Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Sunday, April 29, 2012

64. நாதாப், அபியூ –


ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன்

முக்கிய வசனம்
1 பின்பு ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் அக்கினியையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள். 2 அப்பொழுது அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, அவர்களைப் பட்சித்தது; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் செத்தார்கள். (லேவி.10.1-2)


சுருக்கமான குறிப்புகள்
·         நாதாப் ஆரோனின் மூத்த மகன் (எண்.3.2)
·         சீனாய்-இல் அவனும் கூட இருந்தான்.
·         அவனும் அவன் சகோதரனும் அந்நிய அக்கினியை தேவனுடைய சமூகத்தில் கொண்டு வந்து தேவனுடைய கட்டளையை மீறினதினால் (யாத்.28) இருவரும் செத்தார்கள்.
·         அந்நிய நெருப்பு என்பது, கர்த்தருடைய சந்நிதியில் மூட்டப்படாமல், வேறு இடத்திலிருந்து கொண்டு வரப்பட்டது.
·         ஒரு வேளை அவர்கள் குடிபோதையில் இருந்திருக்கலாம்.
·         அபியூ சீனாய் மலையில் தேவனுடைய மகிமையைக் கண்டிருந்தான் (எண்.24) இருந்த போதிலும் தன்னிஷ்டம் போல் தேவனுடைய கட்டளைக்கு விரோதமாகத் தூபவர்க்கமிட்டுப் பரிசுத்த அக்கினியினால் கொல்லப் பட்டான் (லேவி.10).


1.        முகவுரைஇவர்களின் சரித்திரம்
நாதப் என்பதற்குதாராள மனதுடையவன்அல்லதுஉயர்வானன்என்றும், அபியூ என்பதற்குஅவர்ர பிதாஎன்றும் பொருள்படும். காயீன், ஆபேல், ஏசா, யாக்கோபு போன்ற சில சகோதர்கள் ஒருவர் மற்றவரைக் கஷ்டத்துக்குட் படுத்தினார்கள். நாதாபும் அபியூவும் இருவரும ஒன்று சேர்ந்து கஷ்டத்தில் மாட்டிக் கொண்டார்கள்.

                அவர்களுடைய இளமைப் பருவம் பற்றி அதிகம் தெரியா விட்டாலும், அவர்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்தார்கள் என்பது பற்றிய பல தகவல்களை வேதாகமம் நமக்குத் தருகிறது. எகிப்தில் பிறந்து, தேவனுடைய வல்லமையான செயல்களை நேரில் பார்த்திருக்கிறார்கள். தங்கள் தகப்பனாகிய ஆரோனும், மோசே, மிரியாம் வர்களும் செய்தவற்றைப் பலதடவைகள் பார்த்தார்கள்.  தேவனுடைய பரிசுத்தத்தைப் பற்றி நேர் முகமான அறிவைப் பெற்றிருத்வர்களாக சில காலம் தேவனை முழு மனதுடன் பின்பற்றினார்கள் (லேவி.8.36). ஆனால், ஒரு இக்கட்டான நேரத்தில் இவர்கள் தேவன் கொடுத்த கட்டளையை அசட்டை செய்து அதை மீறினார்கள். அவர்களுடைய பாவத்தின் பலன் பயங்கரமானதாக, உடனடியானதாக, எல்லாருக்கும் அதிர்ச்சியைக் கொடுப்பதாக இருந்து.

                நாம் தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் சரியான பிரகாரம் உணர்ரந்து கொள்ளாத நேரத்தில் இந்த சகோதர்கள் செய்த்துபோல் நாமும் அதே தவறுகளைச் செய்யக் கூடிய ஆபத்தில் இருக்கிறோம். தேவனைப் பற்றிய உண்மையான பயத்துடன் அவரண்டை வர வேண்டும். தேவனைத் தனிப்பட்ட முறையில் அறிந்து கொள்ளும் வாய்ப்பு, தகுதியற்ற மக்களுக்கு அவர் கிருபையாகக் கொடுக்கும் அழைப்பு என்பதை நாம் மறந்து விடக் கூடாது. இது எப்போதும் கிடைக்கக் கூடிய ஒரு சாதாரணமான ஈவு என்று நினைத்து இதை அசட்டை செய்ய முடியாது. உன் உள்ளத்தில் நீ தேவனைக் குறித்து எண்ணும் போது, உன்னுடைய எண்ணங்களில் தேவனுடைய மகத்துவமான பரிசுத்த்தைத் தாழ்மையுடன் அறிந்து கொள்ளுகிறாயா?
2.      பலமும் சாதனைகளும்
a.      ஆரோனின் மூத்த குமாரன்
b.      தகப்பனையடுத்துப் பிரதான ஆசாரியனாக வேண்டியவன்.
c.      ஆசரிப்புக் கூடாரத்தின் பிரதிஷ்டையில் பங்கு பெற்றவன்.
d.      கர்த்தர் கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் செய்தார்கள்என்று பாராட்டப் பட்டனர் (லேவி.8.35).

3.      பலவீனமும் தவறுகளும்
a.      தேவனுடைய கட்டளைகளை அலட்சியம் செய்து மீறினான்.

4.      இவர்கள் வாழ்க்கையிலிருந்து கற்ற்றக் கொள்ளும் பாடங்கள்
a.      பாவம் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க்க் கூடியது. பாவத்தின் சம்பளம் மரணம்.

5.      வேத வசன ஆதாரங்கள்
a.      நாதாப் அபியூவின் சரித்திரம் லேவி.8-10, அதிகாரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. யாத்.24.1,9, 28.1, எண்.3.2-4, 26.60-61உம் இவர்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்.

6.      விவாதத்திற்கான கேள்விகள்
a.      இவர்கள் பெயர்ளின் அர்த்தம் என்ன?
b.      வர்ளுடைய பலம் பற்றிக் கூறு.
c.      இவர்ளுடைய பலவீனம், தவறுகளை எடுத்துக் கூறு.
d.      இவர்கள் செய்த குற்றங்கள் யாவை?
e.      நாம் தேவனுடைய கட்டளைகளை எவ்வாறு கடைப் பிடிக்க வேண்டும்.

மொழி பெயர்ப்பு
திருமதி டஃப்னி ஜோசப்.

No comments:

Post a Comment