The Roman Catholic Church in Malaysia
ரோமாபுரி கத்தோலிக்க ஆலயம்
1 பதிவிறக்கங்கள்:
முன்னுரை – கிறிஸ்தவ சமூகத்தில் அநேகமாக பாதி பேர் கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்தவர்கள். 1511ல் போர்த்துகீசியர்களின் வருகையின் போதே இந்நாட்டுக்கு வருகை புரிந்த பழமை வாய்ந்த திருச்சபையும் கூட. 19ம் நூற்றாண்டு தொடங்கி சுயமாக இறையியல் கல்லூரி அமைத்துச் செயல்படுகிறது.
2 ஆதி வரலாறு – 7ம் நூற்றாண்டில் நெஸ்டோரியர்கள் தீபகற்பத்தின் வட மேற்குப் பகுதியிலும் வட சுமத்திராவில் குடியமர்ந்த காலந்தொட்டே கிறிஸ்தவர்களின் தோற்றம் அறியப்படுகிறது.
3 மலாக்காவின் போர்த்துகீசியர் சபை 1511-1795
3.1 அல்பன்சோ டி அல்புக்கார் 1 ஜூலை 1511ல் வருகை புரிந்தார். ஆசிய இறையியலாளர்கள், போர்த்துகீசியர்கள் மற்றும் மேற்கத்தியர்களின் வருகையை சிலுவை அரப்போராக ஆசிய இறையியலாளர்கள் வர்ணிக்கின்றனர். முதல் தேவாலயம் 1521ல் கட்டப்பட்டது. இன்று பரி.பவுல் மலையில் காணப்படும் பாழடைந்த கட்டிடம்தான் 1590ம் ஆண்டில் ஜெசுயிட்ஸ் என்பரால் கட்டப்பட்ட ஆலயம். அந்த ஆலயத்தோடு போர்த்துகீசியர்கள் ஒரு மருத்துவமனையையும் கட்டினர்.
3.2 பரி.பிரான்சிஸ் சேவியர் (1545-1552)
i. ஜெசுவிட்ஸ் மார்க்கத்தை நிறுவிய எழுவரில் இவரும் ஒருவர்.
ii. கிறிஸ்தவ வரலாற்றில் இவர் ஒரு மகா சுவிசேஷகர் ஆவர்.
iii. பிரான்சிஸ் சேவியர் தூரக் கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்க மலாக்காவைத் தளமாக கொண்டார்.
iv. அவர் ஜனங்களுக்கு உபதேசத்தையும் சுவிசேஷத்தையும் வழங்கினார்.
v. 1552ல் சீனாவுக்குத் தமது இறதி பயணத்தின் போது அவர் மரித்தார்.
vi. குருமார்களையும் மற்றோரையும் மலாக்காவிலேயே கடைசி வரைக்கும் நிலைத்திருக்கும்படி உற்சாகப் படுத்தினார்.
3.3 போர்த்துகீசியர் செல்வாக்கின் வீழ்ச்சி (1552-1641) – 1511ல் சமாதானமான குடியமர்வு ஒப்பந்த்த்தில் கசப்பான அனுபவத்திற்கு இலக்கானது. மலாய் காரர்களைத் தவிர்த்து சீனர்களும் இந்தியர்களும் கத்தோலிக்கத்திற்கு மதம் மாறினர். ஜொகூர் ஆதரவோடு டச்சுக்கார்ர்கள் மலாக்காவை போர்த்துகீசியர்களிடம் இருந்து கைப்பற்றினர்.
3.4 டச்சுக் காலக் கட்டத்தில் சுணக்கம் (1641-1703)
i. ரோமாபுரி கத்தோலிக்க மார்க்கத்தைத் தவிர்த்து, மேலும் பலர் டச்சு பெர்செபஸ்தரியன் மார்க்கத்தை ஏற்றனர்.
ii. போத்துகீசியர்கள் தாயகம் திரும்பிய நிலையிலும், விசுவாசமுள்ள பல கத்தோலிக்கர்கள் தங்கள் கலாச்சாரத்தை உண்மையோடு அணுசரித்து வந்தனர்.
3.5 டச்சு கால மறு சீரமைப்பு (1703-1795)
i. 1710ல் பரி.பேதுருவின் ஆலயம் சீரமைக்கப் பட்டது.
ii. கத்தோலிக்க சமூகம் வறுமையில் நிலைத்திருந்தது. மலாய் மற்றும் போர்த்துகீசிய கலப்பு புதிய வண்ணக் கலவைகளைத் தந்தது.
