Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Sunday, April 29, 2012

67 நேபுகாத் நேச்சார்



இவனுடைய தகப்பன் நெபோபொலாசர்
பாபினிய சாம்ரஜ்யத்தை ஸ்தாபித்தவர்


முக்கிய வசனம்
 37 ஆகையால் நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி, மகிமைப்படுத்துகிறேன்; அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள்; அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று எழுதினான்.  (தானியேல் 4.37)

சுருக்கமான குறிப்புகள்
·         பாபிலோன் சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தவன்.
·         யூதர்களில் சிலரை பாபிலோனுக்குக் கொண்டு சென்றான்.
·         சிதேக்கியாவும் அவன் குடும்பத்தினரும் நாடு கடத்தப் பட்டனர்.
·         பாபிலேனை மறுபடி கட்டுவித்தான்.
·         தன்னுடைய தற்பெருமையின் காரணமாக இவன் பைத்தியக்காரனானான்.


1.        முகவுரை
இவனுடைய சரித்திரம்காப்பவன்என்று பொருள்படும் சரின் மகன். பாபிலோன் சாம். நெபோபொலாம்ர
இவனுடைய பெய்ர, “எல்லை காப்பவன் என்று பொருள்படும். நெபோபொலாசரின் மகன். பாபிலோன் சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தவன். எரேமியா, எசேக்கியேல் , தானியேல் யோயாக்கீம், யோயக்கின் ஆகியோர் வாழ்ந்த காலத்தில வாழ்ந்தவன் (கிமு 605-562). எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் நேகோவைத் தண்டிக்கும் படியாகத் தன் தகப்பனாரால் சேனைத் தலைனாக அனுப்ப்ப்பட்டான். இந்த ராஜா சமீபத்தில் சிரியாவின் மேல் படையெடுத்து யூதாவின் ராஜாவாகிய யோசியாவைத் தோற்கடித்தான் (2ராஜா.23.29-30). நேபுகாத் நேச்சார் எகிப்தின் ராஜாவாகிய நேகோவைத் தோற்கடித்து பல பட்டணங்களையும் எருசலேமையும் கைப்பற்ற்றினான் (கிமு.605, தானியேல் 1.1-2). அவன் எகிப்துக்குப் போக ஆயத்தமான நேரத்தில் தன் தகப்பனார் இறந்து போன செய்தியைக் கேட்டு, சில படை வீர்களுடன் பாபிலோனுக்கு விரைந்து சென்றான். இந்த சமயத்தில் தானியேலும் அவனுடைய நண்பர்களும் பாபினுக்க்குக் கொண்டு வரப்பட்டு, நேபுகாத் நேச்சாரின் நன்மதிப்பைப் பெற்று நாட்டில் முக்கிய பதவி வகித்தார்கள் (தானியேல் 1.3-20)

நேபுகாத் நேச்சாருக்குக் கீழ்ப்பட்டவனாக, யோயாக்கீம் யூதாவின் சிம்மாசனத்தில் அமர்த்த்தப்பட்டான். 3 வருடங்களுக்குப் பின் அவன் நேபுகாத் நேச்சாருக்கு விரோதமாகக் கலகம் பண்ணினான். (2இரா24). பாபிலோன் ராஜா இரண்டாவது முறையாக எருசலேமுக்கு விரோதமாகச் செனறான் (எரே.22.18,19). எருசலேம் யுத்தம் பண்ணாமல் சரணடைந்தது. யோயாக்கீம் நல்ல முறையில் அடக்கம் செய்யப்பட்டான் என்று எரேமியா உரைத்தான். அவனுக்குப் பின் யோயாக்கீன் அரசனானான். ஆனால் 3 மாதங்களுக்குப் பின் நேபுகாத் நேச்சார் மூன்றாவது முறையாக எருசலேமுக்கு விரோதமாக வந்து, யோயக்கீன் என்ற இளம் ராஜ குமாரனை பாபிலோனுக்குச் சிறை பிடித்துச் சென்று 36 வருடம் அங்கு சிறையில் வைத்தான். அவனுடன் மிகுதியான ஜனங்களையும் ஆலயத்தின் பொக்கிஷங்களையும் எடுத்துக் கொண்டு போய் பாபிலோனில் பேல்மெரொதாக்-ன் ஆலயத்தில்  வைத்தான். யோசியா ராஜாவின் மகனும் யோயாக்கீன்-இன் சிறிய தகப்பனுமாகிய சிதேக்கிய ராஜாவக்கப்பட்டான்.

