Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Monday, May 2, 2011

ஒரு சீஷன் (A DISCIPLE)


[url=http://www.4shared.com/document/JPmOMqkb/A_DESCIPLE.html][/url]
[url]http://www.4shared.com/document/JPmOMqkb/A_DESCIPLE.html[/url]


1.   இயேசுவை மாத்திரம் பார்த்து ஜீவிக்கும் ஜீவியம்
2.   என்னைப் பின்பற்றுங்கள்” என்று பரி.பவுல் கூறுகிறார்.
3.   இயேசுவின் அன்பை, ஒற்றுமையை, ஏற்றுக் கொள்ளுதல், தியாகத்தைப் பின் பற்றுவோமா?
4.   மற்றவர்களிடம் கூறுங்கள்,“என்னைப் பின்பற்றுங்கள், நான் இயேசுவைப் பின்பற்றுகிறேன்.”
5.   தேவனாகிய கர்த்தர் ஆபிராகாமிடம் கூறினார், “என்னைப் பின்பற்றி வா, நான் உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன்”. (ஆதி. 12:2-3).
6.   அழைப்பைப் பெற்ற ஒவ்வொறு சீஷனும், தன் தன் சிலுவையை அனுதினமும் சுமந்து இயேசுவைப் பின்பற்றிச் செல்ல வேண்டும். நிச்சயமாகத் துன்பமும், பாடுகளும் துயரமும் தவிர்க்க முடியாது. தெய்வீகப் பார்வையில் இக்கருத்து மிகவும் அர்த்தமுள்ளது.
7.   சீஷர்களும் அப்போஸ்தலர்களும் அரிய பெரிய காரியங்களைச் செய்தனர். (அப். 5:12)
8.   சீஷன் ஒரு சாட்சியாக (இரத்த சாட்சியாக) அழைக்கப்பட்டுள்ளான். ஆதித் திருச்சபைகளில், இயேசுவுக்காகப் பலர் இரத்த சாட்சிகளாக மரித்த்துண்டு. கடவுளின் பிள்ளைகள் நிச்சயமாக பாடுகளும் சட்ட ரீதியான நடவடிக்கைளையும அனுபவிக்க நேரிடும் (வெளி.12:17). ஆனாலும் கர்த்தர் ஒவ்வொறு சீஷனையும் ஒருபோதும் கைவிட மாட்டார்.
9.   இயேசு சொன்னார், “நான் நிச்சயமாய் உலகத்தை ஜெயித்தேன்” (யோவான் 16:50).
10.  சீஷன் இரட்சகராகிய இயேசுவை விசுவாசிக்கிறவன். அவன் இயேசுவை ஆண்டவர் என்றும் இரட்சகர் என்றும் அறிக்கை செய்கிறான்.
11.  சீஷன் தன்னுடைய பழைய நம்பிக்கைகளைக் கைவிட அழைக்கப்பட்டுள்ளான்.
12.  சீஷன் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ந்து முதிர்ச்சியடைய அழைக்கப்பட்டுள்ளான் (லூக்கா 2:52). அவன் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
13.  சீஷன் இயேசுவைப் போல் ஆக ஓட நினைக்கிறான். ஆனால் அவன் கிறிஸ்துவைப் போல் ஆக அழைக்கப்பட்டுள்ளான்.
14.  சீஷன் கிறிஸ்துவைப் பின்பற்றினால், அவனை இயேசு மனுஷர்களைப் பிடிக்கிறவர்களாக்குவார்.
15.  சீஷன் தன் ஜீவனை இயேசுவினிடம் அர்ப்பனித்தவன். (மத். 10:37; மாற்கு 8:34).
16.  சீஷன் இயேசுவையே சார்ந்து ஜீவிக்கிறவனாய் இருக்கிறான். (மாற்கு 4:19; மாற்கு 1:7).
17.  சீஷன் தன் சுய ஆசபாசங்களை வெறுத்து விட்டவன். தன் சக்தியையும் நேரத்தையும் இயேசுவுக்காக செலவளிப்பான்.
18.  சீஷன் இயேசுவைத் தெரிந்து கொள்ளவில்லை; ஆனால், இயேசு சீஷனைத் தெரிந்து கொண்டார். (யோவான் 15:16)
19.  இயேசு சீஷனை சுவிசேத்தை அறிவிக்க கற்றுக் கொடுத்து அனுப்புவிறார் (மத்தேயு 28:19).
20.  சீஷன் இயேசுவின் பிரதிநிதியாக உலக முழுவதும் நியமித்துள்ளார்.
21.  சீஷன் கடவுளின் ஊழியத்திற்குத் தன் திறன்களை வளர்த்து ஆயத்தப்படுத்தப்பட வேண்டும்.
22.  அநேகர் இயேசுவைப் பின்பற்றினாலும், இயேசு அந்த பன்னிரெண்டு பேர்களை மாத்திரம் தெரிந்து கொண்டார். (அதில் நீங்களும் கூட சேர்ந்துள்ளீர்கள்).
23.  இயேசு முதலில் ஜெபித்துதான் அந்த பன்னிரண்டு பேர்களைத் தெரிந்து கொண்டார் (லூக்கா 6:12).
24.  சீஷர்கள் இயேசுவோடு இருந்து கற்றுக் கொண்டார்கள் (மாற்கு 3:14).
25.  யேசு, சீஷர்களின் அவிசுவாசம், சிறு பிள்ளைத்தனம் (அறியாமை), காட்டிக் கொடுத்தல் போன்றவைகளினிமித்தம் அவர்களைக் கைவிட்டுவிடவில்லை; ஆனால், அவர்களைத் தொடர்ந்து பின்தொடர்ந்து சென்றார்.
26.  சீஷர்கள் பெரிய காரியங்களைச் செய்வார்கள் என்று இயேசுவுக்கு நம்பிக்கையிருந்து.
27.  சீஷர்களிடம் பெரிய குறைகள் இருந்தாலும் இயேசு அவர்களிடம் பிரதான கட்டளையை ஒப்படைத்தார். (மத்தேயு 28).
28.  பரத்துக்கு ஏறும் முன், ஒரு சில அறியாமையை மட்டும் சீஷர்களிடத்தில் விட்டுச் சென்றார்.


IMRI: நசரனாகிய இயேசு
RexIudaeorum: நசரனாகிய இயேசு யூதர்களின் ராஜா

மொழி பெயர்ப்பு: ராபின்சன் விக்டர்
டைப் செட்டிங்: ஜான்சன் விக்டர்

No comments:

Post a Comment