Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Sunday, May 8, 2011

நற்செய்தி


நற்செய்தி

இந்த வார்த்தை இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் கற்பித்த பாடங்களையும் உள்ளடக்கிய புதிய ஏற்பாட்டு புஸ்தகத்தைக் குறிக்கிறது. அதே நேரத்தில் கடவுளின் கருணையையும் குறித்து இயேசு போதித்தார். கடவுளின் கருணை இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்த்தெழுதல் அதின் மூலம் வருகின்ற இரட்சிப்பும் சமாதானமுமாம்.

நற்செய்தியை கிருபையின் நற்செய்தி என்றும் கூறலாம். ஏனென்றால் அது அவருடைய அளவற்ற அன்பினிமித்தம் பாய்ந்தோடுகிற தன்மை வாய்ந்த்து.

நற்செய்தியை இராஜ்யத்தின் நற்செய்தி என்றும் கூறலாம், ஏனென்றால், அவர் இராஜ்யத்தில் கிருபையும் மகிமையும் பொருந்தியதாயிருக்கிறது. (மத்தேயு 4:23).

நற்செய்தியைக் கிறிஸ்துவின் நற்செய்தி என்றும் கூறலாம். ஏனெனில் இயேசு கிறிஸ்து தாமே இக்காரியங்களை எழுதியுள்ளார். (ரோமர் 1:16).

நற்செய்தியை சமாதானத்தின் நற்செய்தி என்று கூறலாம். ஏனெனில், நற்செய்தி இக்கால கிறிஸ்தவர்களின் சௌகரியத்தை அதிகரிக்கச் செய்து பிற்காலத்தில் நித்திய மகிமைக்கும் இரட்சிப்புக்கும் இட்டுச் செல்லுகிறது.

நற்செய்தியை மகிமையின் நற்செய்தி என்றும் அழைக்கலாம். ஏனெனில் அதில் மகிமையான முழுமையைக் காணமுடிகிறது. (2கொரிந்தியர் 4:4)

நற்செய்தியை நித்திய நற்செய்தி என்றும் அழைக்கலாம், ஏனெனில் இச்செய்தி காலத்தால் நிலையானதும், நித்தியத்திற்குள் வழி நடத்திச் செல்ல வல்லமையுள்ளதாயிருக்கிறது. (வெளி. 14:6)

நற்செய்தி அறிவிப்பது என்னவென்றால், கடவுள் நேசிக்கப்படத் தக்கவரும், நிச்சயமாக நேசிக்கப்பட வேண்டியவரும் ஆவார். (1யோவான் 4:19)

1.   நற்செய்தியைக் கேட்டு விசுவாசிப்பதின் மூலம் அந்நபர் கடவுளை நேசிப்பவராகிறார்.
2.   பிதாவாகிய கடவுளும் நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவும் எல்லாவற்றிற்கும் மேலாக நேசிக்கப்பட தக்கவர்.
3.   கடவுளின் அன்பு பழுதற்றது.
4.   கடவுளின் அன்பு எல்லாறையும் அறவனைக்கும். அது என்றென்றும் மாறாது.
5.   கடவுளின் அன்பு கைவிடாது அது கறைந்து போகாது.

ஆக்கம்:
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மொழியாக்கம்:
ராபின்சன் விக்டர்

டைப்செட்டிங்:
ஜான்சன் விக்டர் (09.05.2011)

இக்கட்டுரையை www.bibatee.blogspot.com என்ற வலைப்பூவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment