The Methodist Church in Malaysia
1.1 முன்னுரை – ஆரம்ப கால மெதடிஸ்ட் திருச்சபையின் தன்மைகள்:
a. இது இங்கிலாந்தில் கிறிஸ்தவப் புத்தாத்தைப் வழி வகுக்கும் இயக்கமாகத் தொடங்கியது.
b. ஜான் வெஸ்லி என்பவர் சுவிசேஷம் மற்றும் சீடத்துவப் பணிகளில் அதிக அக்கறை காட்டினார். மதமாறியவர்களின் ஆவிக்குரிய ஊட்டத்திற்கும் புதிய தலைமைத்துவத்தை உறுவாக்குதற்கும் இவர் வழி வகுத்தார்.
c. ஆவிக்குரிய புத்தாக்கமும் புதுப்பித்தலும் கூட இவருடைய கரிசணையாக இருந்த்து.
d. அடிமைத் தனத்தை அமெரிக்க மறுமலர்ச்சியாளர்கள் எதிர்த்தனர்.
1.2 இயக்கத்தின் கட்டமைப்பு:
a. வெஸ்லியின் மெதடிஸ்ட் கொள்கையில் அதன் கட்டமைப்பு சிறப்பம்சமாக மிளிர்ந்த்து.
1.3 ஆசிய மெதடிஸ் கொள்கையின் தாக்கம்:
a. ஜேம்ஸ் தோபுன் மற்றும் வில்லியம் ஓல்ஹம் மலேசியாவில் மெதடிஸ்ட் கொள்கையை அறிமுகப் படுத்தினர்.
b. ஆவியால் நிரப்பப் பட்ட ஐக்கியக் கூட்டங்களுக்கும், வேதாகமக் கல்வி மற்றும் தியானக் குழுக்களுக்கு ஆரம்ப காலத்தில் முக்கியத்துவம் காட்டப் பட்டது.
c. 1930களில் கோ ஹுட் கெங் மற்றும் ஜான் சங் ஆகியோர் சீனர்கள் மத்தியில் மெதடிஸ்ட் கொள்கையைப் பரப்பி வந்தனர்.
d. இக்காலக் கட்டத்தில் உள்ளூர் தலைவர்கள் குறைவாகவே காணப்பட்டனர்.
e. மலாயாவில் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
f. 1955-72ல் சரவாங்கில் மெதடிஸ்ட் கொள்கை அபரிமிதமாக வளர்ந்தது.
1.4 கால அடிப்படையில் மலேசிய மெதடிஸ்ட் கொள்கையின் வளர்ச்சி:
a. 1885-80ல், சிங்கப்பூரிலும் மலாயாவிலும் மெதடிஸ்ட் திருப்பணி தொடக்கப் பட்டது.
b. கல்வி திருப்பணியின் பிரதான நோக்கமாக நோக்கப்பட்டதோடு, பள்ளிகள் திருப்பணிகளின் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப் பட்டு வந்தன.
c. 1964 வரைக்கும் பூகோள மற்றும் மொழி அடிப்படையில்தான் சபை நடவடிக்கைகளை ஆக்கிரமித்திருந்தன.
d. சரவாக் கிறிஸ்தவ சமூகத்தில் மெதடிஸ்ட் சபையோரே பெருமளவு உள்ளனர்.
2.1 சிங்கப்பூர் மற்றும் மலாயாவில் சபையின் வளர்ச்சி: 1885-1889:
a. 1864ல் சார்ல்ஸ் பிலிப் என்ற ஆங்கிலேயர் பட்டாளத்தோடு வந்து சுவிசேஷத்தைப் பறை சாற்றினார்.
b. இந்தியாவில் உள்ள மறைதிரு ஜேம்ஸ் தோபுனிடம், சுவிசேஷர்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.
c. 1884ல் நடைபெற்ற தென்னிந்திய வருடாந்திர மாநாடு சிங்கப்பூரில் திருப்பணியைத் தொடக்கிற்று. ஓல்டஹம் அப்பணியைத் தொடர்ந்து செய்தார்.
