1. ஆரோன் – தேவனுக்குப் பதிலாகப் பேசுபவர்,, ஆசாரியன், மோசேயின் மூத்த மகன்
1. மோசே, மிரியாம் என்பவர்களின் சகோதரன்.
2. தேவனுக்குப் பதிலாகவும் மோசேக்குப் பதிலாகவும் ஜனங்களோடே பேசினான்.
3. இவன் ஒரு பெலவீனமான தலைவன்.
4. இஸ்ரவேலில் தேவனுடைய முதலாவது பிரதான ஆசாரியன் ஆனான்.
ஆரோன் (பெயரின் பொருள் திட்டவட்டமாகத் தெரியவில்ல). லேவியின் வம்சத்தில் வந்த இஸ்ரவேலின் முதலாவது பிரதான ஆசாரியன். ஆசாரிய ஊழியத்தின் சரித்திரத்தில் இவன் மிக முக்கியத்துவம் வாய்ந்தவன். லேவியரில் தலை சிறந்நதவனாக இருந்தான். தகப்பனார் பெயர் அம்ராம். தாயாரின் பெயர் யோகெபேத். இவன் மோசே, மிரியாம் ஆகிய இரவரின் சகோதரன். மோசேயைவிட 3 வயது அதிகமாகவும் மிரியாமுக்குத் தம்பியுமாக இருந்தான். (யாத். 6.20, 7.7).
1. தேவனுக்குப் பதிலாக ஜனங்களோடு பேசுகிறவனாகத் தெரிந்தெடுக்கப் பட்டான். – மேசே தான் நன்றாகப் பேசக் கூடாத திக்குவாயன் என்று கர்த்தரிடம் கூறியபோது அவர் அவனுடைய சகோதரனாகிய ஆரோனைத் தெரிந்தெடுத்தார். பார்வோனைச் சந்திக்கும்படி மோசே செல்லும்போது ஆரோனும் மோசேயுடன் கூடச் செல்ல வேண்டும். இது ஒரு சவால் மிகுந்த ஊழியம். ஆரோன் மோசேக்கும் தேவனுக்கும் வாயாக இருந்தான். இது மிகவும் வல்லமையானதும் உத்திரவாதமுமான வேலை.
2. ஆரோன் மோசேயுடன் ஒருங்கிணைந்து ஒரு திறமையான குழுவாகச் செயல்பட்டான். –மோசே ஒரு தலைவரும் வழிகாட்டியுமாக இருந்தான். தங்கள் சொந்தத் தேவைகளுக்காக ஆரோன் ஐனங்களால் தேர்ந்தெடுக்கப் பட்டான். ஆரோன் மோசேயைப் பின்பற்ற்றுகிறவனாக இருந்தான். ஆனால், அவன் சிறந்த தலைவனாக இருக்கவில்லை. தனித்து இயங்க இயலாதவானக இருந்ததே அவனுடைய பெலவீனத்தின் காரணமாக இருந்தது. ஜனங்களின் வற்புறத்தலுக்கு இணங்கி ஒரு விக்கிரகத்தைச் செய்ததே அவனுடைய பெலவீனத்திற்கு ஒரு உதாரணமாக இருக்கிறது. ஆனால், எந்த ஒரு தலைவனும் முற்றிலுமாக குற்றமற்றவனல்ல. எந்த ஒரு மனிதனிலும் நாம் முழுமையான நம்பிக்கை வைக்க முடியாது. தேவன் ஒருவரே நமது முழுமையான விசுவாசம், கீழ்ப்படிதலுக்குப் பாத்திரமானவர். தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் ஆற்றல், திறமைகளை உபயோகிப்பதில் நாம் ஒரு குழுவாக, அதில் பயனுள்ள அங்கத்தினராகச் செயல்படுவாரானால், நாம் தனித்து நிற்கவும் ஆயத்தமாக இருக்க வேண்டும்.
3. ஆரோன் ஒரு பெலவீனமான தலைவன். – மக்களின் கோரிக்கையை மறுக்க அவனுக்குத் தைரியம் இல்லை (எண்.32.21-24). மக்கள் இந்தப் பெரும் பாதகத்தைச் செய்யும்படி ஆரோன் வழிநடத்தியதாக மோசே, ஆரோனின் பேரில் குற்றம் சாட்டினான் (எண்.32.21). ஜனங்கள் ஒரு பொன்னால் ஆன கன்றுக்குட்டி சொரூபத்தைச் செய்யும்படி ஆரோனைக் கட்டாயப்படுத்தினார்கள். லேவியின் புத்திரர் எல்லாரும் மோசேக்குச் செவி கொடுத்த்தின் நிமித்தம் கர்த்தர் அவர்களை உபாதித்தார் (எண்.32.35).
