கரு வசனம்: “தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத் தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்.” (செப்பனியா 2:3)
வரலாற்றுச் சுறுக்கம்
v மன நிறைவு கொண்ட ஜனங்களைக் குலுக்கிப் போடும் நோக்கம் கொண்டது.
v யோசியா ராஜா தம் சீர்திருத்தத்தைத் தொடங்கினார்.
v தேவன் தண்டனையைத் தீர்ப்பளித்த பின்னர் தமது கிருபையைக் காட்டுவார்.
v தேவனிடத்தில் தொடர்ந்து விசுவாசம் காட்டுகிறவர்களுக்கு அவருடைய கிருபை கிட்டும்.
1. முன்னுரை – அவர் வரலாறு
இந்தப் புத்தகத்தின் நோக்கம் என்ன? தங்கள் சாதனையில் மன நிறைவு கொண்ட யூதா ஜனத்தாரைக் குலுக்கிப் போட்டு, தேவனண்டை மீண்டும் கிட்டிச் சேர இப்புத்தகம் எழுதப்பட்டது. செப்பனியா யூதா தேசத்தாருக்கும் உலகிலுள்ள மற்ற எல்லா ஜனத்தாருக்கும் இப்புத்தகத்தை எழுதினார். செப்பனியா, தம் ஊழியத்தின் இறுதி காலக்கட்ட வாக்கில் (கி.மு.640-621) இப்புத்தகத்தை எழுதியிருக்கலாம். அக்காலக் கட்டத்தில்தான் யோசியா ராஜாவின் மாபெரும் மறுமலர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப் பட்டன.
யோசியாவுக்கு முன்பு ஆட்சி செய்த மனாசே, ஆமோன் என்ற இரண்டு ராஜாக்கள் அமலுக்குக் கொண்டு வந்த பொல்லாங்கான பழக்க வழக்கத்தை நீக்கி விட அவர் எத்தனித்தார். யோசியாவை வெல்லக் கூடிய சக்தி வாய்ந்த அரசாங்கம் பூமியெங்கும் இல்லாத்தால், யோசியாவால் தம் செல்வாக்கை விரிவு படுத்த முடிந்தது. (அகாஸ்வேருவின் செல்வாக்கு அப்போது குன்றத் தொடங்கியது). செப்பனியாவின் தரிசணம் ஒரு வேளை யோசிவாவின் மறுமலர்ச்சிக்கு உந்துதலாக அமைந்திருக்கலாம். எரேமியாவும் யோசியாவும் ஒரே காலக்கட்டத்தில் வாழ்ந்தவர்கள் ஆவர்.
தேவனின் தீர்க்கதரிசி என்ற முறையில் செப்பனியா சத்தியத்தைப் பேச உந்தப்பட்டான் – தேவனுக்குக் கீழ்ப்படியாத ஜனங்கள் சந்திக்கப் போகிற அதிரடியான தீர்ப்புகள், அகோரமான தண்டனைகள் யாவற்றையும் துணிந்து அறிவித்தார். தேவனின் பொறுமை கடந்த மூர்க்கம் ஜனங்களை இந்நிலத்தில் இருந்து பெருக்கியெடுத்தி அழித்துப் போடும். மனிதர்களும் விலங்குகளும் ஒருசேர அழிந்து போவார்கள்; நான் ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், இடறுகிறதற் கேதுவானவைகளையும் துன்மார்க்கரோடேகூட வாரிக்கொண்டு, தேசத்தில் உண்டான மனுஷரைச் சங்காரம் பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (1:3). எந்த உயிரினமும் இப்பூமியில் தப்பாது. அந்த பயங்கரமான நாள் வெகு சமீபமே – கூடிய விரைவில் நிகழும் அளவுக்கு நெறுங்கி விட்டது. கேள்! அந்நாளில் மிகவும் மனக் கசப்பான அளுகை உண்டாகும். யுத்த வீர்ர்களும் கூக்குரல் இடுவார்கள். கர்த்தருடைய பெரிய நாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்து வருகிறது; கர்த்தருடைய நாளென்கிற சத்தத்துக்குப் பராக்கிரமசாலி முதலாய் அங்கே மனங்கசந்து அலறுவான். அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் இடுக்கமுமான நாள்; அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்” (1:14-15). அவருடைய நேயர்களால் அந்த ஒடுக்கப் படுதலையும் வியாகூலத்தையும் உணர முடியும். அதி விரைவாக அவர்கள் விசாரிக்கப்பட்டு, பாதாளத்திற்குத் தள்ளப்படுவார்கள்.
