நாசரேத் ஊரிலுள்ள
பாக்கியவதியான கன்னிமரியாளின் கணவர்
முக்கிய வசனம்
19 அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். 20 அவன் இப்படிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. (மத்தேயு
1.19-20)
சுருக்கமான குறிப்புகள்
·
அவன் ஒரு நீதிமான. தேவனுக்குக்
கீழ்ப்படிந்தான்.
·
மரியாளின் வாழ்க்கையில் தேவனுடைய
குறுக்கிடுதலை அவன் கௌரவித்தான்.
·
அவன் ஒரு தச்சன். வாழ்க்கையில்
அவன் உயர்ந்த நிலைமையில் இருக்கவில்லை.
·
அவன் மரியாளையும் இயேசுவையும்
நன்கு பராமரித்தான்.
·
தேவனுடைய வழிகாட்டுதலை உணர்ந்தான்.
1. முகவுரை – அவனுடைய சரித்திரம்
யோசேப்பு என்பது, ‘தேவன் பெருகப்
பண்ணுகிறார்’ என்று பொருள்படும். இவன் நமது ஆண்டவரின் தாயாகிய மரியாளின் கணவன். நேர்மையும்
நீதியுமானவன். தாவீதின் வம்சத்தில் வந்தவன் (மத்.1.20). யோசேப்பு தச்சு வேலை செய்து
வந்தான்.
எகிப்திற்குப் போவதற்கு முன்பும்,
திரும்பி வந்த பின்பும் நாசரேத்தூரிலேயே தனது தொழிலைச் செய்து வந்தான். இயேசு சிலுவையில்
அறையப்படுவதற்கு முன்பே இவன் மரித்தான் (யோவான் 19.27). ஆனால் அவனது மரணத்தைக் குறித்து
எந்த விவரமும் தெரியவில்லை. (மத்தேயு 1.16-24, லுக்கா 1.27, யோவான் 1.45, 6.42 மேலும்
சில விஷயங்களைப் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.)
மரியாள் கர்ப்பதியானாள் என்பதை
அறிந்த போது அது தன்னுடைய குழந்தை அல்ல என்று யோசேப்பு அறிந்திருந்தான். பரிசுத்த ஆவியின்
கிரியையை அறிந்து கொள்வது அவனுக்கு எளிதான காரியம் அல்ல. இருந்த போதிலும் தனக்கு நியமிக்கப்பட்ட
பெண் வாழ்க்கையில் தவறி விட்டாள் என்று நினைக்கவும் கூடாததாக இருக்கும் படியாக தேவன்
அவன் உள்ளத்தில் கிரியை செய்தார்.
மரியாளுக்கு அவமானம் ஏற்படாதபடி
மற்றவர்களுக்குத் தெரியாமல் இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசேப்பு நினைத்தான். அவன்
நீதியோடும் அன்போடும் செயல்பட விரும்பினான். இந்த வேளையில் தேவன் தமது தூதனை அனுப்பி
மரியாளைப் பற்றி உண்மையை உறுதிப்படுத்தி, யோசேப்பு தேவனுக்குக் கீழ்ப்படியும் படியாக
மற்றொரு வழியைத் திறந்தார். அதாவது மரியாளைத் தனது மனைவியாக ஏற்றுக் கொண்டு குழந்தை
பிறக்கும்வரை அவளுடைய கன்னித் தன்மையைக் கௌரவித்தான்.
இயேசுவினுடைய உலகப்பிரகாரமான
தகப்பனாக, யோசேப்பு எவ்வளவு காலம் ஜீவித்தார் என்பது தெரியவில்லை. எருசலேமுக்குப் போனான்
என்பது தான் கடைசியாக இவனைப் பற்றிக் கூறப்பட்டிருப்பதாகும். ஆனால் தன் மகனுக்குத்
தச்சு சேலையைக் கற்றுக் கொடுத்ததுடன், ஆவிக்குரிய காரியங்களிலும் நல்ல பயிற்சி கொடுத்தான்.
பஸ்கா பண்டிகைக்கு ஆண்டு தோறும் குடும்பத்துடன் எருசலேமுக்குச் சென்றான். இயேசுவும்
இப்பழக்கத்தை விடாமல் கடைபிடித்து வந்தார்.
தூதனுடைய வார்த்தைகளைக் கேட்டது
முதற்கொண்டு இயேசு விசேஷித்தவர் என்பதை யோசேப்பு அறிந்திருந்தான். அது குறித்து அவன்
கொண்டிருந்த வலுவான நம்பிக்கையும், தேவனுடைய வழி நடத்துதலைப் பின்பற்ற அவன் கொண்டிருந்த
விருப்பமும், அவன் இயேசுவுக்குத் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட உலகப் பிரகாரமான தகப்பனாக
இருப்பதைச் சாத்தியமாக்கிற்று. இவனுக்கு யாக்கோபு, யூதா, யோசே, சீமோன் ஆகியோருடன் பெண்
பிள்ளைகளும் இருந்தனர்.
2. வலிமையும் சாதனைகளும்.
a. இவன் நேர்மையானவன்.
b. தாவீது ராஜாவின் வம்சத்தான்.
c. இயேசுவுக்குச் சட்டப்பூர்வமான, உலகப் பிரகாரமான தகப்பன்.
d. தேவனுடைய வழிநடத்துதலை உணர்ந்து, எத்தகைய விளைவு ஏற்பட்ட போதிலும் தேவனுடைய
சித்தத்தின்படி செய்ய விரும்பினான்.
3. இவனுடைய வாழ்க்கையிலிருந்து படிக்கும் பாடங்கள்.
a. தேவன் நேர்மையைக் கௌரவிக்கிறார்.
b. தேவன் தெரிந்து கொள்ளும் போது சமுகத்தில் ஒருவனது நிலைமை முக்கியமல்ல.
c. தேவனுடைய வழிகாட்டுதலுக்கு நாம் கீழ்ப்படியும் போது, தேவன் மேலும் தொடர்ந்து
வழி நடத்துகிறார்.
d. ஒரு செயல் சரியானதா அல்லது தவறானதா என்பதை உணர்ச்சிகளைக் கொண்டு அளவிட முடியாது.
e. இயேசுவுக்காக அவன் தியாகம் செய்ய வேண்டியதாக இருந்தது. மரியாளையும் இயேசுவையும்
எகிப்திற்குக் கூட்டிக் கொண்டுபோய் அவர்களைப் பாதுகாத்தார்.
4. வேத வசன ஆதாரங்கள்
a. யோசேப்பின் சரித்திரம் மத்.1.16-2.23, லூக்.1.26-2.5ல் கூறப்பட்டிருக்கிறது.
5. கேள்விகள்
a. பாக்கியவதியான கன்னிமரியாளைத் தன் மனைவியாக்க யோசேப்பு ஏன் மனதில்லாதிருந்தான்?
b. அவன் தேவனுடைய ஊழியக்காரனும் மரியாளின் கணவனும் ஆவதற்கு எவ்வாறு சம்மதிக்கும்
படி ஏவப்பட்டான்?
c. அவனுடைய பலம் எவை?
d. இயேசுவின் வளர்ப்புத் தகப்பனாக அவன் என்ன பங்காற்றினான்?
e. தேவனுடைய சபையில் அவன் ஒரு பரிசுத்தவானாக கௌரவிக்கப் பட்டதின் காரணம் என்ன என்று
நினைக்கிறாய்?
மொழிபெயர்ப்பு
திருமதி டஃப்னி ஜோசப்,
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங்
ஜெயா
No comments:
Post a Comment