அவர்கள் அக்கரைப்பட்ட பின்பு, எலியா எலிசாவை நோக்கி: நான் உன்னை விட்டு எடுத்துக் கொள்ளப்படுமுன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன, கேள் என்றான். அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்றான். (2 இராஜாக்கள் 2.9)
கதைச்சு சுருக்கம்
எலிசா எலியாவின் சீஷனும் எலியாவின் தலைமைத்துவத்தை ஏற்று வழி நடத்திச் சென்றவனும் ஆவான்.
எலிசாவுக்கு தீர்க்கதரிசியின் வல்லமையும அற்புதங்களைச் செய்யும் வல்லமையும் கொடுக்கப்பட்டது.
எலிசா சீரியாவின் நாமானை சொஸ்தமாக்கினான்.
எலிசா யேகூவை ராஜாவாக அபிஷேகம் செய்தான்.
1.0. முன்னுரை
“யெகோவாவே இரட்சகர்” என்பது எலிசா என்ற பெயரின் பொருள். எலிசாவின் தகப்பன் சாபாத் என்பவன். எலிசா எலியாவின் தலைமைத்துவத்தை ஏற்று தேசத்தை வழிநடத்திச் சென்றவன். யெகோவா தேவன் எலியாவுக்குக் கட்டடையிட எலிசாவை தீர்க்கதரிசியாய் அபிஷேகம் செய்தான். எலியா ஆபெல்மேகொலா மட்டும் சென்ற பன்னிரெண்டு ஏர் பூட்டி நிலைத்தை உழுதுக் கொண்டிருக்கையில், எலிசாவின் மேல் தன்னுடைய சால்வையைப் போட்டு விட்டு அப்படியே சென்றுவிட, எலிசா எலியாவைப் பின் தொடர்நது ஓடி, தன் தகப்பனையும் தன் தாயையும் முத்தம் செய்து விட்டு பின் தொடர உத்தரவு கேட்க, எலியா எலிசாவுக்குப் புதிரான பதில் தர, உடனே தன்னுடைய ஓர் ஏர் மாட்டை (இரண்டு காளைகள்) அடித்து, அந்த ஏரைக் கொண்டு, தான் அடித்த காளையை சமைத்து, தன்னுடைய அண்டை அயலாருக்குப் பிரியாவிடை விருந்து பண்ணினான்.
பின்பு எலியாவின் பின் சென்று அவனுக்கு ஊழியக்காரனாயிருந்தான். பின்பு எலியாவின் ஊழியங்கள் முடிவடையும் தருணத்தில் எலிசா இரு மடங்கு அபிஷேகத்தைப் பெற்று எலியாவின் ஊழியத்திற்குச் சுதந்திரவாளியானான். (1இராஜா.2)
எலியா எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு எலிசா தனக்குள் இருக்கும் தீர்க்கதரிசன அபிஷேகத்தைப் பரிசோதித்துப் பார்க்க, எலியாவின் சால்வையைக் கொண்டு யோர்தான் நதி நீரை அடித்து இரண்டாகப் பிளந்தான் (2இராஜா.15-18). இக்காட்சியை மற்ற ஐம்பது தீர்க்கதரிசிகளின் கூட்டத்தார் தங்கள் கண்களால் கண்டு வெளிப்படையாய் சாட்சி கொடுத்தார்கள் (2இராஜா.15-18). அதன் பின் ஒன்றின் பின் ஒன்றாக அற்புதங்கள் நிகழ்ந்தன. உம்- எரிகோவின் நீர் தித்திப்பானது (2இராஜா.19-22) எலிசாவைப் பரிகாசித்த பிள்ளைகளை (வாலிப) கரடி வந்து கொன்று போட்டது (2இராஜா.2.23-24). மோவாப் ராஜா இஸ்ரவேலின் ராஜாவுக்குக் கப்பம் கட்டி வந்தான். ஒரு நாள் இஸ்ரவேல் ராஜாவுக்கு விரோதமாய் கலகம் பண்ண யோராம் ராஜாவும் அவன் தோழமை ராஜாக்களாகிய யூதாசும் ஏதோமும் ஒன்று சேர மோவாபியருக்கு விரோதமாக முன்னேறிச் செல்ல முயற்சிக்கையில், அவர்களுக்குப் பயங்கர தாகம் உண்டாகி வருத்தப்படுத்தியது. அப்பொழுது எலிசா தீர்க்கதரிசனம் உரைத்து அவர்களுக்குப் பெரிய விடுதலையை வாங்கித் தந்தான் (2இராஜா.3.1-25).