இந்தப் பயங்கரமான அறிக்கையின் மத்தியிலும் நம்பிக்கையான செய்தியும் கூறப்பட்டது. செப்பனியாவின் முதல் அதிகாரம் முழுவதும் பயங்கரமான சம்பவங்களின் தரிசணங்கள் கூறப்பட்டுள்ளன. ஆயினும் இரண்டாவது அதிகாரத்தில், ஒரு மெல்லிய வாக்குத்தத்தம் அறிவிக்கப் படுகிறது. “தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத் தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒரு வேளை கர்த்தருடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்” (2:3). அதனைத் தொடர்ந்து வரும் வசனங்களில், “அந்தத் தேசம் யூதா வம்சத்தாரில் மீதியானவர்களின் வசமாகும்; அவர்கள் அவ்விடங்களில் மந்தை மேய்ப்பார்கள்; அஸ்கலோனின் வீடுகளிலே சாயங்காலத்திலே படுத்துக் கொள்வார்கள்; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களை விசாரித்து, அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவார்.” (2:7) என்று எழுதப்பட்டுள்ளது.
இறுதியாக மூன்றாவது அதிகாரத்தில், தம்மிடத்தில் விசுவாசமாக நிலைத்திருப்பவருக்கு அவருடைய கிருபை நிச்சயம் நிலைத்திருக்கும் என்று முழங்கப்படுகிறது. “சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப் பாடு; இஸ்ரவேலரே, ஆர்ப்பரியுங்கள்; எருசலேம் குமாரத்தியே, நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு. கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.” (3:14-15). ஒரு நம்பிக்கை பிறந்திருக்கிறது என்பது சத்தியம். இந்த நம்பிக்கை, தேவனுடைய நியாயத் தீர்ப்பிலும் அவருடைய ஜனங்களின் மீதான அன்பிலும் சார்ந்திருக்கிறது.
தேவன் பாவத்தை அற்பமாகக் கருத மாட்டார் என்று செப்பனியா நினைவுறுத்துகிறார். பாவத்தின் நிமித்தம் நாம் தண்டிக்கப் படுவோம். ஆனால், அவர் ஊட்டுகிற நம்பிக்கையில் நாம் சார்ந்திருக்கலாம் – அவர் நம்மை ஆள்பவர். அவர் தமது ஜனங்களை இரட்சிப்பார். அவருடைய தண்டனைக்குத் தப்பித்துக் கொள்கிற எஞ்சியவர்களில் நீயும் ஒருவராக இருக்க விசுவாசத்தோடு தாழ்மையாக்க் கர்த்தராகிய தேவனைத் தொழுது கொள்!
செப்பனியா யூதாவின் தீர்க்கதரிசியாக கி.மு.640-621ல் செயல்பட்டார்.
2. அவருடைய செய்திகளில் பிரதானமானவை
a) வாழ்ந்த காலக்கட்டத்தின் நிலவரம்: கடைசியாக ஆட்சி செய்த நீதியான ராஜாக்களில் இவரும் ஒருவர். தம் ஜனங்களை மீண்டும் தேவனண்டை கிட்டிச் சேர்க்க அவர் தீவிரமாக ஈடுபட்டது ஒருவேளை செப்பனியாவின் தாக்கத்தால் அமைந்திருக்கலாம்.
b) பிரதான செய்தி: அனைத்து ஜனங்களும் தண்டிக்கப்படவிருக்கும் அந்த நாள் திண்ணமாக வரும். ஆனால், அதன் பிறகு, தம்மிடத்தில் விசுவாசமாய் இருப்பவர்களுக்குத் தேவன் இரக்கம் காட்டுவார்.
