82. எஸ்தர் - பெர்சியா நாட்டின் ராஜஸ்திரி
கருவசனம்:
நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள். (எஸ்தர் 4:14) எஸ்தர் 4.14யும் காண்க
கதைச் சுருக்கம்:
· பெர்சியா தேசத்தில் அடைக்கலம் புகுந்த ஒரு யூதப் பெண்.
· பெற்றோரை இழந்த நிலையில் தன் தாய் மாமனால் வளர்க்கப் பட்டாள்.
· ராணியாராகத் தேர்ந்தெடுக்கப் பட்டாள்.
· ஊக்கம், ஞானம் மற்றும் தேவனுடைய கிருபையால் எஸ்தர் தன் ஜனத்தாரை அழிவிநின்று காப்பாற்றினாள்.
1. முன்னுரை – அவள் வரலாறு
எஸ்தர் என்ற பெயர் நட்சத்திரத்தைக் குறிக்கிறது. கிழக்கத்திய முடியரசர்கள் தாங்கள் கௌரவிக்கும் நபர்களின் பெயர்களை மாற்றியமைப்பது வழக்கமாய் இருந்த்து (ஆதி.41:45) எனவே, மணமாகாத இந்த யூதப் பெண்ணுக்கு எஸ்தர் என்ற பெயர் வழங்கப்பட்டது. பின்னர் அவள் பெர்சியா நாட்டின் ராணியாராக உயர்த்தப் பட்டாள். பெர்சியா நாட்டில் புகழிடம் நாடி வந்த யூத பெற்றோருக்குப் பிறந்தவள். தந்தையின் பெயர் அபியாயேல் (2.15). இளம் வயதிலேயே பெற்றோர்களைப் பறிகொடுத்த நிலையில், தன் மைத்துனராகிய மொர்தேக்காயால் தத்தெடுக்கப் பட்டாள். வஸ்தி ராணியார் மரித்த பிறகு, அகாஸ்வேரு ராஜாவுக்கு முன்னால் கொண்டு நிறுத்தப்பட்ட சகல ரூபவதிகளைப் பார்க்கிலும், எஸ்தர் சௌந்த்தரியமுள்ளவளாகக் காணப் பட்டாள். எனவே, சகல மரியாதைகளுடனும் அவள் ராஜஸ்திரியாக கிரீடம் சூட்டப் பட்டாள். இச்சம்பவத்திற்குப் பின்னான சிறிது காலத்தில், மொர்தேக்காய் எஸ்தரிடம் தொடர்பு கொண்டு, ராஜாவைக் கொன்று போடும் இரண்டு பிரதானிகளின் சதித் திட்டத்தை வெளிப்படுத்தினான். எஸ்தர் அதனை ராஜாவிடம் அறிவித்தாள். ராஜாவின் விசாரிப்பில் அது மெய்யென்று தெரியவர, அவ்விருவரும் தூக்கிலிடப் பட்டனர். ஆமானோ, தனக்குத் தலை வணங்காத மொர்தேக்காய் மீது எரிச்சலுண்டாகி, அனைத்து யூதக் குடிகளையும் சங்கரித்துப் போட்டு, அவர்களுடைய உடைமைகளைச் சூரையாட வகை தேடினான். பெர்சியா தேச மகத்தானவர்களின் பொறாமைக்கு அஞ்சு, இதுகாறும் எஸ்தரின் பூர்வீகம், அறியப்படுத்தப்படாமல் பேணப்பட்டு வந்தது. ராஜாவும் இதனை அறியாத நிலையில், அஜாக்கிரதையாய், நல்லெண்ணத்தோடு, ஆமானின் வேண்டுகோளுக்கு இணங்கினான். எஸ்தர் இந்தச் சூதான காரியத்தை அறியாதிருந்தாள். ஆனால், மொர்தேக்காய் அவளைச் சந்திக்க வகை தேடி, தன் இனத்தார் சார்பாக யூதக் குடிகளைக் காப்பாற்ற உதவி கேட்டான். அறிவிக்கப்படாமலும், அழைக்கப்படாமலும் ராஜஸ்திரி எஸ்தர் அகாஸ்வேருவின் முன் பிரவேசிக்கும் போது, பெரிய விபரீத்த்தை எதிர்நோக்கினாள். பெர்சியா வழக்கத்தின், இப்படி அத்துமீறி பிரவேசிக்கிறவர்களுக்கு முன், ராஜா தம் பொற்செங்கோலை நீட்டினாள் ஒழிய, அவர்கள் உயிர் தப்பார்கள். மூன்று நாள் உபவாசித்து ஜெபித்த பின்னர் எஸ்தர் ராஜாவின் முன் திடீர் பிரவேசம் கொண்டாள். ராஜாவும் அவளுக்கு முன்பாக தம் பொற்செங்கோலை நீட்டினார். எஸ்தர், ராஜாவை ஒரு விருந்துக்கு அழைத்து, ஆமானின் துர்யோசனையை அறிவித்தாள். அந்த விருந்தில் ஆமானும் வந்திருந்தான். ஆமான் தூக்கில் இடப்பட்டதோடு, யூதர்களுக்குத் தாங்கள் தாக்கப்படும் பட்சத்தில், தற்காத்துக் கொள்வதற்கான அதிகாரமும் வழங்கப்பட்டது.
