லூக்கா சுவிசேஷத்தையும் அப்போஸ்தலர் நடபடிகளையும் எழுதியவர்
முக்கிய வசனம்
10 ஏனென்றால், தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள். 11 லூக்கா மாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன் (2தீமோ.4.10,11)
சுருக்கமான குறிப்புகள்
- · லூக்கா ஒரு வைத்தியன். பவுலின் சிநேகிதன். லூக்கா சுவிசேஷத்தையும் அப்போஸ்தலர் நடபடிகளையும் எழுதியவன்.
- · வேதாகமத்தின் புத்தகங்களை எழுதியவர்களுள் இவன் ஒருவனே யூதரல்லாத புற ஜாதியான். புறஜாதியாரும் தேவனை அறிந்து மற்றவர்களுக்கும் அறிவிக்க வேண்டும் என்ற மனப் பாரமுடையவர்களாக இருப்பது இதன் மூலமாகத் தெரிகிறது. கிறிஸ்துவின் இரட்சிப்பு எல்லாருக்கும் உரியது.
- · சரித்திரத்தையும் புற ஜாதியாரையும் கருத்தில் கொண்டு இந்த லூக்கா சுவிசேஷத்தை எழுதினான்.
- · மிகப் பெரிய சுவிசேஷ ஊழியனாகிய பவுலுடன் சேர்ந்த இவர் பெத்லெகேமிலிருந்து ரோமாபுரி வரை சுவிசேஷம் பரவியதை விவரித்துக் கூறுகிறான்.
முகவுரை – இவனுடைய சரித்திரம்
லூக்கா ஒரு வைத்தியன் (கொலோ.4.14) கிரேக்க வம்சத்தில் வந்த புற ஜாதியானான கிறிஸ்தவன். வேதாகமத்தின் புத்தகங்களை எழுதியவர்களுள் இவன் ஒருவனே புற ஜாதியானவன். இவன் பவுலுக்கு நெருங்கிய நண்பனாக இருந்தான். பிறப்பினால் இவன் ஒரு கிரேக்கன். கிரேக்க கலாச்சாரத்தை நன்கு கற்றறிந்தவன். ஆதித் திருச் சபையின் சரித்திரத்தை அறிந்தவன். வைத்தியனாகத் தொழில் புரிந்தான். பவுலின் இரண்டாவது சுவிசேஷப் பயணத்திலிருந்து பவுல் ரோமாபுரியில் சிறையிலடைக்கப்படும் வரை பவுலுடன் பிரயாணம் செய்தான். மற்றவர்கள் பவுலை விட்டுப் பிரிந்து போன போதிலும், இவன் உண்மையான நண்பனாகப் பவுலுடன் கூடவே இருந்தான் (2தீமோ.4.11). லூக்கா, சிரியாவிலுள்ள அந்தியோகியா அல்லது மக்கெதோனியாவிலுள்ள பிலிப்பியிலிருந்து வந்திருக்கலாம் என்று ஆதித் திருச்சபையின் பாரம்பரியம் கூறுகிறது.
இவனுடைய இரண்டு புத்தகங்களும் தெயோப்பிலுவுக்கு எழுதப்பட்டது. லூக்கா சுவிசேஷத்தின் தொடர்ச்சியாக அப்போஸ்தலர் நடபடிகள் உள்ளது. இவை எழுதப்பட்ட விதமும் பாஷையும் இவை இரண்டும் ஒரே நபரினால் எழுதப்பட்டவை என்பதைக் காண்பிக்கிறது. தெயோப்பிலு (தேவனால் விரும்பப் படுபவன்) யூத பிரதான ஆசாரியனாக இருந்திருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. இது சரியானதா என்பது தெரியவில்லை (கொலோ.4.14, பிலேமோன் 24).
எழுதப்பட்ட காலமும் இடமும்
இது 60ஆம் (கி.பி. 59-63) அல்லது 70ம், 80ம் (கி.பி.75-85) ஆண்டுகளில் இதை ரோமாபுரியில் லூக்கா எழுதியிருக்கலாம்.
