Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Sunday, April 29, 2012

63. நாகமான்



சிரியாவின் படைத் தலைவன், விசுவாசமுள்ள மனிதன்

முக்கிய வசனம்
அவன் எப்ரோனிலிருந்து வந்தபின்பு, எருசலேமில் இன்னும் அதிகமான மறுமனையாட்டிகளையும் ஸ்திரீகளையும் கொண்டான்; இன்னும் அதிக குமாரரும் குமாரத்திகளும் தாவீதுக்குப் பிறந்தார்கள்.  (2ராஜா. 5.13)

சுருக்கமான குறிப்புகள்
·         பெனாதாத் என்னும் சீரிய ராஜாவின் ஆட்சியின் போது நாகமான் படைத் தலைவனாக இருந்தான்.
·         ஆனால் அவன் குஷ்டரோகியாயிருந்தான்.
·         சிறை பிடிக்கப்பட்ட இஸ்ரவேல் தேசத்து சிறு பெண், நாகமான் குணப்படுத்தப்படும்படி தீர்க்கதரிசியான எலிசாவினிடத்திற்கு அனுப்பினான்.
·         தனது விசுவாசத்தினால் அவன் எலிசாவின் ஆலோசனைக்குக் கீழ்ப்படிந்தான்.


1.        முகவுரைஅவனுடைய சரித்திரம்
இவனுடைய பெயர் இன்பகரமானஎன்று பொருள் படும். வசீகரம் அல்லது அழகு என்றும் பொருள்படலாம் (.17.10). தீர்க்கதரிசியான எலிசாவினால் வென் குஷ்டரோகம் நீங்கி குணமாக்கப்பட்டான் (2ராஜா.5ம் அதி.). பெனாதாத் 2 இவனுடைய அரசனாக இருக்கலாம் (கி.மு.80, 2இராஜா8.7). இந்த சம்பவத்தில் ரும் இஸ்ரவேலின் ராஜாவின் பெயர் தெரியவில்லை (5.5-8). இது நடைபெற்ற நாட்களையும் திட்டமாகக் கூற முடியவில்லை.

                குஷ்டரோகம் என்ற வார்த்தை வேதாகமத்தில் பல வகையான வியாதிகளையும் குறிப்பிடுவதினால் (லேவி.13-14) நாகமானின் குஷ்டம் எந்த வகையானது என்று திட்டமாகத் தெரியவில்லை. நாகமானோ அல்லது பின்பு இதே வியாதியினால் பாதிக்கப்பட்ட கேயாசியோ (2ராஜா.5.27, 8.4) மக்களை விட்டுத் தனியே விலக்கி வைக்கப்படாத்தினால் இது வ்வளவு கொடிதான தொற்று நோயாக இருந்திருக்கும் என்று உணரலாம். அவனுடைய தீய செயல்களுக்குத் தண்டனையாகக் குஷ்டம் ஏற்பட்டது என்றும் கூறப்படவில்லை. ஆனால், கேயாசியின் பேராசைக்குத் தண்டனையாக இந்த வியாதி அவனுக்குக் கொடுக்கப்பட்டது என்று அறிகிறோம். நாகமான் பெற்றுக் கொண்ட ஆரோக்கியத்தைத் தொடர்ந்து எந்த ஒரு நிபந்தனையும பொறுப்பும் அவன் மேல் சுமத்தப்படவில்ல. இருந்த போதிலும், தனக்குச் சுகமளித்த இஸ்ரவேலின் தேவனிடம் தனது விசுவாசத்தைத் தெரிவித்துதன் ராஜாவாகிய ஆண்டவனுக்காக, அவனுடன் ரிம்மோன் கோவிலில் பணிந்து கொள்வது மாத்திரம் மன்னிக்கப்பட வேண்டுமென்று கேட்டுக் கெகாண்டான் (2இராஜா.5.18).

                நாகமான் மேலான பதவியில் எல்லாராலும் மதிக்கப்பட்டவனாக இருந்த படியினால், எலிசா தன்னை ஒரு சாதாரண மனிதனைப் போல் நடத்தியதால் கோபமடைந்தான். கர்வம் கொண்டவனாகத் தனக்கு ராஜ மரியாதை காட்டப்படும் என்ற எதிர்ப்பார்த்தான். ஏதோ ஓர் பெரிய நதியில் ஸ்நானம் பண்ணுவது தனது தகுதிக்குக் குறைவானது என்று நினைத்தான். நாகமான் தன்னைத் தாழ்த்தி சுகமடைவதற்காக எலிசாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டியதாக இருந்தது.

