முன் மாதிரியான மாமியாரும்
மருமகளும்.
முக்கிய வசனம்:
“அதற்கு ரூத், நான் உம்மைப் பின்பற்றாமல்
உம்மை விட்டுத் திரும்பிப் போவதைக் குறித்து, என்னை வற்புறுத்தாதீர்கள். நீங்கள் போகும்
இடத்திற்கு நானும் வருவேன். நீங்கள் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன். உம்முடைய ஜனம்
என்னுடைய ஜனம், உம்முடைய தேவன் என்னுடைய தேவன், நீங்கள் மரணமடையும் இடத்தில் நானும்
மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவேன். மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப்
பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்
என்றாள்.” (ரூத்: 1: 16 – 17)
சுருக்கமான
குறிப்பு
v
இஸ்ரவேலின்
இருண்ட நாட்களில் (நியா: 17: 6; 21: 25) தேவன்
தேவனிடமும், ஒருவருக்கொருவருடனும் விசுவாசம், நேசம், பொறுப்பு செலுத்த அழகான உதாரணங்களாக
விளங்கிய ரூத்தையும் நகோமியையும் எழுப்பினார்.
v
தேவன் இஸ்ரவேல்
ஜனங்களுக்கும் மோவாபியருக்கும் இடையில் சிநேகத்தை ஏற்படுத்தினார்.
v
ரூத் நகோமியின்
மூலம் இஸ்ரவேலின் தேவனை அறிந்து கொண்டாள்.
v
ரூத் ஒரு
அந்நிய ஸ்தீரி, தேவனின் குடும்பத்தில் ஒரு உறுப்பினரானாள்.
1. அறிமுகவுரை
– ரூத், நகோமியின் கதை.
மோவாபிய ஸ்தீரியாகிய ரூத்தும் இஸ்ரவேல் ஸ்தீரியாகிய நகோமியும்
இணைந்து நம்பிக்கை, அன்பு, நேர்மை, வெற்றி, ஆசீர்வாதம் இவைகளை நிரூபித்தார்கள். ரூத்தின் கதையைத் தெரிந்து கொள்ள மோவாப் தேசத்தைப்
பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியம். கடலின்
கிழக்கே உள்ள மோவாப் நியாயாதிபதிகள் காலத்தில் இஸ்ரவேலரைக் கொடுமைப்படுத்தினது. (நியா:
3: 12) அதினால் இரண்டு தேசத்திற்கும் இடையில்
யுத்தம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் பெத்லெகேமில்
கடுமையான பஞ்சம் உண்டாயிற்று. எலிமெலேக்கு
மோவாப் தேசத்திலே போய்ச் சஞ்சரித்தான். அந்தத் தேசம் மிகுந்த மன அழுத்தத்தை உண்டாக்கினது. மேலும் மோவாபியர்களோடு கொண்ட சிநேகித உறவுமுறைகள்
ஏற்றுக் கொள்ளப்படவில்லை. (ரூத்: 1: 4 - 5) (உபா: 23: 3 – 6) கானானியரை விவாகம் செய்வது
(வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தின் எல்லைக்குள் வசிக்கும் எல்லாரோடும்) எப்படியென்றாலும்
தேவனின் சட்டத்திற்கு எதிரானது. (உபா: 7: 1 - 4) மோவாபியர்கள் ஆசரிப்புக் கூடாரத்தில்
ஆராதனை செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஏனென்றால் எகிப்திலிருந்து யாத்திரையாக பிரயாணம்
செய்தபோது இஸ்ரவேலர்களைத் தங்கள் தேசத்தைக் கடக்க அனுமதிக்கவில்லை. தேவனின் தெரிந்து கொள்ளப்பட்ட தேசமாய் இருந்ததால்
மற்றத் தேசங்க்ளுக்கு இஸ்ரவேல் தகுதியான உயர்ந்த நல்ல குணமுள்ள முன்மாதிரியாக விளங்கப்பட்டது. எதிரிடையாக மோவாபிய ஸ்தீரியான ரூத்தை தேவன் உண்மையான
ஆவிக்குரிய குணத்திற்கு உதாரணமாக உபயோகித்தார்.