இவன் எரேமியாவின் எச்சரிப்பையும் பொருட்படுத்தாமல் எகிப்தின் ராஜாவுடன் உடன்படிக்கை செய்து, பாபிலோன் ராஜாவுடன் செய்த உடன் படிக்கையை முறித்துப் போட்டான்.(எசேக்.17.15,16) 18 மாதங்கள் முற்றுகைக்குப் பின் நேபுகாத் நேச்சார் கி.மு.586ல் மறுபடி எருசலேமைக் கைப்பற்றி, சிதேக்கியா ராஜாவின் இரண்டு குமார்ர்களையும் தங்கள் தகப்பனின் கண்களுக்கு முன்பாக வெட்டி, சிதேக்கியாவின் கண்களையும் குருடாக்கி அவனைப் பாபிலோனுக்குக் கொண்டு போனான் (2இராஜா.25.7). எரேமியா தீர்க்கதரிரசி எரே.32.45, 34.3ல் இதை முன்னறிவித்தருந்தான். எசேக்.12.13உம் அவன் அந்தப் பட்டணத்தைக் காணமாட்டான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த 2 தீர்க்கதரிசனங்களும் நிறைவேறின. சிதேக்கியா அங்கு கொண்டு போகப்படுமுன் குருடனாக்கப்பட்டான். மீதமாக இருந்த யூதர்களும் எகிப்துக்கு ஓடிப் போனார்கள் அல்லது பாபிலோனுக்குக் கொண்டு போகப் பட்டார்கள்.

நேபுகாத் நேச்சார் பாபிலோனைக் கட்டினான். இவனுக்கு 20 கோவில்கள் இருந்தன. அவனுடைய வாழ்க்கையில் நன்கு நினைவு கூரக் கூடிய சம்பவம், தூரா என்னும் சம பூமியில் ஒரு பெரிய பொற் சிலையை நிறுத்தினதும், சாத்ராக் மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அதைப் பணிந்து கொள்ள மறுத்து, எரிகிற அக்கினிச் சூளையில் போடப்பட்டதும் அவர்கள் அக்கினியின் நடுவே எவ்வித சேதமுமின்றி காப்பாற்றப் பட்டதுமாகும் (தானியேல் 3). அவனுடைய ஆட்சியின் கடைசி காலத்தில அவனுடைய தற்பெருமையின் காரணமாக அவன் ஒரு விசித்திதிரமான பைத்தியம் பிடித்தவனாக மிருக்கத்தைப் போல் சஞ்சரித்தான். (தானி.4.33). 43 வருடங்களை அரசாட்சி செய்து முதிர் வயதில் இறந்தான். அவன் மெரொதாக் என்ற அந்நிய தெய்வத்தை வணங்கிய போதிலும் தன்னுடைய குடிமக்கள் தங்களுக்கு விருப்பமான தெய்வங்களை வணங்க அனுமதித்தான். அரசியல் சம்பந்தமான  காரியங்களுக்காக அவன் எல்லாருடைய ஒத்துழைப்பையும் பெறுவதில் கவனமாக இருந்தான். அவர்களுடைய நாடுக்களை எடுத்துக் கொண்டான், ஆஸ்திகளைத் திருடினான், அவர்கள் வாழ்க்கையைத் தன் கட்டுப்பாட்டில்  வைத்திருந்தான். ஆனால் தன் விக்கிரகங்களை அவர்கள் வணங்க அனுமதித்தான். சில வேளைகளில் தானும் கூட அவர்களுடன் சேர்ந்து அவர்கள் தெய்வங்களை வணங்கினான். அவனுடைய திட்டம் நன்றாக வேலை செய்தது. ஆனால், அதில் ஒன்று மாத்திரம் விதி விலக்காக ருந்தது. யூதா என்ற சிறிய தேசத்தை அவன் கைப்பற்றிய போது, பிரத்தியேகமாகத் தன்னை மாத்திரமே வணங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட ஒரு தேவனை அவன் சந்தித்தான். மற்ற பல தெய்வங்களின் மத்தியில் அவருக்கும் ஒரு பங்கு அல்ல.

