Getting our youths into “Discipleship” and “The Great Commission”
இளைஞர்களைப் பிரதான அதிகாரத்திற்குள்ளும் சீஷத்துவத்திற்குள்ளும் நுழைத்தல்
1. எழிமையானதும் வேதாகமத்தின் அடிப்படையிலானதும்.
2. பிரதான அதிகாரத்திற்குளும் பிரதான கட்டளைக்குள்ளும் வேரூன்றியிருத்தல்.
மத்தேயு 28.18-20 ‘அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி, வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன், என்றார்.’ (மத்தேயு 28.18-20)
இயேசு அவனை நோக்கி, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும உன் முழு மனதோடும் அன்புகூறுவாயாக. இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.’ (மத்தேயு 22.37-39)
3. இயேசு கிறிஸ்துவை தேவ வல்லமையோடு அறிவித்தல்
எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் நல்ல ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம். அதறக்க நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப் படுகிறேன். (கொலே.1.28-29
எவ்வாறு?
1. ஜெபித்தல் – தேவனாகிய பரிசுத்த ஆவியைனவரின் உதவியை நாடுதல்.
2. ஏவிடுதல் – ஒவ்வொரு இளைஞனையும் ஜெபத்தோடு, தேவனோடு உறவாடிட ஏவிடுதல்.
3. திறன்களைப் புகுத்திடுதல் – ஒவ்வொரு இளைஞனுக்குள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் வசனங்களைப் போதித்துப் புகுத்திடுதல்.
3.1. இயேசு கிறிஸ்துவோடு நெருங்கி உறவாட இளைஞர்களுக்குத் தேவையான திறன்களைப் புகுத்திடு.
3.2. ஒவ்வொரு இளைஞனும் வேதத்தை ஒரு முறைக்கு இருமுறை அல்லது பல முறையாவது கவனமாய் வாசித்து வாசித்து, அனுதினமும் அதனைத் தன் ஜீவியத்தில் கடைபிடிக்க ஊக்குவிக்க வேண்டும்.
3.3. ஒவ்வொறு இளைஞனும் பாவ இச்சையின் சோதனையை மேற்கொள்ள, ஜெய ஜீவியம் ஜீவிக்க தேவனாகிய பரி.ஆவியானவரின் துணையை நாடக் கற்பிக்கவேண்டும்.
3.4. வேத வசனத்தைத் திரும்பத் திரும்ப தியானிக்கக் கற்பிக்க வேண்டும்.ங
4. இளைஞர்களை சுவிசேஷ பிரிபல்லியத்திற்கு உலகத்திற்குள் அனுப்புதல்.
5. இளைஞர் ஊழியத்தில் பிரதான அதிகாரம், பிரதாக கட்டளை ஆகியவைகளை உள்ளடக்கிய சிந்தையைப் புகுத்த வேண்டும்.
நாம் என்ன செய்வது?
1. சபை மூப்பர்கள், போதகர்கள் இளைஞர்களோடு அனுக்கமான தொடர்புகளை ஏற்படுத்தி, திடகாத்திரமான உறவுகளை வளர்த்திட வேண்டும்.
2. சபையிலுள்ள ஒவ்வொரு இளைஞனையும் தேவனாகிய பரிசுத்த ஆவியானவரோடு ஆராய்ந்து அறிந்து, அவனின் மனப்போக்கு, குணாதியசங்கள் போன்றவற்றைத் துல்லியமாக குறிப்பெடுத்துக் கொள்ளுதல்.
2.1. தேவனாகிய பரி.ஆவியானவரோடும், ஜெபத்தோடும், இளைஞர்களோடு உண்மையைப் பேசுங்கள். அப்படிப் பேசும் பொழுது, அது ஒரு கடினமான உரையாடலாகக் கூட இருக்கக்கூடும். அனால், இளைஞர்களின் உண்மையான ஆவிக்குரிய வாழ்க்கை நிலைமைகளை எடுத்துக் கூறுங்கள்.
2.2. இளைஞர்களை உற்சாகப்படுத்த கதைகளைச் சொல்லாம்.
2.3. பரசுத்த ஜீவியத்தின் பிரதிபலன்கள் யாவை போன்றவற்றைப் பற்றி சொல்லலாம்.
2.4. பாவ ஜீவியத்தின் ஆக்கினையைப் பற்றிச் சொல்லலாம்.
2.5. ஒவ்வொரு இளைஞனையும் குறைந்தபட்ச அளவாவது நேசிக்க வேண்டும். அவர்கள் இருக்கும் நிலைமையிலிருநது மேல் நிலைமைக்குக் கொண்டு வர வேண்டும்.