யோவாஸ் காலத்தில் எலிசா மறித்துப் போனான். யோராம், யேகூ, யோவாகஸ் மற்றும் யோவாஸ் ஆகிய ராஜாக்கள் ஆண்ட காலங்களில், கிட்டதட்ட 57 வருடங்கள் எலிசா ஊழியம் செய்தான். யெகோவா கர்த்தர் எலிசாவின் ஊழியங்களின் எல்லையைப் பெரிதாக்கினார். இக்காரியம், கர்த்தருக்குப் பயந்து ஜீவித்த அந்த விதவையின் கணவனின் வாழ்க்கையிலிருந்து தெரிகிறது (2இராஜா.4.1-7). எலிசா தேவைப்படும் உதவிகளைச் செய்து வந்தான். மேலும் எலிசா கார்மேலிருந்து பிரயாணமாகி போகும் வழிகளில் சூனமில் ஓய்வு எடுப்பதை ஒரு வழக்கமான வாடிக்கையாய் வைத்திருந்தான். அந்த சுனமின் பெண்ணுக்குக் குழந்தை இல்லாதிருந்தது. அது அவளுக்குப் பெருத்த அவமானமாக, யூத பெண்களுக்கு மத்தியில் இருந்தது. ஒரு குழந்தை இருக்கும் என்ற ஆறுதலின் வார்த்தையைக் கூறினான். பல வருடங்களுக்குப் பிறகு அதே குழந்தை மரித்து போன பின்பு, எலிசா உயிரோடே மறுபடியும் எழுப்பினான். (2இராஜா.4.26-27)
துன்பங்கள் தீர்க்கதரிசிகளின் புத்திரர்களை அணுகும்போது எலிசா அவர்களுக்கு உதவி செய்து, கற்றும் கொடுத்தான். எலிசா இல்காலில் இருக்கையில், தேசத்தில் பஞ்சம் உண்டாயிற்று. அவன் தன் வேலைகக்காரனை நோக்கி, தீர்க்கதரிசியின் புத்திரர்களுக்குக் கூழ் காய்த்து கொடுக்கச் சொன்னான். வேலைக்காரனின் ஒருவன் வெளியிலே போய், கீரைக்குப் பிதலாக ஒரு பேய்க்கெரம்மட்டிக் கொடியைக் கண்டு அதன் காய்களை மடி நிறைய அறுத்து வந்து கூழ் பானையில் போட்டான். அது மரணத்துக்குகேதுவான விஷமாயிருந்தது. எலிசா மாவைப் பானையில் போட்டு, அந்த கூழைத் தோவுமில்லமல் சாப்பிடக் கூடியதாய் மாற்றினான் (2இராஜா 4.38-41). எலிசா, சீரியனாகிய நாமான் குஷ்டரோகித்திலிருந்து சொஸ்டமாக்கினான் (2இராஜா 5). இவைகளைக் கண்ட தீர்க்கதரிசிகளின் பிள்ளைகள் எலிசாவைப் புடைசூழ சூழ்ந்து கொண்டு, கற்றுக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்கள் (2இராஜா.6.1-7).
2.0. அரசாங்க நிர்வகிப்பில் எலிசாவின் தலையீடு வேதாகமத்தின் மற்ற பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அ. யோராமை தோற்கடிக்க சீரியர்கள் போட்ட திட்டத்தில், யோராமுக்கு எலிசா வெளிப்படுத்தி, யோராமையும் அவன் தேசத்தையும் காப்பாற்றினான். தன்னுடைய இரகசிய திட்டம் எப்படி வெளிப்பட்டது என்று பின்பு சீரியாவின் ராஜாவுக்கு எலியாதான் யோராமுக்கு வெளிப்படுத்தினான் என்று அறிவிக்கப்பட்டது.
ஆ. பெனதாத் ராஜாவை இஸ்ரவேலுக்கு எதிராக முற்றுகை இடுகையில் எலிசா ஜெபத்தின் மூலம் குருட்டாட்டம் செய்து, சமாரியாவுக்குத் திசை திருப்பிச் செல்ல செய்தான்.
இ. எலிசா யோராமை பெறாதாத்தின் இராணுவப் படையைக் கொலை செய்ய விடாமல் மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து உதவிடச் செய்தான். அதின் மூலம் பெனாதாத்திற்கு, இஸ்ரவேலின் தேபன் விரோதமாய் ஏறெடுக்கப்படும் முயற்சிகள் யாவும் விருதாவாய் முடியும் என்று உணர்த்தினான்.
எலிசாவன் அற்புதங்கள்.