நேபுகாத் நேச்சாரின் வாழ்க்கையில் தேவன் எவ்வாறு கிரியை செய்தார் என்பதை நாம் வேதாகமத்தில் வாசித்து அறிகிறோம். தேவன் அவனுக்குப் பல வெற்றிகளைக் கொடுத்தார். ஆனாலும் அதின் மூலமாகத் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டிருந்தார்யூதரான சிறந்த வாலிபர்களை அவன் அரண்மனை ஊழியராக கொண்டு வர தேவன் அனுமதித்தார். தானியேலை அவனுக்கு மிக அருமையானவைனாக அவனருகில் வைத்தார். தானியேலின் மூலமாக அவன் வாழ்க்கையை மாற்றினார். ஜீவனின் மேலும் மரணத்தின் மேலும் அவனுக்கு எந்த அதிகாரமும் ல்லை என்பதை அவனுக்குப் போதிக்கும் படியாக அந்த 3 பேரையும் அக்கினியில் போட்டுக் கொல்ல முயற்சி செய்யும் படி நேபுகாத் நேச்சாரை தேவன் அனுமதித்தார். அவனுடைய தற்பெருமையிலுள்ள அபாயத்தைக் குறித்து தேவன் அவனை எச்சரித்து, 7 வருடங்கள் பைத்தியக்காரனாக, மிருகத்தைப் போல் ஜீவிக்க அனுமதித்துப் பின்பு அவனுடைய சிம்மாசனத்திலே அவனை ஸ்திரப்படத்தினார். எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது யார் என்பதை தேவன் அவனுக்குக் காண்பித்தார்.


2.            பலமும் சாதனைகளும்
a.      பாபிலோனின் அரசர்களில் இவன் மிகப் பெரிரயவனாக இருந்நதான்.
b.      பட்டணங்களைக் கட்டுகிறவனாக அறியப்பட்டிருந்தன்.
c.      வேதாகமத்தில் தேவனால் உபயோகப்படுத்தப்பட்ட அந்நிய தேசத்துக்கு அரசர்களுள் இவன் ஒருவனாகக் குறிப்பிடப் பட்டிருக்கிறான்.


3.            பலவீனமும் தவறுகளும்
a.      அவன் தன்னையே கடவுளாக எண்ணிக் கொண்டு அனைவரும் வணங்கும் படியாக ஒரு பெரிய பொற்றசிலையைப் பண்ணுவித்தான்.
b.      அவன் அதிகப் பெருமையும மேட்டிமையும் உடையவனாக இருந்த்தினால் மனுஷரினின்று தள்ளப்பட்டு, 7 ஆண்டுகள் மிருகத்தைப் போல் ஜீவித்தான்.
c.      தேவனுடைய வல்லமை கிரியை செய்ததை அவன் பார்த்திருந்த போதிலும் அவற்றை மறந்து போனான்.

4.            நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள்.
a.      நமது வாழ்க்கையில் மட்டுமே நம்முடைய கவனத்தைச் செலுத்தும் போது, தேவன் எவ்வாறு கிரியை செய்கிறார் என்பதைக் காணக் கூடாதவர்களாகி விடுகிறோம். இன்றைய வாழ்க்கையின் சவால்களில் நமக்கு ஒத்தாசையாக தேவனுடைய வார்த்தையின் வழி காட்டுதலும் நமக்கு இல்லாமற் போய்விடும். தேவனுக்குக் கீழ்ப்படியும் படியாகவும் அவரில் நம்பிக்கை வைக்குகம் படியாகவும். நமக்குக் கட்டளை கொடுக்கப் பட்டிருக்கிறது. என்ன நேரிடப் போகிறது என்பதை நாம் அறியாமல் இருக்கும் சமயத்தலும் நாம் அவரை நம்பிக் கீழ்ப்படிய வேண்டியவராக இருக்கிறோம். இன்றைய தினத்தை தேவன் நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார். நம்முடைய வாழ்க்கையை அவரிடம் ஒப்படைத்திருக்கிறோமா?
b.      தேவனுக்கு விருப்பமுடன் சேவை செய்பவர்களின் செய்லகளையும், தங்களை அறியாமலே தேவனுடைய கருவிகளாக ருப்பவர்களின் செயல்களையும் சரித்திரம் பதிவு செய்து எழுதி வைத்திருக்கிறது.
c.      ஒரு தலைவனின் பெருமை அவனுடைய ஆலோசகர்களின் தன்மையினால் பாதிக்கப்படுகிறது.
d.      கட்டுப்படுத்தப்படாத பெருமை தன்னையே அழிப்பதாக இருக்கிறது.

5.            வேதாகம ஆதாரங்கள்
2இராஜா.24.25, 2நாளா.36, எரேமியா 21-52, தானியேல் 11-4 அதிகாரங்கள்.

6.            விவாதிக்க வேண்டிய கேள்விகள்
a.      பாபிலோன் சாம்ரஜ்யத்தை ஸ்தாபித்தவர்ர யார்?
b.      தேவன் அவனை எவ்வாறு உபயோகித்தார்?
c.      அவனுடைய நாட்களில் ஊழியம் செய்த வேதாகமத் தீர்க்கதரிசிகள் யார்?
d.      சிதேக்கியா ராஜாவை எவ்வாறு தண்டித்தான்?



மொழிபெய்ப்பு
திருமதி டஃப்னி ஜோசப்

No comments:

Post a Comment