இஸ்ரவேலின் ராஜா
முக்கிய
வசனம்:
“ரெகொபெயாம் ராஜ்யத்தைத் திடப்படுத்தித் தன்னைப் பலப்படுத்திக்கொண்ட பின் அவனும்
அவனோடே இஸ்ரவேலர் அனைவரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை விட்டுவிட்டார்கள்”. (2 நாளா:
12:1)
சுருக்கமான
குறிப்புகள்
v அவன் சாலொமோனின் குமாரனும், வாரிசுமாயிருந்தான்.
v அவன் அவன் தகப்பனால் அறிமுகம் செய்யப்பட்ட விக்கிரக ஆராதனையை அகற்றவில்லை.
v அவன் விவேகமில்லாத ஜனங்களின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டதால் தன்னையே அழித்துக்கொண்டான்.
v அவன் அந்நிய நாட்டுப் பெண்ணை விவாகம் செய்து விக்கிரக ஆராதனை விருத்தியாக அனுமதித்தான்.
1. முகவுரை – அவன் சரித்திரம்.
அவன் சாலமோனின் குமாரனும் வாரிசுமாயிருந்தான். (1இராஜா: 11:43). அவன் பெயர் `ஜனங்கள் பெருகுவார்கராக’ என்று பொருள்படும்.
அவன் 41ம் வயதில் சிங்காசனத்தில் ஏறினான்.
அவன் தகப்பனாரால் ஏற்படுத்தப்பட்ட எந்த வரிகளையும் செலுத்த மறுத்தான். பத்து குலத்தார்களும், யெரொபெயாமின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட
இஸ்ரவேல் இராஜ்யத்தாரும் அதைப் பரிகாரம் செய்யக் கொடுத்த விண்ணப்பத்திற்கு அவன் கொடுத்தத்
தைரியமான பதில்களால் கலகம் ஏற்பட்டது. ரெகொபெயாம்
கலகக்காரர்களுக்கு எதிராக யுத்தம் செய்ய 180,000 போர் வீரர்களைக் கூட்டிச் சேர்த்தான். ஆனால் சேமாயா தீர்க்கத்தரிசியின் மூலம் இந்த ராஜ்யத்தின்
பிரிவினை கர்த்தரின் சொல்படி நடந்தது என்று அறிவிக்கப்பட்டதால் படையெடுப்பு தடை செய்யப்பட்டது.
(1 இராஜா: 12: 24). யெகோவாவின் ஆராதனை யூதேயாவில்
அவருடைய உருவம் இல்லாமல் நிர்வகிக்கப்பட்டது.
அநேக லேவியர்களும், தேவ பக்தியுள்ள இஸ்ரவேலர்களும் யெரொபெயாமினால் தாணிலும்
பெத்தேலிலும் அறிமுகப்படுத்தப்பட்ட கன்றுக்குட்டி ஆராதனையின் வெறுப்பினால் வட இராஜ்யத்திலிருந்து
தென் இராஜ்யத்திற்கு அனுப்பப்பட்டார்கள். ஆனாலும்
ரெகொபெயாம் அவன் தகப்பனால் அறிமுகப்படுத்தப்பட்ட அருவருப்பான விக்கிரகாராதனையை அகற்றவில்லை.
(2 இராஜா: 14: 22 – 24). இந்தத் தீயகாரியங்கள்
எகிப்திலிருந்து வந்த படையெடுப்பால் தண்டிக்கப்பட்டது. ரெகொபெயாம் சமாதானத்தை வாங்க, அவனுடைய தகப்பனாரின்
பொக்கிஷத்தை ஒப்புக்கொடுக்க கட்டாயப்படுத்தப்பட்டான். (1 இராஜா: 14: 25-28). ரெகொபெயாம் 17 வருஷங்கள் ராஜ்யபாரம் பண்ணினான். அவன் மாகாள் மூலம் பெற்ற மகன் அபியாமிடம் ராஜ்யத்தை
ஒப்படைத்தான்.
சிலகாலம் ரெகொபெயாமும் அவன் பிரஜைகளும் தேவனைப் பின்பற்றி
விருத்தியடைந்தார்கள். ஆனபோதிலும் படிப்படியாக
விக்கிரக பலிபீடங்கள், சிலைகள், கல்லறைகள், உயர்ந்த இடங்களில் பணிந்து வந்தார்கள். சேமாயாவின் போதனையினால் அவனும் அவன் ஜனங்களும் அவர்களின்
கஷ்டங்களில் அவரின் நியாயத்தீர்ப்பையும் அவருடைய கையையும் ஏற்றுக்கொண்டு மனம் வருந்தினார்கள்.