c) அச்செய்தியின் முக்கியத்துவம்: கீழ்ப்படியாமையின் நிமித்தம் நாம் அனைவரும் தேவனால் தண்டிக்கப்படுவோம்; ஆனால், நாம் தொடர்ந்து அவருக்குக் கீழ்ப்படிந்தால், தேவன் நம்மிடத்தில் இரக்கங் காட்டுவார்.
d) சமகால தீர்க்கதரிசி: எரேமியா (கி.மு. 627 – 586)
3. முக்கிய கருப்பொருள்கள்
கருப்பொருள்கள் விளக்கம்/முக்கியத்துவம்
நியாயத்தீர்ப்பின் நாள் யூதாவின் ஜனங்கள் தேவனை மறந்து விட்டதால் அழிவு அவர்களை நெருங்கி வந்தது. ஜனங்கள் பாகால், அஸ்தரோத், மோளேக்கு, நட்சத்திரக் கற்களையும் போன்ற பலவிதமான விக்கிரகங்களை வணங்கி வந்தனர். ஆசாரியர்கள் கூட தங்கள் தெய்வ வணக்கத்தில் விக்கிரக ஆராதனைகளைக் கடைபிடித்து வந்தனர். ஆண்டவரும் தம் தண்டனையை அனுப்பி விட்டார்.
அவருடைய தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ள, நாம் அவருடைய உத்தரவுக்குச் செவி சாய்த்து, அவருடைய கண்டனத்திற்குக் கீழ்ப்படிந்து, விசுவாசத்தோடு அவருடைய வழிநடத்துதலை நாட வேண்டும்.
ஆண்டவரை உதாசீனப்படுத்துதல்: பலவிதமான புத்திமதிகள் எடுத்துக் கூறப்பட்டும், யூதாவின் ஜனங்கள் தங்கள் பாவங்களைக் குறித்து மனஸ்தாபப்படவில்லை. செல்வச் செழிப்பில் திழைத்திருந்ததால், ஆண்டவரைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. உத்தமமாக வாழ ஆண்டவர் வற்புறுத்தினாலும், யூதாவின் ஜனங்களுக்கு அது, ஏற்புடையதாகத் தெரியவில்லை. அவர்களுடைய செல்வத்தினால் உண்டான செழிப்பு அவர்களுக்கு திருப்தியைத் தந்து மயக்கத்தில் ஆழ்த்தியது.
களிகூறும் நாள்: நியாயத் தீர்ப்பின் நாள் களிகூறும் நாளாகவும் திகழும். தம் ஜனங்களைத் துன்புறுத்தியவர்கள் தண்டிக்கப்படுவார்கள். எல்லாவிதமான பாவங்களையும் துன்மார்க்கங்களையும் அகற்றி தேவன் தம் ஜனங்களைப் பரிசுத்தப்படுத்துவார். தேவன் தம் ஜனங்களை மீட்டு, புதிய நம்பிக்கையைத் தருவார். நாம் முற்றிலுமாக மீட்கப்பட்ட நிலையில், அந்தப் பேரிகையின் நாளுக்காக்க் காத்திருக்கலாம்.
4. வேதாகம மேற்கோள்கள்:
a) NIV Study Bible, பக். 1594-1602
b) A R Buckland, The Universal Dictionary, பக்.508
c) The IDB, Vol.R-Z, பக்.951-953
d) Baker Encyclopedia of the Bible (Vol.2), பக்.2190-2193
5. சம்பாஷனைக்கான கேள்விகள்:
5.1 தீர்க்கதரிசி, சீர்திருத்த்த்திற்காக ராஜாவை வற்புறுத்தினார். அந்த ராஜா யார்?
5.2 அவருடைய பிரதான செய்தி யாது?
5.3 அவருடைய செய்தியின் முக்கியத்துவம் யாது?
5.4 செப்பனியா காலத்தில் வாழ்ந்த மற்றொரு தீர்க்கதரிசி யார்?
nanri
ReplyDelete