எழுதியதின் நோக்கம் – கிறிஸ்துவின் வாழ்க்கை பற்றி சரியான விதத்தில் எழுதும் படியாகவும், கிறிஸ்துவின் பரிபூரணமான மனிதத் தன்மையை எடுத்துக் காட்டி, அவரே எல்லாருக்கும் இரட்சகர் என்பதை அறிவிக்கும் படியாகவும் இதை எழுதினார். இயேசு கொண்டிருந்த அக்கறை பற்றியும் விவரிக்கிறார். அதாவது, அவர் வந்ததின் நோக்கம் – “இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது. இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறான். இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷ குமாரன் வந்திருக்கிறார்”. (லூக்கா 19.9-10). சவிசேஷம் எல்லா மனிதருக்கும் பொதுவானது என்றும் யூதருக்கும் புற ஜாதியாருக்குமிடையேயும் தடைகளைத் தகர்த்து, யூதர், புறஜாதியார் அல்லது ஆண் பெண் இவர்களுக்கிடையே நிலவி வந்த ஏற்றத் தாழ்வுகளை அகற்றி, உலகமெங்கும் சமத்துவமான மனித குலத்தை உருவாக்கினார் என்றும் காண்பிப்பதே லூக்காவின் நோக்கமாக இருக்கிறது. தன்னுடைய சவிசேஷத்தை வாசிப்பவர்கள் புற ஜபாதியார் என்பதை மனதில் கொண்டு அவர்களுக்காக லூக்கா தமது இரண்டு புத்தகங்களையும் எழுதினார்.
சுவிசேஷம் என்பதை லூக்கா எவ்வாறு புரிந்து கொண்டான்? இது ‘நற்செய்தி என்ற பொருள்படும் கிரேக்க பதத்திலிருந்து வருகிறது. தேவன் தமது நோக்கத்தை நிறைவேற்றி, இயேசுவின் மரணம் உயிர்த்தெழுதலின் மூலமாகத் தமது ராஜ்யத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்ற நற்செய்தியைக் குறிப்பதாக இயேசுவும் அவருடைய சீஷர்களும் ‘சுவிசேஷம்’ என்ற பதத்தை உபயோகித்தார்கள். எனவே, சுவிசேஷத்தை அறிவித்தல் என்று சொல்லும் போது, நற்செய்தியைக் கொண்டு வருதல் என்று பொருள் படுகிறது.
4 சுவிசேஷங்களில் முதல் மூன்று – மத்தேயு, மாற்கு, லுக்கா – இவை ஒரு விசேஷித்த சேர்க்கையான ‘சினாப்டிக் சுவிசேஷங்கள்’ என்று கூறப்படுகின்றன. ‘சினாப்டிக்’ என்பது, ‘ஒரு பொதுவான கருத்தைக் கொண்டவை’ அல்லது, ‘ஒருங்கிணைத்துப் பார்ப்பதற்கு’ என்று பொருள்படும். அவற்றில் கூறப்பட்டுள்ள சம்பவங்களில் பல ஒரே மாதிரியாக இருக்கின்றன. ஒவ்வொரு சுவிசேஷத்திற்கும் தனிப்பட்ட விஷயங்கள், வரலாறு, எழுதப்பட்ட பாவனை ஆகியவை இருந்த போதிலும், பல பகுதிகளில் அடங்கியுள்ள வார்த்தைகளும் சம்பவங்களின் வரிசைக் கிரமமும் ஒன்று போலவே உள்ளன. இந்த மூன்று சுவிசேஷங்களில், லூக்கா சுவிசேஷம் மிக விரிவாக விவரிக்கப்பட்டதாக இருக்கிறது. புதிய ஏற்பாட்டில் மிகவும் நீளமான புத்தகம் இது.
இந்த சுவிசேஷத்தில் லூக்காவின் விசேஷமான கருத்து –
எல்லா சுவிசேஷங்களும் ஒரே விதமான நற்செய்தியைக் கூறினபோதிலும் ஒவ்வொன்றும் தனக்குரிய விசேஷித்தகருத்துகளும் வலியுறுத்தல்களும் உடையனவாக இருக்கின்றன. நீளத்தைப் பொறுத்த வரையில் (அதிகாரங்களைப் பொறுத்த வகையில் அல்ல) லூக்கா சுவிஷேமே மற்றவைகளைக் காட்டிலும் நீளமானது. இயேசவின் வாழ்க்கை, ஊழியம் பற்றிய முழுமையான அறிக்கையைக் கொண்டதாக இருக்கிறது.
