Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Tuesday, May 10, 2011

மலேசிய ஆங்கிலிக்கன் சபையின் 200 ஆண்டுகால வரலாறு


Two Hundred Years of Anglican Mission
மலேசிய ஆங்கிலிக்கன் சபையின் 200 ஆண்டுகால வரலாறு

பதிவிறக்கங்கள்:

1.   காலணித்துவ ஆங்கிலிக்கன் சபையின் விரிவாக்கம்:
a.   கிழக்கிந்திய கம்பனியைச் சார்ந்த பிரான்சிஸ் லைட் 1772ல் பினாங்கு மாநிலத்தை வந்தடைந்தார். கிழக்கிந்திய கம்பனியின் பிரதான நோக்கம் வியாபாரம் செய்வதே.
b.   1824இன் ஆங்கிலேய  - டச்சு உடன்படிக்கையின் மூலம் 1795ல் மலாக்கா மாநிலம் அங்கிலேய ஆதிக்கத்திற்குள் வந்த்து.
c.   1819ல் சிங்கப்பூர் நிறுவப்பட்டது.
d.   1867ல் இந்திய அரசாங்கம் தீபகற்ப மலாயாவை ஸ்திரேட் செட்டில்மென்டிடம் ஒப்படைத்த்து. (S.S)
e.   1874ல் பங்கோர் உடன்படிக்கையின்படி பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் பகாங் மாநிலங்கள் ஐக்கிய மலாய் நாடுகளாக இணைந்தன.
f.    ஆங்கில அரசாங்கம் கிறிஸ்தவத்தை (உலகமெங்கும்) தோட்டம் துறவுகளில் அனைத்திலும் நாட்டினார்கள். இப்பணிக்கு வியாபாரமும் ஆங்கிலப் பேரரசின் விரிவாக்கம் மிகவும் உதவின.
g.   ரா.பாலவென்டரம் (தென் இந்தியா) என்பவர் ஆசிய ஊழியராகி 1877ல் அபிஷேகம் பெற்றார். 1952ல் பவுல் சாமுவேல் என்பர் அபிஷேகம் பெற்றார்.
h.   1957-59 வரை உள்ளுர் தலைமைத்துவங்கள் மெல்ல மெல்ல வளர ஆரம்பித்தன. 1988ல் மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் சபையில் 5023 பேர்கள் அங்கத்துவம் பெற்றிருந்தனர்.
2.   பினாங்கு மாநில ஸ்தாபிப்தலும் ஆங்கிலிக்கன் சபையின் விரிவாக்கமும்:
a.   1805ல் அத்வில் லேக் என்பவர் முதலாவது ஸ்தல சாப்லினாக கிழக்கிந்திய கம்பனியினால் நியமிக்கப் பட்டார்.
                         i.   1814ல் பினாங்கு மற்றும் மலாக்கா மாநிலத்திலுள்ள சபைக்கள் கல்கத்தா அத்தியட்சாதீனத்தின் கீழ் இருந்த்து.
                        ii.   1814ல் பினாங்கு மற்றும் மலாக்கா மாநிலத்திலுள்ள சபைகள் க்க்த்தா அத்தியட்சாதீனத்தின் கீழ் இருந்த்து.
                        iii.   1819ல் பரி.ஜார்ஜ் ஆலயம், பினாங்கு மாநிலதில் கிழக்கிந்திய கம்பனியின் கட்டுப்பாட்டு பிரஸ்டை  செய்யப்பட்டது.
b.   பினாங்கிபன் ஃபிரி ஸ்கூல் ராபர்ட் ஹட்சிங்ஸ் என்பவரால் நிறுவப்பட்டது. (மலேசியாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் இப்பள்ளியில் படித்துள்ளார்)
c.   1838ல் மலாக்காவின் கிறிஸ்துவின் ஆலயம் மறு பிரதிண்டை செய்யப்பட்டு ஆங்கிலிக்கன் சபையிடம் ஒப்படைக்கப்பட்டது.
d.   கல்கத்தா பேராயர் தம்முடைய ஊழியங்களை மலாயாவிற்கு விரிவாக்கம் செய்தார்.
3.   1868 முதல் 1941 வரை: மலாயாவின் ஆங்கிலிக்கன் சபையின் தொடக்க காலம்.