இது அந்தக் காலத்தில் இஸ்ரவேல் வாழ்க்கை எப்படி மோசமாயிருந்தது என்று காட்டுகிறது.
எப்படி தேவன் இஸ்ரவேல் சரித்திரத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்தார்?
வேதாகமத்திலுள்ள
ரூத் ஒரு மோவாபிய ஸ்தீரியாயிருந்து, மோவாபில் வசித்த யூதாவிலுள்ள பெத்லெகேமில் பிறந்தவனான
எபிரேயனை விவாகம் செய்தாள். அவள் புருஷன் இறந்த
பிரகு, தன் சொந்த ஜனங்களிடம் திரும்பிப் போவதை விட எபிரேய மாமியாரான நகோமியுடன் சேர்ந்து
பெத்லெகேமுக்குப் போகத் தெரிந்து கொண்டாள்.
இங்கே அவள் புருஷனின் உறவினனான போவாசுக்கு மனைவி ஆனாள். அவர்கள் குமாரன் ஓபேத், ஈசாயின் தகப்பன். ஈசாய் தாவீதின் தகப்பன். அப்படி என்றால் இயேசு கிறிஸ்துவின் சந்ததியில் காட்டியுள்ளபடி
ரூத் தாவீது, இயேசுவின் மூதாதையர் (மூத்த சந்ததி) (மத்: 1: 5 ) இந்தப் புத்தகத்தின்
தலைப்பு ஒரு அந்நியரைப் பின்பற்றினது. (லூக்கா சுவிசேஷம்)
இந்தத் திருப்தியானது மோவாபுக்கும் இஸ்ரவேலுக்கும் இடையே பாலம் கட்ட முயற்சித்தது. பஞ்ச காலத்தில் எலிமெலேக், அவன் மனைவி நகோமி, அவர்கள்
இரண்டு குமாரர்கள் (எகிப்து) மோவாபில் அடைக்கலம் தேடினார்கள். அந்த இரண்டு தேசங்களுக்கும் இடையில் நியாயமான உறவுமுறை
இன்னும் பலப்பட அந்த இரண்டு குமாரர்களும் மோவாபிய மனைவிகளாகிய ஒர்பாள், ரூத் என்பவர்களை
மணம் செய்தார்கள். அந்தக் குடும்பத்தின் ஆண்கள்
இறந்த பொழுது மூன்று பெண்களும் விதவையானார்கள்.
நகோமி அவள் சொந்த தேசத்திற்குச் செல்ல தீர்மானித்தாள். எதிரிடையாக ஒர்பாள் நகோமியின் தூண்டுதலுக்கு இணங்கி,
அவள் சொந்த ஜனங்களிடம் திரும்பிப் போனாள்.
ரூத் அவள் மாமியார் நகோமியிடம் நிறைவான
பக்தியை உறுதிப்படுத்தினாள். (ரூத்: 1: 16 – 17)
வாற்கோதுமை அறுப்புக்காலத்தில் ரூத், நகோமி இருவரும் பெத்லெகேமுக்குத்
திரும்ப வந்தார்கள். எலிமெலேக்கின் வம்சத்தானாகிய
போவாசுடைய வயல் நிலத்தில் கதிர் பொறுக்க ரூத்துக்கு அனுமதி கிடைத்தது. அறுப்புக்காலத்தின்
முடிவில் அந்தக்கால வழக்கத்தின்படி உறவுமுறைக்கு அடுத்தவனாகிய போவாசிடம் பாதுகாப்பு
கேட்டு நகோமி ரூத்தை அனுப்பினாள். பின்பு நெருங்கிய
உறவினனின் சட்டப்படி குடும்பச் சொத்தை சரியான முறைப்படி வாங்கி, எலிமெலேக்குக்கு ஒரு
வாரிசைக் கொடுத்தான். போவாஸ் ரூத்தை அவன் மனைவியாக
எடுத்துக்கொண்டான். இத்திருமணத்தின்படி பிறந்த
குமாரனை நகோமிக்கு ஒரு குமாரன் பிறந்தான் என்று கொண்டாடப்பட்டது. ரூத், நகோமியின் பிரயாசத்தின் மூலம் குடும்ப வரிசை
காப்பாற்றப்பட்டது.
