Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Saturday, July 16, 2011

113. பிலேமோன்

பவுலால் மனமாற்றம் பெற்றவன், சபைத்தலைவன், நல்ல
நண்பன்; அடிமையின் உரிமையாளன்.

முக்கிய வசனம்:
 “அவன் என்றென்றைக்கும் உம்முடையவனாயிருக்கும் படிக்கும், இனிமேல் அவன் அடிமையானவனாகவல்ல, அடிமையானவனுக்கு மேலானவனாகவும் பிரியமுள்ள சகோதரனாகவுமிருக்கும் படிக்கும் கொஞ்சகாலம் உம்மைவிட்டுப் பிரிந்துபோனானாக்கும்.
எனக்கு அவன் பிரியமான சகோதரனானால், உமக்குச் சரீரத்தின்படியேயும் கர்த்தருக்குள்ளும் எவ்வளவு பிரியமுள்ளவனாயிருக்கவேண்டும்!”   பிலேமோன் 1:15;;;;;-16

சுருக்கத் திரட்டு
பிலேமோன் என்பவன்; பவுலால் மனமாற்றம் பெற்றவன். இவன் ஒரு சபைத் தலைவன், நல்ல நண்பன் மற்றும் அடிமையின் உரிமையாளன்.
இவனிடமிருந்து ஓடிப்போன ஒநேசிமு என்ற அடிமை பின்னர் கிறிஸ்தவனாக மாறினான்.
ஓடிப்போனதனால் கொல்லப்பட வேண்டிய ஒநேசிமுவை நண்பனாக ஏற்றுக்கொள்ளும்படி பவுல் பிலேமோனிடம் மன்றாடுகிறான்.
பவுல் ஒநேசிமுவை திரும்பவும் சேர்த்துக்கொள்ளுமாறு மட்டுமல்ல குடும்பத்தி;;ல் ஒரு நபராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டிக்கொள்ளுகிறான்.
இந்த புரட்சிகரமான சுவிசேஷம் போராளியின்  விரோதத் தோரணையில் அல்ல நிதானமான தோரணையில் எழுதப்பட்டிருக்கிறது.
பிலேமோனை சமாதானப்படுத்த பவுல் உளவியல் தத்துவத்தை பயன்படுத்தி அவரைச் சற்று புகழ்ந்தே எழுதியிருக்கிறார்;. சுவிசேஷத்திற்காக பவுல் தன் வாழ்க்கையில் செய்த சுய தியாகங்களை இங்கு வெளிப்படுத்திக் சுட்டிக் காண்பிக்கிறான்.
இதன் முக்கிய கருத்து  மன்னித்தல், மதித்தல், மற்றும் தடைகளைக் கடந்து வெற்றி பெறுதல் என்பதாகும்.

1. அறிமுகம் - அவனது கதை
அப்போஸ்தலனாகிய பவுல் பிலேமோனுக்கு எழுதிய கடிதத்தின் மூலமாக மட்டுமே நாம் இந்த பிலேமோன் என்பவனை குறித்து அறிய முடிகிறது. இந்த பிலேமோனை குறித்து புதிய ஏற்பாட்டில் வேறு எந்த இடங்களிலும் குறிப்பிடப்படவில்லை. இவன் கொலோசெ என்ற பட்டணத்தைச்; சேர்ந்தவன். பவுல் இந்த கொலோசெ பட்டணத்திற்கு இதற்கு முன்பு சென்றிராத போதும் இவரைக் குறித்து தெளிவாக அறிந்திருந்தான் (கொலோ 2;;:1). ஆகவே இவரைக் குறித்து எழுதும் போது பிரியமுள்ள உடன் வேலையாள்;; என்று எழுதுகிறான்  (பிலேமோன் 1;:1). பவுல் எபேசு பட்டணத்தில் ஊழியம் செய்த மூன்று வருட காலத்தின்  போது இவன் உடன் வேலையாளாக பணியாற்றி இருக்கலாம்;. (அப் 19:8-10). ஓடிப்போன  ஒநேசிமுவுக்காக அவனிடம் முறையீடு செய்தால் பயனுண்டு என பவுல் அறிந்திருந்தான்.


பிலேமோன், பவுலால் மாற்றம் பெற்றவன் மட்டுமல்ல நண்பனும், கொலோசெயாவில் சபைத்தலைவனும், அடிமைகளின் உரிமையாளனும் கூட. இவர்களிடையே இருந்த சகோதர அன்பை இந்த நிருபம் நமக்குத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. பவுல் பிலேமோனை பிரியமுள்ள உடன் வேலையாள் என அழைக்கிறதை நாம் காணலாம்.