a.   போர்னியோவின் பேராயர் அதிகாரம் தீபகற்ப மலாயாவில் விரிவாக்கம் கண்டது. அவர் போர்னியோ சிங்கப்பூர் மற்றும்  மலாயாவை மேற்பார்வை செய்தார்.
b.   பினாங்கிலும் மலாக்காவிலும் ஆங்கிலிக்கன் சபை உதயமானது.
                         i.   1871ல் தமிழ் ஊழியங்கள் உதையமானது.
                        ii.   1886ல் சீன ஊழியங்கள் உதயமாயின.
                        iii.   தமிழ் மற்றும் சீன ஊழியங்களைஎஸ்பிஜிஆதரவு தந்து உதவியது.
                        iv.   தமிழ் பள்ளிகளை பாலவேந்தரம் நிறுவி  அதின் மூலம் தமிழ் ஊழியங்களை விரிவாக்கம் செய்தார்.
c.   1874ல் பங்கோர் உடன்படிக்கையும் ஃபெடரல் மலாய் மாநிலத்திலுள்ள ஆங்கிலிக்கன் சபைகளும்:
                         i.   பங்கோர் உடன்படிக்கை மலாய் சமூகத்தினரிடத்தில் சுவிசேஷங்களைப் பிரபல்லியப் படுத்துவதற்குத் தடை செய்தன.
                        ii.   அக்காலக் கட்டத்தில் ஆங்கிலிக்கன் சபை ஆராதனைகள் எஸ்டேட் ஊழியர்களின் இல்லங்களிலும் அரசாங்க ஊழியர்களின் இல்லங்களிலும் நடைபெற்று வந்தன. ஆலயங்கள் எழுப்பப்பட்ட பின் அவ்வாராதனைகள் ஆலயங்களிலேயே நடைபெற்றன.
                        iii.   ஆங்கிலிக்கன் பாதிரிமார்கள் இங்குள்ள ஐரோப்பிய/ஆங்கிலேய மக்களுக்கு சாப்பிலின்களாகவும் ஆசிய மக்களுக்கு மிஸனரிகளாகவும் பணியாற்றினார்கள்.
                        iv.   ஒரு தமிழரான ஞான பொன்னையா கேட்டிகேலாகவும் பின்பு போதகராகவும் 1887ல் பிரதிர்ஷ்டை பண்ணப்பட்டார். 1912ல் பேராயர் சார்ல்ஸ் ஃபெர்கேஷன்டேவி, என்பவர் அத்தியட்சாதீனத்தைத் தொடக்கினார்.
d.   1887ல் சிலாங்கூர் மாநில ஆங்கிலிக்கன் சபை விரிவாக்கம் கண்டது. விசேஷமாக ஆங்கில ஊழியங்களும் தமிழ் ஊழியங்களும் மறைதிரு வேதவனம், திரு.டி.ஜே.தேவபிரியம் ஜே.. ஏசுடியான் மற்றும் சிலரின் பெயர்கள் இங்குக் குறிப்பிடத் தக்கது.
e.   1909இல் சிங்கப்பூர் அத்தியட்சாதீனம் உதையமானது. முதல் அத்தியட்சர் சார்ல்ஸ் ஸ்பெர்கேஸ்சன் டேவி என்பவர். 1910ல் இவர்தான் முதலாவது சிங்கப்பூரின் அத்தியட்சாதீனத்தின் மாத இதழ்களை வெளியிட்டார்.
f.    சாப்பளினாயிருந்து மிஸனரியாக மாறியது
                         i.   ஆசிய ஊழியங்களை எஸ்.. உற்சாகப்படுத்தியது.
                        ii.   1948ல் சிங்கப்பூர் திருத்துவ இறையியல் கல்லூரி நிறுவப்பட்டது.
                        iii.   மலாயாசிங்கப்பூரில் ஜப்பானிய இராணுவ ஆதிக்கம் சுவிசேஊழியங்களுக்கு ஸ்தல தன்மைகளின் தோற்றத்தைக் கொடுத்தது.
4.   1941 – 1945: ஜப்பானிய ஆதிக்கக் காலம்
a.   லெப்டினன் ஓகாவா, ஒரு ஜப்பானிய ஆங்கிலிக்கன். அவர் அத்தியட்சர் வில்சனுக்கு மிகவும் உதவியாயிருந்தார்.
b.   மலாயா கிறிஸ்தவ சபைகளின் ஐக்கியம் நிறுவப்பட்டது.
