முக்கிய வசனம்
7 கர்த்தர் நல்லவர், இக்கட்டுநாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார். 8 ஆனாலும் நினிவேயின் ஸ்தானத்தை, புரண்டுவருகிற வெள்ளத்தினால் சர்வசங்காரம்பண்ணுவார்; இருள் அவர் சத்துருக்களைப் பின்தொடரும்.
9 நீங்கள் கர்த்தருக்கு விரோதமாகச் செய்ய நினைக்கிறதென்ன? அவர் சர்வசங்காரம்பண்ணுவார்; இடுக்கம் மறுபடியும் உண்டாகாது. (நாகூம் 1.7-9)
9 நீங்கள் கர்த்தருக்கு விரோதமாகச் செய்ய நினைக்கிறதென்ன? அவர் சர்வசங்காரம்பண்ணுவார்; இடுக்கம் மறுபடியும் உண்டாகாது. (நாகூம் 1.7-9)
சுருக்கமான குறிப்புகள்
·
நாகூம் ஆறுதல் படுத்துகிறான்.
·
நாகூம் எல்கோசானாகிய தீர்க்கதரிசி.
·
அசீரியாவின் ராஜாவுக்கு
விரோதமாக தேவனுடைய கோபத்தை அறிவித்தான்.
·
தேவனுடைய சத்தியத்தைக்
கூறி யூதாவை ஆறுதல் படுத்தினான்.
1. முகவுரை – அவனுடைய சரித்திரம்
நாகூம் என்றால் “ஆறுதல் படுத்துகிறவன்’ என்று பொருள்படும். இவனைப் பற்றி சிறிதளவே அறியப் பட்டிருக்கிறத (நாகூம் 1.10. பழைய ஏற்பாட்டில் ஒரு தடவை ‘எல்கோசானாய நாகூமின் தரிசனப் புத்தகம்’ என்று மாத்திரம் வாசிக்கிறோம். எல்கோஷ் என்பது அடையாளம் காணப்படவில்லை. ஆனால், அது கலிலேயாவிலுள்ள ஒரு சிறிய கிராமம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. யோனாவைப் போலவே நாகூம் அசீரிய சாம்ராஜ்யத்தின் தலைநகரான நினிவேக்குத்
தீர்க்கதரிசனம் உரைத்தான். கி.மு.663 முதல 612 வரை தீர்கதரிசன ஊழியம் செய்தான். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு நினிவே
மனந் திரும்பியதை யோனா பார்த்திரான். ஆனால் அந்தப் பட்டணம் மறுபடியும் துன்மார்க்கத்தில் விழுந்து விட்டது. அசீரியா பலத்துக் கொண்டே போனது. இதன் போர் வீரர்கள் இஸ்ரவலைக் கைப்பற்றி விட்டனர். எனவே அசீரியாவிற்கு விரோதமாக நாகூம் தேவனுடைய கோபத்தை அறிவித்தான். இன்னும் சில பத்தாண்டுகளில் அசீரியா சாம்ராஜ்யம் பாபிலோனால்
வீழ்த்தப்படும்.
இது எப்போது எழுதப்பட்டது?
நாகூம் தீர்க்கதரிசனம் உரைத்த நாட்களில், அநேகமாக கி.மு.663-622க்கு நடுவில் எழுதப்பட்டிருக்கிலாம்.
இந்தப் புத்தகம் எழுதப்பட்ட நேநாக்கம்
என்ன?
அசீரியாவின் மேல் தேவனுடைய நியாயத்
தீர்ப்பைக் கூறவும், இதைக் கொண்டு யூதாவை ஆறுதல் படுத்தவும் இது எழுதப்பட்டது.
இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ளவை.
அசீரியா உலகிலேயே மிக்க பலம் வாய்ந்த
நாடாக இருந்நத்து. தங்கள் சயதேவை பூத்தியான நிலைமை. சேனையின் பராக்கிரம்ம் இருந்த்தினால் பெருமை கொண்டு அவர்கள் கொள்ளையடித்துத்
தங்களிடம் அகப்பட்டுக் கொண்டவரகளை துன்புறத்திப் படுகொலையும் செய்தார்ள். 100 ஆண்டுகளுக்கு முன் யோனா நினிவேயின் தெருக்களில் பிரசங்கம்
செய்த போது ஜனங்கள் தேவனுடைய செய்தியைக் கேட்டுத் தங்கள் பொல்த வழிகளை விட்டு மனந்திரும்பினார்கள். ஆனால் இப்போது துன்மார்க்கம் மறுபடி ஆட்சி செய்ய ஆரபித்து
விட்டது. நாகூம் தீர்க்கதரிசிஇந்நதப்
பொல்லாத ஜனத்தின் மேல் நியாயத் தீர்ப்பைக் கூறினான். நினிவே இரத்தப் பழிகளின் நகரம் என்று அழைக்கப்படுகிறது (3.1). கொடூரம் நிறைந்த நகரம் (3.19). அசீரியர்கள் தங்கள் பொல்லாத நினைவுகள் (1.11), விக்கிரகாராதனை (11.14), கொலை, பொய்கள், நம்பிக்கைத் துரோகம் சமூக
அநீதிகள் (3.1-19), ஆகியவற்றுக்காக நியாயந் தீர்க்கப் பட்டனர். பெருமையும வலிமையும் நிறைந்த இந்த மக்கள், அவர்ளுடைய பாவத்தின் காரணமாக முற்றிலுமாக அழிக்கப்படுவார்கள்
என்று நாகூம் முன்னறிவித்தான். 50 ஆண்டுகளில் இது நிறைவேறிற்று.
