Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Sunday, March 11, 2012

98. யாக்கோபு


 இயேசுவின் சகோதரன், எருசலேமிலுள்ள முதலாவது யூத ஆலோசனை சங்கத் தலைவன்.

முக்கிய வசனம்
பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார்.

 (1கொரி.15.7)

சுருக்கமான குறிப்புகள்
·         இயேசு உலகில் வாழ்ந்த காலத்தில் இவன் இயேசுவின் அதிகாரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
·         இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின் இவன் எருசலேமிலுள்ள யூத கிறிஸ்தவ சபையின் அங்கத்தினராகச் சேர்ந்தான்.
·         எருசலேமின் முதலாவது பேராயராக நியமிக்கப் பட்டான்.
·         எருசலேம் ஆலோசனை சங்கத்தின் முதலாவது கூட்டத்திற்குத் தலைமை தாங்கினான்.
·         இரத்த சாட்சியாகப் பாடனுபவித்தான்.

1.     முகவுரை – இவனுடைய சரித்திரம்
பண்டைய வழக்கத்தின்படி யூதரிலும் கிறிஸ்தவர்களிலும் அநகர் யாக்கோபு என்று அழைக்கப்பட்டனர். வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டிலிருந்து பின்வரும் ‘யாக்கோபு’-களை நாம் அடையாளம் காணலாம்.
·         யாக்கோபு, செபதேயுவின் குமாரன் (மாற்கு 1.19, 3.17, அப்.12.2)
·         யாக்கோபு, யூதாவுடைய சகோதரன் (லூக்.6.16, அப்.1.13)
·         யாக்கோப, அல்பேயுவின் குமாரன் (மாற்கு 3.18).
·         சின்ன யாக்கோபு (மாற்கு 15.40)
·         யாக்கோபு, இயேசுவின் சகோதரன் (மாற்கு 6.3, 1கொரி.15.7, கலா.1.19, 2.9-12, அப்.12, 17, 15.13, 21.18)

இயேசுவின் சகோதரர்கள் யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்று மத்.13.55ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இயேசு இந்த உலகில் வாழ்ந்த போது இவன் இயேசுவின் அதிகாரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை (மாற்கு 3.21). உயிர்த்தெழுந்த இயேசு அவனுக்குக் காட்சியளித்த பின் (1கொரி.15.7) எருசலேமிலுள்ள யூத கிறிஸ்தவ சபையின் முக்கிய அங்கத்தினரானார் (கலா.1.19, 2.9). இவர் எருசலேமின் பேராயராகக் கர்த்தராலும், சீஷர்களாலும் நியமிக்கப்பட்டார் என்று பாரம்பரியமாகக் கூறப்பட்டது. யூதரல்லாத புற ஜாதியாரைக் கிறிஸ்தவ சபைகளில் சேர்த்துக் கொள்வதற்கான நிபந்தனைகளைக் குறித்துத் துர்மானம் செய்வதற்காக அழைக்கப்பட்ட எருசலேம் ஆலோசனை சங்கத்தின் கூட்டத்திற்கு யாக்கோபு தலைமை தாங்கித் தாங்கள் தீர்மானம் செய்த விவரங்களைக் குறித்து அந்தியோசியா, சீரியா, சிலிசியாவிலுள்ள சபைகளுக்கு நிருபங்களை அனுப்பினார்கள் (அப்.15.19-23). பவுல் கடைசி தடவையாக எருசலேமுக்கு வந்தபோது யாக்கோபும் மற்ற மூப்பர்களும் சேர்ந்து யூத கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாகப் பவுலிடும் பேசினார்கள் (அப்.21.18). பிரதான ஆசாரியனான அனனியாவின் கைகளில் இவன் கல்லெறியப்பட்டு இரத்தச் சாட்சியாக மரித்தான்.

யாக்கோபு நிருபத்தை இவரே எழுதியிருக்கிறார் என்பது ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது. இதில் அவர், “தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் ஊழியக்காரன்” என்று தன்னைக் குறித்து எழுதியிருக்கிறார்.