2. விசேஷித்த கருத்துகள்
2.A. தேவனும் இயேசு கிறிஸ்துவின் மூலமாக அவர் அருளும் இரட்சிப்பும் – ஆரம்பமான கருத்து. இரட்சிப்பு என்பது என்ன என்று புரிந்துணர்ந்து கொள்வதற்கு முக்கியமாகத் தேவையான இயேசுவின் போதனைகள், இயேசு செய்த காரியங்களை லூக்கா எடுத்துக் காண்பிக்கிறார்.
2.B. தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தில் யூதருக்கும் புற ஜாதியாருக்கும் உள்ள இடம் – தேவனுடைய இரட்சிப்பு, சிருஷ்டி அனைத்திற்கும் பொதுவானது என்ற கருத்து லூக்கா எழுதின சுவிசேஷத்தில் நன்கு அறியப்படுகிறது. அதாவது சுவிசேஷத்தின் நற்செய்தி எல்லா மனிதருக்கும் உரியது. யூதருக்கு மட்டுமல்ல.
2.C. குறிப்பிட்ட சில குழுவினரான மக்கள் பற்றி தேவனுடைய விசேஷித்த அக்கறை - சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட சில மக்களுக்காக தேவன் அக்கறை காண்பிக்கிறார். அதாவது குறைவான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டவர்கள் (உம்) இயேசுவின் காலத்தில் பெண்களும் சிறுவர்களும் குறைவான மதிப்புயைடவர்களாகக் கருதப்பட்டனர். எளியவர்கள், பாவம் செய்தவர்கள், வரி வசூலிப்பவர்கள், யூதாஸ் பகைக்கப்பட்ட சமாரியர்கள் போன்றவர்களை இயேசு மன உருக்கத்துடன கவனித்தார்.
2.D. ஜெபம் – இந்த சுவிசேஷத்தில் ஜெபம் அதிகமாக வற்புறுத்தப்படுகிறது.
2.D.1. முதலாவது இயேசுவின் ஜெபத்தைக் கவனிப்போம்.
i. அவருடைய ஞானஸ்நானத்தின் போது (லூக்.3.21)
ii. குஷ்டரோகியை குணமாக்கின பின்பு (5.16)
iii. 12 சீஷர்களைத் தெரிந்தெடுக்கு முன் (6.12)
iv. அவர் மறுரூபமடைந்த மலையில் (9.28)
v. கெத்செமெனே தோட்டத்தில் (22.42)
vi. சிலுவையில் தம்மைத் துன்புறுத்தியவர்களுக்காக (23.34)
vii. சிலுவையில் தமது ஜீவனை தேவனுக்கு ஒப்புக் கொடுத்து (23.46)
2.D.2. இரண்டாவதாக ஜெபத்தைக் குறித்து இயேசு செய்த போதனையைக் கவனிப்போம்
i. கர்த்தருடைய ஜெபம் (11.2-4)
ii. நள்ளிரவில் வந்த நண்பன் பற்றிய உவமை (11.5-13)
iii. விதவையும் நியாயாதிபதியும் (18.1-8)
iv. பரிசேயனும் ஆயக்காரனும் (18.10-14)
E. துதி, நன்றி செலுத்துதல், சந்தோஷம்
லூக்கா சவிசேணம் களிகூருதலுடனம் ஆராதித்தலுடனும் ஆரம்பித்து அது போலவே முடிவடைகிறது. பாக்கியவதியான கன்னி மரியாளின் கீத்த்தையும் சகரியாவின் ஸ்தோத்திரப் பாடலையும் லூக்கா இங்கு எழுதியிருக்கிறார். தேவனைத் துதித்துத தோத்தரித்து மகிமைப்படுத்துவது பற்றி அடிக்கடி குறிப்பிடப் பட்டிருக்கிறது.
