முக்கிய வசனம்
யோவாபின் சகோதரனும் செருயாவின் குமாரனுமாயின அபிசாய் என்பவன் அந்ந மூன்று பேரில் பிரதான மாணவன். அவன் தன் ஈட்டியை ஓங்கி முந்நூறு பேரை மடங்கடித்ததினால், இந்த 3 பேர்களில் பேர் பெற்ற்றவனானான். அந்த முந்தின மூன்று பேருக்கு அவன் சம்மானவனல்ல. 2 சாமுவேல் 23. 18-19.
சுருக்கமான குறிப்பு
- · தாவீதின் சேனையில் உயர்ந்த பதவியில் பல முக்கியமான சம்வங்கள் இவன் வாழ்க்கையில் இடம் பெற்றன.
- · தாவீதைத் தூஷித்த சீமேயைக் கொன்று போட விரும்பினான்.
- · அப்னேனா சங்காரம் பண்ணுவதில் உதவி செய்தான்.
- · தாவீதை வெட்டிக் கொலை செய்ய வந்த இஸ்பி பெனோப் என்பவனிடமிருந்து தாவீதைக் காப்பாற்றினான்.
1. முகவுரை – இவனுடைய சரித்திரம்
இவனுடைய பெயர் – “என் தகப்பனார் ஈசாய்” என்று பொருள் படும். இவன் தாவீது அரசனின் சகோதரியாகிய செருயானின் மூத்த குமாரன் (1 நாளாகமம் 2.16) தாவீதோடு கூட இரவில் சவுலினிடத்திற்குப் பாயைத்திற்குப் போனான். தாவீது தடைசெய்திராவிட்டால் அபிசாய் சவுலை ஈட்டியால் குத்திக் கொலை செய்திருப்பான். 1 சாமுவேல் 26.6. அப்லோமுக்கு பயந்து ஓடும் போது தாவீதைத் தூஷித்த சீமேயியைக் கொன்று போடத் தாவீதினிடம் உத்தரவு கேட்டான் (2 சாமுவேல் 16.9-14). பின்பு அப்சலோமின் கலகத்தை அடக்கி முற்றுப்பெறச் செய்த கொடூரமான யுத்தத்திலும் பங்கு கொண்டான். 2 சாமுவேல் 20.6. அம்மோனியாருக்கு விரோதமாகப் போராடி வெற்றி பெற்றான் (2 சாமுவேல் 10.110, 2 நாளா.19.11). ஏதோமியருக்கு விரோதமாகவும் போர் செய்தான் (2 சாமு.8.13, 1 நாளா.18.12). அப்னேரைக் கொலை செய்வதிலும் (2 சாமு.3.30) பிக்கிரியின் குமாரனைப் பின்தொடர்ந்து கொலை செய்வதிலும் உதவி செய்தான் (2 சாமு.20.6, 10) பெலிஸ்தியருடன் செய்த யுத்தத்தில் இஸ்பி பெனோப் என்ற இராட்சதனின் கைகளால் கொலை செய்யப்படாதபடி அபிசாய் தாவீதைக் காப்பாற்றிற அந்த இராட்சதனையும் கொன்று போட்டான். தன் ஈட்டியை ஓங்கி 300 பேரை மடங்கடித்து தனது பராக்கிரமத்தை வெளிக்காட்டினான். (2 சாமு.23.18, 1 நாளா.111.20)
அபிசாய் செய்தவற்றை நாம் சுருக்கமாகக் கூறலாம். தாவீதினிடம் அவனுக்குள்ள ராஜ விசுவாசத்தினிமித்தம் அவன் விரோதிகளை அழிக்காதபடி அவனைத் தடுக்க வேண்டியதாக இருந்தது. தன் தலைவனைத் தற்காத்துக் கொள்ளும்படி எதுவும் செய்ய ஆயத்தமாக இருந்தான். அபிசாய் ஒரு சிறந்த போர் வீரனாக இருந்தான். தாவீதின் கட்டளைகளை நிறைவேற்ற வேண்டியதாக இல்லாத போது, அவிசுய் அநேகமாகத் தனது இளைய சகோதரன் யோவாபின் கட்டளைக்குக் கீழ்ப்பட்டிருந்தான். அப்னேர், அமாசா ஆகிய இருவரையும் கொலை செய்வதில் இவன் யோவாபுக்கு உதவி செய்தான். அவன் தலைவனாக இருந்த போது அவன் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்தன். மூன்றாவதாக, அபிசாயினுடைய பாராட்டத்தக்க ராஜ விசுவாசம், பயமில்லாமை அகிய தன்மைகள் நமக்கும் சவாலாகத் திகழ வேண்டும். ஆனால், யோசிக்காமல் செயல்பட விரும்பும் அவனது சுபாவம் நமக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
2. பலமும் சாதனைகளும்
a. தாவீதின் யுத்த வீரர்களில் இவனும் ஒருவனாக இருந்தான்.
b. பயமில்லாத தன்னார்வ ஊழியனாக இவன் தாவீதின் பேரில் தீவிரமான பயபக்தியுடையவனாயிருந்தான்.
c. இவன் தாவீதின் உயிரைக் காப்பாற்றினான்.
3. பலவீனமும் தவறுகளும்
a. யோசனை செய்யாமல் செயல்படும் சுபாவமுள்ளவன்.
b. அப்னேரைக் கொலை செய்ய யோவாபுக்கு உதவி செய்தான்.
4. இவனது வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள்.
a. நற்பயன் உண்டாகச் செயல்படுபவர்கள் மிக்க கவனத்துடன் சிந்தனையையும் செயலையும் ஒன்று படுத்துவார்கள்.
b. குருட்டு விசுவாசம் மிகுந்த தீமையை விளைவிக்கக் கூடும்.
5. வேதத்தில் வாசிக்க வேண்டிய பகுதிகள்
a. இவனுடைய சரித்திரம் 2 சாமு.2.18 – 23.19ல் கூறப்பட்டுள்ளது.
b. 1 சாமு.26.1-13, 1 நாளா.2.16, 11.20, 18.112, 19.111,15 ஆகிய பகுதிகளிலும் கூறப்பட்டுள்ளது.
6. விவாதிக்க வேண்டிய கேள்விகள்
a. இவன் தன் ராஜ விசுவாசத்தை எவ்வாறு தாவீதுக்குக் காண்பித்தான்?
b. இவன் எவ்வாறு தாவீதின் உயிரைக் காப்பாற்ற்றினான்?
c. இவனுடைய ராஜ விசுவாசத்தைப் பார்த்து நாம் என்ன பாடம் கற்றுக் கொள்ளலாம்?
d. அவனுடைய பெலன் என்ன?
மொழியாக்கம்
திருமதி டப்னி ஜோசப்
No comments:
Post a Comment