Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Friday, July 22, 2011

114. பிலிப்பு



ஆதித் திருச்சபையின் ஏழு மூப்பர்களில்  ஒருவன்

முக்கிய வசனம்:
அப்பொழுது பிலிப்பு பேசத்தொடங்கி, இந்த வேதவாக்கியத்தை முன்னிட்டு இயேசுவைக்குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான்.  அப்போஸ்தலர் 8:35

சுருக்கத் திரட்டு
சபையின் மூப்பராக இருந்து, அவரது முதல் கடமையான சரீர உணவை வழங்கி வந்தவன் பின்னர் ஆவிக்குரிய  ஆகாரத்தைப் பகிர்ந்தளிக்கிறவனாக மாறினான்.
பயண மதப் போதகனாக பணியாற்றியவன்.
வேதத்திலுள்ள ஆழமான சத்தியத்தை ஜனங்களுக்குப் போதித்தார்;.
ஒரு புறதேசத்தானாகிய எத்தியோப்பியனுக்கு சுவிசேஷத்தை அறிவித்து, ஞானஸ்நானம் கொடுத்து, மதப் போதகனாக  முதன் முதலில் உருவாக்கியவன்

1. அறிமுகம் - அவனது கதை
பிலிப்பு என்பதற்கு குதிரைகளின் நேசன் என்று பொருள். உலகமெங்கும் போய் சுவிசேஷத்தை அறிவியுங்கள் என்று இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு இறுதியாக ஒரு கட்டளை அளித்திருந்;தார். ஆனால் கிறிஸ்துவின் சீஷர்களோ, இதை கடைபிடிப்பதில் மிகவும் தயக்கங்காட்டினர். அக்காலத்திலே சபையானது மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டது. இதனால் விசுவாசிகள் எருசலேமிலிருந்து ய+தேயா, சமாரியா ஆகிய தேசங்களுக்கு சிதறினர். கிறிஸ்து முன்பு கூறியது இப்போது நிறைவேறிற்று. உணவு விநியோகப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டிருந்தார்  பிலிப்பு. அநேக சுவிசேஷகர்கள் ய+தர்களுக்கு மாத்திரம் சுவிசேஷத்தை அறிவித்தனர். ஆனால் இந்த பிலிப்பு அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல், பிற மதத்தாருக்கும் கிறிஸ்துவைக் குறித்து அறிவித்தார்.
முன்னோர்களின் பாரம்பரிய பழக்கத்தின்படி பொதுவாக ய+தர்கள் சமாரியாவிற்கு செல்ல தயங்குவர். ஆகையால் முதலாவது ய+தேயாவிற்கு  செல்வர். கடைசியாகத் தான் சாமாரியாவிற்குச் செல்வர். ஆனால் இந்த பிலிப்புவோ கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்க ஒரு தயக்கமுமின்றி நேரடியாக சமாரியாவிற்குச் சென்றான்.

எருசலேமுக்கு தேவனுடைய வார்த்தைகள் மீண்டும் கிடைத்தது. பிலிப்பு சமாரியாவிற்குச் சென்று அங்கே கிறிஸ்துவைக் குறித்து பிரசங்கித்தார்.  அநேக சமாரியர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். பிலிப்புவின் ஊழியத்தை பார்வையிட எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்கள் பேதுருவையும், யோவானையும் அனுப்;பினர். முந்தய காலத்தில் ஒதுக்கப்பட்டுவர்கள் என கருதப்பட்ட சமாரியர்கள் இப்பொழுது கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதைக் கண்ட பேதுருவும் யோவானும் வியப்படைந்தனர். விரைவாக தங்களையும் இந்த ஊழியத்தில் இணைத்துக் கொண்டனர்.

இந்த எழுச்சிகரமான மற்றும் வெற்றிகரமான வேளையில்;, கர்த்தருடைய தூதனானவன் பிலிப்புவை ஒரு பாலைவனத்திற்கு சென்று, எத்தியோப்பிய அதிகாரியாகிய ஒருவனை சந்திக்கும்படி பணித்தான். பிலிப்புவும் கீழ்ப்படிந்து உடனே அங்கே செல்கிறார். அந்த மனிதனோடு சுவிசேஷத்தை பகிர்ந்து கொள்ளுகிறான். இவனது திறன் மிக்க நற்செய்திப் பகிர்வினால் கிறிஸ்தவம் அயல் நாட்டிலே ஒரு சிறப்பான நிலையை அடைந்தது. இந்த நற்செய்திப் பகிர்வு அத்தேசத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