d. 1888ல் டாக்டர் தோபுர்ன் இந்தியா மற்றும் மலாயாவின் பேராயராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
e. மறைதிரு ஜி.டபிளியு. அன்டர்வூட் பல ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துவதில் உதவினார்.
f. சீனர்கள் மத்தியில் இத்திருப்பணி 1887ல் தொடக்கப் பட்டது.
g. மறைதிரு ஜி.ஷல்லபியர் 1887ல் மலாய்க் காரர்கள் மத்தியில் திருப்பணியைத் தொடக்கினார். அவர்தான் வேதாகமத்தின் மலாய் மொழி பெயர்ப்பைத் தயாரித்தார்.
2.2 பெரும்பணி வளர்ச்சியின் படிவம்:
a. கல்வி மற்றும் சமூகத் திருப்பணிகள்: 1886ல் சிங்கப்பூரில் ஏசிஎஸ் பள்ளி தொடங்கியது. சிங்கப்பூரில் மெதடிஸ்ட் கொள்கையை வளர்ப்பதற்கு பள்ளிகள் ஒத்துழைத்தன.
b. சுவிசேஷக் குழுவின் உதவியால் 1898ல் சிங்கப்பூரில் விபச்சாரம் ஒழிக்கப்பட்டது.
c. பள்ளிகள் மற்றும் சமூகப் பணிகளின் நிமித்தம் ஞாயிறு பாடசாலையும் தொடங்கியது. பெரும்பாலான சுவிசேஷகர்கள் முதல் 15 ஆண்டுகளில் பள்ளிகளில் உபதேசித்து வந்தனர்.
d. ஒருங்கிணைக்கப் பட்ட சுவிசேஷம்: சுவிசேஷம், மீட்புப் பணி மற்றும் கல்விப் பணிகள் யாவும் முழுமையாக ஒருங்கிணைக்கப் பட்டன. மதமாறியவர்கள் வேதாகமசாலிகளாகப் பயிற்சியளிக்கப் பட்டனர்.
e. மலாய் சுவிசேஷம்: 1890 – 1919 ஆண்டு கால வாக்கில் வில்லியம் செலபியர் இப்பணியை மேற்கொண்டார் (பக்.155). சொற்பமான ஆங்கிலப் பள்ளிகளில் கல்வி பயின்றனர். (மகாதீரின் ஆகக் கடைசியான புத்தகத்தை வாசிக்கவும்). ஒரு மலாய் மாணவியைத் தம் ஆங்கிலப் பள்ளியில் சேர்த்துக் கொள்வதற்காக, ஃபெனி செல்லபியர் 80 முறை அக்குடும்பத்தாரின் வீட்டுக்கு ஏறி இறங்கியதாகக் கூறப்படுகிறது. மலாய்க் காரர்கள் சுவிசேஷப் பணிகளைக் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடையவர்களாய் இருந்தனர். இஸ்லாமிய சமூகத்தில் பெண்களே நல்ல உறவு முறைகளை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம்
f. சில இந்திய மற்றும் சீன குருமார்களும் மலேசியாவில் பணிக்கு அமர்த்தப் பட்டனர்.
2.3 கடல் கடந்து வந்த விரிவாக்கத்தின் காலக் கட்டம் (1900-1920) :
a. தமிழ் ஊழியத்தின் வளர்ச்சி: அன்டர்வூட் மரித்த பிறகு மறைதிரு சாமுவேல் ஆபிரகாம், ஸ்ரீலாங்காவில் இருந்து வந்து, தமிழர்கள் மத்தியில் ஊழியம் செய்தார். மறைதிரு எஸ்.எஸ்.பாக்கியநாதனும் இப்பணிக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
2.4 சீனப் பணியின் விரிவாக்கம்: 1899 – 1900ல் சீனாவில் பாக்சர் கலவரத்திற்குப் பின்னர், ஃக்காவ் கிறிஸ்தவர்கள் சரவாக்கில் 1901ம் ஆண்டு திருப்பணியைத் தொடக்கினர்.