2. இந்தப் புஸ்தகத்தின் அமைப்பு முறை என்ன?
வேதாகமத்தில் எஸ்தர் புஸ்தகம் நெகேமியா புத்தகத்திற்கு அடுத்து வருகிறது. ஆனால், இதன் சம்பவங்களோ நெகேமியாவின் காலத்திற்கு 30 வருடங்களுக்கு முன் நிகழ்ந்தவை. பெரும்பாலான சம்பவங்கள், பெர்சிய ராஜ்யத்திலும் அதன் தலைநகரான சூசான் ஊரிலும் நடந்தேறியவை.
3. எஸ்தர் புஸ்தகத்தின் உள் அடக்கங்கள் வறுமாறு
வஸ்தியின் மரணத்திற்குப் பின் எஸ்தர் ராணியாராக உயர்த்தப்படுதல் (1:2). யூதர்களை சங்கரிக்கும் ஆமானின் சதி தெரியவருதல். அதனால் உண்டாகப் போகும் விளைவுகள் தெரியவிருதல். ஆமானின் சதித் திட்டம் முறியடிக்கப்படுதல். இக்கதை, யூதர்கள் தங்கள் எதிரிகளிடம் அடைந்த வெற்றியையும் அதன் நினைவாக பூரிம் எனப்படும் பண்டிகையை ஆசரிப்பதையும் மொர்தேக்காயின் முன்னேற்றத்தையும் காட்டுகிறது (4:10).
4. சிறப்பு அம்சங்கள்
பெண்கள் பெயரில் வழங்கப்பட்ட இரண்டு வேத புஸ்தகங்களில் எஸ்தரும் ஒன்று (மற்றொன்று ரூத்). கர்த்தருடைய நாமம் குறிப்பிடப்படாமல் இருப்பது சற்று விநோதமாகக் காணப்பட்டாலும், அவருடைய வழிநடத்துதல் 4:14ல் மறைபொருளாக அறிவிக்கப்படுகிறது. கர்த்தருடைய பிரசன்னம் வெளிப்படையாக அறிவிக்கப்படாத்தால், சில குருமார்கள் இது வேதத்தில் சேர்க்கப்பட்டதைக் குறித்து கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், கர்த்தருடைய பிரசன்னம் இப்புத்தகம் முழுவதும் வெளிச்சமாய் உள்ளது. கர்த்தருடைய மகத்துவத்தையும் அவருடைய கருணை மிகுந்த வழிநடத்துதலையும் வெளிப்படுத்துவதே நோக்கமாகும்.
5. சிறப்புகளும் சாதனைகளும்
a) அவளுடைய சௌந்தரியமும் குணநலனும் பெர்சிய ராஜாவின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது.
b) தன் இனத்தாரைக் காப்பாற்ற விழிப்போடும் ஊக்கத்தோடும் செயல்பட்டாள்.
c) ஆலோசனைக்குச் செவி கொடுப்பதோடு, இக்கட்டான நேரத்தில செயல்படவும் துணிந்திருந்தாள்.
d) சொந்த பாதுகாப்பைக் காட்டிலும், பொது நலனில் முக்கியத்துவம் வழங்கினாள்.
6. அவள் வாழ்க்கையின் மூலம் கற்றுக் கொள்ளக் கூடிய பாடங்கள்
a) தேவ ஊழியத்தில் நமது பாதுகாப்புக்கும் மருட்டல் உண்டாக்க் கூடும்.
b) நமக்கு வழங்கப்பட்டுள்ள சூழ்நிலையில் தேவன் ஒரு நோக்கத்தையும் வைத்திருக்கிறார்.
c) ஊக்கம் நமக்குத் தேவைப்பட்டாலும், ஜாக்கிரதையான திட்டமிடுதலுக்கு ஈடாகாது.
d) நமது தரிசண சாட்சிகளிலும் எஸ்தரைப் போல், அபாயங்களைச் சந்திக்கக் கூடும்.
e) நமது விசுவாசப் பயணத்திலும், இந்த யூத ஜனங்களைப் போல, தேவன் நமக்குப் பின்னால் செயல்படுகிறார் என்பதை அவசியம் விசுவாசிக்க வேண்டும்.
7. வேதாகம மேற்கோள்கள்: எஸ்தர் புஸ்தகத்தில் எஸ்தரின் கதை கூறப்பட்டுள்ளது.
8. கலந்துரையாடலுக்கான கேள்விகள்
8.1 அவளுடைய குடும்ப உறுப்பினர்கள் யாவர்?
8.2 மொர்தேக்காய் யார்?
8.3 ஆமான் யார்?
8.4 அவள் எந்த அபாயத்தை எதிர்நோக்கத் தயாராய் இருந்தாள்?
8.5 கர்த்தர் நிமித்தம் மலேசியர்களாகிய நாம் எப்படிப்பட்ட சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது?
No comments:
Post a Comment