                நாகமான் கோபத்துடன் திரும்பிச் செல்ல நினைத்தான். ஏனென்றால் விசுவாசத்தின் மூலமாகக் கிடைக்கும் அந்த மிகச் சாதாரணமான சுகமளிக்கும் முறையை அவன் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. அவன் ஒரு வீரனாக இருந்ததினால் ஒரு வீரத்தன்மையான செயலினால் தான் குணப்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்த்தான். தேவனால் மன்னிக்கப்படும்படியாகத் தாழ்மையுடன் தேவனுடைய கிருபையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

                வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளபடி, சிறைபிடித்துக் கொண்டு வரப்பட்ட சிறுமியான பணிப்பெண் நாகமானின் கஷ்டத்தைப் பார்த்து, அவன் பேரில் மன உருக்கம் கொண்டார் (5.2). அவன் சுகமடைய வேண்டும் என்று மாத்திரம் அவள் விரும்பினாள். எலிசாவோ யெகோவாவின் தீர்கதரிசியாகத் தான் கொண்டிருந்த வல்லமையை நாகமானுக்குக் காண்பிக்க விரும்பினான். தான் சுகமடைந்தவுடனே, யெகோவாவையன்றி வேறே தெய்வம் இல்லை என்று நன்றியுடன் அறிக்கை செய்தான். (2இராஜா.5.15,17). இதைக் கேயாசி தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டான். ஸ்ரவேலின் ராஜாவோ, அவன் தன்னை விரோதிக்க சமயம் தேடுகிறான் என்று நினைத்தான் (5.7). கேயாசி, 18.5ல் தன்னை குணமாக்கிய தீர்க்கதரிசியின் வல்லமை குறித்து ராஜாவிடம் புகழ்ந்து பேசினான்.

                நாகமான் மற்றவர்களைப் போலல்லாமல் தேவனுடைய வல்லமையை நன்கு அறிந்தவனாக இருந்தான் தன் நாட்டிலுள்ள விக்கிரகங்களுடன் தேவனையும் சேர்த்துக் கொள்ளாமல், தேவன் ஒருவரே உண்மையான ஒரே தேவன் என்பதை ஏற்றுக் கொண்டான். மற்ற தெய்வங்களை அவன் வணங்க விரும்பவில்லை.

                தனக்கு சுகம் கிடைத்த போது தேவன் ஒருவரை மாத்திரமே தான் வணங்குவதாக உறுதிமொழி கூறினான் (5.15-117). யெகோவாவுக்குப் பலி செலுத்தவும் அவன் விரும்பினான். அதற்காக இரண்டு கோவேறு கழுதைகள் சுமக்கத்தக்க இரண்டு பொதி மன்னைத் தன் நாடான சிரியாவுக்குத் தன்னுடன் எடுத்துக் கொண்டு போனான் (5.117).

                இஸ்ரவேல் ராஜாவின் சிறப்பான தன்மையையும் இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. நாகமானின் வேண்டுகோளுக்கு இஸ்ரவேலின் ராஜா கூறிய பதில்ஒரு மனுஷனை அவன் குஷ்டரோகத்திலிருந்து நீக்கி விட வேண்டுமென்று அவன் என்னிடத்தில் நிருபம் அனுப்புகிறதற்கு, கொல்வும் உயிர்ப்பிக்கவும் நான் தேவனா?’ என்று அவன் கூறியது, முன்னால் இஸ்ரவேலில் ராஜாகளின் தெய்வீகத் தன்மையில் கொண்டிருந்ஒரு நம்பிக்கையை வெளிக் காட்டுகிறது. (2இரா.5.7). எலிசா தீர்க்கதரிசி தேவனுடைய உதவியினால் நாகமானைக் குணப்படுத்தினான்.

                புதிய ஏற்பாட்டில் இஸ்ரவேலர் அல்லாத ஒருவனுக்குத் தேவன் கிருபை பாராட்டினார் என்ற உண்மையை இயேசு சிறப்பாக எடுத்துக் காட்டுகிறார் (லூக்கா 4.27).


2.      நாகமானைப் பற்றி நாம் என்ன கற்றுக் கொள்கிறோம்?
நாகமன் சீரியாவின் பெரிய போர் வீரன். குஷ்ட ரோகத்தினால் வாதிக்கப்பட்டான். சுகமடைவதற்காக எலிசா தீர்க்கதரிசியை நாடினான். எவ்விதம் அவன் தன்னை சுகமகாக்குவான் எனுறு தனக்குள் கற்பனை செய்து வைத்திருந்தான். ஆனால் எலிசா ஆள் அனுப்பி, யோர்தானில் ஏழுதரம் ஸ்நான பண்ணும்படி சொன்ன போது நாகமான் கடுங் கோபங் கொண்டான்.  அவனுடைய ஊழியக்கார் அவனிடம் வந்து, “அந்தத் தீர்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்யச் சொல்லியிருந்ததால் அதை நீர் செய் வீரல்லவா? (2ராஜா.5.13) என்று அவனுக்கு அறிவுரை கூறினார்கள். அதனால் நாகமான் அதின்படி செய்தான். குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கி குணப்பட்டான்.

                நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்யும்படி தேவன் நமக்கு ஈவுகளைக் கொடுத்திருக்கிறார் (1கொரி.12.7). ஆனால் சுய தேவை பூர்த்தியாநிலைமை, மிகத் தேவைப்படும் உதவிகளைப் பெற்றுக் கொள்ளாதபடி தடை செய்கிறது. தேவன் தரும் ஈவுகளை நாம் நன்றியுடன் பெற்றுக் கொண்டு மற்றவர்களுக்கு உதவி செய்வோமாக.

                உதவியைப் பெறுவதில் முதலாவது படி தாழ்மை. நாகமான் இதைக் கஷ்டமான வழியின் மூலமாகக் கற்றுக் கொள்ள வேண்டியதாக இருந்தது. எலிசாவின் புகழ் சீரியாவின் ராஜா வரை சென்றடைந்தது (2இராஜா.8.7,9).

                தேவன் இஸ்ரவேலுக்கு மாத்திரம் தேவன் அல்லர். அவர் உலக முழுமைக்கும் தேவன். (யோவன் 3.16). இஸ்ரவேலன் அல்லாஒருவனுக்கும் தேவனுடைய இரக்ம் பாராட்டப்பட்டது என்பதைக் குறிக்குகும் சம்பவத்தை நாகமானின் சரித்திரத்தை இயேசு உதாரணமாகக் குறிப்பிடுகிறார் (லுக்கா 4.27).


நமது நற்செய்தி எல்லா மனிதருக்கும் உரியது.
                தேவனுக்குக் கீழ்ப்படிதல் தாழ்மையுடன் ஆரம்பமாகிறது. அவருடைய வழி நமது வழியைக் காட்டிலும் மேலானது என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும். அவர் கிரியை செய்யும் விதங்களை நாம் புரிந்துணர்ந்து கொள்ள முடியாவிட்டாலும், நாம் தாழ்மையுடன் கீழ்ப்படியும் போது அவருடைய ஆசீர்வாதங்க்களைப் பெற்றுக் கொள்வோம். நாம் எப்போதும் பின்வருவனவற்றை நினைவு கூர வேண்டும்.

a.      தேவனுடைய வழிகள் மற்ற எல்லாவற்றையும் விடச் சிறந்தவை.
b.      மற்ற எல்லாவற்ற்றைக் காட்டிலும் தேவன் நமது கீழ்ப்படிதலையே விரும்புகிறார்.
c.      தேவன் தமது நோக்கத்தை நிறைவேற்றும்படி எதையும் உபயோகிக்கக் கூடும்.
d.      எலிசா எடுத்துக் கொள்ள மறுத்த வெகுமதியைத் தான் கேட்டு வாங்கி சுய நலமாகத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்வதற்கு ஏற்ற சந்தர்ப்பத்தைக் கேயாசி கண்டான். துரதிர்ஷ்டவசமாக ந்த திட்டத்தில அவனுக்கு 3 பிரச்சனைகள் இருந்தன….
e.      வேறு ஒருவருக்குக் கொடுக்கப்பட்ட பணத்தை அவன் தானாகவே தனக்கென்று எடுத்துக் கொண்டான்.
f.      அது வேறு ஒருவருக்குக் கொடுக்கப்படும் என்ற தவறான என்னத்தைக் கொடுத்தான்.
g.      அவன் பொய் சொல்லி, அந்தப் பண்ணத்தை எடுத்துக் கொண்ட நோக்கத்திற்கு வேறு காரணம் கூறி அதை மறைக்கப் பார்த்தான்.
h.      கேகயாசி எலிசாவுக்கு ஒரு நல்ல வேலைக்காரனாக, உதவியாக இருந்த போதிலும், தன் சுய நலத்துக்கான இலாபம், தேவனுக்குச் சேவை செய்வதைப் பார்க்கிலும் அவனுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த்தாகி விட்டது.


3.      வேதாகம ஆதாரங்கள்
2இராஜா.5.9-4, லூக்கா 4.27


4.      விவாதிக்க வேண்டிய கேள்விகள்
1.        நாகமன் யார்?
2.      அவன் எலிசா தீர்க்கதரிசியைப் பற்றி எவ்வாறு அறிது கொண்டான்?
3.      கேயாசி யார்?
4.      அவன் எலிசா கூறியது போல் நடந்து கொண்டானா?
5.      இயேசு நாசரேத் ஊர் ஜெப ஆலயத்தில் தமது முதலாவது பிரசங்கத்தில் நாகமானைக் குறித்து என்ன கூறினார்? (லூக்கா 4)

மொழிபெயர்ப்பு
திருமதி டஃப்னி ஜோசப்

No comments:

Post a Comment