2.5 கிறிஸ்தவக் கல்வியும் பள்ளி முறைமையின் விரிவாக்கமும் பேருதவியாக அமைந்தது. (பக்.161). பினாங்கு, தைப்பிங், ஈப்போ, தெலுக் இந்தானில் புதிய பள்ளிகள் நிர்மாணிக்கப் பட்டன. அதே காலக் கட்டத்தில் இடைநிலைப் பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தன.
2.6 தலைமைத்துவமும் மேம்பாடுகளும் (பக்.163):
a. மிஷனரிகள் உயர்மட்டப் பதவிகளை ஆக்கிரமித்துக் கொண்டனர். (உம் – பொருளாதாரம்) சீன மற்றும் தமிழ் குருமார்கள், குருத்துவப் பணிகளை மட்டும கவனித்து வந்தனர். ஆசியர்களின் தலைமைத்துவம் மெல்லமாகவே வளர்சியடைந்தது.
b. வேதாகமசாலிகள் நல்ல தலைமைத்துவத்தை வழங்கினர்.
c. சபைகளின் தலைமைத்துவத்தில் ஆசியர்கள் படிப்படியாக உயர்ந்த பதவிகளைக் கேட்கத் தொடங்கினர்.
d. 1941ல் மலாயா மெதடிஸ்ட் இறையியல் கல்லூரி அவதரித்தது. பின்னர் சிங்கப்பூரில் உள்ள திரித்துவ இறையியல் கல்லூரியோடு இணைந்து கொண்டது.
e. 1936ல் மெதடிஸ்ட் சபையின் வருடாந்திர மாநாடு கூடியது. ஆரம்ப காலத்தில் சீனா மற்றும் இந்தியாவில் இருந்து தலைவர்கள் கலந்து கொண்டனர்.
f. பிறரைப் போல், சுவிசேஷகர்களுக்கும் உபதேசிக்கும் பணி வழங்கப்பட்டது.
g. மெதடிஸ்ட் பள்ளிகளை பிரிட்டிஷ் காலணித்துவ அரசாங்கம் அங்கீகரித்த்து.
2.7 1936ம் ஆண்டில் சீன வருடாந்திர மாநாடு அமைக்கப் பட்டது. (பக்.172). இந்தியர்களை விட சீனர்களின் ஜனத் தொகை சீராகக் காணப்பட்டது. 48 சீன சபைகள் செயல்பட்ட நிலையில் வெறும் 16 தமிழ் சபைகள் மட்டுமே செயல்பட்டன. பெரும்பாலான சீன சபைகள் தங்கள் பொருளாதாரத் தேவைகளைத் தாங்களே சந்தித்துக் கொண்டனர்.
2.8 யுத்த காலம்:
a. பெரும்பாலான மிஷனரிகள் தங்கள் தாயகம் திரும்பி விட்டனர். எஸ்.எம்.தேவதாசன் அவசரக் கால பணிக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். எச்.பி.அம்ஸ்துட்ஸ் பணியும் குறிப்பிடத் தகுந்தது.
b. சீன வருடாந்திர மாநாடு 1942ல் தொடங்கப் பட்டது (பக்.175)
c. தமிழ் வருடாந்திர மாநாடு 1968ல் தொடங்கப் பட்டது (பக்.176)
d. தென் கிழக்காசிய மாநாடு 1950ல் அமைக்கப் பட்டது.
e. சுய அதிகாரம் பெற்ற மலேசிய மற்றும் சிங்கப்பூர் மெதடிஸ்ட் சபைக்கு டாக்டர் யாப் கிம் ஹோ.வின் தலைமைத்துவம் ஐவர் மூலம் அமைக்கப் பட்டது. டாக்டர் யாப் கிம் ஹோ மெதடிஸ்ட் திருச்சபையின் முதல் ஆசிய பேராயராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
2.9 பிரிவினையின் தாக்கம்:
a. மொழி அடிப்படையில் மாநாடுகள் நடத்தப் பட்டன. (உம் – தமிழ், ஈபான், சீனம்)
b. மாநாடுகளில் பொருளாதாரம் மற்றும் சொத்துடைமை பற்றியே விவாதிக்கப் பட்டன. சுவிசேஷம், ஆராதனை மற்றும் கல்வி விவகாரங்கள் ஓரங்க்கட்டப் பட்டன.
