எல்க்கானா, அன்னாள்
இவர்களின் குமாரன்.
முக்கிய
வசனம்:
“சாமுவேல் வளர்ந்தான், கர்த்தர்
அவனுடனே கூட இருந்தார். அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும்
ஒன்றையாகிலும் தரையிலே விழுந்து போகவிடவில்லை. சாமுவேல் கர்த்தருடைய தீர்க்கதரிசிதான்
என்று தாண் முதல் பெயெர்செபா மட்டுமுள்ள சகல இஸ்ரவேலருக்கும் விளங்கினது.” (1 சாமுவேல்: 3: 19 – 20)
சுருக்கமான
குறிப்புகள்.
v பழைய ஏற்பாட்டில் உயர்ந்த தீர்க்கதரிசிகளில் ஒருவனாயிருந்தான்.
v எல்க்கானா, அன்னாள்
இவர்களின் குமாரன்.
v இராஜாவைத் தேர்ந்தெடுப்பவராய் இருந்ததால் சவுலையும், தாவீதையும் இராஜாவாக அபிஷகம் செய்தான்.
v சாமுவேல் சவுல் இராஜாவைக் கண்டித்தான்.
1.
முகவுரை – அவன் கதை.
சாமுவேல் என்னும் பெயர் “கர்த்தரிடத்தில்
அவனைக் கேட்டேன்” என்று
பொருள்படும்படி எபிரேய மொழியிலிருந்து வந்தது. அவன் எல்க்கானாவுக்கும் அவன்
மனைவியாகிய அன்னாளுக்கும் மகனாக ஈசாக்கைப் போல வாக்குத்தத்தின் குழந்தையாக இருந்தான். (1 சாமு. 1) சாமுவேல் பணக்கார முக்கியமான
ராமதாயீம் ஊரிலுள்ள குடும்பத்தில் அவன் தகப்பன் எல்க்கானாவின் வம்சவளியின்படி 4வது தலைமுறைக்கு மேல் உள்ள வரிசையில் சேர்ந்தவன் என்று குறிப்பிட்டிருக்கிறது. (1 சாமு. 1:1) நாளாகமத்தில் லேவியின் குமாரர்களில்
ஒருவன் என்று குறிப்பிட்டிருந்தாலும் அவன் எப்பிராயீமனாயிருந்தான். (1 நாளா: 6 : 28) சாமுவேல் பிறப்பதற்கு முன்
பிரமாணம் செய்யப்பட்டான். (1 சாமு. 1:11) தேவனுக்கு முன்பாக நசரேயனாக செய்த விண்ணப்பம் காப்பாற்றப்பட்டது. (1 சாமு. 1:24–28) அந்தப் பிள்ளை ஆசாரியனாகிய
ஏலிக்கு முன்பாக கர்த்தருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தான். (1 சாமு. 2:11) அவன் ஆசாரியனுக்குரிய வெண்
வஸ்திரமான சணல் நூல் ஏபோத்தைத் தரித்திருந்தான். அவனுடைய தாய் வருஷந்தோறும்
வருகிற போதெல்லாம் சின்ன சட்டையைக் கொண்டு வருவாள்.