2.6. நாம் ஒவ்வொரு இளைஞனையும் தேவ வார்த்தைகளைக் கொண்டு, அவர்களுடைய நடவடிக்கைகளைத் திருத்த வேண்டும். நம்முடைய இருதயத்தில் இயேசுவின் மனவுருக்கமான நேசமும், தேவனாகிய பரி. ஆவியானவரின் துணையோடு அதைச் செய்ய வேண்டும். அவர்களுடைய சிந்தையில கிரியை செய்து மருரூபமாக்குவார்.
2.7. ஒவ்வொரு இளைஞனுக்கும் நமக்காகவும் ஜெபிக்க வேண்டும்.
2.8. நாம் ஒவ்வொருவரும் நம்முடைய ஆத்துமாவை சுத்திகரிக்க வேண்டும். ஏன்? தேவனாகிய கர்த்தர் நாம் பாவக் கரை படிந்த ஆத்துமாவோடு ஏறெடுக்கும் ஜெபத்திற்கு ஒருபோதும் பதிலளிப்பதில்லை. தாசனாகிய தாவீது இவ்வாறு தம்மை நினைப்பூட்டுகிறார். “என் இருதயத்தில் அக்கிர மசிந்தை கொண்டிருந்தேனானானல் ஆண்டவர் எனக்குச் செவி கொடார்,” (சங்.66.18) எவ்வளவுக்கு அதிகமாக நாம் பாவத்திற்கு நம் இருதயத்தில் இடம் கொடுக்கிறோமோ, அவ்வளவுக்குத் தக்கதாக, நம்முடைய ஜெபம் கேட்கப்படாது.
2.9. நாம் மெய்யான எழுப்புதல் நம் மத்தியிலும் நம் தேசத்தின் மத்தியிலும் வர வேண்டுமானால், நாம் நம்முடைய ஆத்துமாவை பரிபூரணமாய் சுத்திகரிக்க வேண்டும். அப்பொழுது வல்லமை பரலோகத்தில் இருந்து நம்மிடத்தில இரங்கி வரக் காண்போம்.
2.10. ஆன்ம சுத்திகரிப்பைப் பற்றி இளைஞர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.
a. இருதயங்களை அறிந்திருக்கிற தேவன் நமக்குப் பரிசுத்த ஆவியைத் தந்தருளினதுபோல அவர்களுக்கும் தந்தருளி, அவர்களைக் குறித்துச சாட்சி கொடுத்தார்: விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் யாதொரு வித்தியாசமுமிராதபடி செய்தார். (அப்போஸ்தலர் 15.8-9)
b. ஆகிலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது; கர்த்தர் தம்முஐடயவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலக்க் கடவனென்பதும், அதற்கு முத்திரையாயிருக்கிறது. ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள். ஆகையால் ஒருவன் இவைகளை விட்டு, தன்னைச் சுத்திகரித்துக் கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான். (2 தீமத்தேயு 2.19-21)
2.11. மற்றவர்களுக்காகவும் தனக்காகவும் மன்றாடவும் ஜெபிக்கவும் கற்றுக் கொடுங்கள். முதலில் ஒரு நபரோடு தொடங்குங்கள்.
2.12. நீங்கள் நடத்தும ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஓய்வு நாள் பள்ளி, வாலிபர் கூட்டங்கள், ஜெபகூடங்கள்) இளைஞர்களை வழி நடத்திச் செல்லுங்கள்.
2.13. மெய்யான சீஷத்துவம் என்ன என்பதைப் பற்றிக் கற்றுக் கொடுங்கள். அது ஒரு நிகழ்ச்சி அல்ல; ஆனால் அது நம்முடைய அன்றாட வாழ்க்கை முறை என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.
2.14. ஒவ்வொரு இளைஞனையும் சுவிசேஷ பிரபல்லியம் செய்யும் திறன்களை புகுட்டி, சுவிசேஷ பிரபல்லியத்தைச் செய்ய வேண்டும். இந்தச் செயலை மறு சூழற்சியாய் பல முறை நாம் செய்ய வேண்டும்.
இவ்வூழியத்தை எவ்வாறு அணுகுவது?
1. சபை போதகரை ஈடுபடுத்துதல். ஒவ்வொறு மலேசிய இளைஞனின் ஆவிக்குரிய வளர்ச்சியின் பொறுப்பு மலேசிய சபையின் போதகருக்குண்டு. ஒரு போதகரின் முழு ஒத்துழைப்பில்லாமல் இந்த சத்தியத்தை சுழல் படுத்துவதில் சுணக்கம் ஏற்படும்.
2. மலேசிய இளைஞனின் பெற்றோர்களை ஈடுபடுத்துதல்.
2.1. மலேசிய இளைஞனின் ஆவிக்குரிய வளர்ச்சியில் பெற்றோர்களுக்கு அளப்பரிய பங்குண்டு என்பதை உபாகமம் 6ல் காண்கிறோம்.
