Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Tuesday, August 9, 2011

2. ஆபேல் – ஆதாம், ஏவாளின் இரண்டாவது மகன்




முக்கிய வசனம்
சுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக் குறித்துத் தேவனே சாட்சி கொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான். (எபிரேயர் 11..4)



சுருக்கமான குறிப்பு

1. ஆதாம் ஏவாளின் இரண்டாவது மகன், காயீனுடைய சகோதரன் (ஆதி.4.2).

2. ஆபேல் நீதிமானாக இருந்தான்.

3. ஆபேல் தனது மந்தையின் தலையீற்றுகளைக் காணிக்கையாக்க் கொண்டு வந்ததைத் தேவன் ஏற்றுக் கொண்டார்.

4. இதன் காரணமாகக் காயீனால் கொலை செய்யப்பட்டான்.



முகவுரை – அவன் சரித்திரம்

அவனுடைய வாழ்க்கையின் குறுகிய ஜீவிய காலம் அல்லது மனித வாழ்க்கையின் நிலையற்ற தன்மையைக் குறிப்பிடுவது போல் ஆபேல் என்ற பெயர் மாயை, சுவாசம், ஆவி என்று பொருள்படும்.



ஆபேல் இந்த உலகத்தில் பிறந்த 2வது குழந்தை. ஆனால், தேவனுக்குக் கீழ்ப்டிவதில் முதலாவது மனிதன். இவனது பெற்றோர் ஆதாம் ஏவாள் என்பதை மாத்திரம் அறிவோம். இவன் மந்தை மேய்க்கிறவனாக இரந்தான். தேவனுக்குப் பிரியமான காணிக்கையைப் பலியாகச் செலுத்தினான். இவனது குறுகிய கால வாழ்க்கை இவனது சகோதரன் காயீனுடைய பொறாமையினால் முடிவுற்றது.



தேவன் ஏன் ஆபேலின் காணிக்கையை விரும்பினார்? காயினுடைய காணிக்கையை விரும்பவில்லை என்று வேதாகமம் கூறவில்லை. ஆனால், காயீன், ஆபேல் இருவருமே தேவன் என்ன எதிர்ப்பார்த்தார் என்பதை அறிந்திருந்தார்கள். ஆபேல் மாத்திரம் கீழப்படிந்தான். சரித்திரம் முழுவதிலும் தன்னுடைய விசுவாசம், கீழ்ப்படிதலுக்காக ஆபேல் நினைவுகூரப்படுகிறான் (எபி.11.4). அவன் நீதிமான் எனப்படுகிறான் (மத்.23.35).



நமது வாழக்கையில் தேவனுடைய வழிநடத்துதலும் எதிர்பார்க்குதலும் என்ன என்பதை வேதாகமம் முழுவதிலும் நிறைந்து காணப்படுகிறது. அத்துடன் மிகத் தெளிவான வழிகாட்டுதலும் சிறப்பாகக் காணப்படுகின்றன. இவைகளினால் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களைப் பார்க்காமல் ஆபேலைப் போல் கீழ்ப்படிந்து தேவனை விசுவாசிக்க வேண்டும்.





2. அவனது பலமும் அவன் சாதித்தவைகளும்

a. விசுவாச வீர்ர்களின் பட்டியலில் முதலாவது நபர் (எபி.11).

b. முதலாவது மந்தை மேய்ப்பன்.

c. சத்தியத்துக்காக மரித்த முதலாவது இரத்தச் சாட்சி.



3. அவனது வார்க்கையின் மூலமாக நாம் கற்றுறக் கொள்ளக் கூடிய பாடங்கள்.

அ) தம்மிடம் வருவர்களுக்குத் தேவன் செவிகொடுக்கிறார்.

ஆ) குற்றமற்ற மனிதனை தேவன் அடையாளம் காண்கிறார். தவறு செய்பவனை உடனுக்குடனோ அல்லது பின்போ தண்டிக்கிறார்.





4. வாசிக்க வேண்டிய வேதாகம பாகங்கள்

அ) ஆபேலின் சரித்திரம் ஆதி.4.1-8ல் கூறப்பட்டிருக்கிறது.

ஆ) மத்.23.35, லூக்.11.5, எபி.11.4, 12.24,-லும் இவன் குறிப்பிடப்பட்டிருக்கிறான்.





5. விவாதிக்க வேண்டிய கேள்விகள்.

1. ஆபேல் யார்?

2. யார் அவனைக் கொன்றது? எதற்காக கொலை செய்யப்பட்டான்?

3. தேவன் அவனுடைய பலிக்கு எவ்வாறு பதிலளித்தார்? (எபி.111.4).

4. இவனுடைய வாழ்க்கையிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றக் கொள்கிறோம்?

5. தேவன் ஏன் ஆபேலின் காணிக்கையை விருப்பினார்?

 
 
மொழிபெயர்ப்பு
திருமதி டப்னி ஜோசப்

No comments:

Post a Comment