Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Tuesday, May 10, 2011

தகுதியான லே பாஸ்டர்களுக்கான அத்தியட்சாதீன இறையியல் கல்வி

1:2 ஆபிரகாம் – விசுவாசத்திற்குத் தந்தையும் தேவனுக்குத் தோழனும் ஆனவர்
(ஸ்தாபகர்களின் தந்தையில் ஒருவர்)

1. ஆபிரகாம்: ‘தந்தை உயர்த்தப்படுகிறார்’ என்ற அடைமொழியைக் கொண்டு வருகிறது. ‘பெருஞ் ஜனங்களின் தந்தை’ என்ற பொருளையும் சுமந்து வருகிறது. (ஆதி. 17:5).
2. யூத ஜனங்களுக்கு அவரே தந்தை (யோசுவா 24.2, 1ராஜா 18.36, ஏசாயா 29.22, நெகே.9.7, மத்.1.1). He was the founder of the Jewish nation (Josh.24:2; 1King18:36; Is.29:22; Neh.9:7; Mt.1:1). யூத மார்க்கம், கிறிஸ்தவம், இஸ்லாம் மார்க்கம் அனைத்துமே அவரையே தங்கள் விசுவாசத்தின் தந்தையாக ஏற்றுக் கொள்கின்றனர்.
3. அவரைப் பற்றிய புராணம் ஆதி.11:26:25:10ல் அடங்கியுள்ளது
4. தேரா அவருடைய தந்தை. ஷியாம் வம்சாவளியினர். ஊர் என்ற இடத்தில் இருந்து தம் மனைவி சாராய், மருமகன் ஹாரான் (நவீன சீரியா) புலம் பெயர்ந்தவர். இங்கிருந்து கானான் தேசத்திற்கு வந்தவர். தமது கால்நடைகளுக்காக பசுஞ் சோலையையும் நீராகாரத்தையும் தேடி நாடோடியாகவே திரிந்தார்.
5. ஆபிரகாம் ஓர் தெய்வீக அழைப்பைப் பெற்றார் (ஆதி.12:1-3) “நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன். பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உன்க்குள் ஆசீர்வதிக்கப்படும்.”. (இப்படியொரு வாக்குத்த்த்தைத்தை உன்னால் அறிவிக்க முடியுமா?)
6. அபிமலேக் என்ற கேரார் அரசனிடம் அவர் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டதாக்க் காணப்படுகிறது. அதன் மூலம் தான் விரும்பும் இடத்திற்குப் பயணம் செய்யும் சுதந்திரம் கிடைத்திருக்கிறது. (ஆதி.20:15) மேலும் அத்தேசத்தில் உள்ள நீரூற்றையும் பயன்படுத்தும் உரிமையும் கிடைத்திருக்கிறது
7. லோத்து பிரச்சனையில் சிக்கியிருந்த போது ஆபிரகாம் அவனுக்கு உதவி ஜெபித்தும் இருக்கிறார் (ஆதி.14.14). பஞ்ச காலத்தில் ஒரு முறை எகிப்திற்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். ஆனால், பாரோவாயையும் அவன் மனைவியையும் நிந்தித்தற்காக தொல்லையைச் சந்தித்த்தோடு, அத்தேசத்தில் இருந்தும் துரத்தப்பட்டார். (ஆதி.12.10-20).
8. லோத்து மோவாப்பியர்களுக்கும் பென்னம்மியர்களுக்கும் தகப்பன் ஆவான். இஸ்ரவேலர்களுக்கு அல்ல (ஆதி.19:36-38).
9. பண்டை கால வழக்கப்படி, பிள்ளைகள் இல்லாத ஒருவன் தனது வாரிசை, விருப்பமான அடிமைப் பெண் மூலம் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், இப்படியொரு காரிம் அவன் குடும்பத்தில் நடக்க்க் கூடாது என்று கட்டளையிடப்பட்டது (ஆதி.15.3-6) அதே வேளையில், வழக்க முறைப்படி, சாராள் ஆபிரகாமிற்கு ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் பொருட்டு ஓர் அடிமைப் பெண்ணை வழங்கினாள். (ஆதி.16:1f) ஆனால், இது தேவனுடைய திட்டமாக அமையவில்லை (ஆதி.17:15-19). இறுதியில் மிகவும் கிழட்டு நிலையில் சாராள் ஆபிரகாமிற்கு ஈசாக்கு என்ற குமாரனை ஈன்றெடுத்தாள்.
10. அக்கால வழக்கத்தின் படி ஈசாக்கு பலி கொடுக்கும் பொருட்டு தயாராக்கப்பட்டான். அச்செயலைத் தடுத்த தேவன், ஈசாக்குப் பதிலாக மாற்று பலி பொருளை வழங்கினார். (ஆதி. 22:9-14).
11. சாராள் மரித்த பிறகு ஆபிரகாம் கெத்தூராள் என்ற பெண்ணை மறுமனையாக்கி மேலும் பல பிள்ளைகளைப் பெற்றான். அவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களை அப்பால் அனுப்பி விட்டான் (ஆதி.25:5f) சாராள் எப்ரோன் என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டாள்.
12. மரிப்பதற்கு முன்பாக தேவன் வாக்கருளின தேசத்தை ஆபிரகாம் கண்டதோடு, தனது சந்த்தியை பெருக்குவதற்குப் பாத்திரனான மகனையும் கண்டான்.
13. தேவன் விசுவாசிகளை அழைக்கும் பாதை பெரும்பாலும் சரீரத் தன்மையாக மாறி விடுகிறது.
14. ஆபிரகாமின் தகன பீடம் அவனை தேவ வணக்கத்திற்குரியவனாக்க் காட்டுகிறது. அவனின் கூடாரம் அந்நிய தேசத்தின் வழிப் பயணியாக்க் காட்டுகிறது. இதுவே எல்லா விசுவாசிகளின் தனிதன்மையாகவும் அமைகிறது.
15. பொருளாதார ஆசீர்வாதங்கள் சன்மார்க்கச் சவால்களைத் தொடர்ந்து வருகிறது. அவன் பல பிரச்சனைகளை எதிர்நோக்கினான்: a) ஈசாக்கின் பிறப்பிற்காக அவன் காத்திருக்க வேண்டியதாயிற்று. b) ஈசாக்கின் பிறப்பிற்குப் பிறகு இஸ்மவேலைத் துரத்தியடிக்க வேண்டியதாயிற்று.
16. புதிய ஏற்பாட்டில், விசுவாசத்தின் அடிப்படையிலும் (ரோமர் 4.16), கிரியைகளின் அடிப்படையிலும் (யாக்கோபு 2.21-23).
17. அவன் தேவனின் தோழன் என்றும் அழைக்கப்பட்டான்” (ஏசா.41:8, 2 நாளாகம்ம் 20:7)
18. நமது பயணமும் சேத்திரமும்: எப்படிப்பட்ட சவால்களையும் பிரச்சனைகளையும் நாம் சந்திக்கிறோம்? நாம் எப்படி தேவனிடத்தில் விசுவாசமாக இருக்கலாம்? நாம் தேவனுக்கும் மனிதருக்கும் தோழராக வாழ வேண்டும். தேவனின் நம்பிக்கையான நண்பனாக இருந்து கொண்டே கிறிஸ்தவரல்லாதவரோடு நட்பு பாராட்டுக. பல மார்க்க தேசமாகிய இந்த மலேசியாவில் இது எப்படி சாத்தியமாகும்?