தொடுவாய் குடியேற்ற நாடுகளின் ஆலயங்கள் 1786-1874.
3.2
4.1 பினாங்கு, மலாக்கா, சிங்கப்பூர் ஆகியன இணைந்து தொடுவாய் குடியேற்ற நாடுகளை அமைத்தன. நிர்ப்பந்தத்தினால் பிரிட்டிஷர் ரோமாபுரி கத்தோலிக்க ஆலயத்தை உள்வாங்கிக் கொண்டது.
4.2 விசாரனை அதிகாரம் தொடர்பான முரண்பாடு: ரோமாபுரியர் பேராயருக்குப் பதில் குருவானவரின் திருத்தூதரை இப்பொறுப்புக்கு அமர்த்தியது. டச்சு ஆட்சியின் போது, இந்த அதிகாரம் மலாக்காவில் உள்ள பேராயருக்கே வழங்கப்பட்டது (From the time of the Dutch conquest the Bishop of Melaka had been based in Timor or on Places). 1888ல் மலாக்கா அத்தியட்சாதீனம் புதுப்பிக்கப்பட்டு, பாண்டிச்சேரி (இந்தியா) தலைமை பேராயரின் கீழ் அமர்த்தப்பட்டது.
4.3 பினாங்கில் கத்தோலிக்க சபையின் தொடக்கம்
i. 1781ல் கோல கெடாவில் ஒரு மாபெரும் கத்தொலிக்க சமூகம் அமைக்கப் பட்டது. பிரான்சிஸ் லைட்டின் வருகை இதற்குத் துணை புரிந்தது.
ii. 1795க்குப் பின் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் மலாக்கா: கத்தோலிக்கர்கள் மலாக்காவில் தங்கள் சபையை வளர்க்க முடிந்தது. இவர்கள் ஆயர் சாலாக்கில் உள்ள பழங் குடியினர் மத்தியில் ஊழியத்தை வளர்க்க முடிந்தது ஓர் அற்புதமான காரியம். இக்கிராமம் மலாக்கா நகரில் இருந்த 9 மைல் தொலைவில் அமைந்துள்ளது.
5 ஒரு நூற்றாண்டு கால வளர்ச்சி: (1874 முதல் தற்காலம் வரை)
i. பங்கோர் உடன்படிக்கை இன்னும் அணுசரிக்கப் படுகிறது. மலாய் காரர்கள் மத்தியில் நற்செய்திக்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது.
ii. இரண்டு உலக மகா யுத்தங்களும் சபைகளுக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திற்று. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 1957ல் நாட்டின் சுதந்திரத்திற்காகவும் வழி வகுத்த்து.
5.1 பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடி பணிதல்: பிற்காலத்தில் மலாக்காவின் பேராயராக வந்த ஒல்கோமெடி என்ற குருவானவர் பலரை மதம் மாற்றி ஞானஸ்நானம் வழங்கினார். பிரிட்டிஷ் ஆட்சி ரோமாபுரி கத்தோலிக்க சபை மேம்பாட்டுக்கு உதவிற்று. மலாயாவிக்குப் புதிய சட்ட திட்டம் இயற்றப் பட்டது.
5.2 இரண்டாம் உலக மகா யுத்தம் (1941 முதல்)
a. ரோமாபுரி கத்தோலிக்கப் பேராயரும் பிரரும் சிங்கப்பூர் சாங்கி சிறைச்சாலையில் அடைக்கப் பட்டனர்.
b. பொது மக்களைப் போல் குருமார்களும் யுத்தத்தின் பாடுகளைக் கடந்து வந்தனர்.
5.3 மறு சீரமைப்பு – நண்பர்கள், குருமார்கள், உற்றார் அனைவரும் விடுவிக்கப் பட்டு, தங்கள் இயல்பு ஆரோக்கிய நிலைக்குத் திரும்பினர். பள்ளிகள் திரும்பவும் செயல்பட்டன. பினாங்கில் உள்ள ‘பிரதர்ஸ்’ பயிற்சிக் கல்லூரி செயல்படத் தொடங்கியது. 1948-60ல் நாட்டில் மீண்டும் அவசர காலம் அமலுக்கு வந்தது.