2.2. உங்கள் சபை போதகரை உற்சாகப்படுத்தி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இளைஞர்களை சீஷத்துவத்துக்குள் வழி நடத்திச் செல்ல வேண்டும்.
2.3. கிறிஸ்தவ பெற்றோர்களல்லாத இளைஞனுக்கு சபையில் ஆவிக்குரிய வாழ்க்கையில் முதிர்ச்சியடைந்த பெரியவர்களின் உதவியோடு, அவர்களுக்கு வழி காட்டலாம்.
3. உபவாசத்தோடும் ஜெபித்து, இத்தேசத்திற்கு (மலேசியாவுக்கு) பெரிய எழுப்புதல் வர வேண்டிட வேண்டும். உங்களின் விசுவாசத்தை வளர்த்திடவும்.
4. உங்களின் வழிகாட்டிக் கையேடு உங்கள் வேதாகமம்.
5. உங்களின் வழிநடத்துபவர் தேவனாகிய பரிசுத்த ஆவியானவர்.
5.1. தேவனாகிய பரசுத்த ஆவியானவர், ஏக திருத்துவத்தின் மூன்றாம் நபர். அவர்தாம் ஒவ்வொறு விசுவாசியின உள்ளத்தில் வாசம் செய்து, வழி நடத்துபவர்.
5.2. தேவனாகிய பரிசுத்த ஆவியானவர் உன்னை வழி நடத்துபவர்.
5.3. தேவனாகிய பரிசுத்த ஆவியனவர்தாம் உங்களின் இளைஞனையும் வழிநடத்துபவர்.
5.4. தேவனகிய பரிசுத்த ஆவியானவர், உங்கள் இளைஞர்களைத் தேவனாகிய கர்த்தரோடு மிகவும் நெருக்கமாக நெருங்கி வந்து உரவாட கற்றுக் கொடுக்கிறார். என் நாமத்தினாலே பிதா அனுப்ப்ப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். (யோவான் 14.26).
5.5. தேவனாகிய பரிசுத்த ஆவியானவர்தாமே மலேசிய இளைஞர்களுக்குப் பெலனளித்து சுவிசேஷத்தில் மிக ஆழமாக வேரூன்றிடுவார். நான் குடிகளை அஸ்தோத்திலும், செங்கோல் செலுத்துகீறவனை அஸ்கேலோனிலும் இராதபடிக்குச் சங்காரம்பண்ணி, பெலிஸ்தரில் மீதியானவர்கள் அழியும்படிக்கு என் கையை எக்ரோனுக்கு விரோதமாகத் திரும்ப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். (ஆமோஸ் 1.8).
5.6. தேவனாகிய பரிசுத்த ஆவியானவர்தாமே மலேசிய இளைஞர்களை தேவ சாயலாக மறு ரூபமாக்குவார் கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு. நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூப்ப்படுகிறோம். (2கொரி. 3.17-18)
5.7. தேவனாகிய பரிசுத்த ஆவியானவர் தாமே உங்களுக்குச் சகல ஞானத்தையும் பெலத்தையும் தந்து, உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் எதிர்ப்புகளையும் சந்திக்க உதவு புரிந்து ஆவிக்குரிய வளர்ச்சியில் நடத்திச் செல்வார்.
நாமே மலேசிய இளைஞர்களுக்கு முன் மாதிறி. அப்பொழுதுதான் நாம் வெற்றியின் கனியை எதிர்ப்பார்க்கலாம்.
முதலாவது நாம்தாமே பரிசுத்தமும், கிறிஸ்துவைப் பிரதிபலிக்கும் ஜீவியமும் வாழ்ந்தால் ஒழிய, நாம் மலேசிய இளைஞர்களை சீஷத்துவம் – சுவிசேஷம் என்ற வாழ்க்கைக்குள் அவர்களைக் கொணர முடியாது. மட்டுமல்லாமல், நாம் தாமே வேதத்தை நன்றாகப் புரிந்து கொண்டால் மட்டுமே மலேசிய இளைஞர்களை சீஷத்துவத்துக்குள்ளும் சுவிசேஷ பிரபல்லிய ஜீவியத்துக்குள்ளும் வர உழைக்க முடியாது.
நினைவிலிருக்கட்டும், இயேசு கிறிஸ்துவின் சாட்சி பல தரப்பட்ட மக்களிடமிருந்து வருகிறது. ஆகவே, நீங்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றி பிரதிபலிக்கும் முன்னும் அறிவிக்கும் முன்னும் உங்கள் கண்கள் அவர் மேலே பற்றியிருக்கட்டும். நீங்கள் ஒவ்வொறுவரும் மிகவும் விசேஷித்த விதத்தில் அவருக்கு சாட்சிகளாய் இருக்கிறீர்கள்.