2.     இவன் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ளக் கூடிய பாடங்கள்.
2.1.         மாம்சத்தின்படி இயேசவின் குடும்பத்திலிருந்து வந்தவனாக இருந்த போதிலும், யாக்கோபு தனிப்பட்ட முறையில் கிறிஸ்துவைக் கர்த்தர் என்று ஒப்புக் கொள்ள வேண்டியதாக இருந்தது.
2.2.         அவனுடைய மனமும் சிந்தனையும் யூத முறைமையிலேயே நிலைத்திருந்தது. பல இடங்களிலும் சிதறியிருக்கிற 12 கோத்திரங்களுக்கும் இவர் தமது நிருபத்தை எழுதுகிறார் (யாக்கோபு 1.1). மற்றவர்கள் அல்லது பிற சமுகத்தினரைச் சந்திக்க வேண்டிய தேவை இருந்த போதிலும், முதலாவது நமது சமூகத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். இயேசுவும் கூட சீஷர்களிடம், அவர்களுடைய ஊழியம் முதலாவது எருசலேமிலும், யூதேயா, சமாரியாவிலும் ஆரம்பித்து பூமியின் கடைசி பரியந்தம் செல்ல வேண்டுமென்று கூறினார் (அப்.1.8). நமது அயலார், உறவினர் நம் ஊழியத்தில் முதன்மையான இடம் பெற வேண்டும்.
2.3.         யாக்கோபு எருசலேமில் ஒரு தலைவனானான். யூதர், புற ஜாதியார் ஆகிய இரு சாரார் பேரிலும் அவர் அக்கறை கொண்டிருந்தார். யூதருடைய பழக்க வழக்கங்களை (விருத்த சேதனம்) புற ஜாதியாரும் கடைபிடிக்க வேண்டுமென்று அவர்களை வற்புறுத்தவில்லை. இருந்த போதிலும் பவுலைக் குறித்து சில புகார்கள் எழுந்ததினால் (அப்.21.21-24) பவுல் அவ்வாறு குற்றஞ்சாட்டுகிறவர்களுக்கு முன்பாகத் தான் யூத மார்க்கத்து சட்டதிட்டங்களின்படி செய்பவனாகத் தன்னைக் காண்பிக்கும்படி யாக்கோபு பவுலுக்கு அறிவுரை கூறினான். (அப்.21.25). சவிசேஷத்துக்காக ஒருவன் உள்ளூரிலுள்ள தேவைகளுக்கேற்ப நடந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது,.
2.4.         பேதுருவைப் போல் பரம்பரைப் பழக்க வழக்கங்களின் படி செய்பவனாகவும், பவுலைப் போல் பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெற்ற தலைவனாகவும் யாக்கோபு செயல்பட வேண்டியதாக இருந்தது. நாம் நமது வழிகளிலேயே பிரியப்படுகிறோம். அல்லது அவை மிகவும் சௌகரியமானதாகத் தோன்றுகிறது என்ற காரணத்துக்காக நாம் நமது வழிகளிலேயே செல்ல முடியாது.

3.     வேத வசன ஆதாரங்கள்
3.1.         மாற்கு 6.31, 1கொரி.15.7, கலா.1.19, கலா.2.9,12, அப்.12.17, 15.13, 21.18.

4.     கேள்விகள்    
4.1.         யாக்கோபு யார்?
4.2.         அவன் எப்போது இயேசுவில் விசுவாசம் வைத்தான்?
4.3.         எருசலேம் சபையில் அவன் எவ்வாறு ஊழியம் செய்தான்?
4.4.         எருசலேம் ஆலோசனை சங்கத்தின் கூட்டத்தில் யாக்கோபு என்ன பங்காற்றினான்?
4.5.         இவனுடைய வாழ்க்கையிலிருந்து நாம் என்ன பாடங்கள் படிக்கலாம்?


மொழிபெயர்ப்பு,
திருமதி டஃப்னி ஜோசப்
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா

1 comment:

  1. The usage of Name James in the blogs is a little dishonored by using அவன், இவன். Better if it's used as அவர், இவர்.

    ReplyDelete