4. அவன் இஸ்ரவேலில் முதலாவது பிரதான ஆசாரியனாக இருந்தான். – ஆசாரியத்துவத்திற்காக ஆரோன் மிகச் சிறந்தவனாக தெய்வீகத் தன்மை வாய்ந்தவனாகவும், தெரிந்து கொள்ளுதலும், அதற்கு எதிராக ஆசாரியப்பட்டத்துக்காக கோராகும் அவன் கூட்டத்தாரும் செய்த கலகத்தின் விவரமும் எண்.116.1-11, 16-17, 35-40 ஆகிய பகுதிகளில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு ஆசாரியன் தேவனுக்கம் அவருடைய ஜனங்களுக்கும் நடுவே ஒரு பாலம் போல் இருக்கிறான். மக்கள் கொடுக்கும் காணிக்கைகளையும் செலுத்தும் பலிகளையும் ஆசாரியன் மக்களிடமிருந்து எடுத்து தேவனக்குக் கொடுக்கிறான். தேவனுக்கும் மனிதனுக்குமிடையே மத்தியஸ்தனாக இருகிறான். தீர்க்கதரிசியானவன் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் வருவது போலவே ஒரு ஆசாரியனும் தேவனுக்கும் மனிதனுக்குமிடையே வருகிறான்.
தேவனுக்காக செய்யப்படும் ஆசாரியத்துவ ஊழியம் வேதாகமத்தில் எப்போதும் வற்புறுத்தப்படுகிறது (யாத்.28.1, எசேக்.44.16) சில தகுதியின்மையினால் தடைசெய்யப்படுபவர் தவிர மற்றப்படி ஆரோனின் குமாரர் யாவரும் ஆசாரியர்கள் ஆவர். ஆரோனும் அவன் குமாரனும் ஆசாரிய ஊழியம் செய்யும்படியாகவே பயபக்தியுடன் பிரித்து வைக்கப்பட்டனர் (யாத்.28.1, 40.12-15). கர்த்தர் கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் செய்து முடித்தற்காக இவர்கள் பாராட்டப்பட்டார்கள் (லேவி.8.36). நாதாப் பிரதான ஆசாரியனாவதற்கு முன்பே மரித்து விட்டான் (லேவி.10.1). ஆரோனுக்குப் பின் அவனுடைய குமாரனான எலெயாசார் பிரதான ஆசாரியனானான் (எண்.20.22-26).
5. ஆரோனும் தேவனக்குக் கீழ்ப்படியவில்லை.
a. தண்ணீர் புறப்படும் கன்மலை பற்றிய விஷயத்தில், மோசேயுடன் சேர்ந்து ஆரோனும் கீழ்ப்படியாமற் போனான் (எண்.2.1-13). இருவருமே தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை.
b. மோசேக்கு விரோதமாகப் பேசுவதில் தன் சகோதரியான மிரியாமுடன் சேர்ந்து கொண்டான் (எண்.12.10-15).
