விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினாலே, அவன் காணப்படாமற்போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சிபெற்றான்.( எபிரேயர் 11.5)
கதைச் சுருக்கம்
1. பரிசுத்தமான வாழ்க்கை நெறியின் ஒப்பற்ற தன்மையை மனித குலத்திறகுக் கற்றுக் கொடுக்க கெகோவா தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவன்.
2. எனோக் யெகோவா தேவனோடு நடந்தான். (ஆதி.5.24).
3. எனோக் 365 வருடங்கள் உயிரோடு வாழ்ந்தான்.
4. பழைய ஏற்பாட்டில் எலியாவைத் தவிர்த்து எனோக் மட்டும் யெகோவா தேவனால் உயிரோடே சரீரத்தால் எடுத்துக் கொள்ளப் பட்டான் (2இராஜா.2.1-11).
1. முன்னுரை – சுய சரிதை
‘தொடக்கம்’ என்பது எனோக்கின் அர்த்தம். எனோக் எடுத்துக் கொள்ளப்பட்ட விதம் வேதாகமத்தில் குறிக்கப்பட்டுள்ள சம்பவங்களில் மிகவும் விசித்திரமானது. பரிசுத்தமாக வாழும் வாழ்க்கைக்கு யெகோவாவாகிய தேவன் அளிக்கும் உன்னத பரிசுதான் சாவாமையை ருசிப்பதாகும். இந்தச் செய்தியை எல்லா மனிதனுக்கும் பொருத்தமான ஒன்று என்று யெகோவா தேவன் திருவுளம் பற்றுறகிறார். யெகோவா தேவன் ஒரு குறிறப்ட்ட தனிமனிதனின் மூலம் பொது மக்களை அணுகுகிறார். யெகோவா தேவன் மனிதனுக்கு வெவ்வேறு ஊழியங்களை வெவ்வேறு சூழ்நிலைக்குத் தகுந்தவாறு அளிக்கிறார். யெகோவா தேவன் தனக்குப் பிடித்த மனிதனைத் தெரிந்தெடுத்து ஊழியங்களைக் கொடுக்கிறார். அப்படிதான் எனோக்கும் தெரிந்து கொள்ளப் பட்ட மனிதாக இருக்கிறார்.
2. யெகோவா தேவன் எனோக்கைத் தொடக்கினார்.
1. ஏகோவா தேவனின் அநாதி திட்டம். யெகோவ தேவன் தன் மக்களோடு இடையூற்ற ஐக்கியத்தை விரும்பி எதிர்ப்பார்க்கிறார்.
2. ஒவ்வொறு மனிதனுக்கும் தேர்வு செய்யும் உரிமை உண்டு. யெகோவா தேவன் மனிதனுக்கு சுய முடிவும் சுய தேர்வும் எடுக்கும் அதிகாரத்தோடு படைத்துள்ளார். ஆகவே, நமக்கு யெகோவா தேவனை நேசிக்கும் அதிகாரமும் அல்லது வெறுத்து ஒதுக்கும் அதிகாருமும் உண்டு.
3. கடவுளின் தேர்வு – சில தலைமுறைகள் கழிந்த பிறகு, மனிதன் பாவம் செய்து தாழ்ந்த இடத்திற்கு விழுந்து போகிறான் (ரோமர் 3.23).
3. எனோக் யெகோவா தேவனோடு சஞ்சரித்தார்.
1. யெகோவா தேவன் மகா பரிசுத்தர். அது அவரின் தெய்வாதீன தன்மையும் கூட. பாவம் சிறிதேனும் அவருக்குள் கிடையாது.
2. யெகோவா தேவன் தம் மக்களோடு அந்நியோனிய ஐக்கியம் கொள்ள விரும்புகிறார். அவருடைய மக்களாகிய நாம் எவ்வளவு பாவிகளாயிருந்தாலும் அவர் எப்பொழுதும் நம்மோடு அந்நியோனிய ஐக்கியம் கொள்ள விரும்புகிறார்.
3. ஏனோக் பரிசுத்தனாயிருந்தான். ஏனோக் யெகோவா தேவனோடு சஞ்சரிக்க தனிப்பட்ட முடிவு எடுத்துக் கொண்டார்.
4.0. ஏனோக் மனிதர்கள் மத்தியிலிருந்து பிரிக்கப்பட்டான்.
1. மனிதன் ஒரு மகா பாவி. ஆதாமிடமிருந்து ஏனோக் பாவத் தன்மையை சுதந்தரித்துக் கொண்டான்.
2. மனிதன் மரணத்திற்கு ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளான். பாவத்தின் சம்பளம் மரணம் என்பது வேத வாக்கு.
எனோக் மற்ற மனிதர்களிடமிருந்து பிரிக்கப்பட்டான். முழுமையாக யெகோவா தேவனோடு சங்சரிக்கப் பிரிக்கப்பட்டான். எனோக்கு மனிதர்களின் பாவத்திலிருந்த தன்னைக் காத்துக் கொள்ள, மனித பாவத்திலிருந்து பிரித்துச் சென்று விட்டார்.
5.0. எனோக்கை யெகோவா தேவன் மாற்றினார்
1. எனோக்கு விசுவாசமுள்ளவன் (எபி.11.5).
2. எனோக் யெகோவா தேவனால் ஏற்றுக் கொள்ளப் பட்டான்.
எனோக்கிற்கு நித்திய ஜீவன் கிட்டியது. அவன் நிரந்திரமாக யெகோவா தேவனோடு ஐக்கியமாக வாழ்ந்தான்.
6. வேதாகம ஆதாரங்கள் (இணைக்கப்படும்)
7. சம்பாஷனைக் கேள்விகள்
1. ஏனோக் என்றால் என்ன அர்ரத்தம்?
2. எனோக்கின் குடும்பப் பின்னணி என்ன?
3. எனோக்கிற்கும் நோவாவிற்கும் உள்ள விசேஷங்கள் என்ன? (ஆதி.5.24)
4. வேதத்தில் எனோக் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தான்?
5. எனோக்கின் வாழ்விலிருந்து என்ன கற்றுக் கொள்ளுகிறோம்?
மொழிபெயர்ப்பு..
ராபின்சன் விக்டர்
சிலிம் ரிவர்.
No comments:
Post a Comment