முதலாவது இஸ்ரவேலின் இராஜா
முக்கிய வசனம்:
WRONG
VERSE
சுருக்கமான குறிப்புகள்.
v பென்யமீன் கோத்திரத்திலுள்ள முதலாவது இஸ்ரவேலின் இராஜா.
v சாமுவேல் தீர்க்கதரிசிக்கு சவுல் கீழ்ப்படியாமல் இருந்ததால் அநேக பிரச்சனைகள்
ஏற்பட்டன.
v கர்த்தர் சவுலைத் தள்ளிவிட்டு தாவீதை நல்வரவேற்போடு ஏற்றுக்கொண்டார்.
v அவனின் வீழ்ச்சி மிகுந்த துக்ககரமாய் இருந்தது.
1.
அறிமுகவுரை.
First three lines wrong verses.- Pls check.
அவன் கிபியாவில் வசித்தான். (1 சாமு: 10: 26) நாகாசின் கீழுள்ள அம்மோனியர்கள், கீலேயாத் யாபேசின் ஜனங்களிடம் அலட்சியமான, அடிமைத்தனமான சொற்களைப் பேசினார்கள். சவுல் தேசத்தை எழுப்பி, அவர்கள் பாதுகாப்பிற்காக எதிரிகளைத் தோற்கடித்து, அவன் முன்னேற்றத்தினால் கோபப்பட்டவர்களை அவமானப்படுத்தினான். (1 சாமு: 10 : 27; 11 : 1 –
13) சாமுவேல் தீர்க்கத்தரிசியின் தூண்டுதலால் சவுல் கில்காலில் கர்த்தருக்கு முன்பாக
இராஜாவாக ஏற்படுத்தப்பட்டான். ( 1 சாமு: 11 : 14) அவர்கள் விரோதிகளுக்கு எதிராக உண்டான யுத்தத்தில் வெற்றியடைந்து, ஜனங்களின் நம்பிக்கைக்கு ஏற்றவனாகத் தன் உரிமையை நியாயம்
என்று நிரூபித்தான். ( 1 சாமு: 14 : 47 – 52)
என்றாலும் அமலேக்கியரை அழிக்க உத்தரவு கிடைத்தும், அவன் இராஜாவையும் கொள்ளைப் பொருளில் நல்லவைகளையும் காப்பாற்றினதினால்
சாமுவேலால் கண்டிக்கப்பட்டு, கர்த்தர் அவனைத் தள்ளிவிட்டார் என்று எச்சரித்தான். ( 1 சாமு: 15) அந்த நேரத்தில் அவன் குணம்
துக்கமாகவும் கவலையாகவும் இருந்தது. அப்பொழுது கர்த்தரால் வரவிடப்பட்ட
ஒரு பொல்லாத ஆவி அவனைக் கலங்கப்பண்ணினது. (1 சாமு: 16 : 14) அப்படிப்பட்ட சமயங்களில்
அவன் முதலாவது தாவீதைப் பார்த்தான். பரிசோதனைக்காக ஒரு சங்கீத
மேய்ப்பனான ஒருவன் அரண்மனைக்குக் கொண்டுவரப்பட்டான். (1 சாமு: 16 : 18) இந்த நிகழ்ச்சி அந்தச்
செயல் நியாயமென்று நிரூபித்தது. ( 1 சாமு: 16: 23) தாவீதுக்கான அன்பு இராஜாவின் உள்ளத்தில் எழும்பினது. அன்பு அவன் குமாரன் யோனத்தான் விஷயத்தில் இன்னும் அதிகமாக மிஞ்சினது. இதிலிருந்து சவுல், தாவீதின் சரித்திரம் மிக நெருக்கமாக இணைக்கப்பட்டிருக்கிரது. தீர்க்கதரிசன வரம் சவுலால் காட்டப்பட்டது. முதலாவது அவனைவிட்டு விலகினது. பின் எப்பொழுதாவது திரும்ப
வந்து, அவனது நாற்பது ஆண்டுகள்
அரசாட்சியின் மிகுதியான காலங்களில் கடுங்கோபம் வெடித்ததில் அவன் பயங்கரமான் ஆர்வம்
காட்டினது குரிப்பிடப்பட்டிருந்தது. ( 1 சாமு: 19 : 24; 22 : 6; 23: 3 – 9; 2 சாமு: 21 : 1) வேறொரு மனநிலையில் சவுல்
தானாகவே அஞ்சனம் பார்க்கிற ஒரு விவேகமுள்ள ஸ்தீரியிடம் அறிவுரை தேட சந்தர்ப்பம் எடுத்துக்
கொண்டான். ( 1 சாமு: 28 : 3) இந்தச் சம்பவம் பெலிஸ்தரின் படையெடுப்பு சீக்கிரத்தில் பின்தொடரப்பட்டு சவுலைத்
தோற்கடித்து, அவனைக் காயப்படுத்தி அவனுடைய
குமாரர்களையும் கொன்று போட்டார்கள். இந்தக் கடைசி ஆபத்து, காயம்பட்ட இராஜா தன் சொந்த பட்டயத்தை நட்டு அதின் மேல் விழுந்தான். (1 சாமு: 31 : 1 – 6) அவன் தலை டிரகன் கோவிலில் வைக்கப்பட்டது. அவனது வஸ்திரமில்லாத உடலையும், அவன் மூன்று குமாரர்களுடையதையும் பெத்சானின் அலங்கத்திலே தூக்கிப் போட்டார்கள். அவன் வேலை செய்த தொடக்க காலத்தில் கீலேயாத் யாபேசின் ஜனங்கள் கொலை செய்யப்பட்டபோது
அவர்களை அவன் காப்பாற்றினான். ஆனபடியினால் அவர்கள் அவமானப்படுத்தட்பட்ட
பிணத்தை இரவில் எடுத்துக் கொண்டு போய் அவைகளைத் தகனம்பண்ணி மரியாதையோடு அடக்கம் பண்ணினார்கள். ( 1 சாமு: 31 : 11 – 13)
2. அவன் பங்கு கொண்ட மேன்மையான காரியங்கள்.