c. சீனத் திருச்சபைகள் பெலன் வாய்ந்ததாகக் காணப்ட்டன.
d. மலேசியக் கூட்டரசில் இருந்து சிங்கப்பூர் பிரிந்து சென்றது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
e. மிஷனரிகள் வெளியேறியதில் இருந்து காலணித்துவ காலக்கட்டம் ஒரு முடிவுக்கு வந்த்து.
f. ஈப்போ, தமிழர் குடியிருப்பில் செயல்பட்டு வந்த இறையியல் பள்ளி 1958ல் மூடப்பட்டது.
g. திரித்துவக் கல்லூரியின் மூலம் ஒவ்வொரு குருமார்களும் இளங்களைப் பட்டத்திற்குப் பாத்திரர் ஆனார்கள்.
h. 1960க்குப் பின்னர் கிறிஸ்தவ மார்க்கப் போதனைகள் பேரளவில் கட்டுப்படுத்தப் பட்டன.
i. மே 13, 1969க்குப் பின்னர், தேசிய மொழி கல்வி மொழியாக அங்கீகரிக்கப் பட்டது.
2.10 சுய அதிகாரக் காலக்கட்டம் (1968-1980) :
a. மாநாட்டுக்கான நிதி, ஆண்டுக்குப் 10 விழுக்காட்டுக்கு வீதம் குறைக்கப்பட்டது.
b. மிஷனரிகளுக்கும் பிற அந்நியப் பணியாளர்களுக்கும் மலேசிய அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை விதித்தது.
c. 1976ல், சிங்கப்பூரில் செயல்பட்டு வந்த மெதடிஸ்ட் திருச்சபை இரண்டாகப் பிரிந்த்து.
d. யாப் கிம் ஹோ 1972ம் ஆண்டில் மீண்டும் தேர்வு பெற்றார். 1974ம் ஆண்டு அவர் CCA-இன் தலைவராகப் பொறுப்பேற்றார்.
e. சி.என்.ஃபாராவின் ஊக்கத்தின் நிமித்தம் சிங்கப்பூர் தி.ஆர்.துரைசாமி, 1972-76ம் ஆண்டுகளுக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
f. 1976ம் ஆண்டில் சி.எஃப் ஃபாங் மலேசிய மெதடிஸ்ட் சபையின் பேராயராகத் தேர்ந்தெடுக்கப் ட்டார்.
முடிவுரை:
1 மெதடிஸ்ட் சபையின் மிகப் பெரிய சவால் – சுவிசேஷப் பணியைப் பெற்றுக் கொள்வதில் இருந்து, தன் சொந்த சுவிசேஷப் பணியை முடுக்கி விடுவது.
2 மெதடிஸ்ட் சபைகள் எண்ணிக்கையில் வளர்ந்தன. – புதிய சவால்களும் வளர்ந்தன.
3 மெதடிஸ்ட் திருச்சபையும் மலேசிய சபைகளின் ஐக்கியத்தில் பெரும் பங்காற்றியது. STM, CFM மற்றும் MCCBCHST ஆகியவற்றின் அவதாரத்திற்கும் பெரும் பங்காற்றியுள்ளது. அடுத்து, மிகப் பெரிய திருச்சபையாகிய ரோமாபுரி கத்தோலிக்கத் திருச்சபையை ஆராய்வோம்.
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை
Bishop Datuk Dr. S. Batumalai – STM Tamil Course 2011
மொழி பெயர்ப்பு, டைப்செட்டிங்
ஜான்சன் விக்டர்
07.05.2011
No comments:
Post a Comment