தாவீது - இஸ்ரவேல் அரசர்களில் தலைசிறந்தவர்


தாவீது - இஸ்ரவேல் அரசர்களில் தலைசிறந்தவர்

கரு வசனம்: இப்போதும் கர்த்தராகிய ஆண்டவரே, நீரே தேவன்; உம்முடைய வார்த்தைகள் சத்தியம்; தேவானே; உமது அடியானுக்கு இந்த நல்விசேஷங்களை வாக்குத்தத்தம் பண்ணினீர்;. இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி அதை ஆசீர்வதித்தருளும்; கார்த்தரான ஆண்டவராகிய தேவானே; அதைச் சொன்னீர்; உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வீடு என்றைக்கும் ஆசீh;வதிக்கப்பட்டிருப்பதாக என்றான்.”   (2சாமு. 7:28-29)

முக்கியத் தகவல்கள்
·         எட்டு சகோதரர்களில் இளையவன் (1சாமு17:12).
·         தாவீது சவுலுக்குப் பதிலாகப் பதவியேற்றவர் (33 ஆண்டுகள்)
·         பல வருடங்கள் சரணாகதனாக வாழ்ந்தவர்
·         பத்க்ஷீபாவை தவறான முறையில் மனையாட்டி ஆக்கிக் கொண்டான்.


முன்னுரை - அரசனாக எழுந்த மேய்ப்பன்
அவன் வாழ்க்கையில் பல போதனைகளும், வழிகாட்டுதலும் எச்சரிக்கையும் அடங்கியுள்ளன. அன்பிற்குப் பாத்திரன் என்பது அவன் பெயரின் பொருள். இஸ்ரவேலர்களுக்கு இரண்டாவது அரசனாகப் பதவியேற்ற அவர் தலைசிறந்தவராவார். ஜெசி என்பவரின் மகன், ரூத்திற்கு நாலாம் தலைமுறை வாரிசு, பெத்தலேகெமில் பிறந்தவன், 10 சகோதரர்களின் இளைய மகன்.  தந்தை சொத்தும் செல்வாக்கும் நிறைந்தவராய் இருந்தாலும், தாவீது தனது வாலிப வயதில் ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான் - கீழ் நாடுகளில் சிறப்பாக அடிமைகளிடமும் பெண்களிடமும் ஒடுக்கப்பட்ட குடும்பங்களிடமும் ஆட்டு இடையனாக சீவனம் பண்ணினான். அப்படியிருந்தும் சாமுவேல் அவனை இஸ்ரவேலின் எதிர்கால அரசனாகக் கொண்டுவரத் தயங்கவில்லை. யாழ் மீட்டுவதில் கைதேர்ந்த அவனை சவுல் துக்கம் அணுசரிக்கும் அரசர்களுக்கு ஆறுதலாக இசை வாசிக்கக் கட்டளையிட்டான். (1 சாமு.16).  தாவீது கோலியாத்தைச் சந்தித்த இடம் எபேஸ் டமிம் (1சாமு.17) ஆகும்.