பவுல் எழுதிய  இந்த நிருபத்தின் நோக்கமானது அடிமைத்தனம் என்பது கிறிஸ்தவத்துக்கு முரன்பாடான ஒன்று என்பதை வெளிப்படுத்தி அதன் மூலம்  ஒநேசிமுவை விடுதலைப் பெறச் செய்வதே. ஒநேசிமுவை பிலேமோன் தன்னுடைய குடும்ப அங்கத்தினரில் ஒருவனாக ஏற்றுக்கொண்டு சகோதர அன்போடு நடத்துவான் என்ற விசுவாசத்தோடு இந்த நிருபத்தை எழுதுகிறார் பவுல். ஒநேசிமு ரோமாபுரிக்குத் தப்பி ஓடுகயில் அங்கே பவுலை சந்திக்கிறார்;. அங்கேதானே சுவிசேஷத்திற்குக் கீழப்;படிந்து கிறிஸ்துவுக்குள் விசுவாசியாக தன்னை ஒப்புக் கொடுக்கிறான். (பிலேமோன் 1:10). இதனால் பவுல் ஒநேசிமுவை பிலேமோனுக்கு மீண்டுமாக அறிமுகப்படுத்தி ஒநேசிமுவை  அவனிடத்திற்கு மீண்டும் அனுப்புவதாக எழுதுகிறான். இந்த முறை அவரை ஓர் அடிமையாக அல்ல ஒரு பிரியமுள்ள சகோதரனாக ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கிறான். (பிலேமோன் 1:11,12,16). இந்த நிருபத்தில் பவுல் பிலேமோனுக்கு பக்குவமாக எடுத்துக் கூறுகிறான் (பிலேமோன் 1:10,14,15,20). எப்படியெனில் ஒநேசிமு பிலேமோனிடத்திலிருந்து ஓடிச் சென்றமையால், கைவிடப்பட்டவனாக அல்ல இனி அந்த காரியம் இவர்களை பிரிக்காதபடி கிறிஸ்துவுக்குள் ஒரே சகோதரராயிருக்க வேண்டும் என குறிப்பிட்டு எழுதுகிறான்.

பாவம் செய்த சமூகத்தினரிடையில் சுவிசேஷம் கொண்டு  வந்த பெரும் மாற்றத்திற்கு இந்த நிருபம் ஒரு சாட்சியாக இருக்கிறது. இரண்டாவதாக பிலேமோனுக்கு இவன் எழுதிய  கடிதம் பழமைவாத நிலைக்கும் வன்முறைக்கும் தடைவிதிக்கிறது. இந்த புரட்சிகரமான சுவிசேஷம் போராளியின்  விரோதத் தோரணையில் அல்ல நிதானமான தோரணையில் எழுதப்பட்டிருக்கிறது. இறுதியாக பவுலுக்கும் ஒநேசிமுவுக்கும் இடையே உருவாகிய இந்த சூழ்நிலையை நிதானித்தறிய நாம் ஒரு வழக்கறிஞரை போல சிந்திக்கவேண்டும். பவுல்  சுவிஷேத்திற்காக தன்னையே சுய பலியாக ஒப்புக்கொடுத்ததை எடுத்து காட்டி தனது சொந்த அனுபவமாகிய பாடுகளையும் நினைவு படுத்துகிறார். இந்த காரியத்தில் பவுல் ஒரு போதகனாகவும் நண்பனாகவும் அனுகி;, மிகவும் ஆர்வத்தோடு செயல்பட்டார். இது; உண்மையான கிறிஸ்தவ  தலைமைத்துவம் என்பது பயிற்சியின் வழியாகவும் ஜெபத்தோடும் சாந்தத்தோடும் செயல்படவேண்டுமே தவிர கடுமையாக அல்ல என்பதை நிருபிக்கிறது. கிறிஸ்து கூறியது போல எந்த நிலையில் உள்ள  மனிதர்களுக்கும் பொருந்தத்தக்கதாக பெருந்தன்மையான சமத்துவத்தை எல்லா நிலையிலும் வெளிப்படுத்துவதால் இந்த நிருபமானது ஒரு காலவரையற்ற ஒரு நினைவுச்    சின்னமாகும். மேலும் இந்த நிருபம்  கிறிஸ்தவர்களுக்கு கட்டளைகளையும் வழிமுறைகளையும் கொடுத்து அதன் மூலம் ஒரு சிறந்த சமூக சீர்திருத்தங்களை ஏற்படுத்த வழிவகுக்கிறது.

2. சிறப்பு அம்சங்கள்
  இது ஒரு நண்பனுக்கு எழுதப்பட்ட தனிப்பட்ட கடிதமாகும்


3. நோக்கம்
பிலேமோனைச் சமாதானப்படுத்தி அவனிடமிருந்து ஓடிப்போன அடிமையாகிய ஒநேசிமுவை மன்னித்து அவனை விசுவாசத்தினால் ஒரு பிரியமுள்ள சகோதரனாக ஏற்றுக்கொள்ளும்படி பவுல் இந்த கடிதத்தை பிலேமோனுக்கு எழுதுகிறான். அடிமைத்தனம் என்பது ரோமப் பேரரசில் பொதுவான ஒன்றாக இருந்தது. மேலும் சில கிறிஸ்தவர்களுக்கும் அடிமைகள் இருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

பவுல் தனது எழுத்துக்களில் இந்த அடிமை சங்கத்தைப் பழித்துப் பேசவில்லை, மாறாக அடிமையான ஒநேசிமுவை பிரியமான சகோதரனே என அழைத்து ஒரு தீவிர அறிக்கை செய்கிறான்.

4. வேதாகமக் குறிப்புகள்

புதிய ஏற்பாட்டில் பவுலால் எழுதப்பட்ட மிகச் சிறிய கடிதமாகிய பிலேமோன் என்ற நிருபத்தை வாசிக்கவும்.


5. சிந்தனைக்குரிய கேள்விகள்
   5.1 ஒநேசிமு என்பவன் யார்?
   5.2 பிலேமோன் என்பவன் யார்?
   5.3 இந்த நிருபம் (கடிதம்) எழுதப்பட்ட நோக்கம் என்ன?
   5.4 பவுல் அடிமை சங்கத்தைச் சீர்திருத்தம் செய்ய முயன்றானா?
   5.5 இது புரட்சிகரமான நிருபம் என்று அழைக்கப்படுவது ஏன்?                                                    



மொழிபெயர்ப்பு -
ஜான் ஆரோக்கியசாமி

No comments:

Post a Comment