a) அவன் நேரத்திற்கேற்ற மனிதனாயிருந்தான். இஸ்ரவேலின் முதலாவது இராஜா. தாவீது, சாலமோனின் கீழ், பெரிய அதிக சக்தி வாய்ந்த ஒன்றுபட்ட குழுவுக்கு நியாயாதிபடியாயிருந்த
காலத்தில், தளர்ந்த ஒழுங்குபடுத்தப்பட்ட
குலத்தின் குழுவினரிலிருந்து மாறுபடும் காலத்தில் நின்றான். சமயக்கருத்தின் முக்கிய நோக்கத்தின்படி அந்தக் குலத்தவர்களுக்கு சீலோவில் சில
ஒன்றுபட்ட மதிப்பு இருந்தது.(1 சாமு.) கில்கால் ஆராதனைக்குரிய
மையமாக அமைந்தது.
b) முன் தொடக்க காலத்தில் சாமுவேல் அவனை இராஜாவாகிறதற்குட் தகுதியானவன் என்று கண்டு
பிடித்தான். சவுல் இந்தச் செய்திகளைக்
கேட்டவுடனே, தேவனுடைய ஆவி அவன்மேல்
இறங்கினதினால் அவன் மிகவும் கோபம் மூண்டவனானான். ( 1 சாமு: 11: 6)
c) அவனின் தேவனுடைய ஆவி ஜனங்கள் அவனை இராஜாவாகத் தேர்ந்தெடுக்கப்பட உதவி செய்தது. தேவனுடைய ஆவியின் சக்தி கர்த்தரின் சக்தியை நிரூபித்தது.
d) பெலிஸ்தியரின் இரும்பு போன்ற பலத்தின் மேல் உள்ள பிரத்தியேக உரிமையை உடைக்க
வாய்ப்பு கிடைத்தது. பிறகு அவர்களுக்குத் தேவையான அரசியல் இராணுவத் தலைமைத்துவத்தைக் கொடுத்தான். அவன் அநேக சமயங்களில் அவனுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டான். ஆனால் இரக்கம், மன்னிப்பு இவைகளின் கண்டிப்பான நிராகரித்தலை எதிர்கொண்டான்.
3.
அவனின் பலவீனங்களும், பலமுள்ளவைகளும்.
a) வேதாகமம் சவுலைத் தள்ளப்பட்ட இராஜாவாக அறிமுகப்படுத்துகிறது. ஏனென்றால் தீர்க்கதரிசன கட்டளைகளுக்கு அவன் ஒத்தாசை பூர்த்தியாகவில்லை.
b) சவுல் விசாலமான பரப்பளவு உள்ள ஆதரவு உடையவனாகக் காணப்பட்டான்.
4. முடிவுரை
சவுல் நாத்தானால் இரக்கமுள்ள ஆலோசனை கூறப்பட்டவனாயிருந்தால், சரித்திரம் மொத்தமாக வித்தியாசமான அவனுடைய சுபாவத்தை அறிமுகப்படுத்தும்
என்று கூறப்பட்டிருக்கிறது.
5.
வேதாகமக் குறிப்புகள்:
அவன் கதை முக்கியமாக 1 சாமுவேலில் இருக்கிறது. (1 சாமு:1 :28), 1 சாமு: 9 : 1 -2; 1 சாமு 6 : 7; 10: 8; 11:14 -15; 9 : 20; 11; 14: 52; 2 சாமு: 21; அதி:
அவன் கதை முக்கியமாக 1 சாமுவேலில் இருக்கிறது. (1 சாமு:1 :28), 1 சாமு: 9 : 1 -2; 1 சாமு 6 : 7; 10: 8; 11:14 -15; 9 : 20; 11; 14: 52; 2 சாமு: 21; அதி:
20 : 5; சவுல், தாவீதின் கதைகள் அவனை நல்லவிதமாக
அறிந்து கொள்ள உதவியாயிருக்கும்.
6. விவாதத்திற்குரிய கேள்விகள்
6.1
பழைய ஏற்பாட்டிலுள்ள சவுலும், புதிய ஏற்பாட்டிலுள்ள சவுலும் யார் இவர்கள்?
6.2
`சவுல்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம்
என்ன?
6.3
புகழ் பெற்ற அவனுடைய குமாரன்
யார்?
6.4
எது, சாமுவேல் தீர்க்கதரிசியை `பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் நல்லது’ என்று சொல்ல வைத்தது?
6.5
அவனுடைய பலவீனங்கள் எவைகள்?
மொழிபெயர்ப்பு
திருமதி நாயகம் பட்டுபரி.யாக்கோபின் ஆலயம்
கோலாலம்பூர்
No comments:
Post a Comment