கலிபோவில் நடைபெற்ற மரண யுத்தத்திற்குப் பிறகு தாவீது சவுல் மற்றும் யோனதானின் மறைவுக்காகக் கதறி அழுதான். இஸ்ரவேல் அரசனான பின்பு எருசலேமைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். அந்தப் பெட்டி சகல மரியாதையோடும் எருசலேமிற்குள் கொண்டு வரப்பட்டது. அவனின் வெற்றியும் செல்வமும் பாவத்தில் விழச் செய்தது. விபச்சாரத்தோடு ஊரியாவின் மரணத்திற்கும் வழி வகுத்தான் (2சாமு11). தனது பாவத்திற்காக மனஸ்தாபப்பட்டான். மனந்திரும்பி மன்னிப்பு கேட்டான். ஆனால் எஞ்சிய தனது வேதனைகளையும் குடும்ப தகறாறுகளையும் சந்தித்தான். தனது நேசக் குமாரனாகிய அப்சலோம், அவனுக்கு விரோதமாக எழுந்து, நாடு கடத்தி பின்னர் சிறைப்படுத்தினான் (2சாமு15-18). அச்செயலைக் கண்டித்து தாவீது பதவி துறந்து, ஓர் ஆலயத்தை எழுப்பினான். பெத்தலேகேமில் உள்ள தாவீது நகரில் அவன் அடக்கம் செய்யப்பட்டான் (1ராஜா2.10)

தாவீதின் வரலாற்றில் நேசமும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டும் முரண்களும் காணப்படுகின்றன. அவனின் பலமும் பலவீனமும் வர்ணிக்கப்பட்டுள்ளன. தேவனின் உள்ளத்திற்குத் தோதுவானவன் என்று தாவீது வேதாகமத்தில் வர்ணிக்கப்படுகிறான்.

அவனின் ஆற்றல்களை முதலில் காண்போம்.

2.      தாவீதின் ஆற்றலும் நடவடிக்கைகளும்
·         இஸ்ரவேலரின் தலைசிறந்த ராஜா. தாவீதின் சாம்ராஜ்யத்தை நிறுவியவன்.
·         இயேசு கிறிஸ்துவின் மூதாதையர்
·         விசுவாசிகளின் சபையில் சேர்த்துக் கொள்ளப்பட்டவன் (எபிரேயர் 11)
·         பாவஞ்செய்தாலும் தமது இருதயத்திற்கு ஏற்ற மனிதன் என்று கர்த்தரால் வர்ணிக்கப்பட்டவன்.
·         மிகச் சிலரிடமே இதுபோன்ற முரண்பாடான குணாதிசயங்கள் காணப்படும்.

ஸ்டேன்லி என்ற ஒரு பல்கலை வேந்தர், தாவீதின் குணாதிசயங்களை வர்ணிக்கும்போது, வாஞ்சை, கணிவு, தயாளம், கம்பீரம், ஆகிய குணாதிசயங்களுக்கு மத்தியில் தாவீது போர் வீரனாகவும், இடையனாகவும், கவிஞனாகவும், அரச வம்சகனாகவும், ஆசாரியனாகவும், தீர்க்கதரிசியாகவும், ராஜாவாகவும், நேசமிகுந்த நண்பனாகவும், செங்கோல் அரசனாகவும், பக்திவிநயமாக தந்தையாகவும் திகழ்ந்திருக்கிறார். பழைய ஏற்பாட்டில் அவனுக்கு நிகரான பாத்திரத்தைக் காணவியலாது. அவன் இயேசு கிறிஸ்துவின் சாயலைத் தரித்திருந்தான். அவன் ஆபிரகாமின் குமாரன் என்றழைக்கப்படாமல் தாவீதின் குமாரன் என்றழைக்கப் பட்டான்.


தாவீதின் பலவீனங்களும் குற்றங்களும்

v      பெத்ஷெபாவோடு விபச்சாரத்தில் ஈடுபட்டான்
v      பெத்ஷெபாவின் கணவனாகிய ஊரியாவைக் கொல்ல சதி செய்தான்
v      மக்கள் கணக்கெடுப்புக்கு தேவன் சொன்ன கட்டளையை நேரடியாக மீறினான்
v      தன் பிள்ளைகளின் பாவங்களைக் கண்டிக்கவில்லை


தாவீதின் வரலாற்றின் மூலம் நாம் பெற்றுக் கொள்ளக் கூடிய படிப்பினைகள்

தன் குற்றங்களை ஒப்புக் கொள்ள மனங் கொண்டான்
பாவமன்னிப்பு அதன் வினைகளை போக்க முடியாது
தேவன் நமது முழு விசுவாசத்தையும் ஆராதனையையும் எதிர்ப்பார்க்கிறார்.


5.      வேதாகம மேற்கோள்கள் - 1சாமுவேல் 16, 1ராஜா 2. அவரைப் பற்றி அம்ப்? 6.5, மத்தேயு 1.1, 6.22, 43-45, லூக்கா 1.32, அப்போஸ்தலர் 13.22, ரோமர் 1.3, எபிரேயர் 11.32 ஆகிய பகுதிகளிலும் குறிக்கப்பட்டுள்ளது.