5.4 1950ம் காலவாக்கு: (அவசரகாலமும் சுதந்திரமும்)
a. சீனாவில் உள்ள மிஷனரிகளை மலாயாவுக்கு வர பிரிட்டிஷ் அரசாங்கம் ஊக்குவித்தது.
b. சீனர்களின் சமூக நலன், மருத்துவம், கல்வி ஆகிய தேவைகளைப் பெருமளவில் கத்தோலிக்க சபை சந்தித்து வந்தது.
c. மத கலப்புத் திருமனத்தில் பிரிட்டிஷ் சட்ட திட்டம் கத்தோலிக்கப் பெற்றோருக்குச் சாதகமாக இருக்கிறது என்ற மனக்கசப்பு உண்டாயிற்று.
d. கிறிஸ்தவர்களும் தங்கள் வாலிப பிள்ளைகளை, கம்யூனிட் பயங்கரவாதத்தை ஒடுக்க யுத்தத்திற்கு அனுப்பியது.
e. பேராயர் ஓல்கொமெண்டி மிஷனரிகளை புதுக் கிராமங்களுக்கு ஊழியஞ் செய்ய அனுப்புவதில் ஆர்வங் காட்ட வில்லை என்று அறியப்படுகிறது.
f. மலேசிய சீனர்களை அரசாங்கம் அந்நிய தேசத்தாராகக் கருதாமல், பொருளாதார பெலன் பெற்றவர்களாகக் கருதியது.
g. மேலும பல கத்தோலிக்க மிஷனரிகள் மலாயாவுக்கு ஊழியஞ் செய்ய வந்தனர்.
h. சீனர்களுக்கும் பிறருக்கும் கல்வி வாய்ப்பு வழங்குவதில் கத்தோலிக்க சபைகள் துடிப்பாக செயல்பட்டன.
5.5 1960ம் காலவாக்கு: (இரண்டாம் வெட்டிக்கனும் பிறரும்)
a. 1963கள் – வெட்டிக்கன் ஆலோசனா சபை அதிகாரத்திற்கு வந்தது. லத்தின் மொழிக்குப் பதில் உள்ளூர் மொழி பயன்பாட்டுக்கு வந்த்து.
b. 1970கள் - தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் குருமார்கள் ஒரு மாத காலத்திற்கு சந்தித்து, ஆய்வுகள் நடத்தினர். (உம். B.E.C கோட்பாடுகள்) ஆவிக்குரிய வரங்கள் மறுமலர்ச்சியைக் கொண்டு வந்த்து.
6 எதிர்கால சவால்கள்
6.1 சபையில் விசுவாசம் வைத்தல், பலரையும் நம்புதல், பரிசுத்தவான்களின் தியாகங்கள் கத்தோலிக்க சபைகளை நிலைத்திருக்கச் செய்கிறது.
6.2 டச்சு காலத்தில், கத்தோலிக்க விசுவாசம் மிகவும் அந்தரங்கமான முறையில் சபையார் மத்தியில் கடைபிடிக்கப் பட்டு வந்தது.
6.3 சமய அழைப்புகள் குறைந்து போயின. குருமார்களின் கடமைச் சுமைகள் எல்லையில்லா அளவுக்கு அதிகரித்து விட்டன. 1965ல், (இரண்டாவது வெட்டிக்கன் காலக்கட்டத்திற்கு முன்) சபையார் தலைமை பீடத்திற்குக் கீழ்ப்படியவும் ஜெபிக்கவும் கட்டணம் செலுத்தவும் வற்புறுத்தப் பட்டனர்!
6.4 1983ல் டான் ஸ்ரீ வெந்தர்கம், 49 கால உழியத்திற்குப் பின்னர் தமது 75வது வயதில் தலைமை பேராயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.
6.5 MCCBCHST என்ற கிறிஸ்தவ சார்பு இயக்கத்தில் ரோமாபுரி கத்தோலிக்க சபை துடிப்பாகச் செயல்படுகிறது.
6.6 மலேசியாவில் 5 ரோமாபுரி கத்தோலிக்க அத்திய்டாசதீனம் செயல்படுகின்றன:- அவை பினாங்கு, கோலாலம்பூர், மலாக்கா-ஜொகூர், சபா, புருணை மற்றும் சரவாக் ஆகியவை அவை.
6.7 இன்றைய கத்தோலிக்கம் வளர்ச்சியும் நவீன தரிசணமும், ஐக்கியமும், ஆகிய தன்மைகளுடன் புதிய சவால்களைச் சந்தித்து வருகின்றது.
No comments:
Post a Comment