c.   சாங்கி, சிங்கப்பூரில் வெளிநாட்டு அத்தியட்சர்மார்கள், தலைவர்கள் குழுமியிருந்ததால், முதல் தடவையாக சபை தலைமைத்துவம் ஆசியர்களின் கரங்களில் ஒப்படைக்கப் பட்டது.
d.   இரண்டாவது உலக மகா யுத்த காலத்தில் மறைதிரு ஏசுடியான், டி.பி.சாமுவேல், மறைதிரு ஹோவாங் யாங் போன்றோர் நல்ல தலைமைத்துவத்தை வழங்கினார்கள்.
e.   1945-70ல் மலேசியா அங்கிலிக்கன் சபையை நோக்கிச் செல்லுதல்:
                         i.   முதன் முறையாக மலாயாவின் ஆங்கிலிக்கன் சபைகளில் பல இன ஆராதனை அனுபவம் பெற்றது.
                        ii.   அத்தியட்சர் வில்சன் மற்றும் அத்தியட்சர் பி.அம்ஸதுத்ஸ் ஆகியோர் சபைகளின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டனர். (உம்- திருத்துவ இறையியல் கல்லூரி நிறுவுதல்).
                        iii.   1951இல் மறைதிரு ஞானசிகாமனி வட மலாயாவின் ஆர்ச்டீக்கனாக நியமிக்கப் பட்டார்.
                        iv.   1955ல் திரு.பால்.சாமுவேல் முதலாவது ஆசிய போதகராக கிளந்தான், திரங்கானு மாநிலங்களுக்கு நியமிக்கப் பட்டார்.
1957ல் மறைதிரு டாக்டர் டி.டி.செல்சா, சிங்கப்பூரின் ஆர்ச் டீக்கனாக நியமிக்கப் பட்டார்.
1959இல் மறைதிரு ரொலன்டு கோ துணை பேராயராக பிரதிர்ஷ்டை செய்யப்பட்டார்.
                        v.   OMF, SPG, CMS போன்ற ஸ்தாபனங்கள் புதுக் கிராமங்களில் சுவிஷேச ஊழியங்களை வளுப் பெறச் செய்தன.
                        vi.   1957 – சுதந்திரமும் ஆங்கிலிக்கன் சபையும்:
1.   திருத்துவ கல்லூரி போதகர்மார்களை உருவாக்க ஆரம்பித்தது. சுயூ பா முதல் ஆசிய அத்தியட்சர்.
5.   1970 – 2010: மேற்கு மலேசிய உதயமும் அதின் வளர்ச்சியும்:
a.   ரொவண்டு கோதீர்க்கதரிசன கனவோடு பல புதிய வளர்ச்சி திட்டங்களைத் தொடக்கினார்.
b.   ஜான் சவரிமுத்து மேற்கூறப்பட்ட திட்டங்களை வளர்ச்சியடையச் செய்தார்.
c.   KTM / STM மூலம் பல போதகர்களைப் பயிற்சியளித்துப் பெருகச் செய்தார்.
d.   லிம் சென் இயன் அத்தியட்சாதீனத்தின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தினார்கள்.
e.   இங் மூன் இங்மிஷன் ஊழியங்களை விரிவடையச் செய்தார்கள். பல ஆர்வமுள்ள சபை அங்கத்தினர்களைப் பிரதிர்ஷ்டை ஊழியங்களைச் செய்ய ஈடுபடுத்தப் பட்டார்கள். (உம் – NSM LOAM)
f.    மேற்கு மலேசிய அத்தியட்சாதீனம் தென் கிழக்கு ஆசியா பிரதேசத்தில் 1996ல் அங்கத்துவம் பெற்றது. (மலேசியாவில் கிறிஸ்தவம் என்ற அகப் பக்கத்தைப் பார்க்கவும்)
Bishop Datuk Dr. S. Batumalai, April 2011.

மொழிபெயர்ப்பு
ராபின்சன் விக்டர்

டைப்செட்டிங்
ஜான்சன் விக்டர்
www.bibatee.blogspot.com என்ற வலைப்பூவிலும் இக்கட்டுரையைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

No comments:

Post a Comment