6.      விவாதத்திற்கான கேள்விகள்
v      அவன் ஏன் இஸ்ரவேலர்களின் தலைசிறந்த அரசன் என்று அழைக்கப்பட்டான்?
v      பாவங்கள் நிமித்தமும், தேவன் ஏன் அவனை தமது உள்ளத்திற்குப் பிரியமானவன் என்று வர்ணித்தார்?
v      அவனின் பிரபலமான மகன் யார்? யார் ஞானி என்று அழைக்கப்பட்டான்?
v      அவனுடைய எந்தக் கவிதையை நாம் இன்றளவும் ஆராதனையில் பயன்படுத்தி வருகிறோம்?
v      அவன் வாழ்வின் மூலம் நாம் கற்றுக் கொள்ளக் கூடியது என்ன?

ரோமாபுரி கத்தோலிக்க ஆலயம்


The Roman Catholic Church in Malaysia
ரோமாபுரி கத்தோலிக்க ஆலயம்

1   பதிவிறக்கங்கள்:

முன்னுரை கிறிஸ்தவ சமூகத்தில் அநேகமாக பாதி பேர் கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்தவர்கள். 1511ல் போர்த்துகீசியர்களின் வருகையின் போதே இந்நாட்டுக்கு வருகை புரிந்த பழமை வாய்ந்த திருச்சபையும் கூட. 19ம் நூற்றாண்டு தொடங்கி சுயமாக இறையியல் கல்லூரி அமைத்துச் செயல்படுகிறது.
2   ஆதி வரலாறு 7ம் நூற்றாண்டில் நெஸ்டோரியர்கள் தீபகற்பத்தின் வட மேற்குப் பகுதியிலும் வட சுமத்திராவில் குடியமர்ந்த காலந்தொட்டே  கிறிஸ்தவர்களின் தோற்றம் அறியப்படுகிறது.
3   மலாக்காவின் போர்த்துகீசியர் சபை 1511-1795
3.1  அல்பன்சோ டி அல்புக்கார் 1 ஜூலை 1511ல் வருகை புரிந்தார். ஆசிய இறையியலாளர்கள், போர்த்துகீசியர்கள் மற்றும் மேற்கத்தியர்களின் வருகையை  சிலுவை அரப்போராக ஆசிய இறையியலாளர்கள் வர்ணிக்கின்றனர். முதல் தேவாலயம் 1521ல் கட்டப்பட்டது. இன்று பரி.பவுல் மலையில் காணப்படும் பாழடைந்த கட்டிடம்தான் 1590ம் ஆண்டில் ஜெசுயிட்ஸ் என்பரால் கட்டப்பட்ட ஆலயம். அந்த ஆலயத்தோடு போர்த்துகீசியர்கள் ஒரு மருத்துவமனையையும் கட்டினர்.
3.2  பரி.பிரான்சிஸ் சேவியர் (1545-1552)
                         i.   ஜெசுவிட்ஸ் மார்க்கத்தை நிறுவிய எழுவரில் இவரும் ஒருவர்.
                        ii.   கிறிஸ்தவ வரலாற்றில் இவர் ஒரு மகா சுவிசேஷகர் ஆவர்.
                        iii.   பிரான்சிஸ் சேவியர் தூரக் கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்க மலாக்காவைத் தளமாக கொண்டார்.
                        iv.   அவர் ஜனங்களுக்கு உபதேசத்தையும் சுவிசேஷத்தையும் வழங்கினார்.
                        v.   1552ல் சீனாவுக்குத் தமது இறதி பயணத்தின் போது அவர் மரித்தார்.
                        vi.   குருமார்களையும் மற்றோரையும் மலாக்காவிலேயே கடைசி வரைக்கும் நிலைத்திருக்கும்படி உற்சாகப் படுத்தினார்.
3.3  போர்த்துகீசியர் செல்வாக்கின் வீழ்ச்சி (1552-1641) – 1511ல் சமாதானமான குடியமர்வு ஒப்பந்த்த்தில் கசப்பான அனுபவத்திற்கு இலக்கானது. மலாய் காரர்களைத் தவிர்த்து சீனர்களும் இந்தியர்களும் கத்தோலிக்கத்திற்கு மதம் மாறினர். ஜொகூர் ஆதரவோடு டச்சுக்கார்ர்கள் மலாக்காவை போர்த்துகீசியர்களிடம் இருந்து கைப்பற்றினர்.
3.4  டச்சுக் காலக் கட்டத்தில் சுணக்கம் (1641-1703)
                         i.   ரோமாபுரி கத்தோலிக்க மார்க்கத்தைத் தவிர்த்து, மேலும் பலர் டச்சு பெர்செபஸ்தரியன் மார்க்கத்தை ஏற்றனர்.
