுத்த விலையேறப் பெற்ற முயற்சியும் வீணாகி விட்டது. ஏனென்றால் அது வெறும் பார்வைக்காக மாத்திரம் மேலாகச் செய்யப்பட்ட காரியமாக இருந்தது.

அவனுடைய ராஜ பதவி ஆபத்தானதாகவும் நிலையற்றதாகவும் இருந்ததினால், அதை இழந்து போகும் சாத்தியம் உள்ளதென்று அவன் எப்போதும் கவலையுற்றிருந்தான். சாஸ்திரிகள் வந்து, வரப்போகும் புதிய ராஜாவைத் தேடுவதாகக் கூறியதைக் கேட்ட பின் அவனுடைய செயல்கள், நாம் அவனைப் பற்றி அறிந்தவற்றை உறுதிப்படுத்துவதாக இருக்கின்றன. அந்தக் குழந்தை தனக்கு அச்சுறுத்தலாக வருவதற்கு முன்பே அதைக் கண்டுபிடித்துக் கொலை செய்யத் திட்டமிட்டான். இதைத் தொடர்ந்து குற்றமில்லாப் பாலகர்கள் பலர் கொலை செய்யட்டது, மனிதனின் செயல்கள் சுயநலத்தினால் தூண்டப்படும்போது என்ன விளைவு ஏற்படும் என்பதற்கு ஒரு துக்ககரமான பாடமாக இருக்கிறது. ஏரோதுவின் சந்தேகம் அவனது சொந்தக் குடும்பத்தையும் விட்டு வைக்கவில்லை. அவனுடைய பிள்ளைகளில் பலரும் அவனுடைய மனைவியும் கூடக் கொலை செய்யப்பட்டனர். தன்னுடைய வாழ்க்கையையும் தானே கெடுத்துக் கொண்டான்.



பலமும் சாதனைகளும்
1.         யூதரின் ராஜா என்ற பட்டம் ரோமரால் கொடுக்கப்பட்டது.
2.       30 வருடங்களுக்கு மேலாக அதிகாரம் வகித்தான்.
3.       தயவு இரக்கம் இல்லாவனாக இருந்த போதிலும் தனது ஆட்சியில் சக்தி வாய்ந்த அரசனாக இருந்தான.
4.       பல வகைப்பட்ட மிகப் பெரிய கட்டடங்களைக் கட்டுவதற்குப் பணம் கொடுத்து உதவினான்.


பெலவீனமும் தவறுகளும்
1.         தன்னைச் சுற்றிலுமுள்ளவர்களிடம் பயம், சந்தேகம், பொறாமையுடன் நடந்து கொண்டான்.
2.       அவனுடைய பிள்ளைகளில் பலரும் ஒரு மனைவியும் கொலை செய்யப்பட்டனர்.
3.       பெத்லெகேமிலுள்ள குழந்தைகளைக் கொலை செய்யும் படி கட்டளை கொடுத்தான்.
4.       தான் தேவனை வணங்குவதாகச் சொல்லிக் கொண்ட போதிலும் தெய்வ நம்பிக்கையற்ற புற ஜாதியாரின் மதச் சடங்குகளில் ஈடுபட்டு வந்தான். 

இவன் வாழ்க்கையிலிருந்து படிக்கும் பாடங்கள்
1.         பெரிய அதிகாரம் சமாதானத்தையோ பாதுகாப்பையோ கொடுக்க முடியாது.
2.       தேவனுடைய சித்தம் சிறைவேற்றப்பட முடியாதபடி தடை செய்ய எவராலும் கூடாது.
3.       வெளியோட்டமான பக்தி, விசுவாசம் தேவனுடைய மக்களுக்குப் பிரியமானதாக இருக்காது.


தலைமைத்துவ ஒப்பீடு
ஏரோது
இயேசு
சுயநலமுள்ளவன்
மன உருக்கமுள்ளவர்
கொலை பாதகன்
சொஸ்தமாக்குபவர்
ஒழுக்கமற்றவன், பாவச் செயல் புரிபவன்
நீதியுள்ளவர், நல்லவர்
சுயநல அரசியல்வாதி
ழியம், பணி செய்பவர்
சிறிய ராஜ்யத்தின் அரசன்
எல்லா சிருஷ்டிகளையும் ஆட்சிகளையும் ஆட்சி செய்பவர்.


தேவாகம ஆதாரங்கள்
மத்தேயு 2.1-22, லூக்கா 1.5 

விவாதிக்க வேண்டிய கேள்விகள்
1.         அவனுடைய குடும்பப் பிண்ணனி என்ன?
2.       யூதேயாவை எவ்வளவு காலம் அரசாண்டான்?
3.       யோவான் ஸ்நாகனை சிரச் சேதம் பண்ணினது யார்? ( மாற்கு 6.14 )
4.       ஏரோது ராஜா யார்? ( அப்.12.1 )
5.       யூதேயாவின் ராஜாவான ஏரோதினுடைய பெலவீனங்களை எடுத்துக் கூறு.


மொழிபெயர்ப்பு
திருமதி டஃப்னி ஜோசப்.

No comments:

Post a Comment