கரு வசனம்: அவன் தன் ராஜ்யத்தின் மகிமையான ஐசுவரியத்தையும், தன் மகத்துவத்தின் சிறந்த பிரதாபத்தையும் அநேக நாளாகிய நூற்றெண்பது நாளளவும் விளங்கச் செய்துகொண்டிருந்தான். அந்த நாட்கள் முடிந்தபோது, ராஜா சூசான் அரமனையில் வந்திருந்த பெரியோர் முதல் சிறியோர் மட்டுமுள்ள சமஸ்த ஜனங்களுக்கும் ராஜ அரமனையைச் சேர்ந்த சிங்காரத்தோட்டத்திலுள்ள மண்டபத்தில் ஏழுநாள் விருந்து செய்வித்தான். (எஸ்தர் 1:4-5)
கதைச் சுருக்கம்
v ஹிமாலாயா (பாரதத்தின் வட பகுதி) முதல் கிரேக்கம் மற்றும் எகிப்து வரை அவன் ராஜ்யம் பரவியிருந்தது.
v இறுதியில் அவனுடைய ராஜ்யம் சிதறுண்ட நிலையில் அர்த்தசஷ்டா (ராஜாவின் மற்ற பெயர்) மீண்டும் பாரசீகம் திரும்பினான்.
v அவனுடைய ராஜ்யம் பெலனடைந்திருந்தாலும், அர்த்தசஷ்டா தன்னுடைய ஆதிக்கத்தை முழுமையாக மீட்க முடியவில்லை.
v அரசியல் மற்றும் பொருளாதார சூழ்ச்சிகளில் ஈடுபட்டு, பெண்களையும் பிரதானிகளையும் அகப்படுத்திக் கொண்டான்.
v இந்த ராஜாதான் பாபிலோனியக் கட்டுப்பாட்டை பாரசீகத்தின் கீழ் அகப்படுத்திக் கொண்டான்.
v வஸ்தி தனக்கு இணங்காததால், எஸ்தரை ராஜஸ்திரியாக்கிக் கொண்டான்.
v அவன் ஒரு சிறந்த கல்விமான் என்றும், உயரமானவன் என்றும், மிடுக்கானவன் என்றும், துணிவானவன் என்றும், அழகை ரசிப்பவன் என்றும் வேளாண்மையில் ஆர்வமுள்ளவன் என்றும் தயாளம் நிறைந்தவன் என்றும் வரலாறு கூறுகிறது.
1. முன்னுரை – அவன் வரலாறு
அகாஸ்வேரு இமயம், கிரேக்கம் மற்றும் எகிப்தை உள்ளடக்கிய மாபெரும் நிலப் பரப்பை ஆண்டு வந்தான். அவனுடைய ஆட்சி மீதான பேராசைக்கு எல்லையே இல்லை. ஆட்சியின் ஆரம்பத்தில் எகிப்து மற்றும் பாபிலோனில் ஏற்பட்ட கிளர்ச்சிகளை நசுக்கிய பின்னர் தன் கவனத்தைக் கிரேக்க நாட்டைக் கைப்பற்றுவதில் திருப்பினான். உலகத்தையே மேலாதிக்கம் செய்ய வேண்டும் என்ற தன் சித்தத்தை இந்தப் படையெடுப்புகளின் மூலம் காணலாம். அவன் ஆயிரக் கணக்கான படை தளபத்தியங்களைக் கொண்டிருந்தான். அப்படைகளை அணிவகுத்து வருவதற்கே ஒரு வாரகாலமாவது ஆகும் என்று கூறப்படுகிறது. இன்றைய ஆசியாவுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையே பாலம் அமைக்கச் சொன்னது அவனின் பதவிப் பேராசையைக் காட்டுகிறது. அப்பாலம் சூறாவளிக் காற்றினால் இடிந்து போன போது, பரவியிருந்த நீர்நிலைகளை அகற்றச் சொல்லி அங்குள்ள நிலப் பரப்பில் இருப்புத் தூண்களை ஊன்றச் செய்தான். அப்பாலத்தைக் கட்டிய பொறியியலாளர்கள் கொல்லப்பட்டனர். இரண்டாவது பாலம் கட்டிய பின்னர் அனைவரும் நிம்மதி அடைந்தனர்!
ஆரம்பத்தில் பல வெற்றிகளைப் பெற்று தேசங்களின் சொத்துகளைச் சூறையாடிக் குவித்தாலும், இறுதி காலக்கட்டப் படையெடுப்பு தோல்வியையே தழுவியது. இதனால் அவன் பாரசீகத்திற்குத் திரும்ப வேண்டியிருந்த்து. அவனுடைய ராஜ்யம் வல்லமை வாய்ந்ததாக இருந்தாலும், ஆரம்ப காலத்தைப் போல் பிரகாசிக்கவில்லை. இக்காலக் கட்டத்தில் அவன் ராஜ்ய தந்திரங்களிலும் அந்தபுரக் கயவத்திலும சிறப்புற்றுத் திகழ்ந்தான். ஆண் புணர்ச்சிக் காரணகாகவும் திகழ்ந்தான் என்று கூறப்படுகிறது. (மூல மொழியில் eunuch என்ற சொல் ‘கசையடித்துக் கொள்ளுதல்’ என்ற பொருளையும் கொண்டு வருகிறது). ஏதோ ஒரு வகையில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் நாடு செயல்படுவதற்கு அவன் பிற்காலத்தில் துலங்கினான்.