யோர்தான் நதி இரண்டாக பிளந்தது (2இராஜா.2.13)
எரிகோவின் நீரூற்று சுத்திகரிக்கப்பட்டது. (2இராஜ.2.19)
விதவையின் எண்ணெய் பெருகுகிறது (2இராஜா 4.1).
மரித்த வாலிபன் உயிரோடு எழும்பினான் (2இராஜா. 4.18).
நஞ்சு கலந்த கூழ் சுத்திகரிக்கப்பட்டது (2இராஜா 4.38)
தீர்க்கதரிசிகளின் உணவு பெருகுகிறது (2 இராஜா. 4.12)
குஷ்டரோகியாகிய நாமான் சொஸ்தமானான் (2இராஜா.5.1)
கேயாசி குஷ்டரோகியானான் (2இராஜா.5.15).
தண்ணீருக்குள் விழுந்த இரும்புக் கோடாரியின் வெட்டுமுனை நீரின் மேற்பரப்பில் மிதக்கச் செய்தான் (2 இராஜா.6.5)
சிரியாவின் பெனாதாதின் இராணுவத்தினரை (அரமியர்) குருட்டாட்டம் செய்து, அவர்களைச் சுற்றிவளைத்தான் (2 இராஜா.6.8)
ஈ. இஸ்ரவேல் தேசத்திற்கும் யோராமுக்கும் விரோதமாய் சீரியர்கள் வந்தார்கள். அவர்கள் மனித நரபலி கொடுத்தார்கள். யோராம் எலிசாவைக் குற்றம் சாட்டினான். யோராம் எலிசாவைக் கொல்ல உத்தரவிட்டான் அல்ல. கர்த்தரே ஓர் அற்புதத்தைச் செய்து சீரியர்களைத் தோற்கடித்தார். இதை எலிசா முன் அறிவித்தான் (2 இராஜா.2.7).
உ. எலிசா தமஸ்குவில் காணப்பட்டான். அசகேல்தான் சீரியாவின் பேனாதாதிற்குப் பின் ராஜாவாக வேண்டும் என்ற தெய் திருவாக்கை அறிவித்தான் (2இராஜா.8.7-13). அதற்கு அடுத்த வருடம் பேகூவை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் பண்ணுவித்தான்.
ஊ. எலிசா தொண்ணூறு வயதில் தன் வீட்டில் மரித்தான். அறுபது வருடம் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தான் (2இராஜா.13.14-19)
3. எலிசாவின் அடைவு நிலை
எலிசா எலியாவின் தீர்க்கதரிசியான ஊழிய்ததிற்குச் சுதந்தரவாளியாக எலிசாவின் ஊழியங்கள் தொடர்ந்தான்.
ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் தீர்க்கதரிசன ஊழியங்களைச் செய்தவன்.
நான்கு தேசங்கள் மேல், இஸ்ரவேல், யூதேயா, மோவாப், ஆராம் (சீரியா) ஆகிய தேசங்கள் மேல் தாக்கத்தை ஏற்படுத்தினவன்.
எலியா சுய மரியாதை பேணி காத்தவன். மற்றவர்களின் செலவில் தன் சுய காரியங்களைத் சாதித்தவன் அல்லன். தன்னை ஐசுவரியவனாக்கியதும் கிடையாது.
தேவைப்பட்டோருக்கு உதவினான்.
கற்றுக் கொண்ட பாடங்கள்
எளியவருக்கும் அந்தஸ்தில் உயர்ந்தவருக்கும் பாகுபாடு கருதாமல் உதவியிருக்கிறவனே கடவுளின் பார்வையில் உயர்ந்தவன்.
ஒரு நல்ல அடைவு நிலை வேண்டுமாகில், நம்முடைய எஜமானின் அடைவு நிலையின் மேல் தம்முடைய அடைவு நிலையைக் கட்டியெழுப்ப வேண்டும்.
முடிவுரை
எலிசா ஒரு உன்னதமான தீர்க்கதரிசி. அவன் கர்த்தராகிய யெகோவாவின் இரட்சிப்பை அவனின் ஊழியத்தின் மூலம் பகிர்ந்து கொண்டான். அவனுக்கு எலியாவின் ஆவியின் வல்லமை கொடுக்கப்பட்டது. அவன் கர்த்தராகிய யெகோவாவோடும் மக்களோடும் மிகவும் அணுக்கமான இருந்தான்.
மொழிபெயர்ப்பு
ராபின்சன் விக்டர்
சிலிப் ரிவர்.
ஆண்டவரே எலியா எலிச போல எங்களையும் பயன்படுத்தும்
ReplyDelete