60. மிரியாம் – ஒரு தீர்க்க்கதரிசியாள்
முக்கிய வசனம்
20 ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள். 21 மிரியாம் அவர்களுக்குப் பிரதிவசனமாக: கர்த்தரைப் பாடுங்கள், அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார் என்று பாடினாள். யாத்திராகம்ம் 15.20,21
சுருக்கமான குறிப்புகள்
• ஆரோனும் மிரியாமும் மோயின் சகோதரனும் சகோதரியும் ஆவர்.
• மிரியாம் – பெண் தீர்க்கதரிசிகளில் தலைமையானவள்.
• தேவனுடைய நியாயத் தீர்ப்பு அவளைக் குஷ்டரோகியாக்கிற்று.
1. முகவுரை
மிரியாம் என்ற வார்த்தைக்குப் பலவிதமான அர்த்தம் கூறப்படுகிறது. யூத போதகர்கள் இதற்குக் கசப்பு என்றும் வேறு சிலர் கடலின் நட்சத்திரம் என்றும் பொருள் கூறியிருக்கின்றனர். ‘நேசிக்கும் ஒருவர்’ அல்லது ‘யாவேயினால் நேசிக்கப்படும் ஒருவர் என்றும் இது பொருள் படலாம்.
இவள் இஸ்ரவேலின் முதலாவது பெண் தீர்க்கதரிசியாக அறிவிக்கப் பட்டாள். பெண்கள் பாடிய வெற்றிப் பாடலை முன் நின்று பாடினாள் (யாத்.15.20,21). இவள் மோசே ஆரோன் என்பவர்களின் சகோதரி. இவள் தாயாரின் பெயர் யோகபேத். தகப்பனாரின் பெயர் அம்ராம். குழந்தையான தன் சகோதரனின் நாணல் பெட்டியை நைல் நதிக் கரையில் வைத்து தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள். தன்னுடைய தாயாரே அந்தக் குழந்தையை வளர்க்கத் தக்கதாக ஆலோசனை கூறினாள் (யாத். 2.4,7). உலக சரித்திரத்திலேயே ஓர் அதிசயமான குழந்தையைப் பராமரிக்கும் வேலையைச் செய்தாள். பாலகனான தன் சகோதரன் தண்ணீர் புக முடியாத நாணற் பெட்டியில் நைல் நதியில் மிதப்பதைக் கவனமாகப் பார்த்துக் கொண்டாள்.
மோசேயின் மேன்மை, அதிகாரத்தைக் கண்டு ஆரோனும் மிரியாமும் பொறாமை கொண்டதாகத் தெரிகிறது. கீழ்ப்படியாமையினாலும் மோசேக்கு விரோதமாகப் பேசின காரணத்தினாலும் மிரியாமைத் தேவன் குஷ்டரோகத்தினால் வாதித்தார். (எண்.12.7-10). மோசே அவளுக்காக ஜெபித்து, குஷ்டரோகத்திலிருந்து அவளைக் குணப்படுத்தினான்.
மிரியாமின் குணாதிசயங்கள் என்ன?
நெருக்கமான நேரங்களில் அவள் சுயமாகவும், சீக்கிரமாகவும் சிந்திக்கக் கூடியவளாக இருந்தாள். குழந்தை மோசேக்கு ஒரு தாதி தேவையாக இருந்தது. மிரியாமுடைய சிந்திக்கும் திறனால் மோசே தனது சொந்த தாயின் வளர்ப்புப் பயிற்சியும் பெற முடிந்தது. இது மோசேக்குப் பெரிய ஆசீர்வாதமாக இருந்தது.
2. அவள் ஒரு திறமைசாலியான சகோதரி
கர்த்தர் மோசேயைக் கொண்டு மாத்திரம் பேசினாரா? என்று கேட்டாள். ஒரு தலைவியாக மதிக்கப்பட்ட இவள் தன் கையில் தம்புரை எடுத்துக் கொண்டு, பெண்கள் வெற்றியைக் கொண்டாடிப் பாடிய போது அவர்களுக்கு முன்னாக வழி வடத்திச் சென்றாள் (யாத்.15.20,21). ஜனங்களும் மோசேயும் சிவந்த சமுத்திரத்தைக் கடந்து, அதைக் கொண்டாடிய போது மிரயாமும் அவர்களுடன் சேர்ந்து பாடினாள். (யாத்.15.1-21).
மோசேயின் தலைமைத்துவத்தை வெளிப்படையாகக் கண்டனம் செய்தாள்.
3. அவள் பாடல்கள் எழுதினாள். (பாடலாசிரியை) கஷ்டங்களைக் கடந்து செல்லும் போது சங்கீதங்களும் பாடல்ளும், தேவனுக்குத் துதியும் நன்றியும் செலுத்தி நமது உள்ளத்தின் மகிழ்ச்சியைத் தெரிவிக்கக் கூடியனவாக இருக்கின்றன. (யாத்.15.1.21).
4. அவள் தீர்க்தரிசியானாவள் (யாத்.15.20)
அவள் தன் கையிலே தம்புரை எடுத்துக் கொண்டாள். சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே போனார்கள் (யாத்.15.21). இதினால் மாத்திரமல்ல, அவள் தேவனிடமிருந்து வெளிப்படுத்தலைப் பெற்றதினால் தீர்கதரிசிசனமும் சங்கீதமும் வேதாகமத்தில் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன (1சாமு.10.5, 1நாளா.25.1).
முடிவுரை
தேவன் நமக்கு வாய்ப்புகளைக் கொடுப்பது மட்டுமல்ல. நமது சுதந்திரம் அல்லது உரிமைகளைக் குறிப்பிட்ட வரம்புக்கு உட்படுத்துகிறார். மோசேயின் அதிகாரம், வல்லமை குறித்து மிரியாம் பொறாமைப்பட்டாள். தன்னுடைய சிறிய சகோதரன் மிகப் பெரியவனாவதைப் பார்க்கிறாள். அவள் பொறாமைக்குள்ளாகி, வெளியரங்கமாக மோசேயின் தலைமைத்துவத்தைக் கண்டனம் செய்து அதினிமித்தம் தேவனால் தண்டிக்கப் பட்டாள். வனாந்தரப் பயணத்தின் கடைசிப் பகுதியில் மரித்து, காதேசிலே அடக்கம் செய்யப்பட்டாள் (எண்.20.1).
வேதாகம ஆதாரங்கள்
எண்.12.20, உபா.24.9,, 1நாளா.6.3, மீகா 6.4-இஇலும் குறிப்பிடப்பட்டிருக்கிறாள்.
விவாதிக்க வேண்டிய கேள்விகள்
1. மிரியாமின் சகோதரர்கள் யார்?
2. அவள் செய்த நன்மைகள் யாவை?
3. அவள் ஏன் மோசேயின் மேல் பொறாமை கொண்டாள்?
4. அவள் ஏன் மோசேக்கு விரோதமாகக் கலகம் செய்தாள்? (எண்.12)
5. மிரியாமின் குணாதிசயங்கள் யாவை?
மொழிபெயர்ப்பு
திருமதி டஃப்னி ஜோசப்.
No comments:
Post a Comment