F. பரிசுத்த ஆவியானவர்
ஆவியானவரும் அவருடைய கிரியைகளும் இங்கே முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. மற்ற சுவிசேஷங்களில் எழுதப்பட்டிருப்பவைகளைக் காட்டிலும் அதிகமாக லூக்கா தனது சுவிசேஷத்தில் எழுதியிருக்கிறார். பரிசுத்த ஆவியைப் பற்றி 17 இடங்களில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. இதன் ஆரம்பத்திலிருந்து பரிசுத்த ஆவியானது முக்கிய தோற்றமளிக்கிறது.
3. விசேஷித்த தன்மைகள்
இது மிகவும் விரிவான சுவிசேஷம். எழுதப்பட்டிருக்கும் விதமானது, இதை எழுதியவர் சிறந்த கல்வி கற்றவர் என்பதைக் காண்பிக்கிறது. வியாதிகளைப் பற்றி அடிக்கடி குறிப்பிடுகிறார். மக்களுடன் இயேசு கொண்டிருந்த உறவைக் காண்பித்து, ஜெபம், அற்புதங்கள், தேவ தூதர்கள் பற்றியும் அதிகமாகக் குறிப்பிட்டு, துதி கீதங்களையும் எழுதி, பெண்களுக்கு முக்கியமான இடமளிக்கிறார். 9.51-18.35 வரை மிகுதியான பகுதிகள் மற்ற எந்த சுவிசேஷத்திலும் காணப்படவில்லை.
4. முக்கிய கருத்துகள்
a. இரட்சகராகிய இயேசு கிறிஸ்து - தேவன் இயேசு கிறிஸ்துவாக வந்து நம் மத்தியில் வாசம் செய்தார். அவரே நமது பூரணமான தலைவரும் இரட்சகருமாயிருக்கிறார்.
b. சரித்திரம் – சரித்திரப் பூர்வமாக லூக்கா நாட்களில், நடைபெற்ற சம்பவங்களிலும் அதிக கவனம் செலுத்தி, சரித்திரத்தில் நடைபெற்ற சம்பவங்கள் மக்களுடன், இயேசுவைச் சம்பந்தப் படுத்துகிறார்.
c. ஜனங்கள் – இயேசு மக்களிலும் அவர்களுடனான உறவுகளிலும் மிகுந்த அக்கறையுள்ளவராக இருந்தார். தம்ப் பின் பற்றியவர்கள், நண்பர்கள் – ஆண்கள், பெண்கள், சிறுவர்களிடம் மன உருக்கம் காண்பித்தார். ஆண்கள், பெண்கள், சிறுவர்களிடம் மன உருக்கம் காண்பித்தார்.
d. மனவுருக்கம் – ஒரு முழுமையான மனிதனாக அவர் ஏழைகள், அவமதிக்கப்பட்டோர், காயப்பட்டோர், ஒதுக்கப்பட்டோர், பாவம் செய்தோர் – ஆகியோரிடம் மன உருக்கத்துடன் இரக்கம் பாராட்டினார்.
e. பரிசுத்த ஆவி – இயேசுவின் பிறப்பு, ஞானஸ்நானம், ஊழியம், உயிர்த்தெழுதல் – எல்லாவற்றிலும் பரிசுத்த ஆவியின் பிரசன்னம் இருந்தது. இயேசு பரிசுத்த ஆவியைச் சார்ந்து ஜீவித்தார்.
வேத வசன ஆதாரங்கள்
லுக்கா சுவிசேஷமும் அப்போஸ்தலர் நடவடிகளும் லூக்காவினால் எழுதப்பட்ட புத்தகங்கள்
6. விவாத்த்திற்கான கேள்விகள்.
1. லூக்காவின் தொழில் என்ன?
2. அவன் எந்த நாட்டிலிருந்து வந்தவன்?
3. அவன் எழுதிய புத்தகங்களின் பெயர் என்ன?
4. சுவிசேஷ பயணங்களில் அவன் யாருடன் சென்றான்?
5. அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகத்தை எழுதியதின் நோக்கம் என்ன?
மொழிபெயர்ப்பு
திருமதி டஃப்னி ஜோசப்
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா
No comments:
Post a Comment