அகாஸ்வேரு ராஜா தன் வலிமையை வெளிப்படுத்தினான். பாபிலோனிய தேசத்தைத் தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்து விட்டதாக செய்திகள் வலம் வந்தன. கிரேக்க தேசத்தைத் அகப் படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. குறைந்த பட்சம் அத்தேசத்திடம் இருந்து அடைக்கல வரியையாவது (கப்பம்) பெறும் முயற்சி அது. தனது அருமை பெருமைகளைப் பிரபலப்படுத்திக் கொள்ள அவன் கடுமையாக உழைத்திருக்கிறான். ஆனால், அனைத்து முயற்சிகளும் இறுதியில் பேரழிவுக்கு வழிவகுத்த்து.
தன் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்ததாகவும் வரலாறு கூறுகிறது. தனது சிந்தையையும் அதிகாரத்தையும் சுகபோகத்திற்காகப் பயன்படுத்தியிருக்கிறான். எல்லை விரிவாக்கத்திற்கு ஜனங்களைக் கட்டாயப்படுத்தி இராணுவத்தில் சேர்த்திருந்திருக்கிறான். அதே போல், தன் காம இச்சைகளைத் தீர்த்துக் கொள்ள எஸ்தர் போன்ற இளம் பெண்களையும் வேட்டையாடியிருக்கிறான். வஸ்தியின் இடத்தை மாற்றீடு செய்வதற்கு அவன் அரங்கேற்றிய நாடகத்தை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். இவ்வாறு பல கன்னிப் பெண்களைத் தன் சொந்த காமப் பசிக்குப் பணிய வைத்திருக்கிறான்.
அணி ராபர்ட்ஸ் (Anne Roberts) என்பவர் அகாஸ்வேருவின் சிறப்பம்சங்களை ‘மலர்ச்சியின் விளக்குகள்’ (New Day Lights) (ஜன.-ஏப்ரல் 2008, பக்கம் 67) என்ற புத்தகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். அவன் ஒரு கல்விமான்; உயரமானவன்; மிடுக்கும் கம்பீரமும் நிறைந்தவன்; வனப்பை ரசிப்பவன்; வேளாண்மையில் ஆர்வமுடையவன்; தன்னை மகிழ்விப்பவர்களுக்குத் தயாளத்தோடு அள்ளியள்ளி வழங்கும் வள்ளல் என்று அந்நூலில் கூறப்பட்டுள்ளது. அத்துணை சிறப்புகளையும் வழங்கிய தேவனை மகிமைப்படுத்துவதற்குப் பதில், தன் சொந்த பெருமைகளுக்காகத் அத்தாலந்துகளைப் ஆதாயப்படுத்திக் கொண்டது உண்மையிலேயே துரதிர்ஷ்டம்.
2. ஆற்றல்களும் சாதனைகளும்
a) பாரசீகத்தின் தலைசிறந்த ராஜாக்களில் ஒருவர்.
b) இமயம் முதல் கிரேக்கம் மற்றும் எகிப்து தேசம் வரை அவன் ராஜ்யத்தை விரிவு படுத்தினான்.
c) தனது ராஜ்யத்தில் குவிந்து கிடந்த செல்வத்தையும் ஆட்சியையும் மகிமையையும் பெருமைகளையும் மற்றவர்களுக்கு வெளிப்படுத்தினான்.
3. அவன் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளக் கூடிய பாடங்கள்
a) தன் பெருமைகளையும் மகிமையையும் மாட்சியையும் பிறர் காண வேண்டும் என்று குறிக்கேள் வைத்திருந்தான். தன் செல்வத்தைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளத் தயாராய் இருந்தான்.
b) அவன் வல்லமை பொருந்திய ராஜாவாய் இருந்தும் வஸ்தி அவனுக்கு இணங்க மறுத்தாள். இது அவனுக்கு மிகப் பெரிய அவமானமாகும். வல்லமை பொருந்திய ராஜாவின் சித்தத்தை மறுக்க ஒரு பெண்ணால் ஆகும் என்று இது காட்டுகிறது.
c) தேவனால் அருளப்பட்ட ஆற்றலை துஷ்பிரயோகம் செய்தான் (எஸ்தர் 2)
4. வேதாகம மேற்கோள்கள்: எஸ்தர் புஸ்தகத்தில் அவன் வரலாறு அறியப்படுகிறது.
5. கலந்துரையாடலுக்கான கேள்விகள்
5.1 ஏன் அகாஸ்வேருவை ஒரு ‘பேரரசன்’ என்று வர்ணிக்கிறார்கள்?
5.2 அவன் ஏன் வஸ்தியைத் தள்ளுபடி செய்தான்?
5.3 அவன் எஸ்தரை எப்படி ராஜஸ்திரியாக்கினான்?
5.4 அவன் ஆற்றல்கள் யாவை?
5.5 ஆகாய் யார்? அவன் எந்த வகையில் ராஜாவுக்கு உதவினான்? (எஸ்தர் 2:1-4)
தங்களின் பணிசிறக்க வாழ்த்துக்கள் சகோதரரே. அற்புதமாக தொகுத்து மொழிபெயர்த்து வருகிறீர்கள். கர்த்தரின் கரம் கூட இருந்து தங்களை வழிநடத்தும்.
ReplyDeleteநன்றி சகோதரரே.
ReplyDelete