பதிவிறக்கம் செய்ய...
[url][/url]
வோர்ட் வடிவம்
பிடிஎஃப் வடிவம்
1 முன்னுரை:-
a. இந்நாட்டில் ஈராயிரம் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சிறிய சபை. தொடக்கத்தில், தென்னிந்தியாவில் இருந்து குடியேறியவர்கள் மத்தியில் தன் பணியைத் தொடக்கியது.
b. 1963ல் நிறுவப்பட்ட இத்திருச்சபை, உள் நாட்டிலும் அயல் நாட்டிலும், உள்ள உள்ள இதர லூத்தரன் குழுக்களோடு இணைந்து கொண்டது.
c. பின்வரும் கிறிஸ்தவ இயக்கங்களில் ஆரம்ப காலத்தில் இருந்து இணைந்திருக்கிறது.. CCM, CFM, MCCBCHST.
2 தொடக்க வரலாறு
a. இந்தியாவில உள்ள ஒரு ஜெர்மனிய லூத்தரன் பெரும்பணியாளர் மலாயாவில் தம் பணியைத் தொடக்கினார்.
b. திருச்சிலுவை ஜோசப் (1862-1929) என்ற போதகர் கோலாலம்பூரில் பணிக்கு அமர்த்தப்பட்டு, தவறாமல் ஆராதனை நடத்தி வந்தார்.
c. பிரிக்பீல்ட்ஸ் உள்ள ஸ்கோட் சாலையில் ஒரு கடை வாடகைக்கு எடுக்கப்பட்டு முதல் ஆலயம் செயல்படத் தொடங்கியது.
d. பினாங்கிலும், ஈப்போவிலும், சிங்கப்பூரிலும் பின்னர் திருப்பணிகள் தொடங்கின. 1909ல் ஜெர்மனியக் கடனுதவியின் மூலம் கோலாலம்பூரில் ஒரு நிலம் வாங்கப்பட்டது.
3 தன்னாட்சியும் வளர்ச்சியும்
a. 1918ம் ஆண்டில் உள்நாட்டு லூத்தரன் சபை தங்கள் தாய் சபையின் சட்டதிட்டங்களை ஏற்ற மாற்றங்கள் செய்து உள்வங்கிக் கொண்டது.
b. 1922ம் ஆண்டு வட மற்றும் தென் வளையங்கள் அமைக்கப் பட்டன.
c. 1922ம் ஆண்டில் கோலாலம்பூர் ஆலயத்தின் அடிக்கல்லைப் பேராயர் ஹியுமென் நாட்டினார். 1921ம் ஆண்டு சுவிசேஷ லூத்தரன் சபை அபிஷேகம் பெற்றது.
d. வட வளையம் தேவவரன் என்பவரல் மேம்படுத்தப் பட்டது.
e. தென் வளையம் – தமிழ் சுவிசேஷ லூத்தரன் சபை பொருளாதாரத் தன்னாட்சியோடு, ஆலய சட்டதிட்டம் ஏற்றுக் கொள்ளப் பட்டது. 1936ல் அது TELC உடன் ஐக்கியப்பட்டது. மறைதிரு ஜி.ஜி.ஆச்சாரியன் 1938ல் சபையைத் தன்னகப் படுத்திக் கொண்டார்.
f. இந்த ELCM கோலாலம்பூரில் செனோய் பணிகளையும் தொடக்கியது.
4 ஜப்பானிய ஆட்சி – போருக்குப் பிந்திய காலக் கட்டம்
a. சில பிரச்சனைகளுக்கு இத்திருச்சபை இலக்கானது. (p 206)
b. இப்போர் காலக் கட்டத்தில் ஷியோன் சபை மட்டுமே ஆராதனைகளை நடத்தி வந்தது.
c. எஸ்.ஏ.டாஸ் மற்றும் பிறர் ஒத்தாசை வழங்கினர்.
d. 1947ம் ஆண்டில், திராங்குபரனின் பேராயர் சன்டேர்கிரனின் வருகைக்குப் பிறகு, இத்திருச்சபை ஆவிக்குரிய ஊட்டம் பெற்றது.
5 1949ம் ஆண்டில் ஷியோன் சபை வெள்ளி விழா கொண்டாடியது. இவ்வாண்டில் மறைதிரு தேவவரன் இந்தியாவுக்குச் செல்லவே, ஏ.எஸ். முத்தையா என்ற ஓர் ஆசிரியர் அவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
6 சீன ஊழியத்தின் தொடக்கம் (ELCM)
a. ELCM அமரியா லூத்தரன் சபை சீன ஊழியத்தை உருவாக்க உதவியது.
b. வி.தி.பிச்சை பிள்ளை என்ற சபையார் ELCM-இன் தொடக்க காலத்தில் தீவிரப் பணியாற்றினார்.
c. பேராயர் பி. ராஜ மாணிக்கம் சபைகளை ஐக்கியப்படுத்துவதற்குப் பெரும் பங்காற்றினார். (ப.211)
d. 1960ம் ஆண்டில் தென்னிந்தியாவில் இருந்து ஒரு முன்னாள் சுவிசேஷகர் மலாயாவுக்கு வந்தார். மறைதிரு டுவைன் வீரன் 1961ல் வருகை புரிந்தார். எஸ்.ஏ. ஆச்சாரியன் என்ற நீதிமன்றப் பொருளுரையாளர், அபிஷேகப் பணிக்காக சபையில் இணைந்து கொண்டார்.
7 ELCM நிறுவப் படுதல் (1961-1965)
a. ஓர் ஆலயம் நிறுவப்படுவதற்கும் இந்துக்கள் மத்தியில் சுவிசேஷம் செய்யவும் மறைதிரு என்வல் வருகை புரிந்தார்.
b. 1963ம் ஆண்டில், ELCM-இன் முதல் பேரவை கூடியது. பின்னர் லூத்தரன் கூட்டுறவு மன்றத்தில் மலாயா கிறிஸ்தவ ஆலோசனை மன்றத்தில் இணைந்து கொண்டது.
c. 1965ல் என்வல் என்பவர் ELCM-இல் பேராயராக பட்டமளிக்கப் பட்டார்.
8 விரிவாக்கமும் ஒருங்கிணைப்பும் 1966 –
a. ELCM அருட்பணிகள் விரிவாக்கப் பட்டன. நற்செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
b. 1976ல் முத்துசாமி என்பவர் பேராயராக நியமிக்கப் பட்டார்.
c. 1988ல் பேராயர் ஜூலியஸ் பால் பொறுப்பை ஏற்றார்.
d. 2007ல் சாலமோன் ராஜா பேராயராக பதவி உயர்வு பெற்றார்.
9 முடிவுரை
a. தொடக்க காலத்தில் இருந்து இத்திருச்சபை ஒருங்கிணைப்புக்காக பெரும்பணியாற்றி வருகிறது
b. ELCM CCM, CFM, MCCBCHST, STM மற்றும் FIDC ஆகிய கிறிஸ்தவ சார்பு இயக்கங்கள் அவதரிப்பதற்கு முக்கிய பங்காற்றியுள்ளது. .
ஆக்கம்
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை
மொழிபெயர்ப்பும் டைப்செட்டிங்கும்
ஜான்சன் விக்டர்
No comments:
Post a Comment