தேவனுடைய ஜனங்களை எகிப்திலிருந்து மீட்டுக் கொண்டு வருவதில் ஆரோன் முக்கிய பங்காற்றினான். ஆரோன் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்தில் பிரவேசிக்க தேவன் அனுமதிக்காததின் காரணத்தை தேவன் தாமே அறிவார் (எண்.20.22-25) ஆரோன் ஓர் என்ற மலை உச்சியில் மரித்தான். தேவன் நம்மை ஒரு தலைவராகவோ அல்லது ஒரு குழுவின் அங்கத்தினராகவோ இருக்கும்படி அழைக்கிறார். எப்படியிருந்தாலும், தேவன் தெரிந்தெடுக்கும் தலைவர்களுக்கு விரோதமாக எதுவும் செய்யக் கூடாது (உம் – மோசே). நம் ஒவ்வொருவருக்கும் ஒரு விசேஷித்த பங்கு உள்ளது. ஆரோனுக்குத் தேவனுடைய வாயாக இருக்கும் விசேஷித்த பங்கு கொடுக்கப்பட்டது. என்ன பங்கு கொடுக்கப்பட்டாலும் நாம் அதற்காக நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். அபிஷேகிக்கப்பட்ட தலைவர் இல்லாதபட்சத்தில் (உம்- மோசே) மற்ற மக்களுடன் சேர்ந்து தேவனுடைய விருப்பத்திற்கு மாறாக ஒரு பொன் கன்றுக் குட்டியைச் செய்து அதை வணங்க வேண்டும் என்ற சோதனை ஒருவருக்கு ஏற்படலாம். தலைவர்கள் அனைவரும் தங்களுக்கு ஏற்படும் பற்பல நெருக்குதல்கள், சோதனைகளில் தேவனுடைய விருப்பத்திற்கு மாறாகச் செயல்படாதபடி தங்களைக் காத்துக் கொள்வதற்கு தேவனடைய கிருபை தேவையாக இருக்கிறது.
7. வாசித்து அறிய வேண்டிய வேத பகுதிகள் – யாத்திராகமம், எண்ணாகமம்
8. விவாதிக்க வேண்டிய கேள்விகள்
a. ஆரோனுடைய குடும்பப் பின்னணியை விவரி.
b. தேவனுடைய ஜனங்களை எகிப்திலிருந்து மீட்டு வருவதில் அவன் எவ்வாறு உதவி செய்தான்?
c. மோசேயின் தலமைத்துவத்தை அவன் ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை?
d. மோசேயும் ஆரோனும் ஏன் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்தில் பிரவேசிக்கத் தடை செய்யப்பட்டனர்? (எண்.20.112)
மொழிபெயர்ப்பு
திருமதி டப்னி ஜோசப்
முக்கிய வசனம்
அப்போது கர்த்தர் மோசேயின் மேல் கோபம் மூண்டவராகி, லேவியனாகிய ஆரோன் உன் சகோதரன் அல்லவா? அவன் நன்றாய் பேசுகிறவன் என்று அறிவேன். அவன் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு வருகிறான். உன்னைக் காணும்போது அவன் இருதயம் மகிழும். அவன் உனக்குப் பதிலாக ஜங்களோடே பேசுவான். இவ்விதமாய் அவன் உனக்கு வாயாக இருப்பான். நீ அவனுக்குத் தேவனாக இரப்பாய். (யாத்.4.14,16)
சுருக்கக் குறிப்புகள்
1. மோசே, மிரியாம் என்பவர்களின் சகோதரன்.
2. தேவனுக்குப் பதிலாகவும் மோசேக்குப் பதிலாகவும் ஜனங்களோடே பேசினான்.
3. இவன் ஒரு பெலவீனமான தலைவன்.
4. இஸ்ரவேலில் தேவனுடைய முதலாவது பிரதான ஆசாரியன் ஆனான்.
1. முன்னுரை
ஆரோன் (பெயரின் பொருள் திட்டவட்டமாகத் தெரியவில்ல). லேவியின் வம்சத்தில் வந்த இஸ்ரவேலின் முதலாவது பிரதான ஆசாரியன். ஆசாரிய ஊழியத்தின் சரித்திரத்தில் இவன் மிக முக்கியத்துவம் வாய்ந்தவன். லேவியரில் தலை சிறந்நதவனாக இருந்தான். தகப்பனார் பெயர் அம்ராம். தாயாரின் பெயர் யோகெபேத். இவன் மோசே, மிரியாம் ஆகிய இரவரின் சகோதரன். மோசேயைவிட 3 வயது அதிகமாகவும் மிரியாமுக்குத் தம்பியுமாக இருந்தான். (யாத். 6.20, 7.7).
தேவன் இவனை எவ்வாறு உபயோகித்தார்?
1. தேவனுக்குப் பதிலாக ஜனங்களோடு பேசுகிறவனாகத் தெரிந்தெடுக்கப் பட்டான். – மேசே தான் நன்றாகப் பேசக் கூடாத திக்குவாயன் என்று கர்த்தரிடம் கூறியபோது அவர் அவனுடைய சகோதரனாகிய ஆரோனைத் தெரிந்தெடுத்தார். பார்வோனைச் சந்திக்கும்படி மோசே செல்லும்போது ஆரோனும் மோசேயுடன் கூடச் செல்ல வேண்டும். இது ஒரு சவால் மிகுந்த ஊழியம். ஆரோன் மோசேக்கும் தேவனுக்கும் வாயாக இருந்தான். இது மிகவும் வல்லமையானதும் உத்திரவாதமுமான வேலை.
