- http://www.4shared.com/document/avjwW5tt/Disciples_Part_2.html
- http://www.4shared.com/file/fjcs97I2/Disciples_Part_2.html
- 1. இயேசு கிறிஸ்துவைப் போல் ஜீவிக்க, அவரோடு நடவுங்கள்.
- 2. நீங்கள் அன்பில் நடவுங்கள். இயேசு கிறிஸ்து நம்மை நேசிக்கிறார். உங்கள் நடத்தை இயேசு கிறிஸ்துவின் அன்பிலும் ஞானத்திலும் ஊண்றப்பட்டதாய் இருக்க வேண்டும்.
- 3. கிறிஸ்தவத்தை ஒரு மதக் கோட்பாடாக ஏற்றுக் கொள்ளாமல், இயேசு கிறிஸ்துவின் சித்தமாய் ஏற்றுக் கொள்ளுங்கள்.
- 4. உங்கள் வாக்கிலும் செய்கையிலும் இயேசு கிறிஸ்துவைக் காண முடிகிறதா?
- 5. சீஷர்கள் மன்னிக்கப் பட்டவர்கள். இலவசமாய்ப் பெற்ற அந்த மன்னிப்பை இயேசு கிறிஸ்துவுக்குள் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
- 6. சீஷர்கள் விசேஷித்த விதமாய் தனித்துப் பிரித்தெடுக்கப் பட்டவர்கள். அவர்கள் பரிசுத்த கடவுளின் பனிக்கென்று தனியே பிரித்தெடுக்கப்பட்டவர்கள்.
- 7. சீஷர்கள் மறுபடியும் மறுபடியும் பரிசுத்தப்படுத்தப் பட்டு கடவுளின் பணினைச் செய்ய வேண்டும்.
- 8. சீஷர்கள் சுவிசேஷத்தை உலகெங்கும் போய் அறிவிக்கக் கடனாளிகளாய் இருக்கிறார்கள்.
- 9. சீஷர்களும் அப்போஸ்தலர்களும் தங்களின் எஜமானிடமிருந்து கேட்ட, கண்ட விஷயங்களை அறிவிக்க வேண்டும்.
- 10. பரி.பவுலைப் பொறுத்த வரை, சுவிஷேம் என்பது, கடவுளின் கிருபையை ருசித்தரியாத ஜனங்களுக்குக், கடவுளின் திருக்குமாரனாகிய இயேசு நம்மிடத்தில் அனுப்பப்பட்டு பாவத்திலிருந்து இரட்சிக்கிறார், என்பதை அறிவிக்கும் பணியாகும்.
- 11. சீஷர்கள் ஊழியக்கார்ர்கள்.
- 12. எமி கார்மைக்கால் அம்மையாருக்கு சுவிசேஷகனின் வாழ்க்கை, மரிப்பதற்காகவே மாற்றப்பட்டுள்ளது.
- 13. சீஷர்கள் இருவராய் நடனமாடுவதுபோல், கடவுளின் வல்லமையை நமக்குள் செலுத்தி, விசுவாசத்தினால் கிரியை செய்வதாகும்.
- 14. நேசிக்கிறவர்களாய் மாற வேண்டும் என்றால், நேசமான காரியங்களைச் செய்வதே.
- 1. ஒரு சீஷன் (இளைஞன்) வேத வசனத்தைக் கேட்கிறவனாய் மட்டுமல்லாமல், கீழ்ப்படிந்து நடக்கிறவனாயும் இருத்தல் வேண்டும்.
- 2. மலேசிய இளைஞனும் சீஷனுமாகிய நீங்கள் இத்தேசத்திலே உப்பாகவும் ஒளியாகவும் வாழ வேண்டும். இத்தேசத்திற்குக் கடவுளின் சித்தம் என்ன என்பதை அறிந்துணர்ந்து சரியான பாதையில் நடக்க வேண்டும்.
- 3. சீஷர்கள் உண்மையை அன்பினால் எடுத்துரைக்க வேண்டும். வன்முறைகள் அடங்கிய கலவரங்களில் ஈடுபடக் கூடாது. ஒரு சீஷனின் தலையாய கடமை திக்கற்றோர்களுக்கும் நம்பிக்கையிழந்தவர்களுக்கும் ஆதரவும் அரவணைப்பும் அளித்திட வேண்டும். அவர்களைக் கண்டும் காணாமல் சென்று விடக் கூடாது. அவர்களை ஏளனம் செய்து விரட்டியடிக்கக் கூடாது.