அசீரியா, அதின் தலைநகராகிய நினிவேயின் நியாயத் தீர்ப்பில், தேவன் பாவம் நிறைந்த உலகை நியாயம் தீர்க்கிறார். இதிலுள்ள செய்தி தெளிவாக இருக்கிறது. கீழ்ப்படியாமை, கலகம், அநீதி ஆகியவை வெற்றி பெற
முடியாது. நிலைத் திருக்கவும் முடியாது. ஆனால் உலக முழுவதையும ஆட்சி செய்யும் நீதியும் பரிசுத்தமுமான தேவனால் கொடூரமாகத் தண்டிக்கப்படும்.
நாகூமின் புத்தகத்தை வாசிக்கும் போது, பாவத்திற்குப் பழி வாங்குவது போல் தண்டனை கொடுத்து, நியாயத்தை நிலை நாட்டுகிற கோபத்தை அறிந்து கொள்ளலாம். நாம் அவருடைய கட்டளைகள், வாழ்க்கைக்கான வழிகாட்டிகளைக் கைக்கொண்டு, அவருடைய வழி நடத்துதலுக்குக் கீழ்ப்பட்டு ஜீவிக்கும் படி
அறிவுறுத்தப் படுகிறோம்.
2. சந்தர்ப்பமும் முக்கியமான குறிப்புகளும்
நாகூம் கி.மு.66-612 வரை யூதாவிலும் அசீரியாவிலும் தீர்க்கதரிசன ஊழியம் செய்து வந்ந்நதான்.
a. அந்நாட்களின் நிலைமை – யூதாவின் மிகக் கொடிய அரசனான மனாசே, ஆட்சி செய்தான். அவன் வெளிப்படையாக தேவனை எதிர்த்து, தேவனுடைய மக்களை துன்புறத்தினான். உலகத்திலேயே வல்லமையான அசீரியா, யூதாவைத் தனக்குக் கீழ்ப்படுத்தி வைத்துக் கொண்டது. யூதாவின் மக்கள் சகல அதிகாரமும், உடைமைகளும் கொண்ட அசீரியரைப் போல் இருக்க விரும்பினர்.
b. பிரதான செய்தி – தேவனுடைய ஜனங்களை ஒடுக்கிய வல்லமையான அசீரிய சாம்ராஜ்யம் சீக்கிரத்தில் வீழ்ச்சியடையும்.
c. முக்கியமான செய்தி – தீமை செய்து மற்றவர்களை ஒடுக்குபவர்கள் ஒரு நாள் கசப்பான முடிவைச் சந்திப்பார்கள்.
d. சம காலத்திய தீர்க்தரிசி – செப்பனியா, கி.மு.640-621.
3. முக்கிய கருத்துகளும் விளக்கங்களும்
தேவன் நிநயாயம் விசாரிக்கிறார்
நினிவேயின் விக்கிரகாராதனை, தற்பெருமை, பிறரை ஒடுக்குதல், ஆகியவற்றுக்கான தேவன் நினிவேலைய நியாயம் தீர்ப்பார். ஆனால் உலகிலேயே மிகுதியான படைபலம் கொண்டிருந்த போதிலும் தேவன்
அதை முற்றிலுமாக அழிப்பார். எந்த மனிதனும் அல்லது எந்த சக்தியும் தமது அதிகாரத்தை அவமதிக்க தேவன் அனுமதிக்க
மாட்டார். தனிப்பட்ட எந்த மனிதனும்
அவருடைய தீர்ப்புக்குத் தப்பி ஒழிந்து கொள்ள முடியாது.
தேவன் ஆட்சி செய்கிறார்
தேவன் உலக முழுவதையும், தம்மை ஏற்றுக் கொள்ளாதவர்களையும கூட, ஆட்சி செய்கிற்றார். அவர் சகல வல்லமையும், அதிகாரமும் உடையவர். அவருடைய திட்டங்களை எவரும் தடை செய்ய முடியாது. தம்மை எதிர்க்க முயற்சி செய்யும் எவரையும் தேவன் மேற்கொள்வார். தேவனுக்கு விரோதமாக மனிதனின் சக்தி பயனற்றது.
துன்புறுத்தப்படுதல் , அல்லது பயத்தினின்று தேவன் ஒருவரே உன்னை விடுவிக்க கூடியவராக இருக்கிறார். நம்முடைய நம்பிக்கையை தேவன் பேரிலேயே வைக்க வேண்டும். ஏனென்றால் அவர் ஒருவரே சரித்திரம் முழுவதையும் , உலக மனைத்தையும், நமது வாழ்க்கையையும் ஆட்சி செய்கிறார்.
4. வேத வசன ஆதாரங்கள்
நாகூமின் புத்தகம்
5. விவாதிப்பதற்கான கேள்விகள்
a. நாகூம் எங்கிருந்து வந்தான்?
b. அசீரியாவிற்கு விரோதமாக அவன் என்ன பிரசங்கித்தான்?
c. 100 ஆண்டுக்களுக்கு முன் நினிவேயில் பிரசங்கம் செய்த தீர்ரக்கதரிசி
யார்?
d. மனாசே என்பவன் யார்ர?
e. நாகூமின் பிரதான செய்தி என்ன?
மொழிபெயர்ப்பு
திருமதி டஃப்னி ஜோசப்
No comments:
Post a Comment