கடைசியாக பிலிப்பு செசரியா பட்டணத்தைச் சென்றடைந்தார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் பவுலைச் சந்தித்தார். கிறிஸ்தவர்களை அதிகமாக துன்புறுத்தின பவுல், பிலிப்பு மற்றும் பிற சீஷர்கள் எருசலேமிலிருந்து  வெளியேற, ஒரு முக்கிய காரணியாக இருந்தார். இந்த பவுல் பின்னர் கிறிஸ்துவுக்காகச் சிறந்த விசுவாசியாக மாறினார். புற ஜாதிகளிடையே, முதலில் மாற்றங்களை ஏற்படுத்தினவர் பிலிப்பு, ஆனால் முழு ரோம பேரரசுக்கும் சுவிசேஷஷத்தை எடுத்துச்சென்றவர் பவுல்.

நீங்கள் கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களாகவோ பின்பற்றாதவர்களாகவோ இருக்கலாம். இருப்பினும் பிலிப்புவின் வாழ்க்கை ஒரு சவால் மிக்க வாழ்க்கை என்பதனை நாம் உணர முடிகிறது. கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கும் சுவிசேஷம்  உரியது என்று நினைப்ப+ட்டுகிறான். மேலும் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் மற்ற எவரையும் கிறிஸ்துவை  ஏற்றுக்கொள்ள தடைசெய்ய உரிமை இல்லை என்பதையும் நினைப்பூட்டுகிறவனாக இருக்கிறான். உங்களைக் குறித்து உங்கள் அயலகத்தார் இவ்விதமாய் (பிலிப்புவைப் போல) சாட்சி கொடுக்க முடியுமா?



2. வல்லமையும் சாதனையும்

2-1 ஆதித் திருச்சபைகளில் பந்தி விசாரனை செய்த ஏழு பேரி;ல் இவரும்
   ஒருவர்.
2-2 பயணப்பட்டு மதப்போதனை செய்த முதல் மிஷனரி.
2-3 அனைவருக்கும் சுவிசேஷத்தை எடுத்துச் செல்லுங்கள் என்ற இயேசுவின்
   கட்டளைக்கு முதலில் கீழ்ப்படிந்தவர்களில் ஒருவன்.
2-4 வேதத்தை நன்கு கவனமாக கற்ற மாணவர், மட்டுமல்லாது அதன்
   பொருளை மாறாமல் சரியாக விளக்கக் கூடியவர்.



3. இவருடைய வாழ்க்கையிலிருந்து பாடங்கள்

3-1 முழு மனதோடு கீழ்ப்படிகிறவர்களை தேவன் பல்வேறு பெரிய
   காரியங்களுக்கு பயன்படுத்துவார்.
3-2 சுவிசேஷமானது உலகம் அனைத்திற்கும்  ஓரு நற்செய்தி.
3-3 புதிய ஏற்பாடுமட்டுமல்ல முழு வேதாகமமும் இயேசு கிறிஸ்துவைப் பற்றி
   நாம் நன்கு அறிந்துகொள்ள உதவுகிறது.
3-4 சமாரியர்கள் மற்றும் எத்தியோப்பிய மந்திரிகளுக்கு இவர்களுடைய மாற்றம்
   சுவிசேஷத்திற்கு நல்ல பலனைத் தந்தது.
3-5 பிலிப்பு தேவ தூதனுக்குக் கீழ்ப்படிந்து சென்றபடியால் எத்தியோப்பிய மந்திரி
   ஒருவனை தேவனுக்கு நேராக திருப்ப முடிந்தது.



4 வேதாகமக் குறிப்புகள்
பிலிப்புவைக் குறித்து அப்போஸ்தலர் 6:1-7, 8:5-40, 21:8-10  ஆகிய வேத பகுதிகளில் காணலாம்.


5 சம்பாசனைக்குரிய கேள்விகள்.
5-1 எதற்காக  இவர் நியமிக்கப் பட்டார்?
5-2 மூப்பராக இவர் எப்படி  சேவை செய்தான்?
5-3 எத்தியோப்பியாவில் சுவிசேஷத்தை பரப்ப இவர் எப்படி உதவி புரிந்தார்?
5-4 இவருடைய சாதனையையும் வலிமையையும் முன்னிலைப்படுத்துக.
5-5 சமாரியாவில் இவர் செய்தது என்ன?      

மொரிபெயர்ப்:
ஜான் ஆரோக்கியசாமி,
கிள்ளான்


No comments:

Post a Comment