ஓர் அடிமை உயர்ந்த தலைவனாகும்படி அழைக்கப்பட்டான்.
எண்ணாகமம் 12: 1-16 (மோசேயின் குணாதிசயங்கள்)
· சாந்த குணம் – வசனம் 3
· உண்மையுள்ள தலைவன் – வசனம் 7
· கர்த்தரிடம் நெருக்கமானவன் – வசனம் 8
· தாராளமாய் மன்னிப்பவன் – வசனம் 13
1. அவன் அழைப்பு
தலைவனாக அவன் விரும்பவில்லை. அதன் விலை மதிப்பு அவனுக்குத் தெரியும். கர்த்தர் அவனுக்கு நம்பிக்கை கொடுத்ததினால் தயக்கத்தோடு ஒப்புக்கொண்டான். அவன் யோனாவைப்போல் இருந்தான். தலைவர்கள் அதிகமாகத் தனித்திருப்பார்கள். மோசே இஸ்ரவேலருக்கும் கர்த்தருக்கும் இடையே தரகனாயிருந்தபோது அவர் பட்ட கஷ்டத்தை ஏற்கனவே உணர்ந்தவான்(11:2). அவர்கள் அழியாதபடி அவன் கர்த்தராகிய தேவனிடம் ஜெபம் பண்ணினான். தேவன் ஜனங்களின் கஸ்டங்களைத் தான் தேர்ந்தெடுத்த தலைவர்கள் மூலம் நிவிர்த்தியாக்கினார். ஆனபோதிலும் தலைவர்கள் துன்பப்பட்டார்கள்.
2. அவன் தன் சொந்த நெருங்கிய நண்பர்களிடத்திலிருந்தும், குடும்ப உறுப்பினர்களிடத்திலிருந்தும் எதிர்ப்பை எதிர்நோக்கினான்
அவன் சகோதரன், சகோதரியாகிய ஆரோனும் மிரியாமும் அவன் எத்தியோப்பிய ஸ்தீரியை விவாகம் பண்ணியதால் அவனுக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள். ஏன் அவனை எதிர்த்தார்கள்? பொறாமைதான் முக்கியகாரணம் (12:2) மோசே அந்தப் பிரச்சனையை மிகவும் பணிவோடு எதிர் கொண்டான்.
3. எல்லா நேரங்களிலும் மோசே உண்மையுள்ளவனாயிருந்தான் (12:7)
கர்த்தர் தாமே அவன் உண்மையுள்ளவன் என்று உறுதியளித்தார். மத குருவும் வேலைக்கரர்களும் தங்கள் தனிப்பட்ட வாழக்கையை மகிழ்ச்சியாய் அனுபவிப்பார்கள். இது ஒரு சுலபமான கடமை அல்ல. இது ஒரு மிகவும் க்ஷ்டமான கடமை. தலைமைத்துவ குணத்தின் முக்கிய வெளியீடு. (12:3)
4. மோசே க்ர்த்தரிடம் மிகவும் நெருக்கமாயிருந்தான் (12:8)
ஒரு தீர்க்கத்தரிசி ஜனங்கள் சார்பாக கர்த்தரிடம் பேசுகிறவர். (இது மத்தியஸ்தம் எனப்படும்) அவர் ஜனங்களிடம் பேசவும் கட்டளை பெற்றிருக்கிறார். இது ஒரு தீர்க்கத்தரிசியின் கடமை. ஒரு தீர்க்கத்தரிசி மத்தியஸ்தராயும் இருக்கிறார். கர்த்தர் சொப்பனத்தில் மட்டும் மோசேயோடு பேசினாரென்றல்ல. முகமுகமாகவும் பிரத்தியட்சமாகப் பேசினார். கர்த்தருடைய ஜன்ங்களிடம் ஊழியம் செய்ய ஒருவர் கர்த்தரிடம் நெருக்கமாக இருக்க வேண்டும். இது வேத வாசிப்பு, ஜெபம், தியானம். இவைகளின் மூலம் சாத்தியப்படும்.
5. மோசே மன்னிப்பதில் உயர்ந்தவரும்கூட
என் 40 ஆண்டுகள் கால ஊழியத்தில் அநேக ஜனங்கள் குறுக்கிட்டிருக்கிறார்கள். நமக்கு ஏற்பட்ட இரண்டு வகைகளான, நல்ல காரியங்கள், வேதனைகள், காயங்களைச் சுலபமாக மறக்கமுடியாது. நமக்கு வேறு வழியில்லை. ஆனால் மன்னித்து கர்த்தரிடமிருந்து நாம் மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளலாம். மோசே தன் சகோதரனையும் தன் சகோதரியையும் மன்னித்தான். மோசே பணிவுள்ளவன். மோசே எப்படிப்பட்டவன் என்று கர்த்தருக்குத் தெரியும். அவருக்கு ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதும் தெரியும். மோசேயை ஜனங்கள் ஏற்க மறுத்தார்கள். போதகராகிய நாமும் எதிர்ப்புகளை எதிர்நோக்கக்கூடும் மோசேக்கு விரோதமாய்ப் பேசினாலும், அப்பொழுதும் மோசே கர்த்தரை நோக்கி, என் தேவனே மிரியாமைக் குணமாக்கும் எனறு கெஞ்சினான் (12:13) இது மன்னிப்பும் குணமாக்குதலும் இணைந்தது. பணிவு என்பது தேவபக்தியுள்ள தலைவர்களுடைய உள்ளான தன்மை.
நம்மை அழைக்கிற கர்த்தர் ந்ம்மை ஆயத்தப்படுத்துவார். விசுவாசத்தோடும் நம்பிக்கையோடும் வாருங்கள். தேவனுக்கான உங்கள் பிரயாணம் வெற்றிகரமாக முடியும்.
No comments:
Post a Comment