2. ஆரோன் மோசேயுடன் ஒருங்கிணைந்து ஒரு திறமையான குழுவாகச் செயல்பட்டான். –மோசே ஒரு தலைவரும் வழிகாட்டியுமாக இருந்தான். தங்கள் சொந்தத் தேவைகளுக்காக ஆரோன் ஐனங்களால் தேர்ந்தெடுக்கப் பட்டான். ஆரோன் மோசேயைப் பின்பற்ற்றுகிறவனாக இருந்தான். ஆனால், அவன் சிறந்த தலைவனாக இருக்கவில்லை. தனித்து இயங்க இயலாதவானக இருந்ததே அவனுடைய பெலவீனத்தின் காரணமாக இருந்தது. ஜனங்களின் வற்புறத்தலுக்கு இணங்கி ஒரு விக்கிரகத்தைச் செய்ததே அவனுடைய பெலவீனத்திற்கு ஒரு உதாரணமாக இருக்கிறது. ஆனால், எந்த ஒரு தலைவனும் முற்றிலுமாக குற்றமற்றவனல்ல. எந்த ஒரு மனிதனிலும் நாம் முழுமையான நம்பிக்கை வைக்க முடியாது. தேவன் ஒருவரே நமது முழுமையான விசுவாசம், கீழ்ப்படிதலுக்குப் பாத்திரமானவர். தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் ஆற்றல், திறமைகளை உபயோகிப்பதில் நாம் ஒரு குழுவாக, அதில் பயனுள்ள அங்கத்தினராகச் செயல்படுவாரானால், நாம் தனித்து நிற்கவும் ஆயத்தமாக இருக்க வேண்டும்.
3. ஆரோன் ஒரு பெலவீனமான தலைவன். – மக்களின் கோரிக்கையை மறுக்க அவனுக்குத் தைரியம் இல்லை (எண்.32.21-24). மக்கள் இந்தப் பெரும் பாதகத்தைச் செய்யும்படி ஆரோன் வழிநடத்தியதாக மோசே, ஆரோனின் பேரில் குற்றம் சாட்டினான் (எண்.32.21). ஜனங்கள் ஒரு பொன்னால் ஆன கன்றுக்குட்டி சொரூபத்தைச் செய்யும்படி ஆரோனைக் கட்டாயப்படுத்தினார்கள். லேவியின் புத்திரர் எல்லாரும் மோசேக்குச் செவி கொடுத்த்தின் நிமித்தம் கர்த்தர் அவர்களை உபாதித்தார் (எண்.32.35).
4. அவன் இஸ்ரவேலில் முதலாவது பிரதான ஆசாரியனாக இருந்தான். – ஆசாரியத்துவத்திற்காக ஆரோன் மிகச் சிறந்தவனாக தெய்வீகத் தன்மை வாய்ந்தவனாகவும், தெரிந்து கொள்ளுதலும், அதற்கு எதிராக ஆசாரியப்பட்டத்துக்காக கோராகும் அவன் கூட்டத்தாரும் செய்த கலகத்தின் விவரமும் எண்.116.1-11, 16-17, 35-40 ஆகிய பகுதிகளில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு ஆசாரியன் தேவனுக்கம் அவருடைய ஜனங்களுக்கும் நடுவே ஒரு பாலம் போல் இருக்கிறான். மக்கள் கொடுக்கும் காணிக்கைகளையும் செலுத்தும் பலிகளையும் ஆசாரியன் மக்களிடமிருந்து எடுத்து தேவனக்குக் கொடுக்கிறான். தேவனுக்கும் மனிதனுக்குமிடையே மத்தியஸ்தனாக இருகிறான். தீர்க்கதரிசியானவன் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் வருவது போலவே ஒரு ஆசாரியனும் தேவனுக்கும் மனிதனுக்குமிடையே வருகிறான்.