- 4. ஒரு சீஷன் மிகவும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருந்து தன்னுடைய சுவிசேஷ பிரபல்யத்தை மேற்கொள்ள வேண்டும்.
- 5. ஒரு சீஷன் தீர்க்கதரிசியாக செயல்பட வேண்டும். தன் தேசத்தையும் மக்களையும் வரப்போகும் பேராபத்துகளிலிருந்து காப்பாற்ற அவர்களுக்கு முன் எச்சரிப்பு அறிவிக்க வேண்டும்.
- 6. சீஷன் தன் சிருஷ்டிகரை நேசிக்க வேண்டும். கடவுளின் சித்தத்தின்படி நேசிக்க வேண்டும்.
- 7. சீஷன் கேட்கிறதற்குத் தீவிரமாயும் பேசுவதற்கும் கோபிப்பதற்கும் தாமதமாயும் இருக்க வேண்டும்.
- 8. ஒரு மெய்யான சீஷன் இத்தேசத்தையும் பேரரசரையும் மிகவு நேசிக்கவும், இத்தேசத்தின் சமாதானத்தைப் பேணிக் காக்கவும் பாடுபட வேண்டும்.
- 9. சீஷன் போல் சகிக்கும் தன்மை உடையவனாய் மாறிட வேண்டும்.
- 10. சீஷன் பல முறை மேற்கூறப்பட்டுள்ள காரியங்களைக் கடைபிடிக்க வேண்டும்.
- 1. வேத வசனத்தைச் சீஷன் தன் இருதயத்தில் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். (சங்.19.11)
- 2. வேத வசனத்தை சீஷன் மனப்பாடம் செய்ய வேண்டும். பின்பு அது வளர்ந்து பெரிய மரமாகி கனி கொடுக்க ஆரம்பிக்கும்.
- 3. சீஷர்கள் மற்றவர்களை உயிரோடே கிறிஸ்துவுக்காக பிடிக்கிறவர்களாக வேண்டும்.
- 4. சீஷர்கள் எல்லைகளைக் கடந்து சென்று கிறிஸ்துவைப் பிரசங்கிக்க வேண்டும். (லூக்கா 24:4-48)
- 5. சீஷர்கள் தங்கள் உடமைகளையும் (குடும்பங்களையும் விட்டு விட்டு) கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டும் (மத்தேயு 1:29-39)
- 6. சீஷர்கள் சுவிசேஷம் தனக்கு மட்டும் சொந்தம் என்று ஒரு போதும் நினைக்க்க் கூடாது. மாறாக, அதை இருள் நிறைந்த உலகுக்கு வெளிச்சம் கொடுக்க அறிவிக்க வேண்டும் (மத்தேயு 4:21-25).
- 7. கடவுள் நம்மை நேசிக்கிறார் என்றும் அவர் நம்மை நினைவில் வைத்துள்ளார் என்றும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தம் சீஷர்களைப் பேர் சொல்லி அழைத்துள்ளார். (யோவான் 3:16, சங்.119:17-18, யோவான் 10:3).
- 8. சீஷர்களை மற்ற சீஷர்களோடு இளணக்கிறார்; நமது சிந்தனை பாணியை மாற்றுகிறார்; நமது நோக்கை மாற்றுகிறார்; மன நிலையை மாற்றுகிறார்; அவரைப் போலவே மறு ரூபமடையச் செய்கிறார்; நாம் கிறிஸ்துவில் நிலைத்திருந்தால், அவர் அன்பில் நிலைத்திருப்போம், என்பதும் நினைவில் இருக்கட்டும். அவரின் அன்பு நம்மேல் படர்ந்து ஊடுருவ வேண்டும் என்று ஜெபத்தில் கேட்டுக் கொள்.
- 9. சீஷர்கள், கடவுள் என்ன நினைப்பார் என்ற எண்ணத்தில் செயல்படுவார்கள். மற்றவர்கள் என்னை என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்தில் செயல்பட மாட்டார்கள்.
- 10. ஆராதனை ஒரு சீஷனின் மையப்பகுதி என்பது நினைவிலிருக்கட்டும. கடவுள் நமக்கு என்னென்ன நன்மைகள் செய்தார் என்பதை அவர்கள் நினைவு கூற வண்டும். (நெகேமியா 9.5)
Written by:
Bishop Batumalai
Translated by:
Robinson Victor
Type-setting:
Johnson Victor
04.05.2011 @1.40 am
No comments:
Post a Comment