முக்கிய வசனம்:
21.கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம். 22.ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன். 23.ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன்@ தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்@ 24.அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம். (பிலிப்பியர் 1:21-24)
சுருக்கத் திரட்டு
• சபையின் மிகப்பெரிய ஊழியக்காரர்களில் ஒருவனும், புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனுமாயிருந்தவன்.
• அநேக சபைகளை நிறுவினவன்.
• அநேக சுவிசேஷங்களை எழுதினவன்.
• பல பாடுகள், வேதனைகள், மற்றும் சிறை தண்டனையையும் அனுபவித்து சுவிசேஷத்திற்காய் மரித்தவன்.
• தமஸ்குவுக்கு செல்லும் வழியில்; இயேசு கிறிஸ்துவால்; சந்திக்கப்பட்டு பின்னர் இவனது வாழ்க்கை மாறினது மட்டுமின்றி அநேகருடைய வாழ்க்கையையும் இவன் மாற்றினான்.
1. அறிமுகம் - அவனது கதை
சவுல் என்பதற்கு கேட்பது என்றும் பவுல் என்பதற்கு சிறிய என்றும் பொருள்படும்.
பவுல் என்பது ஒரு ரோமானிய பெயர். சவுல் என்பது ஒரு எபிரேய பெயர். கிறிஸ்தவ சரித்திரத்தில் இயேசு கிறிஸ்து தவிர வேறு ஒருவரும் இதைப் போன்ற மாற்றத்தை ஏற்படுத்தியதில்லை. சவுல் பவுலாவதற்கு முன்பும் ஒரு பக்திமான்தான். இவனுடைய செய்கையும் தனிச்சிறப்பு வாய்ந்ததாகத் தான் இருந்தது. ஸ்தேவானுடைய மரணத்திற்கு பின்னர் சவுல் மிகவும் வெறித்தனமாக கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களை கொடுமை செய்ய ஆரம்பித்தான். இதனைக் கண்ட அநேக அப்போஸ்தலர்கள் உயிருக்கு பயந்து உலகமெங்கும் சிதறி ஓடினர். இதனைத் தொடர்ந்து கிறிஸ்தவம் உலகமெங்கும் பரவ ஆரம்பித்தது. இதன் மூலம் கிறிஸ்துவின் கடைசி கட்டளையான “உலகமெங்கும் போய் சுவிசேஷத்தை அறிவியுங்கள்” என்ற கட்டளை நிறைவேறிற்று. பவுலை கிறிஸ்து நேரடியாக சந்தித்தது இவனுடைய வாழ்க்கையை மாற்றினது. ஆனாலும் இவனுடைய தீவிரம் இன்னும் தணியவில்லை. கிறிஸ்து இவனை சந்தித்ததற்கு பின்னர் அதே தீவிரத்தை கிறிஸ்துவை அறிவிக்கப் பயன்படுத்தினான்.
பவுல் மதச் சார்புடையவனாக இருந்தான். இவன் கமாலியேல் என்பவனிடம் பயிர்ச்சி பெற்றான். இவனுடைய நோக்கமும் முயற்சியும் உண்மையுள்ளதாய் இருந்தது. இவன் வேதத்தை நன்கு அறிந்த ஒரு பரிசேயன். கிறிஸ்தவ இயக்கம் யூதர்களின் கோட்பாடுகளுக்கு விரோதமானது என இவன் நம்பினான். இதனால் இவன் கிறிஸ்தவத்தை மிகவும் வெறுக்கவும் கிறிஸ்தவர்களை கொடுமை படுத்தவும் செய்தான்.
பவுல் தமஸ்குவுக்கு சென்று கிறிஸ்தவர்களைப் பிடித்து எருசலேமுக்கு கொண்டு வரும்படி அனுமதியை பெற்றிருந்தான். (அவர்களை கொடுமைப்படுத்தி கொலை செய்வதற்காக). ஆனால் கிறிஸ்து இவன் தமஸ்கு செல்லும் வழியில் இவனை தடுத்து நிறுத்தி தரிசனமாகி அவனுடைய வாழ்க்கையை மாற்றினார். அவனுடைய வாழ்க்கை முன்பு இருந்தது போல அல்ல முற்றிலுமாய் மாறிற்று.
இந்த பவுலுடைய மாற்றத்திற்கு முன்பு மிக குறைந்த அளவே யூதர்கள் அல்லாதவர்களுக்கு சுவிசேஷம் கூறப்பட்டிருந்தது. உதாரணமாக பிலிப்பு என்பவன் சமாரியாவிலும் மற்றும் ஒரு எத்தியோப்பியனுக்கும் சுவிசேஷத்தை அறிவித்திருந்தான். கொர்நேலியு என்ற புறஜாதி மனிதன் பேதுருவினால் மாற்றமடைந்தான். சீரியாவிலுள்ள அந்தியோகியா பட்டணத்தார், சில கிரேக்க விசுவாசிகளோடு இணைந்தார்கள். எருசலேமிலிருந்து பர்னபா என்பவன் சூழ்நிலைகளை அறியும்படி அனுப்பப்பட்டபோது அவன் தர்சீசுக்குச் சென்று பவுல் என்பவனைக் கண்டு அந்தியோகுக்கு அழைத்து வந்து இருவரும் இணைந்து விசுவாசிகளோடு சேர்ந்து பணியாற்றினர். பின்னர் இவர்கள் மிஷனரி பயணத்தை மேற்கொண்டனர். ரோம ராஜியங்களுக்கு பவுல் சுவிசேஷத்தை எடுத்துச்சென்றான்.