தேவனுக்காக செய்யப்படும் ஆசாரியத்துவ ஊழியம் வேதாகமத்தில் எப்போதும் வற்புறுத்தப்படுகிறது (யாத்.28.1, எசேக்.44.16) சில தகுதியின்மையினால் தடைசெய்யப்படுபவர் தவிர மற்றப்படி ஆரோனின் குமாரர் யாவரும் ஆசாரியர்கள் ஆவர். ஆரோனும் அவன் குமாரனும் ஆசாரிய ஊழியம் செய்யும்படியாகவே பயபக்தியுடன் பிரித்து வைக்கப்பட்டனர் (யாத்.28.1, 40.12-15). கர்த்தர் கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் செய்து முடித்தற்காக இவர்கள் பாராட்டப்பட்டார்கள் (லேவி.8.36). நாதாப் பிரதான ஆசாரியனாவதற்கு முன்பே மரித்து விட்டான் (லேவி.10.1). ஆரோனுக்குப் பின் அவனுடைய குமாரனான எலெயாசார் பிரதான ஆசாரியனானான் (எண்.20.22-26).
5. ஆரோனும் தேவனக்குக் கீழ்ப்படியவில்லை.
a. தண்ணீர் புறப்படும் கன்மலை பற்றிய விஷயத்தில், மோசேயுடன் சேர்ந்து ஆரோனும் கீழ்ப்படியாமற் போனான் (எண்.2.1-13). இருவருமே தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை.
b. மோசேக்கு விரோதமாகப் பேசுவதில் தன் சகோதரியான மிரியாமுடன் சேர்ந்து கொண்டான் (எண்.12.10-15).
6. முடிவுரை
தேவனுடைய ஜனங்களை எகிப்திலிருந்து மீட்டுக் கொண்டு வருவதில் ஆரோன் முக்கிய பங்காற்றினான். ஆரோன் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்தில் பிரவேசிக்க தேவன் அனுமதிக்காததின் காரணத்தை தேவன் தாமே அறிவார் (எண்.20.22-25) ஆரோன் ஓர் என்ற மலை உச்சியில் மரித்தான். தேவன் நம்மை ஒரு தலைவராகவோ அல்லது ஒரு குழுவின் அங்கத்தினராகவோ இருக்கும்படி அழைக்கிறார். எப்படியிருந்தாலும், தேவன் தெரிந்தெடுக்கும் தலைவர்களுக்கு விரோதமாக எதுவும் செய்யக் கூடாது (உம் – மோசே). நம் ஒவ்வொருவருக்கும் ஒரு விசேஷித்த பங்கு உள்ளது. ஆரோனுக்குத் தேவனுடைய வாயாக இருக்கும் விசேஷித்த பங்கு கொடுக்கப்பட்டது. என்ன பங்கு கொடுக்கப்பட்டாலும் நாம் அதற்காக நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். அபிஷேகிக்கப்பட்ட தலைவர் இல்லாதபட்சத்தில் (உம்- மோசே) மற்ற மக்களுடன் சேர்ந்து தேவனுடைய விருப்பத்திற்கு மாறாக ஒரு பொன் கன்றுக் குட்டியைச் செய்து அதை வணங்க வேண்டும் என்ற சோதனை ஒருவருக்கு ஏற்படலாம். தலைவர்கள் அனைவரும் தங்களுக்கு ஏற்படும் பற்பல நெருக்குதல்கள், சோதனைகளில் தேவனுடைய விருப்பத்திற்கு மாறாகச் செயல்படாதபடி தங்களைக் காத்துக் கொள்வதற்கு தேவனடைய கிருபை தேவையாக இருக்கிறது.
7. வாசித்து அறிய வேண்டிய வேத பகுதிகள் – யாத்திராகமம், எண்ணாகமம்
8. விவாதிக்க வேண்டிய கேள்விகள்
a. ஆரோனுடைய குடும்பப் பின்னணியை விவரி.
b. தேவனுடைய ஜனங்களை எகிப்திலிருந்து மீட்டு வருவதில் அவன் எவ்வாறு உதவி செய்தான்?
c. மோசேயின் தலமைத்துவத்தை அவன் ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை?
d. மோசேயும் ஆரோனும் ஏன் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்தில் பிரவேசிக்கத் தடை செய்யப்பட்டனர்? (எண்.20.112)
மொழிபெயர்ப்பு
திருமதி டப்னி ஜோசப்
No comments:
Post a Comment