Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Sunday, March 11, 2012

88, ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும்


கணவன் மனைவியாகப் பவுலின்ன சுவிசேஷ ஊழியத்தில் பங்காளிகள்

முக்கிய வசனம்

கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடன்வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள். அவர்கள் என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள்; அவர்களைப்பற்றி நான்மாத்திரமல்ல, புறஜாதியாரில் உண்டான சபையாரெல்லாரும் நன்றியறிதலுள்ளவர்களாயிருக்கிறார்கள். (ரோமர் 16.3-4)

முக்கிய குறிப்புகள்
·         ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் சுவிசேஷ உழியத்தில் பவுலுடன் பங்காளிகள்.
·         கூடாரம் பண்ணுகிற தொழிலாளிகளாகத் தங்கள் ஜீவனத்திற்குப் பணம் சம்பாதித்து மற்ற எவர்க்கும் சுமையாக இருக்கவில்லை.
·         பவுல் கூறியபடி இவர்கள் பவுலுக்காகத் தங்கள் உயிரையும் பொருட்படுத்தவில்லை.

1.    முகவுரைஇவர்களுடைய சரித்திரம்
கணவன் மனைவியாக இருவருடைய திறமைகளையும் உபயோகித்து, நல்ல பயனளிக்கும் சக்தி வாய்ந்த குழுவாக இணைந்து ஊழியம் செய்தனர். இவர்களுடைய த்தகைய முயற்சி, அவர்களைச் சுற்றியிருந்தவர்களுக்கும் ஒரு முன் மாதிரியாக இருந்து. ஒரு குடும்பமாகவும், ஊழியக்காராகவும் இவர்கள் இருவரின் பெயர்களும் வேதாகமத்தில் ஒன்றாக இணைத்தே சொல்லப்பட்டிருக்கிற்றது. தனித் தனியாகக் குறிப்பிடப் படவில்லை.

பவுலின் 2-வது சுவிசேஷப் பயணத்தின் போது இவர்கள் பவுலைச் சந்தித்தார்கள். யூதருக்கு எதிராகக் கிலவுதியுராயனின் கட்டளையின்படி இவர்கள் ரோமாபுரியை விட்டு வந்திருந்தார்கள். (அப்.18.2). பவுலும் இவர்களுடன் தங்கி இவர்கள் செய்யும் கூடாரம் பண்ணுகிற வேலையைச் செய்து வந்தான். ஆவிக்குரிய காரியங்களில் தனக்கிருந்த ஞானத்தையும் அறிவையும் பவுல் இவர்களுடன் பகிர்ந்து கொண்டான்.

பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் தங்கள் ஆவிக்குரிய போதனைகளை நன்கு கற்றறிந்து கொண்டார்கள். அப்பொல்லோ என்னும் பெயர் கொண்ட யூதன் ஜெப ஆலயத்தில் தைரியத்துடன் பேசியதைக் கேட்டு, அவனுடைய திறமை, சொல் வன்மையைக் கண்டு அவனைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போனார்கள். அவன் அறியாத விஷயங்களை அவனுடன் பகிர்ந்து கொண்டு, இயேசுவின் வாழ்க்கை, மரணம், உயிர்த்தெழுதல், நமக்குள்ளே வாசம் செய்யும் பரிசுத்த ஆவியானவர் பற்றியும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். சுவிசேஷத்தை முழுவதுமாக நன்கு கற்றிந்து கொண்டு அவன் மேலும் வல்லமையாகப் பிரசங்கித்தான்.

ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் தங்கள் வீட்டை மக்கள் கூடி தேவனை ஆரதிப்பதற்கும் மற்றவர்களுக்குப் பயிற்சியளிப்பதற்கும் உபயோகப் படுத்தினர். பல ஆண்டுகளுக்குப் பின் ரேமாபுரிக்குத் திரும்பிச் சென்று அங்கு ஒரு வீட்டு சபையை ஏற்படுத்தி நடத்தி வந்தனர். இந்த சபை நல்ல வளர்ச்சியடைந்தது. அப்பொல்லோவைப் போல் பிரிஸ்கில்லாளும், எபிரெயர் நிருபத்தை எழுதியிருக்கக் கூடியவர்களின் பெயர்களுடன் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒரு கணவன் மனைவிக்கிடையில் என்ன நடக்கிறது என்பதையே அதிகமான கவனிக்கும் இந்நாட்களைப் போல் இல்லாமல் ஒரு கணவன் மனவியின் மூலமாக என்ன நடக்கக்கூடும் என்பதற்கு ஆக்கில்லா பிரிஸ்கில்லாள் தம்பதியினர் ஒரு உதாரணமாக இருக்கின்றனர். அவர்கள் இணைந்து பயனுள்ளவர்களாக ஜீவிப்பது அவர்களின் நல்லுறவைக் காண்பிக்கிறது. கிறித்வர்கள் வீடுகளே சுவிசேஷத்தைப் பரப்புவதற்கு நல்ல கருவியாக அமைகின்றன. உன் வீட்டிற்கு வரும் உற்றார், உறவினர், நண்பர் உன் வீட்டில் கிறிஸ்துவைக் காண்கிறார்களா என்பதே நமது கேள்வி.


2.    பலமும் சாதனைகளும்.
a.     ஆதித் திருச் சபையில் ஊழியம் செய்த சிறப்பான ஒரு கணவன் மனைவி குழு.
b.     கிறிஸ்துவுக்கு சேவை செய்ததுடன் கூடாரம் பண்ணும் தொழில் செய்து வாழ்க்கைக்குத் தேவையான பணம் சம்பாதித்தனர்.
c.     இவர்கள் பவுலுக்கு நெருக்கமான நண்பர்கள்.
d.    கிறிஸ்துவைப் பற்றிய முழுமையான செய்தியை அப்பொல்லோவுக்குக் கற்பித்தனர்.

3.    இவர்களிடமிருந்நது கற்றுக் கொள்ளும் பாடங்கள்.
a.     கணவன், மனைவி இணைந்து பயனுள்ள ஊழியம் செய்ய முடியும்.
b.     சுவிசே ஊழியத்திற்குக் கிறிஸ்தவ இல்லம் ஒரு விலையுயர்ந்த கருவி.
c.     ஒவ்வொரு விசுவாசியும் ஆலயத்தில் என்ன பங்கு பெறுபவர்களானாலும் தங்களுடைய மார்க்கம், விசுவாசம் பற்றி சரியான பிரகாரம் கற்ற்றிந்திருக்க வேண்டும்.

4.    வேத வசன ஆதாரங்கள்
a.     அப்.18ம் அதிகாரம், ரோமர் 16.3-5, 1கொரி.16.119, 2தீமோ.4.19

5.    விவாதிக்க வேண்டிய கேள்விகள்
a.     ஆக்கில்லா, பிரிஸ்ல்லாள் தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை எவ்வாறு சம்பாதித்துக் கொண்டனர்?
b.     தங்கள் வீட்டை எவ்வாறு தேவனுடைய ஊரியத்திற்கு உபயோகித்தனர்?
c.     அப்பொல்லோ தனது கிறிஸ்தவ ஜீவியத்தில் வளர்ந்தேறத்த தக்கதாக அவர்கள் எவ்வாறு உதவி செய்தார்கள்?

மொழிபெயர்ப்பு
திருமதி டஃப்னி ஜோசப்,
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா.

No comments:

Post a Comment