(1 சாமு: 2:19) ஏலியின் குமாரர்கள் பினெகாசும்
ஓப்னியும் வெளிப்படையாக வெட்கப்படாமல் பாவம் செய்ததால்
(1 சாமு.2:12) வயதான தகப்பனால் கண்டிக்கப்பட்டார்கள். பின்பு
தேவனின் வார்த்தை ஏலியின் குடும்பத்தாரின் தண்டனையை நிறைவேற்றப் போகிறது சாமுவேலிடம்
வந்தது. (1 சாமு. 3:11–14)
சில
வருஷங்களுக்குப் பிறகு, சாமுவேல்
அதிகாரியாகவும், நீதிபதியாகவும் அலுவலகத்தில்
காணப்பட்டான். கர்த்தருடைய பெட்டி பாலஸ்தீனியர்களால் அனுப்பப்பட்டது. இஸ்ரவேலர்கள்
பீர்கால்களையும் அஸ்தரோத்தையும் விலக்கிவிட்டு,
கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்யும்படி சாமுவேலால் எச்சரிக்கப்பட்டார்கள். பாலஸ்தீனியர்கள்
திரும்பவும் எதிர்த்ததால், சாமுவேல்
விரோதிகளிடம் ஜனங்களுக்காகப் பரிந்து பேசி வெற்றியை ஞாபகப்படுத்த எபனேசர் என்ற தூணை (கல்லை) சாமுவேல்
நிறுவினான். அவன் வீடு ராமாவில் இருந்தது. ஆனால் அவன் புறப்பட்டு பெத்தேலையும், கில்காலையும், மிஸ்பாவையும் சுற்றிப் போய் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான். (1 சாமு. 7)
இன்னும்
நீண்ட இடைவேளைக்குப் பிறகு சாமுவேல் முதிர் வயதானவனாகத் திரும்பவும் காணப்பட்டான். அவன்
இரண்டு குமாரர்கள் யோவேலையும் அபியாவையும் அவன் இடத்தில் நியாயாதிபதிகளாக ஆட்சி செய்ய
அனுமதித்தான். (1 சாமு.8:1) அவர்களின்
தவறுதலான வழிகளால் ஜனங்கள் ஒரு இராஜா வேண்டும் என்று உரிமையுடன் கேட்டார்கள். சாமுவேல்
வழிகாட்டுதலுக்காகக் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான். அவர்
ஜனங்களின் விருப்பத்தின்படி அவனைச் செய்யச் சொன்னார்.
ஒரு மனிதனின் வாழ்க்கை, ஒரு தேசத்தின் அதிர்ஷ்ட555த்தின் மேல் உயர்ந்தவனாக ஏற்படுத்துவது எவ்வளவு அபாயகரமானது என்று விளக்கப்படுத்தினான். (1 சாமு: 8)
சமுவேல்
தேவனின் உத்தரவுப்படி சவுலை இராஜாவாக அபிஷேகம்பண்ணினான். சவுல் பாவம் செய்தபோது, சாமுவேல் தெய்வீகமான கண்டனத்தை அனுப்பி புறக்கணித்தான். (1 சாமு: 13 : 14) சவுலைப் புறக்கணித்த பின்
தாவீதை அவன் அபிஷேகம் பண்ணினான். (1 சாமு.16:1-13) இராஜாவின் நியமனம் மூலம் அவன் நியாயாதிபதியாக மாறினவனாகக் காணப்பட்டான். (1 சாமு.7:15) அதனால் அவன் தீர்க்கதரிசிகளில்
ஒருவனோ என்று சாதாரணமாய்ப் பேசப்பட்டான். (1 சாமு.10–11) சாமுவேல் மரணமடைந்தான். எல்லா இஸ்ரவேலரும் துக்கம்
கொண்டாடி அவனை ராமாவிலே அடக்கம் பண்ணினார்கள்.
(1 சாமு:25:1) அவன் ஒரு மேன்மையான நபர்
என்று ஒப்புக்கொள்ளப்பட்டான். (See IDB, Vo. R-Z, pp 202-203)
2. அவனுடைய பலமும் திறமைகளும் எவைகள்?
a)
அவன் தளர்ந்த அரசியலமைப்பு
கொண்ட ஜாதி ஜனங்களிலிருந்து இஸ்ரவேலை ஏகாதிபத்திய இராஜ்யமாக மாற்றுவதற்கு உதவி செய்ய
தேவனால் உபயோகிக்கப்பட்டான்.
b)
அவன் இராஜாவை உருவாக்குகிறவனாயிருந்தான்
அவன் இஸ்ரவேலின் முதல் இரண்டு இராஜாக்களை நியமித்தான்.
அவன் பங்கு இஸ்ரவேலுக்குள் ஏகாதிபத்திய இராஜ்யத்தை அறிமுகப்படுத்த
முடிவு எடுப்பதாயிருந்தது.
c)
சாமுவேல் இஸ்ரவேல் நியாயாதிபதிகளில்
கடைசி மிகுந்த திறமையுள்ளவனாயிருந்தான்.
d)
சாமுவேல் எபிரேயர் 11ம் அதிகாரத்தில் விசுவாசத்திற்கு விசேஷித்த அடையாளமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறான்.