அவன் பொய்யானவைகளுக்கு உண்மைக்கு எதிராக உறுதியாக வியாபாரம்
செய்தான். விவேகமற்ற ஆலோசனைக்காரரை ஏற்றுக்கொண்டான். அவன் பதவி தேவனால் கிடைத்ததென்றாலும் தேவனைக் கைவிட
தெரிந்து கொண்டான். அந்த விவேகமற்ற முடிவுகள்
அவனைப் பலமுள்ளதாக இல்லாமல் பலவீனமாக்கியது.
அதன் விளைவாக அவன் எகிப்தியர்களால் படையெடுக்கப்பட்டு, தாவீது, சாலமோன் இவர்களிடமிருந்து
பரம்பரையாகப் பெற்ற சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவன் ஆட்சி செய்த முற்பகுதி முழுவதும் தேவனுக்குக்
கீழ்ப்படிதல், தன் சொந்த வழியில் நடப்பது இவைகளில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. வெளித்தோற்றம் சரியாய் இருந்தது. ஆனால் உள்ளான நடத்தை கெட்டதாயிருந்தது. அவன் ஆட்சிகாலத்தின் போது இராஜ்யம் பிரிந்து பிளவுபட்டுப்போனது.
2. வல்லமையும் நிறைவேற்றுதலும்.
a) அவன் ஐக்கிய நாட்டு இஸ்ரவேலின் நான்காவது கடைசி இராஜா. ஆனால் சிறிது காலம் தான்.
b) அவன் அவனுடைய இராஜ்யத்தைப் பலப்படுத்தி, அளவான புகழை வெற்றிகரமாக நிறைவேற்றினான்.
3. பலவீனங்களும் தவறுகளும்
a) அவன் விவேகமற்ற அறிவுரைகளைப் பின்பற்றி அவன் ராஜ்யத்தைப் பிரித்துவிட்டான்.
b) சாலமோனைப் போல அவன் அந்நியப் பெண்ணை விவாகம் பண்ணினான்.
c) அவன் தேவனை ஆராதிப்பதைக் கைவிட்டு, விக்கிரக ஆராதனை விருத்தியாக இடங்கொடுத்தான்.
4. அவன் வாழ்க்கையிலிருந்து
பாடங்கள்
a) முன்யோசனையற்ற முடிவுகள், மிக அதிகமான மதிப்பீடுகள் மிகக் குறைவான மதிப்பீடுகளுக்கு
மாற்றப்பட வழிநடத்தும்.
b) நாம் எடுக்கும் ஒவ்வொரு தேர்வும் உண்மையாகவும், அதிக நீடித்த பலனுள்ளதாயிருக்கும்.
c) வயது முதிர்ந்தவர்களிடமும், ஞானமுள்ளவர்களிடமும் எப்படி அறிவுரைகளை ஏற்படுத்தவும்,
தேடவும் வேண்டுமென்று நாம் கற்பிக்கப்பட்டிருக்கிறோம்.
d) நமது சொந்த விருப்பத்திற்காக கட்டாயமாக வேலை வாங்குவதில் ஒரு மேலதிகாரியாக இருப்பதைத்
தவிர்க்க வேண்டும்.
e) வெற்றி பெறும் தேவைக்காக ஒருவர் தேவனையும், ஜனங்களின் விருப்பத்தையும் தேடவேண்டும்.
5. வேதாகமக் குறிப்புகள்:
1இராஜா 11: 43 – 14: 31, 2நாளா
9: 31 – 13: 7, அவன் மத்: 2: 7லும் குறிப்பிடப்பட்டிருக்கிறான். புது வேதாகம அகராதியில் பார்க்கவும்.
6. விவாதத்திற்குரிய கேள்விகள்.
1) அவன் ஆட்சி காலத்தில் ஏன் இராஜ்யம் பிரிக்கப்பட்டது?
2) வரி விதிப்புச் சட்டத்தில் நியாயமில்லாமல் இருக்க அவனுக்கு அறிவு கூறியது யார்?
3) நாட்டின் மதத்தைப் பற்றி என்ன பிரச்சினை?
4) அவன் எவ்வளவு காலம் தேசத்தை ஆட்சி செய்தான்?
5) அவன் பலன் எப்படியிருந்தது?
6) அவன் பலவீனங்கள் எப்படியிருந்தது?
மொழிபெயர்பப்பு
திருமதி
நாயகம் பட்டு
பரி.யாக்கோபின்
ஆலயம்.
No comments:
Post a Comment