                        ii.   போத்துகீசியர்கள் தாயகம் திரும்பிய நிலையிலும், விசுவாசமுள்ள பல கத்தோலிக்கர்கள் தங்கள் கலாச்சாரத்தை உண்மையோடு அணுசரித்து வந்தனர்.
3.5  டச்சு கால மறு சீரமைப்பு (1703-1795)
                         i.   1710ல் பரி.பேதுருவின் ஆலயம் சீரமைக்கப் பட்டது.
                        ii.   கத்தோலிக்க சமூகம் வறுமையில் நிலைத்திருந்தது. மலாய் மற்றும் போர்த்துகீசிய கலப்பு புதிய வண்ணக் கலவைகளைத் தந்தது.
4    தொடுவாய் குடியேற்ற நாடுகளின் ஆலயங்கள் 1786-1874.
3.2   
4.1  பினாங்கு, மலாக்கா, சிங்கப்பூர் ஆகியன இணைந்து தொடுவாய் குடியேற்ற நாடுகளை அமைத்தன. நிர்ப்பந்தத்தினால்  பிரிட்டிஷர்  ரோமாபுரி கத்தோலிக்க ஆலயத்தை உள்வாங்கிக் கொண்டது.
4.2  விசாரனை அதிகாரம் தொடர்பான முரண்பாடு: ரோமாபுரியர் பேராயருக்குப் பதில் குருவானவரின் திருத்தூதரை இப்பொறுப்புக்கு அமர்த்தியது. டச்சு ஆட்சியின் போது, இந்த அதிகாரம் மலாக்காவில் உள்ள பேராயருக்கே வழங்கப்பட்டது (From the time of the Dutch conquest the Bishop of Melaka had been based in Timor or on Places). 1888ல் மலாக்கா அத்தியட்சாதீனம் புதுப்பிக்கப்பட்டு, பாண்டிச்சேரி (இந்தியா) தலைமை பேராயரின் கீழ் அமர்த்தப்பட்டது.
4.3  பினாங்கில் கத்தோலிக்க சபையின் தொடக்கம்
                         i.   1781ல் கோல கெடாவில் ஒரு மாபெரும் கத்தொலிக்க சமூகம் அமைக்கப் பட்டது. பிரான்சிஸ் லைட்டின் வருகை இதற்குத் துணை புரிந்தது.
                        ii.   1795க்குப் பின் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் மலாக்கா: கத்தோலிக்கர்கள் மலாக்காவில் தங்கள் சபையை வளர்க்க முடிந்தது. இவர்கள் ஆயர் சாலாக்கில் உள்ள பழங் குடியினர் மத்தியில் ஊழியத்தை வளர்க்க முடிந்தது ஓர் அற்புதமான காரியம். இக்கிராமம் மலாக்கா நகரில் இருந்த 9 மைல் தொலைவில் அமைந்துள்ளது.
5    ஒரு நூற்றாண்டு கால வளர்ச்சி: (1874 முதல் தற்காலம் வரை)
                         i.   பங்கோர் உடன்படிக்கை இன்னும் அணுசரிக்கப் படுகிறது. மலாய் காரர்கள் மத்தியில் நற்செய்திக்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது.
                        ii.   இரண்டு உலக மகா யுத்தங்களும் சபைகளுக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திற்று. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 1957ல் நாட்டின் சுதந்திரத்திற்காகவும் வழி வகுத்த்து.
5.1  பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடி பணிதல்: பிற்காலத்தில் மலாக்காவின் பேராயராக வந்த ஒல்கோமெடி என்ற குருவானவர் பலரை மதம் மாற்றி ஞானஸ்நானம் வழங்கினார். பிரிட்டிஷ் ஆட்சி ரோமாபுரி கத்தோலிக்க சபை மேம்பாட்டுக்கு உதவிற்று. மலாயாவிக்குப் புதிய சட்ட திட்டம் இயற்றப் பட்டது.
5.2  இரண்டாம் உலக மகா யுத்தம் (1941 முதல்)
a.   ரோமாபுரி கத்தோலிக்கப் பேராயரும் பிரரும் சிங்கப்பூர் சாங்கி சிறைச்சாலையில் அடைக்கப் பட்டனர்.
b.   பொது மக்களைப் போல் குருமார்களும் யுத்தத்தின் பாடுகளைக் கடந்து வந்தனர்.
