முக்கிய வசனம்: அப்பொழுது தாவீது அபிகாயிலை நோக்கி “உன்னை இன்றைய தினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நான் இரத்தம் சிந்த வராதபடிக்கு நீ இன்றைய தினம் எனக்குத் தடை பண்ணின படியினால் நீயும் ஆசீர்வதிக்கப்படுவாயாக. (1 சாமுவேல் 25.32-33)
சுருக்கமான குறிப்புகள்
• ஆடுகள், வெள்ளாடுகளுக்குச் சொந்தக்காரனும் செல்வந்தனுமான நாபாலின் மனைவி அபிகாயில்.
• இவள் தன் கணவனைத் தாவீது ராஜாவிடமிருந்து காப்பாற்ற்றினாள்.
• பின்னர் இவள் தாவீதின் மனைவியானாள்.• அபிகாயில் செய்தவற்றைக் கண்டு தாவீது அவளைக் குறித்துத் தன் மனதில் நல்ல அபிப்பிராயம் கொண்டான்.
1. முகவுரை – அவளுடைய சரித்திரம்
அவள் பெயரின் அர்த்தம் – என் தந்தை சந்நதோஷம் அல்லது சந்தோஷத்தின் தந்தை. கார்மேலின் ஆட்டு மந்தையின் சொந்தக் காரனும் செல்வந்தனுமான நாபாலின் அழகான மனைவி இவள். தாவீதின் ஆட்களை நாபால் உதாசீனம் செய்தபோது, அபிகாயில் அந்தப் பழியைத் தன்மேல் ஏற்றுக் கொண்டு தாவீதுக்கும் அவனோடிருந்தவர்களுக்கும் உணவளித்துத் தாவீதின் கோபத்தைத் தணித்தாள். 10 நாட்களுக்குப் பின்பு நாபால் மரித்தான். அபிகாயில் தாவீதின் மனைவியானாள். அவள் தாவீதுக்குக் கீலேயாப் என்ற குமாரனைப் பெற்றாள் (2 சாமுவேல் 3.3).
நாபால் தவறுகள் செய்திருந்த போதிலும் அவனுடைய குடும்பத்தினர் அவனுக்குக் கஷ்டம் வராதபடி பார்த்துக் கொண்டனர். இந்த உண்மையான விசுவாசத்தை ஊக்குவிக்க அபிகாயில் காரணமாக இருந்திருப்பாள். அவளுடைய கலாச்சாரமும், கணவனும் அவளை மட்டமாகக் கருதிய போதிலும் அவள் தனது திறமைகளையும் வாய்ப்புக்களையும் நன்கு பயன்படுத்திக் கொண்டாள். தாவீது இவளுடைய திறமைகளைக் கண்டு இவளை விரும்பித் திருமணம் செய்து கொண்டார்.. தன்னுடைய இரு கணவர்களுக்குமே இவள் ஒரு நல்ல ஆலோசகராக இருந்து அவர்கள் எவ்விஷயத்திலும் அவசர முடிவுகள் எடுக்காதபடி தடை செய்யக் கஷ்டத்துடன் பிரயாசப் பட்டாள். அவளுடைய புத்திசாலித் தனமான பேச்சு வார்த்தைகள், துரிதமான செயல்களினால் தாவீது நாபால் பேரில் வஞ்சம் தீர்த்துக் கொள்ளாதபடி பார்த்துக் கொண்டாள். அவள் எல்லாவற்றையும் கவனித்து, தேவன் அதில் இடைபட்டு செயல்படுவதற்கு இடமளித்தாள்.
2. பலமும் சாதனைகளும்
2.2. பிறரைத் தன் வயமாக்கக் கூடிய வாக்கு வன்மையுடைய இவள் தனக்கு அப்பாற்பட்டும் பார்க்கக் கூடியவளாக இருந்தாள்.
3. இவளுடைய வாழ்க்கை சரித்திரத்திலிருந்து நாம் என்ன கற்ற்றுக் கொள்ள முடியும்?
3.1. வாழ்க்கையின் கஷ்டமான நிலைமைகள், மக்களிலுள்ள சிறப்பான ஆற்றல்களை வெளிப்படத்துகின்றன.
3.2. ஒரு சிறந்த பங்காற்ற ஒருவருக்கு கௌரவமான பதவி தேவையில்லை.
4. வாசிக்க வேண்டிய வேதாகம பகுதி
4.1. 1சாமு.25 – 2சாமு.2ம் அதி., நாளா.3.1 – இவள் குறிப்பிடப் பட்டிருக்கிறாள்.
5. விவாதிக்க வேண்டிய கேள்விகள்
5.1. இவள் எப்படி ஆட்டு மந்தையின் சொந்தக்காரியாக செல்வம் மிகுந்தவளானாள்?
5.2. இவளுடைய கணவனான நாபாலுக்கு என்ன நேரிட்டது?
5.3. இவள் எப்போது தாவீது ராஜாவின் மனைவியானாள்?
5.4. சாலமோன் ராஜா எவ்விதத்தில் இவளுக்குச் சொந்தக்காரர் ஆனார்?
மொழிபெயர்ப்பு..
திருமதி டப்னி ஜோசப்
No comments:
Post a Comment