சபையின் ஆரம்ப காலத்தில் விசுவாசிகளாயிருந்த புறஜாதி மக்கள் முதலாவது கிறிஸ்தவ சட்ட திட்டங்களை கடைபிடிக்க வேண்டுமா? என்பது போன்ற கேள்விகள் சபையில் குழப்பங்களை கொண்டு வந்ததன. பவுல் புறஜாதியார்களும் கிறிஸ்துவால் ஏற்கப்பட்டவர்கள் என்பதனை யூதர்களுக்கு விளக்க மிகவும் சிரமப்பட்டான். பவுலால் மாற்றம் பெற்ற அநேகர் கிறிஸ்துவுக்காக வைராக்கியமாக மாறினர்.
தேவன் பவுலுடைய அனைத்து திறமைகளையும் வீணாக்காதபடி பயன்படுத்தினார் அவனது பின்னணி, அவனது பயிற்சி, அவனது குடியுரிமை, அவனது மனநிலை, அவனது பலவீனத்தையும் கூட பயன்படுத்தினார். உன்னுடைய வாழ்க்கையிலும் ஆண்டவர் இவைகளை செய்ய அனுமதிப்பாயா? ஆண்டவரை உன் வாழ்க்கையில் அனுமதித்தால் தான் அவர் உன் வாழ்க்கையில் செய்யும் அதிசயங்களைக் காண முடியும்.
2. ஆற்றலும் நிறைவேற்றலும்
2.1 கிறிஸ்துவின் சந்திப்புக்குப் பின்பு, கிறிஸ்தவர்களை வாதித்துக் கொண்டிருந்தவன் அவர்களுக்கே ஒரு போதகனாக மாறினான்.
2.2 மூன்று மிஷனரி ஊழியத்தை மேற்கொண்டு ரோமாபுரி எங்கும் கிறிஸ்துவை
குறித்து பிரசங்கித்தான்.
2.3 புதிய ஏற்பாட்டில் பல சபைகளுக்கு உபதேச கடிதங்களை எழுதியுள்ளான்.
2.4 இவன் எந்த காரியத்தையும் பயமின்றி தைரியத்துடன் செய்து முடிப்பான்.
2.5 இவன் தனித்தன்மை வாய்ந்த குணங்களை உடையவனாக இருப்பினும் எப்பொழுதும் தேவனுடைய நடத்துதலுக்கு செவிகொடுப்பான்.
2.6 பவுல் புறஜாதியர்களின் அப்போஸ்தலன் என்று அழைக்கப்பட்டான்.
3. பெலவீனமும் தவறுகளும்
3.1 ஸ்தேவானுடைய மரணத்திற்கு சாட்சியாக இருந்த இவன் பின்னர் தன்னுடைய வாழ்க்கையில் மாற்றம் பெற்றான்.
3.2 கிறிஸ்தவர்களை கொடுமைப்படுத்தி அழிக்க முயன்றவன்.
4. இவனுடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்கும் பாடங்கள்
4.1 நற்செய்தி என்னவென்றால் தேவனுடைய மன்னிப்பும், நித்திய வாழ்வும் இயேசு கிறிஸ்துவின் கிருபையால் நமக்குக் கிடைப்பவை. இது கிறிஸ்துவை விசுவாசிக்கிற அனைவருக்கும் கிடைக்கும்.
4.2 தேவனோடு ஐக்கியப்படுதலின் பலன் கீழ்ப்படிதல் ஆகும். ஆனால் இந்த கீழப்படிதலின் மூலம் உறவை சம்பாதிக்கவோ உருவாக்கவோ முடியாது.
4.3 நம்முடைய சுதந்திரத்தை நாம் நிறுபிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளவரை
உண்மையான விடுதலை இன்னும் வரவில்லை என்பதே சரியாகும்.
4.4 தேவன் நம்முடைய நேரத்தை ஒருபோதும் வீணடிக்கமாட்டார். அவர் நமது
கடந்தகால, நிகழ்கால காரியங்களையும் உபயோகிப்பார். ஆகவே நாம் எதிர்காலத்திலும் அவரை சேவிக்கலாம்.
4.5 வெகு சிலரே பவுலைப் போல சுவிசேஷத்திற்காய் பாடு அனுபவித்துள்ளனர்.
5. வேதாகமக் குறிப்புகள்
பவுலின் வரலாறு: அப்போஸ்தலர் 7:58 முதல் 28:31 வரை மற்றும் பவுலின் புதிய ஏற்பாட்டின் மற்ற கடிதங்களிலும் காணலாம்.
6 சிந்தனைக்குரிய கேள்விகள்
6.1 இவனுடைய யூத பின்னணி குறித்து உங்களுக்குத் தெரிந்தது என்ன?
6.2 இவன் எப்படி தேவனால் சந்திக்கப்பட்டான்?
6.3 இவனுடைய பெலவீனங்கள் என்ன?
6.4 புறஜாதிகளின் அப்போஸ்தலன் என்று இவன் ஏன் அழைக்கப்படுகிறான்?
6.5 இவனுடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள் என்ன?
மொழி பெயர்ப்பு - ஜான் ஆரோக்கியசாமி (கிள்ளான், மலேசியா)
No comments:
Post a Comment