5.3  மறு சீரமைப்பு நண்பர்கள், குருமார்கள், உற்றார் அனைவரும் விடுவிக்கப் பட்டு, தங்கள் இயல்பு ஆரோக்கிய நிலைக்குத் திரும்பினர். பள்ளிகள் திரும்பவும் செயல்பட்டன. பினாங்கில் உள்ளபிரதர்ஸ்பயிற்சிக் கல்லூரி செயல்படத் தொடங்கியது. 1948-60ல் நாட்டில் மீண்டும் அவசர காலம் அமலுக்கு வந்தது.
5.4  1950ம் காலவாக்கு: (அவசரகாலமும் சுதந்திரமும்)
a.   சீனாவில் உள்ள மிஷனரிகளை மலாயாவுக்கு வர பிரிட்டிஷ் அரசாங்கம் ஊக்குவித்தது.
b.   சீனர்களின் சமூக நலன், மருத்துவம், கல்வி ஆகிய தேவைகளைப் பெருமளவில் கத்தோலிக்க சபை சந்தித்து வந்தது.
c.   மத கலப்புத் திருமனத்தில் பிரிட்டிஷ் சட்ட திட்டம் கத்தோலிக்கப் பெற்றோருக்குச் சாதகமாக இருக்கிறது என்ற மனக்கசப்பு உண்டாயிற்று.
d.   கிறிஸ்தவர்களும் தங்கள் வாலிப பிள்ளைகளை, கம்யூனிட் பயங்கரவாதத்தை ஒடுக்க யுத்தத்திற்கு அனுப்பியது.
e.   பேராயர் ஓல்கொமெண்டி மிஷனரிகளை புதுக் கிராமங்களுக்கு ஊழியஞ் செய்ய அனுப்புவதில் ஆர்வங் காட்ட வில்லை என்று அறியப்படுகிறது.
f.    மலேசிய சீனர்களை அரசாங்கம் அந்நிய தேசத்தாராகக் கருதாமல், பொருளாதார பெலன் பெற்றவர்களாகக் கருதியது.
g.   மேலும பல கத்தோலிக்க மிஷனரிகள் மலாயாவுக்கு ஊழியஞ் செய்ய வந்தனர்.
h.   சீனர்களுக்கும் பிறருக்கும் கல்வி வாய்ப்பு வழங்குவதில் கத்தோலிக்க சபைகள் துடிப்பாக செயல்பட்டன.
5.5  1960ம் காலவாக்கு: (இரண்டாம் வெட்டிக்கனும் பிறரும்)
a.   1963கள்வெட்டிக்கன் ஆலோசனா சபை அதிகாரத்திற்கு வந்தது. லத்தின் மொழிக்குப் பதில் உள்ளூர் மொழி பயன்பாட்டுக்கு வந்த்து.
b.   1970கள் -  தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் குருமார்கள் ஒரு மாத காலத்திற்கு சந்தித்து, ஆய்வுகள் நடத்தினர். (உம். B.E.C கோட்பாடுகள்) ஆவிக்குரிய வரங்கள் மறுமலர்ச்சியைக் கொண்டு வந்த்து.
6    எதிர்கால சவால்கள்
6.1  சபையில் விசுவாசம் வைத்தல், பலரையும் நம்புதல், பரிசுத்தவான்களின் தியாகங்கள் கத்தோலிக்க சபைகளை நிலைத்திருக்கச் செய்கிறது.
6.2  டச்சு காலத்தில், கத்தோலிக்க விசுவாசம் மிகவும் அந்தரங்கமான முறையில் சபையார் மத்தியில் கடைபிடிக்கப் பட்டு வந்தது.
6.3  சமய அழைப்புகள் குறைந்து போயின. குருமார்களின் கடமைச் சுமைகள் எல்லையில்லா அளவுக்கு அதிகரித்து விட்டன. 1965ல், (இரண்டாவது வெட்டிக்கன் காலக்கட்டத்திற்கு முன்) சபையார் தலைமை பீடத்திற்குக் கீழ்ப்படியவும் ஜெபிக்கவும் கட்டணம் செலுத்தவும் வற்புறுத்தப் பட்டனர்!
6.4  1983ல் டான் ஸ்ரீ வெந்தர்கம், 49 கால உழியத்திற்குப் பின்னர் தமது 75வது வயதில் தலைமை பேராயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.
6.5  MCCBCHST என்ற கிறிஸ்தவ சார்பு இயக்கத்தில் ரோமாபுரி கத்தோலிக்க சபை துடிப்பாகச் செயல்படுகிறது.
6.6  மலேசியாவில் 5 ரோமாபுரி கத்தோலிக்க அத்திய்டாசதீனம் செயல்படுகின்றன:- அவை பினாங்கு, கோலாலம்பூர், மலாக்கா-ஜொகூர், சபா, புருணை மற்றும் சரவாக் ஆகியவை அவை.
6.7  இன்றைய கத்தோலிக்கம் வளர்ச்சியும் நவீன தரிசணமும், ஐக்கியமும், ஆகிய தன்மைகளுடன் புதிய சவால்களைச் சந்தித்து வருகின்றது.