3.
அவன் வாழ்க்கையிலிருந்து
நாம் படிக்கக்கூடிய பாடங்கள்
a.
அவன் தலைவனாயிருந்தும் அவன்
குமாரர்களை தேவனோடு நெருங்கிய சம்பந்தமுள்ளவர்களாய் வாழ வழிநடத்த முடியவில்லை.
b.
என்ன ஜனங்கள் நிறைவேற்றுகிறார்களோ
அதன் முக்கியத்துவம் அவர்கள் தேவனோடு சம்பந்தப்பட்டிருப்பது நேரிடையாக சம்பந்தப்பட்டிருக்கும்.
c.
நாம் எதையும் செய்வதை விட
நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதுதான் மிகவும் முக்கியமானது.
d.
சாமுவேல், யார் சிறிய காரியங்களில் விசுவாசமாயிருக்கிறார்களோ அவர்களைப்
பெரிய காரியங்களிலும் நம்பலாம் என்று கர்த்தர் கண்டுபிடித்ததை எடுத்துக் காட்டினார். அவன்
தேவன் மற்ற பொறுப்புகளுக்கு வழிகாட்டுமட்டும்
அவன் பிரதான ஆசாரியன் (ஏலி) ஆசரிப்புக் கூடாரத்தில் உதவியாளனாக வளர்ந்து வந்தான். கர்த்தர்
சாமுவேலை உபயோகப்படுத்த முடிந்தது. ஏனென்றால் அவன் கர்த்தருக்குத்
தன்னை உண்மையாக அர்ப்பணித்தான். அவன்
கர்த்தரின் வழிகாட்டுதலைக் கவனித்ததால் முன்னேறிச் சென்றான். நாம்
போராட்டத்தோடு வெற்றி பெறுவதை இழந்து போகாமல் இருக்க,
அடிக்கடி நாம் கர்த்தரிடம் நம் வாழ்க்கையைக் கட்டுப்படுத்தக்
கேட்கிறோம். நாம் போகவேண்டும் என்று நினைக்கிற இடத்திற்குப் போக கர்த்தரிடம் நமக்கு உதவி
செய்யக் கேட்கிறோம்.
இந்தப் போக்கைச் சரிப்படுத்த முதல் படி நமது வாழ்க்கையின்
கட்டுப்பாட்டையும், முடிவையும்
அவருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். இரண்டாவது படி, கர்த்தர் நமக்கு முன்னமே தெரிந்த நம்மை உபயோகப்படுத்த வேண்டியவைகளைச்
செய்ய வேண்டும். மூன்றாவது படி, வாழ்க்கைக்காக அவரின் தயாரிப்பான கர்த்தரின் வார்த்தையிலிருந்து
மேலும் வழிகாட்டுதலைக் கவனித்தல். (p.447 Study Bible
NIV.)
4. வேதாகமக் குறிப்புகள்
அவன் கதை 1 சாமு: 1 – 28ல், கூறப்பட்டிருக்கிறது. அவன் சங். 99:6; எரே.15:1; அப்.3:24; 13:20; எபி.11: 32, இவைகளில் எல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கிறான்.
5.
கேள்விகளும் விவாதங்களும்
a.
அவனுக்குப் பயிற்சி கொடுத்த பிரதான ஆசாரியன் யார்?
b.
யாரிடம் இஸ்ரவேல் இராஜாவாக அவன் அர்ப்பணித்தான்?
c.
அவன் ஏன் சவுலைக் கண்டனம் செய்தான்?
d.
அவன் பலவீனங்கள் எவைகள்?
e. அவன் பெயர் `சாமுவேல்’
என்பதற்கு அர்த்தம் என்ன?
மொழிபெயர்ப்பு
திருமதி நாயகம் பட்டு
பரி.யாக்கோபின் ஆலயம்.
No comments:
Post a Comment