2.
மேலே சொல்லப்பட்ட கதையிலிருந்து நாம் அறிந்து கொண்ட பாடங்களை
விளக்கப்படுத்துவோம்.
a)
நமது தேவன்
மேல் உள்ள நம்பிக்கை நியாயமான அரசியல் எல்லைக்குள் மேம்பட்டது. எல்லா ஜனங்களும் தேவனின் ஜனங்கள், இயேசுவுக்குட்பட்ட
நாம் எல்லாரும் தேவனை `நமது பிதா’ என்று அழைக்கிறோம். இயேசு உறவை இணைக்கும் பாலமாயிருக்கிறார்.
b)
நகோமி முன்
மாதிரியான மாமியார். அவள் அவளின் மருமகளுக்கு
நல்ல எதிர்காலத்தை உறுதி செய்ய அநேகக் கஷ்டங்களை அனுபவித்தாள். வித்தியாசமான, நியாயமான இரண்டு சமூகங்களின் இடையே
திருமணங்கள் செய்து கொள்ளக்கூடிய பாலங்கள் கட்ட உதவி செய்யும்.
c)
இஸ்ரவேலரல்லாதவர்களின்
நம்பிக்கை ஒரு உதாரணம்.
இயேசு நூற்றுக்கதிபதியின் நம்பிக்கையைப் பற்றி: `இஸ்ரவேல்
முழுவதிலும் இப்படிப்பட்ட நம்பிக்கையை நான் பார்த்ததில்லை’ என்று உயர்வாகப் பேசினார்.
d)
ரூத், நகோமி
இருவரும் கூட உறுதியான பரஸ்பர பொறுப்பை நிரூபித்தார்கள். இதுவும் ஒரு முன்மாதிரியான உறவுமுறை. ஒவ்வொரு பக்கமும் அடுத்தவர்களுக்கு மிகவும் நல்லது
எது என்று அறிந்து செயல்பட பிரயாசப்பட்டார்கள்.
3.
முடிவுரை
வேதாகமத்தில்
உள்ள இந்தக் கதையும் இன்னும் மற்றக் கதைகளும் உறவு முறையில் தேவனின் உயிருள்ள தோற்றத்தின்
வேற்றுமையை எதிர்கொள்ளுதல், வேறு வழியில் பிரிவினையையும் விரோதத்தையும் ஏற்படுத்தும்
என்று காட்டுகிறது. இது பழைய ஏற்பாட்டிலுள்ள
பட்சமுள்ள கதை.
4.
வேதாகமக் குறிப்புகள்: அவர்கள் கதை ரூத்தின்
புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ரூத்
மத்: 1: 5ல். கூட குறிப்பிடப்பட்டிருக்கிறது.
5.
விவாதத்திற்குரிய கேள்விகள்
5.1
எப்படி
ஒரு மலேசியக் கிறிஸ்தவர் பலவகையான நீதிநெறிக் குழுக்களுக்கு இடையில் அன்புள்ள உறவுமுறையை
ஏற்படுத்தமுடியும்?
5.2
உங்கள்
ஜனம் என் ஜனமாயிருப்பார்கள். உங்கள் தேவன்
என் தேவன். இந்தக் கூற்றுக்கு விளக்கம் கூறு.
5.3
வெவ்வேறு
நம்பிக்கையுள்ள திருமணங்களைப் பற்றி உன் விளக்கம் என்ன?
5.4
உன் கிறிஸ்தவரல்லாத
நண்பர்களோடு கிறிஸ்துவின் அன்பை எத்தனை தடவை பகிர்ந்து கொள்வாய்?
5.5
மோவாபியருக்கும்
எபிரேயருக்கும் இடையில் உண்டான சரித்திர சம்பந்தமான
பிரச்சினை என்ன?
5.6
தேவன் எப்படி
இரண்டு சமூகத்தினர்க்கும் இடையில் பாலம் கட்டினார்?
5.7 முன்மாதிரியான மாமியார், மருமகள் யார்?
மொழிபெயர்ப்பு
திருமதி
நாயகம் பட்டு,
பரி.யாக்கோபின்
ஆலயம்.
No comments:
Post a Comment