74. ரூபன்
யாக்கோபு, லேயாள் இவர்களின்
மூத்த குமாரன்.
முக்கிய வசனங்கள்:
“ரூபனே, நீ என் சேஷ்ட புத்திரன், நீ என்
சத்துவமும், என் முதற் பெலனுமானவன், நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன்.
தண்ணீரைப் போல தளம்பினவனே, நீ மேன்மை அடையமாட்டாய், உன் தகப்பனுடைய மஞ்சத்தின் மேல்
ஏறினாய், நீ அதைத் தீட்டுப்படுத்தினாய், என் படுக்கையின் மேல் ஏறினானே.” (ஆதி: 49:
3 – 4)
சுருக்கமான
குறிப்புகள்.
v யாக்கோபுக்கும் லேயாளுக்கும் அவன் மூத்த குமாரன்.
v அவன் குணத்தில் சில வியக்கத்தக்க தன்மைகள் இருந்தன.
v அவன் அவன் சகோதரர்களிடம் யோசேப்பைக் கொல்ல வேண்டாம் என்று அறிவுரை கூறினான்.
v ரூபன் பென்யமீனின் பாதுகாப்பிற்காக போதுமான உத்தரவாதமாக அவன் சொந்த இரண்டு குமாரர்களையும்
சமர்ப்பித்தான்.
v அவன் அவன் தகப்பனின் மறுமனையாட்டியாகிய பில்காளோடே சயனித்தான். (ஆதி: 35)
v பரம்பரைத் தலைவன் தண்ணீரைப்போல தளம்பினவனே, நீ மேன்மை அடையமாட்டாய் என்று சொன்னான்.
(ஆதி: 49: 4)
1. முகவுரை – அவன் கதை.
அவன் பெயர் ”நோக்கிப் பார் மகனே” என்று பொருள்படும். பெற்றோர்கள் வழக்கமாகத் தங்கள் பிள்ளைகளின் குணத்தைப்
பற்றி சிறந்த நீதிபதிகளாக இருக்கிறார்கள்.
யாக்கோபு அவன் குமாரன் ரூபனின் தனித்தன்மையைத் தண்ணீருக்கு ஒப்பிட்டுச் சுருக்கமாகச்
சொன்னன். தவிர தண்ணீர் உறையும் பொழுது அதன்
நிலையான சொந்த வடிவம் இருக்காது. அது எப்பொழுதும்
அதன் கொள்கலன் அல்லது சுற்றுச் சூழலுக்கு ஏற்ப தன்னை வடிவமைத்துக் கொள்ளும். ரூபன் எப்போதும் நல்ல நோக்கமுள்ளவன். ஆனால் அவன் ஒரு கூட்டத்திற்கு எதிர்த்து நிற்கத்
தகுதியில்லாதவனாகக் காணப்பட்டான். அவன் உறுதியின்மை
அவனை நம்புவது மிகவும் கடினமாயிருந்தது. அவன்
தனிப்பட்ட, பொதுவான திறமைகள் இரண்டும் பெற்றிருந்தான். ஆனால் இவைகள் ஒன்றுக்கொன்று எதிர் எதிராயிருந்தது. அவன் தனிப்பட்ட முறையில் தீமைக்கு எதிராக நடுநிலையாக
உள்ள நம்பிக்கையால் யோசேப்புக்கு எதிராக அவன் சகோதரர்கள் எடுத்த முடிவுக்கு கூடப் போனான். அந்தத் திட்டம் தோற்றுப்போனது. சமாதானத்தால் குற்றங்களை அழிக்க வழி இருக்கிறது. குற்றங்கள் இல்லாமல் வழிகாட்டுதல் குறைவினால் வாழ்க்கை
அழிந்து போகும். ரூபன் அவன் தகப்பனாரின் மறுமனையாட்டியுடன்
சயனித்தல், அவன் முற்கால வாழ்க்கையில் தெரிந்து கொண்ட மேன்மையை எவ்வளவு கீழ்த்தரமாய்
இழந்துவிட்டான் என்பதைக் காட்டுகிறது.
உங்களுடைய
பொதுவான தனிப்பட்ட வாழ்க்கை எப்படி உறுதியாய் இருக்கிறது? நாம் அவைகள் வித்தியாசமானவைகள் என்று நினைக்கக்கூடும். ஆனால் அவைகள் ஒன்றுக்கொன்று தாக்கக்கூடும் என்பதை
நாம் அறிய தாமதிக்கக் கூடாது. உன் வாழ்க்கையில்
எப்போதும் நிலைத்திருக்கும் குற்றங்கள் எவைகள்?
யாக்கோபின் அவன் மகன் ”தண்ணீரைப் போல் தளம்பினவன்” என்ற விளக்கம் உன் வாழ்க்கையை விளக்க எவ்வளவு நெருக்கமாயிருக்கிறது?
2. பலமும் நிறைவேற்றுதலும்
a) அவன் மற்ற சகோதரர்களிடம் கொலை செய்வதைத் தடுத்துப் பேசினதினால் யோசேப்பின் உயிரைக்
காப்பாற்றினான்.
b) பென்யமீனின் உயிரைக் காப்பாற்ற, தன் சொந்த குமாரர்களை உத்தரவாதமாகக் கொடுத்து,
அவனுடைய தகப்பன் மேலுள்ள தீவிரமான அன்பைக் காட்டினான்.
3. பலவீனங்களும் தவறுகளும்
a) கூட்டத்தின் அழுத்தத்தால் உடனே ஒப்புக்கொண்டான்.
b) என்றாலும் மூத்த குமாரனுக்கு அதைச் செய்ய அதிகாரம் இருந்தாலும் யோசேப்பை நேரிடையாகக்
காப்பாற்றவில்லை.
c) அவன் தகப்பனுடைய மறுமனையாட்டியுடன் சயனித்தான்.
4. அவன் வாழ்க்கையிலிருந்து
பாடங்கள்.
a) பொதுவான, தனிப்பட்ட மேன்மை ஒன்று போல் இருக்கவேண்டும். அல்லது ஒன்று அடுத்ததை
அழித்துவிடும்.
b) பாவத்திற்குரிய தண்டனை உடனே கிடைக்காமல் இருக்கலாம். ஆனல் அது நிச்சயம்.
5. வேதாகமக் குறிப்புகள்: ரூபனின் கதை ஆதியாகமம் 29 – 50 அதிகாரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
6. விவாதத்திற்குரிய கேள்விகள்
6.1 அவன் வாழ்க்கையின் பின்னணியைக் கூறுங்கள்.
6.2 அவனுடைய பலம், தவறுகள் எவைகள்?
6.3 அவன் வாழ்க்கையிலிருந்து நாம் என்ன பாடங்கள் கற்றுக்கொள்ளலாம்?
6.4 அவன் தகப்பன் எப்படி அவனை ஆசீர்வதித்தான்? (ஆதி: 49: 4)
6.5 அவன் ஏன் அவன் சகோதரர்களிடமிருந்து யோசேப்பைக் காப்பாற்றவில்லை?
மொழிபெயர்ப்பு
திருமதி
நாயகம் பட்டு
பரி.யாக்கோபின்
ஆலயம்
No comments:
Post a Comment