எந்த மனுஷயையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம். அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன். (கொலே.1.28-29)யின் படி, இயேசு கிறிஸ்துவை சார்ந்தே உங்கள் உழைப்பைக் கொடுங்கள். அவரைத் தேடித் தேடி வாழும்போது, அவரின் சத்துவமும் வல்லமையும் உங்களுக்குள் பெருகும். அப்பொழுது நீங்கள் வல்லமை பொருந்தி சாட்சிகளாவீர்கள்.
நானே திராட்ச்ச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னைய்ல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. (யோவான் 15.5) யின்படி, பரி.பவுலின் போதனையும் ஜீவியமும் குறிக்கோளும்கூட இயேசு கிறிஸ்துவை அறிவித்து, எல்லா இளைஞர்களையும் சகல ஞானத்துக்குள் வழிநடத்தி சென்று, அவர்களை முழுமை பெற்றவரகளாய் இயேசு மன் திரித்துவதாகும். இவை யாவையும் சுய முயற்சியால் கூடாது.
தேவனாகிய கர்த்தர் தாமே கிருபையையும் ஞானத்தையும் தந்து, மலேசிய இந்திய இளைஞர்களை அவருடைய சாயலை அடைய வழி நடத்துவாராக.
சவால்கள்
1. எல்லா ஊழியங்கலும், உறவுகளில் விரிசல் ஏற்படும்; எதிர்மாறையான வியாக்கியானங்கள் வரும்; மனதைப் புண்படுத்தும் கருத்துகள் வரும்; ஏமாற்றங்கள் வரும்; நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு ஆவிக்குரிய எழுப்புதலை நோக்கி முன்னேறுகிறீர்களோ, அவ்வளவுக்கு எதிர் மறையான எதிர்ப்புகளும் வரும்.
a. ஒரு சிலர், “இளைஞர்களை ஆவிக்குரிய வாழ்க்கைக்குள்வழி நடத்துவது உங்களுடைய வேலை அல்ல”, என்று கூறுவார்கள்.
b. ஒரு சிலர், “இளைஞர்களை விளையாட்டு போன்ற காரியங்களைக் கொண்டு அவர்களை உற்சாகப்படுத்தி சபையோடு நெருக்கப்படுத்த வேண்டும்.” என்று கூறுவார்கள்.
c. ஒரு சிலர், “பிரதான கட்டளையை மட்டும் கவனம் செலுத்தினால் போதும்,” என்று கூறுவார்கள்.
d. வேறு சிலர், “பிரதான கட்டளையை மட்டும் கவனம் செலுத்துவது ஒரு வெட்டி வேலை”, என்று கூறுவார்கள்.
e. இது ஒரு பயங்கரமான ஆபத்து. எப்பொழுதெல்லாம், உங்கள் ஆவிக்குள்ளாக அனல் பற்றிக் கொள்ளுகிறீர்களோ, அப்பொழுதெல்லாம் பரம வைரியான பிசாசானவனின் கவனத்தை ஈர்கக்றீர்கள். அவன் உங்களைப் பின்னுக்கு மிகவும் வருத்தித் தள்ளுவான். நீங்கள் கடவுளோடு நெருங்கும் போது, பிசாசானவனும் மிகவும் அழுத்தமாக இருளோடு எதிர்ப்பான்.
f. தீய சக்தியைக் கொண்டு, கண்ணுக்குத் தெரியாத பாதாள படு குழியில் மகா யுத்தத்தை ஏற்படுத்துவான். எவ்வாறு நீங்கள் எதிர்த்து நிற்கப் போகறீர்கள்? நீங்கள் உங்களையே தாழ்த்தி முழுங்காலிட்டு கண்ணீரோடு ஜெபியுங்கள்.
g. ஜெபி, தொடர்ந்து ஜெபி, நேசி, உற்சாகமாக எதிர்ப்பை சந்தித்திடு.
நீ மட்டுமே
இயேசு கிறிஸ்துவின் வல்லமைக்கு உட்பட்டு நடந்து கொண்டால், மெய்யாய் ஒரு பெரிய மாற்றத்தை
உன் சபையில்
உன் குடும்பத்தில்
உன் அண்டை அயலானிடத்தில்
உன் நண்பனிடத்தில்
உண்டு பண்ணுவாய்.
அது வரைக்கும் அது நடைபெறாது. நீ உன் முதல் அடியை எடுத்து வைத்து வழி நடத்தும் வரைக்கும்.
ஆக்கம்: பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை
மொழிபெயர்ப்பு: திரு.ராபின்சன் விக்டர்
டைப்செட்டிங்: திரு. ஜான்சன் விக்டர் (6 மே 2011)
www.bibatee.blogspot.com
No comments:
Post a Comment