மலேசிய ஆங்கிலிக்கன் சபையின் 200 ஆண்டுகால வரலாறு


Two Hundred Years of Anglican Mission
மலேசிய ஆங்கிலிக்கன் சபையின் 200 ஆண்டுகால வரலாறு

பதிவிறக்கங்கள்:

1.   காலணித்துவ ஆங்கிலிக்கன் சபையின் விரிவாக்கம்:
a.   கிழக்கிந்திய கம்பனியைச் சார்ந்த பிரான்சிஸ் லைட் 1772ல் பினாங்கு மாநிலத்தை வந்தடைந்தார். கிழக்கிந்திய கம்பனியின் பிரதான நோக்கம் வியாபாரம் செய்வதே.
b.   1824இன் ஆங்கிலேய  - டச்சு உடன்படிக்கையின் மூலம் 1795ல் மலாக்கா மாநிலம் அங்கிலேய ஆதிக்கத்திற்குள் வந்த்து.
c.   1819ல் சிங்கப்பூர் நிறுவப்பட்டது.
d.   1867ல் இந்திய அரசாங்கம் தீபகற்ப மலாயாவை ஸ்திரேட் செட்டில்மென்டிடம் ஒப்படைத்த்து. (S.S)
e.   1874ல் பங்கோர் உடன்படிக்கையின்படி பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் பகாங் மாநிலங்கள் ஐக்கிய மலாய் நாடுகளாக இணைந்தன.
f.    ஆங்கில அரசாங்கம் கிறிஸ்தவத்தை (உலகமெங்கும்) தோட்டம் துறவுகளில் அனைத்திலும் நாட்டினார்கள். இப்பணிக்கு வியாபாரமும் ஆங்கிலப் பேரரசின் விரிவாக்கம் மிகவும் உதவின.
g.   ரா.பாலவென்டரம் (தென் இந்தியா) என்பவர் ஆசிய ஊழியராகி 1877ல் அபிஷேகம் பெற்றார். 1952ல் பவுல் சாமுவேல் என்பர் அபிஷேகம் பெற்றார்.
h.   1957-59 வரை உள்ளுர் தலைமைத்துவங்கள் மெல்ல மெல்ல வளர ஆரம்பித்தன. 1988ல் மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் சபையில் 5023 பேர்கள் அங்கத்துவம் பெற்றிருந்தனர்.
2.   பினாங்கு மாநில ஸ்தாபிப்தலும் ஆங்கிலிக்கன் சபையின் விரிவாக்கமும்:
a.   1805ல் அத்வில் லேக் என்பவர் முதலாவது ஸ்தல சாப்லினாக கிழக்கிந்திய கம்பனியினால் நியமிக்கப் பட்டார்.
                         i.   1814ல் பினாங்கு மற்றும் மலாக்கா மாநிலத்திலுள்ள சபைக்கள் கல்கத்தா அத்தியட்சாதீனத்தின் கீழ் இருந்த்து.
                        ii.   1814ல் பினாங்கு மற்றும் மலாக்கா மாநிலத்திலுள்ள சபைகள் க்க்த்தா அத்தியட்சாதீனத்தின் கீழ் இருந்த்து.
                        iii.   1819ல் பரி.ஜார்ஜ் ஆலயம், பினாங்கு மாநிலதில் கிழக்கிந்திய கம்பனியின் கட்டுப்பாட்டு பிரஸ்டை  செய்யப்பட்டது.
b.   பினாங்கிபன் ஃபிரி ஸ்கூல் ராபர்ட் ஹட்சிங்ஸ் என்பவரால் நிறுவப்பட்டது. (மலேசியாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் இப்பள்ளியில் படித்துள்ளார்)
c.   1838ல் மலாக்காவின் கிறிஸ்துவின் ஆலயம் மறு பிரதிண்டை செய்யப்பட்டு ஆங்கிலிக்கன் சபையிடம் ஒப்படைக்கப்பட்டது.
d.   கல்கத்தா பேராயர் தம்முடைய ஊழியங்களை மலாயாவிற்கு விரிவாக்கம் செய்தார்.
3.   1868 முதல் 1941 வரை: மலாயாவின் ஆங்கிலிக்கன் சபையின் தொடக்க காலம்.
a.   போர்னியோவின் பேராயர் அதிகாரம் தீபகற்ப மலாயாவில் விரிவாக்கம் கண்டது. அவர் போர்னியோ சிங்கப்பூர் மற்றும்  மலாயாவை மேற்பார்வை செய்தார்.
b.   பினாங்கிலும் மலாக்காவிலும் ஆங்கிலிக்கன் சபை உதயமானது.
                         i.   1871ல் தமிழ் ஊழியங்கள் உதையமானது.
                        ii.   1886ல் சீன ஊழியங்கள் உதயமாயின.
                        iii.   தமிழ் மற்றும் சீன ஊழியங்களைஎஸ்பிஜிஆதரவு தந்து உதவியது.
                        iv.   தமிழ் பள்ளிகளை பாலவேந்தரம் நிறுவி  அதின் மூலம் தமிழ் ஊழியங்களை விரிவாக்கம் செய்தார்.
c.   1874ல் பங்கோர் உடன்படிக்கையும் ஃபெடரல் மலாய் மாநிலத்திலுள்ள ஆங்கிலிக்கன் சபைகளும்:
                         i.   பங்கோர் உடன்படிக்கை மலாய் சமூகத்தினரிடத்தில் சுவிசேஷங்களைப் பிரபல்லியப் படுத்துவதற்குத் தடை செய்தன.
                        ii.   அக்காலக் கட்டத்தில் ஆங்கிலிக்கன் சபை ஆராதனைகள் எஸ்டேட் ஊழியர்களின் இல்லங்களிலும் அரசாங்க ஊழியர்களின் இல்லங்களிலும் நடைபெற்று வந்தன. ஆலயங்கள் எழுப்பப்பட்ட பின் அவ்வாராதனைகள் ஆலயங்களிலேயே நடைபெற்றன.
                        iii.   ஆங்கிலிக்கன் பாதிரிமார்கள் இங்குள்ள ஐரோப்பிய/ஆங்கிலேய மக்களுக்கு சாப்பிலின்களாகவும் ஆசிய மக்களுக்கு மிஸனரிகளாகவும் பணியாற்றினார்கள்.
                        iv.   ஒரு தமிழரான ஞான பொன்னையா கேட்டிகேலாகவும் பின்பு போதகராகவும் 1887ல் பிரதிர்ஷ்டை பண்ணப்பட்டார். 1912ல் பேராயர் சார்ல்ஸ் ஃபெர்கேஷன்டேவி, என்பவர் அத்தியட்சாதீனத்தைத் தொடக்கினார்.
d.   1887ல் சிலாங்கூர் மாநில ஆங்கிலிக்கன் சபை விரிவாக்கம் கண்டது. விசேஷமாக ஆங்கில ஊழியங்களும் தமிழ் ஊழியங்களும் மறைதிரு வேதவனம், திரு.டி.ஜே.தேவபிரியம் ஜே.. ஏசுடியான் மற்றும் சிலரின் பெயர்கள் இங்குக் குறிப்பிடத் தக்கது.
e.   1909இல் சிங்கப்பூர் அத்தியட்சாதீனம் உதையமானது. முதல் அத்தியட்சர் சார்ல்ஸ் ஸ்பெர்கேஸ்சன் டேவி என்பவர். 1910ல் இவர்தான் முதலாவது சிங்கப்பூரின் அத்தியட்சாதீனத்தின் மாத இதழ்களை வெளியிட்டார்.
f.    சாப்பளினாயிருந்து மிஸனரியாக மாறியது
                         i.   ஆசிய ஊழியங்களை எஸ்.. உற்சாகப்படுத்தியது.
                        ii.   1948ல் சிங்கப்பூர் திருத்துவ இறையியல் கல்லூரி நிறுவப்பட்டது.
                        iii.   மலாயாசிங்கப்பூரில் ஜப்பானிய இராணுவ ஆதிக்கம் சுவிசேஊழியங்களுக்கு ஸ்தல தன்மைகளின் தோற்றத்தைக் கொடுத்தது.
4.   1941 – 1945: ஜப்பானிய ஆதிக்கக் காலம்
a.   லெப்டினன் ஓகாவா, ஒரு ஜப்பானிய ஆங்கிலிக்கன். அவர் அத்தியட்சர் வில்சனுக்கு மிகவும் உதவியாயிருந்தார்.
b.   மலாயா கிறிஸ்தவ சபைகளின் ஐக்கியம் நிறுவப்பட்டது.
c.   சாங்கி, சிங்கப்பூரில் வெளிநாட்டு அத்தியட்சர்மார்கள், தலைவர்கள் குழுமியிருந்ததால், முதல் தடவையாக சபை தலைமைத்துவம் ஆசியர்களின் கரங்களில் ஒப்படைக்கப் பட்டது.
d.   இரண்டாவது உலக மகா யுத்த காலத்தில் மறைதிரு ஏசுடியான், டி.பி.சாமுவேல், மறைதிரு ஹோவாங் யாங் போன்றோர் நல்ல தலைமைத்துவத்தை வழங்கினார்கள்.
e.   1945-70ல் மலேசியா அங்கிலிக்கன் சபையை நோக்கிச் செல்லுதல்:
                         i.   முதன் முறையாக மலாயாவின் ஆங்கிலிக்கன் சபைகளில் பல இன ஆராதனை அனுபவம் பெற்றது.
                        ii.   அத்தியட்சர் வில்சன் மற்றும் அத்தியட்சர் பி.அம்ஸதுத்ஸ் ஆகியோர் சபைகளின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டனர். (உம்- திருத்துவ இறையியல் கல்லூரி நிறுவுதல்).
                        iii.   1951இல் மறைதிரு ஞானசிகாமனி வட மலாயாவின் ஆர்ச்டீக்கனாக நியமிக்கப் பட்டார்.
                        iv.   1955ல் திரு.பால்.சாமுவேல் முதலாவது ஆசிய போதகராக கிளந்தான், திரங்கானு மாநிலங்களுக்கு நியமிக்கப் பட்டார்.
1957ல் மறைதிரு டாக்டர் டி.டி.செல்சா, சிங்கப்பூரின் ஆர்ச் டீக்கனாக நியமிக்கப் பட்டார்.
1959இல் மறைதிரு ரொலன்டு கோ துணை பேராயராக பிரதிர்ஷ்டை செய்யப்பட்டார்.
                        v.   OMF, SPG, CMS போன்ற ஸ்தாபனங்கள் புதுக் கிராமங்களில் சுவிஷேச ஊழியங்களை வளுப் பெறச் செய்தன.
                        vi.   1957 – சுதந்திரமும் ஆங்கிலிக்கன் சபையும்:
1.   திருத்துவ கல்லூரி போதகர்மார்களை உருவாக்க ஆரம்பித்தது. சுயூ பா முதல் ஆசிய அத்தியட்சர்.
5.   1970 – 2010: மேற்கு மலேசிய உதயமும் அதின் வளர்ச்சியும்:
a.   ரொவண்டு கோதீர்க்கதரிசன கனவோடு பல புதிய வளர்ச்சி திட்டங்களைத் தொடக்கினார்.
b.   ஜான் சவரிமுத்து மேற்கூறப்பட்ட திட்டங்களை வளர்ச்சியடையச் செய்தார்.
c.   KTM / STM மூலம் பல போதகர்களைப் பயிற்சியளித்துப் பெருகச் செய்தார்.
d.   லிம் சென் இயன் அத்தியட்சாதீனத்தின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தினார்கள்.
e.   இங் மூன் இங்மிஷன் ஊழியங்களை விரிவடையச் செய்தார்கள். பல ஆர்வமுள்ள சபை அங்கத்தினர்களைப் பிரதிர்ஷ்டை ஊழியங்களைச் செய்ய ஈடுபடுத்தப் பட்டார்கள். (உம் – NSM LOAM)
f.    மேற்கு மலேசிய அத்தியட்சாதீனம் தென் கிழக்கு ஆசியா பிரதேசத்தில் 1996ல் அங்கத்துவம் பெற்றது. (மலேசியாவில் கிறிஸ்தவம் என்ற அகப் பக்கத்தைப் பார்க்கவும்)
Bishop Datuk Dr. S. Batumalai, April 2011.

மொழிபெயர்ப்பு
ராபின்சன் விக்டர்

டைப்செட்டிங்
ஜான்சன் விக்டர்
www.bibatee.blogspot.com என்ற வலைப்பூவிலும் இக்கட்டுரையைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்